Urgent! Microsoft Calculatorல் ஒரு பிராபளம்! Please Help!!!

சொன்னா நம்ப மாட்டீங்க மைக்ரோ சாஃப்ட் கால்குலேட்டர்ல ஒர் பிரபளம் கீது வாத்யார். வேணா நீங்களே ட்ரை பணணி பாருங்க:

உங்க கம்ப்யூட்டர்ல கால்குலேட்டர ஓப்பன் பண்ணிக்கங்க. என்ன மாதிரி ஆளா இருந்தா Start-->All Programs-->Accessories-->Calculator. இல்ல, நீங்க கம்யூட்டர்ல பெரிய புலியா இருந்தா Start-->Run- ->type Calc அப்டியும் பண்ணலாம்.

ஆச்சா? கால்குலேட்டர் வந்துட்சா? இப்போ இதப் பண்ணி பாருங்க!


2401/47 = 51.085106382978723404255319148936 கரீட்டா கீது
2401/48 = 50.020833333333333333333333333333 கரீட்டா கீது
2401/49 =
வேல செய்ய மாட்டேங்குது வாத்யார்
2401/50= 48.02 கரீட்டா கீது
2401/51 = 47.078431372549019607843137254902 கரீட்டா கீது

Microsoft
Calculator ஃபெயிலா பூட்சுப்பா!

இவ்ளோ காஸ்ட்லியா கம்ப்யூட்டர் வாங்கியும் கால்குலேட்டர் சரியா வேல பண்ணாங்காட்டி எப்டி வாத்யார்? நீங்களே ஒரு தபா ட்ரை பணணிப் பாத்து, இத்த எப்டி சரி பண்றதுன்னு பின்னூட்டத்துல கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க தலீவா!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

22 comments:

Vijay Anand said...

It is working.
49*49=2401 so 2401/49=49
Answer also 49.
-Vijay

Anonymous said...

49^2 is 2401...its showing correct. 2401/49 = 49...wats ur prob?

சுபமூகா said...

ஜக்கு,

அட ஆமாங்க, ஏதாவது வைரஸ்ஸா இருக்கும்னு தோணுது!

2500 / 48 சரியா வருது
2500 / 49 சரியா வருது
2500 / 50 வர மாட்டேங்குது!

;-))))
சுபமூகா

விக்கி said...

2401/49 = 49 thanga varum athu correct-a than varum...

Anonymous said...

2401 / 49 ன்னு அட்ச்சா 49 மாறமாட்டந்துபா
அதே மேரி
2304/48 ன்னு அட்ச்சா 48 மாறமாட்டந்துபா
2209 / 47 அட்ச்சி பாரு அப்பவும் அதே கத தான். இப்பிடியே 2116/46,
2025/45, 1936/44 ன்னு போய்கினே இருக்கலாம். கீள கீற நம்பரே தான் காட்டுது. மைக்ரோசாப்ட் தான் இந்த கதின்னாகா, செல்போன் கால்குலேட்டர்லயும் இதே பிராபளம்பா. பன்னி வைரஸ் மேரி எதனா வைரஸ் பூந்துட்சா.

அப்பலிக்கா 2401 அட்சிட்டு / அடிக்காம பக்கத்துல இருக்கற sqrt அட்சா கரீக்டா 49 ன்னு காட்டுதே நைனா. என்னா சூட்சுமம்னு பிரியலயே நைனா.

Anonymous said...

2401 / 49 is 49 :)

Srini

சரவணன் said...

அட நிஜம்தான் வாத்யாரே! ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டேன்! இது நீங்களே கண்டு புடுச்சதா வலையில அகப்பட்டதா?!

உதயதேவன் said...

அட்ரா சக்கைனான....
எப்பிடி...இப்பிடி...
நானும் போட்டு பார்த்தேன்...
ஞான் சரியாக்கும், அந்த
ஜக்கு ஒரு மக்கு அப்பிடினு ...விளிக்குது
என்னன்னு சொல்லுரது...

சரவணன் said...

இதோ இன்னொரு உதாரணம்; 2404/52 போடுங்க!

anujanya said...

யோவ், உனக்கு காலைல இத்தனை குசும்பா!

நானும் ரொம்ப சீரியஸாக ட்ரை பண்ணி கண்டுபிடிச்சேன்ப்பா.

அப்பால 25/5= வேலை செய்ய மாட்டேங்குது;
4/2= வேலை செய்ய மாட்டேங்குது.

இப்படியே சொல்லிக்கிட்டு போகலாம்.

ஆனாலும், குசும்பை ரசித்தேன் :)

அனுஜன்யா

வரதராஜலு .பூ said...

:)))

காலங்காத்தாலேயே கௌம்பிட்டாங்கப்பா. ரொம்பதான் குசும்பு அய்யா உமக்கு.

இருந்தாலும் நல்லாதான் இருக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

Vijay Anand, ஆனந்த், சுபமூகா, Viki chellam, சரவணன், உதயதேவன், அனுஜன்யா, Varadarajalou, அனானி

அல்லாருக்கும் ரொம்ப டாங்க்ஸ். அப்போ கால்குலேட்டரு சரியாத்தான் கீதுன்றீங்களா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

தென்னவன். said...

கால்குலேட்டரு சரியா கீதுன்னு யார் சவுண்ட் உட்டது? மெய்யாலுமே ஓயிங்கா வேல செய்யல.. ஜக்கு அண்ணாத்தைய உட்டு பில் கேட்ஸ் வாய கொயப்புனாதான் செரிப்பட்டு வருவானுங்கோ.....

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

/% உண்மைஎலேயே விண்டோஸ் கால்கிலடேரரில் வேலை செய்யாது.

உதாரணம் 20 / 80 % = 25

ஆனால் விண்டோஸ் 16 என்று காட்டும்.
இது விண்டோஸ் இன் எல்லா எடிஷநிலும் தொடர்ந்து வரும் பிழையாகவே உள்ளது .

ஜாம்பஜார் ஜக்கு said...

தென்னவன்,

வாங்க, நீங்க ஒரு ஆளாது நான் சொன்னத "புரிஞ்சு"கினீங்களே?!!

பாஸ்கர் வாத்யார்,

இது இன்னா புது கதை?
இந்த கால்குலேட்டருக்கு எதுனாச்சும் money back policy கீதா?!

:))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அக்னி பார்வை said...

அதாகபட்டது 49 என்பது ..உண்மையாவே உங்களுக்கு பதில் தெரியனும்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

2401/49 = 49
49x49 = 2401
49x49/2401 = 1
1/2401 = 1/49x49
1/2401 = 1/2401
1 = 1
2401 = 2401

சரிங்களா!

ஜாம்பஜார் ஜக்கு said...

அக்கினி பார்வை,

//உண்மையாவே உங்களுக்கு பதில் தெரியனும்?//

பின்ன வாணாமா?

ஜோதிபாரதி,

///2401 = 1/49x49
1/2401 = 1/2401
1 = 1
2401 = 2401

சரிங்களா!//

ஹி..ஹி..ஏன் இந்த கொலைவெறி?!

:-))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

முக்கோணம் said...

உக்காந்து யோசிப்பாய்ங்களோ..?

Tamilish Team said...

Tamilish Support to me

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'Urgent! Microsoft Calculatorல் ஒரு பிராபளம்! Please Help!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th August 2009 05:33:01 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/99124

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

(இ-மெயிலில் வந்தது)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பாவா ஷரீப் said...

என்ன கற்பனை வாத்தியாரே !!!!!!!!
தொடரட்டும் உமது பனி
மக்களளுக்கு பிடிக்கட்டும் சனி

பாவா ஷரீப் said...

என்ன கற்பனை வாத்தியாரே !!!!!!!!
தொடரட்டும் உமது பனி
மக்களளுக்கு பிடிக்கட்டும் சனி