Breaking News! சர்தார்ஜி ஜோக் இனி உலகில் கிடையாது!

அத்தியாயம் 1 - பான்டாவின் சோகம்

ந‌ம்ப‌ பான்டா சிங் அண்ணாத்தைக்கு ரொம்ப வ‌ருத்த‌மா பூட்சி. இது இன்னாடா எங்கப் போனாலும் ச‌ர்தார்ஜி ஜோக், ச‌ர்தார்ஜி ஜோக்னு சொல்லி ந‌ம்ம‌ள‌ ரொம்ப ச‌த்தாய்கிறாங்க‌ளே இதுக்கு எப்டினாச்சும் ஒரு முடிவு க‌ட்டணும்னு ரொம்ப‌ யோசிச்சிகினே இருந்தாரு. அதுவும் இந்த‌ இன்ட‌ர்நெட் வந்த‌துக்கு அப்பால‌ ந‌ம்ப‌ நெல‌ம‌ ரொம்ப‌ மோச‌மா பூட்சேன்னு ரொம்ப பேஜார் பட்டுக்கினாரு.

அத்தியாயம் 2 - கடவுள் வந்தார்

எவ்ளோ யோசிச்சும் வேற‌ வ‌ழி ஒண்ணும் தோணாத்னால‌, ச‌ரி நம்ப பெரிய அண்ணாத்த‌ க‌ட‌வுள் கிட்ட‌யே கேட்டுக்க‌லாம்னு க‌டுமையா... அது இன்னா... ஆங்...பிரார்த்த‌ன‌ ப‌ண்ண ஆர‌ம்பிச்சாரு. ஒரு வார‌ம் ஆச்சு. அதுக்குமேல‌ க‌ட‌வுளுக்கே பொறுக்க முடியாம ந‌ம்ப பான்டா அண்ணாத்த‌ முன்னால‌ வ‌ந்துட்டாரு! "உன் பக்தியை மெச்சினோம், இன்னா வேணும் கொளந்தாய்னு" சும்மா ஏபி நாகராஜன் படம் கணக்கா பான்டாவப் பாத்து கேட்டாரு.

அத்தியாயம் 3 - மறைந்தன சர்தார்ஜி ஜோக்குகள்

பான்டா அண்ணாத்த‌ இதுக்குதான‌ காத்துகினு இருந்தாரு! "ஆண்ட‌வா இனிமே இந்த‌ ஒல‌க‌த்துல‌ ஒரு ப‌ய‌ ச‌ர்தார்ஜி ஜோக்னு வாயத்‌ தொற‌க்கக் கூடாது. அது மாத்ரம் இல்ல... த‌மிழ்ம‌ண‌ம், ப‌திவு, இன்ட‌ர்னெட்டு, புக், ரேடியோ, டிவி, சினிமா அல்லாத்ல‌யும் இதுவரைக்கும் இருக்குற‌ ச‌ர்தார்ஜி ஜோக் அல்லாம் இந்த‌ நிமிட்லேர்ந்து காணாம‌ பூட‌ணும்" அப்டீன்னு கேட்டுகினாரு. ஆண்டவன் "அப்டியே ஆகட்டும்" அப்டீன்னாரு.

அடுத்த‌ நிமிட் இந்த உல‌க‌த்லேர்ந்து எல்லா ச‌ர்தார்ஜி ஜோக்கும் காணாம‌ பூட்ச்சு. ந‌கைச்சுவை ஒல‌கம் அப்டியே ...இன்னாது...ஸ‌த‌ம்பிச்சு நின்னு போச்சு. "இனிமே ஈரேழு ப‌தினாலு ஒல‌க‌த்ல‌யும் ந‌கைச்சுவையின் எதிர்கால‌ம் இன்னா ஆவுமோ"னு அல்லாரும் திகைச்சு பூட்டாங்க‌...

~தொட‌ரும்.

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

கலைஞர், சோ, தினமலர்..!


அட! ரொம்ப நாளாச்சுபா இப்டி பாத்து!

நல்லாருங்க! இத்தப் பாத்தாவது நம்ப பதிவுலக பெரிய மன்ஸங்க‌ கத்துக்கக் கூடாதான்னு அண்ணாத்த கேக்குறாரு. நான் இன்னாத்த சொல்றது, நீங்களே சொல்லுங்க தலீவா...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இது மட்டும் புரிஞ்சு போச்சு, நீங்க மெய்யாலுமே பெரிய மன்ஸன் தான்!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அறை எண் 306 ல் அண்ணாத்த!!!

ஒரு தபா நம்ப‌ அண்ணாத்த ஆஃபீஸ் வேலையா வெளியூர் போயிருந்தப்ப அவருக்கு ஒரு படா ஹோட்டல்ல ரூம் போட்டிருந்தாங்க. நைட் ரும்ல தங்கிட்டு காலீல ஆஃபீஸுக்கு வர்றதா ஏற்பாடு.

ஆனா காலீல 10 மணி ஆகியும் அண்ணாத்த ஆஃபீஸ் வந்து சேராததால அல்லாரும் ரொம்ப டென்ஷன் ஆகிப் பூட்டாங்க. கட்சீல ஹோட்டலுக்கு போன் பண்ணிப் பாத்தா அண்ணாத்த பயங்கர கோவமா கீறாரு.

இன்னா மேட்டர்னா, அந்த ரூம்ல 3 கதவு இருந்து கூட அண்ணாத்தயால ரூம விட்டு வெளில வர முடியல. ஏன்?

விஷயம் இதான்: மொத கதவு துணி வைக்கிற அலமாரி கதவு. அது வளியா வெளில வர முடியுமா? ரெண்டாவது கதவு பாத்ரூம் கதவு. ஆச்சா, அதுவும் வேலைக்கு ஆவாது. சரியா? இந்த மூணாவது கதவு இருக்கு பாரு அத்தோட‌ கைப்புடில "Please Do Not Disturb" அப்டீன்னு ஒரு அட்டை தொங்கிகினு கீதுபா.

நீயே சொல்லு வாத்யார், நம்ப அண்ணாத்த எப்டி வெளில வருவாரு?

(சரீ, சரீ, கேள்விக்கு பதில் தெரீலேன்னா உட்ற‌ வேண்டிது தான? இதுக்கெல்லாம் ஏன் இப்டி டென்ஷன் ஆயி பல்ல நற நறன்னு கடிக்கிறீங்க?)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

"இதைப் படிப்பவன் முட்டாள்"! (மன்ச்சுக்க வாத்யார்!)

ஒரு தபா நம்ம அண்ணாத்த‌ எங்கியோ போய்கினு இருந்தப்போ ஒரு செவுத்துல "இதைப் படிப்பவன் முட்டாள்" அப்டீன்னு எளுதி இருந்திச்சாம். அவுருக்கு வந்த கோவத்துல அத அழிச்சிட்டு "இதை எழுதியவன் முட்டாள்" அப்டீன்னு எளுதிட்டு வந்துட்டாரு!

பின்குறிப்பு: நம்ம அண்ணாத்த சொன்னாரு, இப்டி தலைப்பு வச்சீன்னா கண்டிப்பா "சூடான இடுகைல" வந்துரும்னாரு!

மெய்யாலுமா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எப்டி இருந்த தமிழ்மணம் இப்டி ஆயி பூட்ச்சு!!!

இன்னிக்கி நாள் பூரா நம்ப இன்டர்னெட் மக்காராப் பூட்ச்சா, இப்பத்தான் வலைக் குள்ளார வரவே முடிஞ்சிது. வளக்கம் போல மொத வேலையா தமிழ்மணத்தத் தொறந்தா (ஜிமெயில் கூட அப்புறம் தான்!)... தலீவா, பக்குனு ஆகிப் பூட்ச்சு!

இத்தினி நாளா கூகிளுக்கு அட்த்தது தமிழ்மணம் தான்னுட்டு தமிழ் தெரியாத வெப் டெவலப்பர் ஆசாமிங்களக் கூட கூப்டுக் கூப்டு காம்சிகினு இருந்தேன். இன்னா ஒரு சிம்பிள் டிசைன்ல சூப்பர் பெர்பார்மன்ஸு! நாள் பூரா (மெய்யாலுமே நாள் பூராத்தான்) பாத்துகினே இருந்தாலும் கண்ண உறுத்தாத ஒரு அம்சமான டிசைன்.

யார் கண்ணு பட்டுச்சோ, திடீர்னு இப்டி ஆகிப் பூட்ச்சு! ஒரு பத்து நிமிட் பாக்குறதுக்குள்ளார டயர்டா பூட்டுதுப்பா. கலர் கலராத்தான் கீது ஆனாலும் அந்த க்ளாரிட்டி எங்க பூட்டுது?

நம்ப அண்ணாத்த சொல்றாரு, எதுவுமே மாறின ஒடனே அப்டிதான் இருக்கும். போக போக பளகிப் பூடும்னு. பெரிய மன்ஸன் சொன்னா கரீட்டாத்தான் இருக்கும்.

நீங்க இன்னா சொல்றீங்க?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இதுக்கு மட்டும் பதில் சொல்டீங்க, நீங்க பெரிய ஆளுதான்!

வாத்யார் வணக்கம். போன தபா நெறய பேரு கேள்வியப் படிச்சு கொஞ்சம் பேஜார் ஆய்ட்டத்துனால‌ இந்த தபா ரொம்ப சுலுவா கேட்டுக்கிறேன். சும்மா அட்ச்சி காலி பண்ணுங்க.

அல்லா கேள்விக்கும் யாரு கரீட்டா பதில் சொல்றாங்கன்னு பாக்கலாம்.

1. நம்ம சிதம்பரம் சிவசாமிக்கு சராசரியா அல்லாருக்கும் எத்தினி கண்ணு இருக்குமோ அத்த விட கொஞ்சம் ஜாஸ்தியா கீது. அப்டீன்னா அவுருக்கு மொத்தம் எத்தினி கண்ணு? இன்னா காரணம்?

2. ஒரு புக் ஷெல்புல 100 புக் வரீசயா அடுக்கி கீது. ஒவ்வொரு புக்கும் 3 இன்ச் தடிமனாக் கீது. அப்டீன்னா மொத புக் மொத பக்கத்லேர்ந்து கட்சீ புக் கட்சீ பக்கம் வரீக்கும் எவ்ளோ நீளம்?

3. இந்த இங்லீஷ் எளுத்துகளுக்குள் இன்னா ஒத்துமை?

A X H I M O W T V

4. எங்க ஊரு மணிக்கூண்டு ஆறு மணிக்கு ஆறு தபா மணி அடிச்சுது. அதுக்கு அஞ்சு செகண்ட் ஆச்சுது. அப்டீன்னா 12 மணிக்கு எத்தினி தபா மணி அடிக்கும். அதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்?

5. இப்போ இப்டி வச்சுக்குங்க:

1=5
2=6
3=7
4=8 அப்டீன்னா
5=?

6. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தினி கால்?


அவ்ளோத்தான். இன்னா ரெடியா. ஆரம்பிங்க...ஜூட்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


கரீட்டான‌ விடைகள்: (மே 5ம் தேதி சேர்த்தது):

1. ரெண்டு கண்கள். சராசரியாப் (average) பாத்தா மன்ஸனுக்கு ரெண்டு கண்ணுக்கு கொஞ்சம் கம்மியாத்தான் வரும் (பார்வையில்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கிறதுனால‌).

2. 294 இன்ச் (98 x 3). மொதல் புக்கோட மொதல் பக்கம் ரெண்டாவது புக்கை ஒட்டி இருக்கும்! அதே மாதிரி 100வது புக்கோட கடேசி பக்கம் 99வது புக்கை ஒட்டி இருக்கும். (டவுட்டா இருந்தா ஒரு நாலு புக்க ஷெல்புல அடுக்கி வச்சு பாருங்க ஆச்சரியமா இருக்கும்!).

3. கண்ணாடில பாத்தாலும் அதே மாதிரி தெரியும்.

4. 12 தபா அடிக்கும் (இதுல என்ன வாத்யார் சந்தேகம்?!). 11 செகண்டு ஆகும். (12 தபா அடிக்கச் சொல்ல, நடூல 11 கேப் வர்தில்ல, அதான் கணக்கு).

5. 5=1 (அதான் மொதல்லயே 1=5ன்னு சொல்லிட்டமில்ல?!)

6. 8 கால் தான். (இதுல இன்னா தலீவா டவுட்டு? தைரியமா சொல்ல வாணாம்?!!!)


ஆறு கேள்விக்கும் கரீட்டா பதில் சொன்னது...
ஒர்த்தரே ஒர்த்தர் தான்...... And the First Prize goes to...

திவா (அல்லாரும் கண்டிப்பா ஜோரா ஒரு தபா கைத்தட்டுங்க!)

கொஞ்சம் கொறச்சலா சொன்னவுங்க:

கப்பி பய‌
ப்ரியா
ரிஷான் ஷெரீப்
யாரோ ஒருவ‌ன்
பினாத்த‌ல் சுரேஷ்
ம‌ரைக்காய‌ர்
ல‌தா
ம‌துவ‌த‌ன‌ன் மெள‌
ப‌டிப்ப‌வ‌ன்
டோம‌ரு

அனானி
R. சுதாகர்

அல்லாருக்கும் ஜ‌க்குவின் அன்பான‌ வாழ்த்துக்க‌ள்! கூடிய‌ சீக்ர‌ம் ம‌றுப‌டியும் ச‌ந்திக்க‌லாம்! வ‌ர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

மல்லிகா ஷெராவத்துக்கு ஒரு டாங்ஸ்!

அல்லாருமே ரொம்ப கொழப்பத்துல இருக்குற மாதிரி தெரீது. இப்பல்லாம் டமிள் பண்பாடு, டமிள் பண்பாடு அப்டீன்னு ஒண்ணு அடிக்கடி ரவுண்டு வந்துகினு கீது. அதுவும் எப்போ வருதுன்னா ஸ்ரேயாவையும், மல்லிகா ஷெராவத்தையும் பாத்த அப்புறம்தான் ரொம்ப பேருக்கு டமிள் பண்பாடு டகால்னு ஞாபகத்துக்கே வருது. ரொம்ப பேருக்கு இதுல கொழப்பம் இன்னான்னா இந்த பண்பாடு அப்டீங்கற லைன எங்க போட்றது அப்டீங்கறதுலதான்.

1. படத்துக்கு டமிள்ல பேர வச்சாத்தான் டமிள் பண்பாடா?
2. டமிள்ல பேர் வச்ச படத்துல வரதெல்லாம் பண்பாட்டோடத்தான் கீதா?
3. டமிள் பத்திரிக்கைல வர படம், கதை எல்லாம் டமிள் பண்பாட்டோடதான் கீதா?
4. டமிள் பதிவுல எளுதறதெல்லாம் டமிள் பண்பாட்டு சமாச்சாரம் தானா?
5. டமிள் டிவில வர்தெல்லாம் டமிள் பண்பாட்டோததான் கீதா?
6. இருவது வர்ஸத்துக்கு முன்னால இருந்த பண்பாட்டு ஸ்கேல இப்போ யூஸ் பண்ணா சரியா வருமா? இல்லாங்காட்டி புது ஸ்கேல் வாங்கணுமா?
7. பண்பாடுங்கறது ட்ரெஸ்ல மட்டும் தான் கெட்டுப் போச்சா? மத்ததெல்லாம் சரியாத்தான் கீதா?

ஒண்ணே ஒண்ணு அல்லாரும் புரிஞ்சிக்கணும். ஒரு பக்கம் கருத்து சொதந்திரம், ஒரு பக்கம் ... அது என்னா சேஷன்...ஆங்... க்ளோபலைசேஷன், ஒரு பக்கம் பணத்தை தொறத்துற பெரிய மன்ஸங்க‌, இன்னொரு பக்கம் கேள்வி கேக்கத் தெரிஞ்சுகின புள்ளைங்க... இதுக்கு நாலுக்கு நடுவுல பண்பாடுங்கற மேட்டர் காணாமப் போய் ரொம்ப நாள் ஆவுது.

அத அப்ப அப்போ ஞாபகப் படுத்தற ஸ்ரேயாவுக்கும், மல்லிகாவுக்கும் ஒரு டாங்ஸ் வாணா சொல்லிக்கலாம்! அவ்ளோதான் மேட்டர். இன்னா சொல்றீங்க‌...?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

நீங்க டென்ஷன் பார்ட்டியா? அப்படீன்னா இதை கண்டிப்பா படிக்காதீங்க!

வாங்க‌. ந‌ல்லா‌ நிதான‌மாத்தான‌ கீறீங்க‌? அப்ப‌ இத‌ மெள்ள்ள்ள்ள்ள்ள்ள‌மா ப‌டீங்க. டென்ஷனே வாணாம். ஆமா, சொல்லிட்டேன்.


அன்னிக்கு ஒரு நாளு, 8 பேரு ஒரு ஹோட்ட‌லுக்கு வ‌ந்தாங்க‌. வ‌ந்தாங்க‌ளா, அந்த ஹோட்ட‌ல்ல‌ 7 ரூமுதான் காலியா இருந்திச்சி. ஆனா, வ‌ந்த பேருங்க அல்லாரும் த‌னித் தனி ரூம் குட்த்தாத்தான் த‌ங்குவோம்னு க‌ண்டிஷ‌னா சொல்லிட்டாங்க‌. அப்புற‌ம் இன்னா அச்சுன்னு கேக்றீங்க‌ளா? அந்த‌ ஹோட்ட‌ல் மேனேஜ‌ரரு அதெல்லாம் நான் பாத்துக்க‌றேன்னு சொல்லி அவுங்க‌ள‌ அவுங்க‌ கேட்டா மாதிரியே த‌ங்க‌ வ‌ச்சுட்டாரு.


இன்னாது? அது எப்டி முடியும்னு கேக்றீங்களா? ஒண்ணும் டென்ஷன் ஆவுலியே?


அந்த மேனேஜர் இன்னா பண்ணார்னா, மொத ரெண்டு பேர 1ஸ்டு ரூம்ல கொஞ்ச நேரம் இருங்கன்னு சொல்லிட்டு மூணாவது ஆள 2வது ரூம்ல இருக்க சொன்னாரு. ஆச்சா? இப்போ நாலாவது ஆள 3வது ரூம்க்கு அனுப்பினாரு. புரிஞ்சுதா? அப்புறம் அஞ்சாவது ஆள 4வது ரூம்லயும், ஆறாவது ஆள 5வது ரூம்லயும், ஏழாவது ஆள 6வது ரூம்லயும் அலாட் பண்ணிட்டாரு. இப்டீக்கா 7 பேரு முடிஞ்சிதா. இப்போ மொதல் ரூம்ல ரெண்டு பேர் இருக்காங்கல்ல, அதுல ஒருத்தரக் கூப்டு கட்சீ ருமுக்கு, அதான், 7வது ரூமுக்கு அனுப்பிட்டாரு. இப்டிக்கா, 8 பேரையும் 7 ரூம்ல ஆளுக்கு தனித் தனியா அலாட் பண்ணிட்டாரு.


அவ்ளோதான். நா வர்ட்டா?

ஆரம்பத்துலேயே சொன்னல்ல டென்ஷன் ஆவாதீங்கன்னு. வாணாம்...வாணாம்.... அப்டி பாக்காதீங்க...ஒடம்புக்கு ஆவாது...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஆயிரம் உதை (Hit) வாங்கிய அபூர்வ சிகாமணி!

வெள்ளிகிழம மதியானம் ஒரு மாதிரியா தட்டு தடுமாறி தமிழ்மணத்துல எணச்சு, உளுந்து புரண்டு, அங்க க்ளிக்கி, இங்க க்ளிக்கி பதிவுப் பட்டைய டெம்ளேட்ல கொணாந்து, அப்டி இப்டி ரெண்டு பதிவு எளுதி, நாலு பின்னூட்டம் ரிலீஸ் பண்ணிகினு (பெண்டு) நிமிந்து மேலப் பாத்தா திங்கக்கெழம சாய்ங்காலம் ஆகிப் போச்சுப்பா!

அப்டிகா லேசா கழுத்த திருப்பி ஹிட் கவுண்டரப் பாத்தா 1000 !!! இன்னாது? மெய்யாலுமா? மூணு நாள்ல 1000 ஹிட்டா?

வாத்யார், நம்ம தமிழ்மணம் மட்டும் இல்லாங்காட்டி இது நடக்குற விஷயமா?

தமிழ்மணத்துக்கும், உங்க அல்லாருக்கும் ஜக்கு ஆயிரம் தபா டாங்ஸ் சொல்லிகிறான்! நல்லாருங்க!தொடர்ந்து அடிக்கடி வூட்டாண்ட வாங்க!!!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

நீங்க கில்லாடியா? அப்படீன்னா உடனே இத படிங்க!

நீங்க மெய்யாலுமே கில்லாடிதான்! உங்களுக்காக அஞ்சே அஞ்சு கேள்வி (ரொம்ப‌ சுல‌வ‌ம்). நச்சுனு பின்னூட்டத்தில பதில் சொல்லுங்க வாத்யார்!!!

1. பாலைவனத்தில போய்கினு இருக்கும் போது ஒரு லெட்ட‌ர்ல‌ ஸ்டாம்ப் ஒட்னமின்னா ரொம்ப சுலவ‌ம். (நாக்கு வரண்டு பூட்டிருந்தாலும், பக்கத்துல தண்ணியே இல்லீன்னாலும்). எப்படி?

2. ரோமன் நம்பர்ல‌ ஒரு ந‌ம்ப‌ர‌ இன்னெரு ந‌ம்ப‌ரா மாத்ர‌து ரொம்ப‌ சுல‌வ‌ம்.

இப்டி போட்டா ப‌த்து: X
அதுக்கு ப‌க்க‌த்துல ஒரே ஒரு கோடு போட்டா ஒன்ப‌து: IX

இப்ப‌ மேட்ட‌ர் இன்னான்னா ஒன்ப‌துக்கு ப‌க்க‌த்துல‌ ஒரே ஒரு கோடு போட்டு அத‌ ஆறா மாத்தோணும். எப்ப‌டி?


3. ஒரு காலியான‌ கோக்கோ கோலா டின்ல அதிகபட்சம் எத்தினி 5 ரூபா காய்ன‌ ரொப்ப‌ முடியும்? (வேர்ல்டு ரெகார்டுப்பா!)

4. அந்த ஜூவுல‌ (Zoo) கொஞ்ச‌ம் மிருக‌ங்க‌ள் இருந்திச்சாம். அதுல‌ மூன்றை த‌விர‌ எல்லாம் சிங்க‌மாம். மூன்றை த‌விர‌ எல்லாம் புலியாம். மூன்றை தவிர எல்லாம் கரடியாம். அது மாத்ர‌ம் இல்ல‌. மூன்றை த‌விர‌ எல்லாம் யானையாம். அப்டீன்னா அங்க‌ மொத்தம் எத்தினி மிருக‌ம் இருந்திச்சி? இன்னா, இன்னா?


5. முன்னூறோடு மூன்றை மூணு தபா கூட்டினால் விடை இன்னா கெடைக்கும்?


யார் அஞ்சு கேள்விக்கும் கரீட்டா பதில் சொல்றாங்கன்னு பார்ப்போம்!

இப்ப‌டிக்கு,
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு


விடைகள் (29ம் தேதி எளுதினது):

1. அங்க‌ ஒட்ட‌ க‌ம் இருக்குல்ல‌, அப்புற‌ம் இன்னா?
2. SIX. நேர்கோடுன்னு நீங்க‌ளா நென்சிகினா நான் இன்னா ப‌ண்ற‌து?!
3. ஒண்ணுதான். அதுக்கு அப்புற‌ம் அது காலியாவா இருக்கும்?
4. நாலு. அல்லாத்ல‌யும் ஒண்ணு ஒண்ணு.
5. 303. எவ்ளோ த‌பா கூட்னாலும் அதான் கெடைக்கும்.

எல்லா கேள்விக்கும் ச‌ரியான‌ விடை சொன்ன‌வுங்க‌:
(வ‌ழ‌க்க‌ம் போல‌ அல்லாரும் ஜோரா ஒரு த‌பா கைத்த‌ட்டிடுங்க)!!!

வெட்டிப்ப‌ய‌ல் (இவ‌ருக்கு தான் பர்ஸ்ட் ப்ரைஸ்!!!)
ல‌தா
Jeeves

நாலு கேள்விக்கு கரீட்டா பதில் சொன்னவுங்க:

பினாத்தல் சுரெஷ்
வால் பைய‌ன்
அனானி
யாரோ ஒருவ‌ன்

மத்த பேரெல்லாம் அடுத்த தபா பின்னிடுங்க. இன்னாமோ சொல்லுவாங்களெ...ஆங்..அதான்: பெட்டர் லக் நெக்ஸ்ட் தபா!!!

நான் இன்னாத்தக் கண்டேன்!

நம்மளோட போன பதீவுல, ஒரு அனானி அண்ணாத்தே இப்டி ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தாரு:

//English Bloggers have already gone to the "next level". But Tamil Blog World seems to have got stuck at a particular point. I appreciate your concern. I am sure this will be backed by all the people who want Tamil Blog World to grow to the levels that it deserves//

அத்த பட்சுட்டு நம்ம துளசிமேடம்

//ஆமாம், English Bloggers have already gone to the "next level" இது என்னன்னு கொஞ்சம் வெளக்குபா ஜக்கு...//

அப்டீன்னு ஒரு ஆர்டர் போட்டுட்டாங்க‌ :-))

நான் இன்னாத்தக் கண்டேன்? இந்த அனானி அண்ணாத்தே இங்கிலிபிஷ்ல பூந்து வெளயாடிக்கிறாரு. இந்த இங்லீஷ் ப்ளாக் ஆசாமிங்க‌ எதுனாச்சும் லிஃப்ட் கிஃப்டு வச்சுகீறானுங்களோ இன்னாமோ? இல்லாங்காட்டி எப்டி அடுத்த லெவலுக்கு போனாங்கோ? :-)))

ஒரு வேளை, அவுங்க இந்த டெக்னிகல் ப்ளாக், சைன்ஸ் ப்ளாக், அஃபிசியல் ப்ளாக் அப்டீன்னு போய்கினே கீறாங்களே அத்த சொல்றாரோ என்னாமோ? நானும் தமிழ்மணத்துல தொழில்நுட்பம் அப்டீங்கற குறிசொல்லை கிளிக்கிப் பார்த்தேன்...நான் ஒண்ணும் சொல்ல தாவல‌...நீங்களே பாத்துக்கங்க. பொதுவாவே தமிழ்ல எலக்கியம் வளந்த அளவுக்கு ... அது இன்னாது ... டெக்னாலஜி வளர்ல அப்டீம்பாங்க. ஒரு வேள ப்ளாக்லயும் அதேதான் அயினுகீதுனு சில பேரு நாக்கு மேல பல்லப் போட்டு சொல்றாங்கோ. ஒரு வெளை அத்த சொல்றாரோ?

இதெல்லாம் பெரிய மன்சங்க சமாச்சாரம்.

நான் இன்னாத்தக் கண்டேன்!

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

ஜாக்கிரதையா இருங்க‌! உங்களுக்கு ஒரு டெஸ்ட்!!!

ஒரு தபா நம்ம அண்ணாத்த ஒரு மனநல காப்பகத்துக்கு ஒரு வேலையா போயிருந்தப்போ அவருக்கு ஒரு டெளட் வந்து டாக்டர பாத்து இப்பிடி கேட்டாரு:

அண்ணாத்தே: டாக்டர், இப்போ ஒரு பேஷண்டுக்கு நல்லா சரியாப் பூடுச்சுன்னு எப்டி கண்டுகுவீங்க?

டாக்டர்: அதுவா? ஒரு பாத்டப் (bathtub) நிறைய‌ தண்ணிய ரொப்பிடுவோம். அப்புறம் பேஷண்டுக் கிட்ட ஒரு ஸ்பூன், ஒரு கப், ஒரு பக்கெட் மூணையும் கொடுத்து அந்த டப்‍பில் இருக்கும் தண்ணீரை காலி பண்ண சொல்லுவோம்.

அண்ணாத்தே: ஆங்..! புரிஞ்சிகினேன். பேஷண்டுக்கு சரியாப் பூட்டிருந்துதுன்னா பக்கெட்டால தண்ணிய காலி பண்ணுவாரு. ஏன்னா அதான் மத்த ரெண்டையும் விட பெருசு.

*

*

*

*

டாக்டர்: அதான் இல்லை. பேஷண்டுக்கு சரியா போயிருந்தா பாத்டப்பில் இருக்கும் ப்ளக்கைப் புடுங்கி விடுவார். தண்ணி தானா ஓடி போயிடும். உங்களை ஜெனரல் வார்டுல அட்மிட் பண்ண சொல்லட்டுமா இல்ல ஸ்பெஷல் ரூம் வேணுமா?

***
***
***

இப்போ மறுபடியும் ஜக்கு: என்னா, டெஸ்ட்ல நீங்க பாஸ் பண்ணீங்களா, இல்ல உங்களுக்கும் எனக்கு பக்கத்து வார்ட்ல ஏற்பாடு பண்ணிடலாமான்னு பின்னுட்டத்துல சொல்லுங்க தலீவா :-)))


இப்ப‌டிக்கு,
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

தமிழ் பதிவர்களுக்கு ஜக்குவின் அறிவுரை (இன்னா...து???)

தலைப்பைப் பாத்து டென்ஷன் ஆவாதிங்க தலீவா. நானே முந்தா நேத்து வந்தவன். அறிவாது, உரையாது? ஒரு வேண்டுகோள்னு வச்சுக்க வாத்யார். நானும் ஒரு 3 வர்ஷமா இங்கிலீஷு (சொன்னா நம்பணும்) டமிளு ரெண்டு ப்ளாகும் மேஞ்சுகினு வர்றேன். சில‌ நேரத்துல நம்ம பதிவுலக‌ பால்டீக்ஸெல்லாம் பட்சு மன்ஸு நொந்து நூடுல்ஸா பூடுது தலீவா. அப்போன்னு பாத்து ந‌ம்ம‌ தாடிக்கார‌ரோட‌ கீதாஞ்ச‌லிய‌ப் ப‌டிச்சுகினு இருந்தேனா, பேனாவ‌ எட்து ச‌ர‌ ச‌ர‌ன்னு அத்த‌ த‌மிழ்ல (அதாம்பா டமிள்ல) எளுதிட்டேன். க‌ட்சீ வரில‌‌ ம‌ட்டும் ஒரே ஒரு வார்த்தைய கொஞ்சம் மாத்திக்கிறேன்.

ஜக்குவின் கீதாஞ்சலி!

எங்க மன்சு தில்லாக் கீதோ
எங்க நமம தலை டாப்ல நேரா நிக்குதோ
எங்க‌ அறிவு அல்லார்க்கும் ப்ரீயா கெடைக்குதோ
எங்க‌ ந‌ம்ம‌ ஊரு சின்ன‌ சின்ன‌ மேட்ட‌ரால‌
பீஸ் பீஸா போவாம கீதோ
எங்க‌ மெய்யாலுமே வார்த்தை ம‌ன்ஸுக்கு
அடீலேர்ந்து வ‌ர்தோ
எங்க நம்ம பகுத்த‌றிவு, மூட‌ ப‌ள‌க்க‌ வ‌ள‌க்க‌ம்ன்ற‌
புதைகுழில தொலஞ்சு போவாம‌‌ கீதோ
எங்க‌ ம‌னஸ‌ ப‌டா ஒஸ்தியான நென‌ப்புலயும்
வேலைலயும் நீ வுடாம இஸ்துகினு போறியோ
அப்பேர்க் கொத்த‌ சொர்க‌த்த்துல‌ த‌லீவா, நைனா,
என் தமிழ் பதிவுலகம் கண் தொறந்து விழிக்க‌ட்டும்......பெரிய‌ ம‌ன்ச‌ங்க‌ள்ளாம் என்னா நென‌க்கிறீங்க‌ன்னு ஒரு வார்த்த‌ சொல்லுங்க வாத்யார். தமிழ் பதிவுலகம் ரொம்ப‌ தூர‌ம் போவோணும்.

என்ன‌ க‌ரீட்டா?

இப்ப‌டிக்கு,
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.

இது இன்னாபா படா பேஜாராப் போச்சுது! இன்னிக்கு நம்ம தலைப்புல 3 தபா தப்பாப் பூடுச்சாம். அது இன்னா இன்னானு விலா வாரியா கண்டுபுடிச்சு பின்னூட்டத்துல சொல்லுங்க மஹா சனங்களே. இதுல இன்னா மேட்டருன்னா இது வரீக்கும் 100 பேருக்கு மேல இதக் காட்டிட்டேன். யாரும் இன்னும் கண்டுபுடிக்கல, புரீதா?

பார்ப்போம் உங்க சாமோர்த்தியத்தை!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


விடை (ஏப்ரல் 26 அன்னிக்கு சேர்த்தது):

1. மூண்று : மூன்று

2. தவருகள்: தவறுகள்

3. ரெண்டு மிஷ்டேக் ம‌ட்டுமே கீற‌ ஒரு மேட்ட‌ர்ல‌ நாக்கு மேல‌ ப‌ல்ல‌ப் போட்டு மூணு மிஷ்டேக் இருக்குனு சொன்னம்பாரு, அதான் வாத்யார் மூணாவ‌து மிஷ்டேக்.

கரீட்டா சொன்னவுங்க (அல்லாரும் ஜோரா ஒரு தபா கைத்தட்டுங்க!)

பினாத்தல் சுரேஷ் (இவுருதான் பர்ஸ்டு!)
கீதா
Senyo (அனானி)
நெல்லை சிவா (இவருக்கு மட்டும் ரெண்டு தபா கைத்தட்டுங்கோ!)
New Bee
லதா
கன்னாபின்னான்னு யோசிப்பவன் (அனானி)
மாதங்கி (நக்கீரர் கணக்கா சொல்லிக்கிறாங்கோ!)
தமிழ் பறவை


பின்குறிப்பு:

ரெண்டு மட்டும் இருக்கிற மேட்டர்ல மூணுன்னு சொல்லி ரெண்டு நாளா அல்லாரையும் ரெண்டு, ரெண்டு, ரெண்டுதான்னு சொல்ல வச்சதுனால இந்த பதிவ வவா சங்கம் ரெண்டு போட்டிக்கு அனுப்பி வச்சுக்கிறேன். என்ன கரீட்டா? (Out of the box யோசிக்கணுமுன்னு நம்ம வெட்டிப்பயல் சொல்லிகிறாரு :-))

தினமலருக்கு ஜூடா ஒரு கேள்வி!

இது உங்களுக்கே நாயமா கீதா? ரீஜன்டா உங்க டெம்ளேட்ட மாத்தினீங்க. சர்தான். அத்தொட்டு பரவாயில்லேன்னு பாத்தா டெக்ஸ்ட் மேட்டர் அல்லாம் காப்பி‍‍‍‍‍ பேஸ்ட் பண்ண முடியாம ஏதோ ட்ரிக்ஸ் பண்ணி கீறிங்களே, இது உங்களுக்கே நாயமா கீதா?

இப்போ பாருங்க எத்தனை கட் அண்டு பேஸ்ட் பதிவர்கள் ரொம்ப பேஜார் ஆய்ட்டாங்க? இதல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல, ஆமாம்.

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்குஅட, இது யாருப்பா புதுசாக் கீது?

அல்லாருக்கும் வணக்கம்! பெரிய பெரிய மன்சங்கல்லாம் பதிவு எளுதறத பட்ச்சு, பட்ச்சு, நானும் ஒரு மனுசனாங்காட்டியும் வந்துடேனுங்கோ! நம்ப டெம்ப்ளேட் மாதிரியே நானும் ரொம்ப சிம்பிளான ஆளுங்கோ. வள வள எல்லாம் இல்லாம நச்சுனு நாலு வரி சுருக்கமா எழுதப் போறேனுங்கோ. அல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டி நம்மள நல்லாருன்னு சொல்லி போடுங்கோ!இப்படிக்கு,

ஜாம்பஜார் ஜக்கு