சுலபமாய் 10 கேள்விகள்!

வாத்யார். இந்த தபா ரொம்ப ஈஸியான கேள்வியா கேட்டுகிறேன். டக்குன்னு பதில் சொல்லுங்க் பாக்கலாம்!


இந்த உதாரணத்த பாத்துட்டு மத்த கேள்விக்கு மட மடன்னு சொல்லுங்க:

1) வாரத்தின் 7 நாட்கள்
2) ஆங்கிலத்தின் 26 ழுத்துக்கள்


கேள்விகள்:

1) கை_____________ 5 வி__________

2) வ______________ 12 மா__________

3) வெ_____________ 4 அ___________

4) உ______________ 7 அ___________

5) இ______________ 7 ஸ்__________

6) கி______________ 11 ஆ___________

7) அ______________ 40 தி___________

8) ஆ______________ 60 நா___________

9) இ_______________ 28 மா___________

10) வ_______________ 52 வா__________


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இதுக்கு மட்டும் பதில் சொல்டீங்க நீங்க பெரீ....ய கில்லாடிதான்!!!


நானும் எத்தினியோ கேள்வி கேட்டுகிறேன். ஆனா வாத்யார், இதுக்கு மட்டும் அஞ்சு நிமிட்ல நீங்க பதில் சொல்டீங்க நீங்க மெய்யாலுமே படா கில்லாடிதான்!


கேள்வி இன்னான்னா: கத்திவாக்கத்துக்கும் 799க்கும் இன்னா சம்மந்தம்?

அவ்ளோதான்.
யாரு மொதல்ல சொல்றாங்கன்னு பாக்கலாம்.

ஸ்டார்ட்...கேமரா...மீசிக்...

க்ளு: அத்திப்பட்டுக்கும் 799க்கும் இன்னா சம்மந்தம்?


விடை: கத்திவாக்கம், அத்திப்பட்டு, 799 இது மூணுமே எண்ணூருக்கு பக்கத்துல இருக்கு! இன்னா கரீடா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


அவசரமாய் ஒரு கேள்வி!


ரொம்பா யோசிக்காதீங்க, டென்ஷனாவாதீங்க!
சொம்மா க்விக்கா சொல்லுங்க வாத்யார்.
காட்ல கீற சிங்கம், குதிரை, வரிக்குதிரை, அப்புறம் ஒட்டைசிவிங்கி
இதுல எது ரொம்ப பளசான விலங்கு?

ஒரு மணி நேரம் களிச்சு விடைய போடறேன்,
அதுக்குள்ளார யாரு கரீட்டா சொல்றாங்க்கன்னு பாக்கலாம்!


விடை:
இதுல எது பளசு?


அதேதான் ரீஸனு.
மத்த எல்லா விலங்கும் கலராயிடுச்சு.
வரிக்குதிரை மாத்திரம் இன்னும்
ப்ளாக் அண்ட் வொய்ட்டாவே கீதே?

அத்தொட்டு வரிக்குதிரைதான் பளசு!

அதான் அப்பவே சொன்னன்ல டென்ஷன் ஆவாதீங்கன்னு.....


வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

FLASH NEWS!!! திருக்குறள் 134-ம் அதிகாரம் கண்டுபிடிப்பு!


வாத்யார், பழைய ஓலைச்சுவடி ஆனதுனால மூணே மூணு வார்த்தை காணாம பூட்ச்சு. எதுகை மோனைய வச்சு யார் மொதல்ல கரீட்டா கண்டு புடிக்கிறாங்கன்னு பாக்கலாம்.


அதிகாரம்-134
பதிவர் மாட்சி

பதிவெழுதி வாழ்வரே வாழ்வார் மற்றெல்லாம்
பின்னூட்டிப் பின்செல் பவர். (1)

பெற்றத னாலாய பயன் என் கொல் பின்னூட்டம்
நற்பதிவாய் இடார் எனின் (2)

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
பின்னூட்ட மறந்தார் தமக்கு (3)

சட்டென்று பதிவெழுதி பயனுண்டோ பயனில்லை
ஹிட்கவுன்டர் ஏறா விடத்து (4)

தொட்டனைத் தூறும் மணற்கேணி பதிவர்க்கு
ஹிட் டனைத்தூறும் மகிழ்வு (5)

சக்கைப் போடு போட்டாலும் பதிவர்க்கு
மொக்கைப் பதிவே துணை (6)

ஆனான பதிவர்க்கும் பின்னூட்டம் குறைவிற்பின்
அனானி உண்டே துணை (7)

பதிவு ஹிட்கவுன்டர் பின்னூட்டம் இம்மூன்றும்
அதிகம் வேண்டார் இலர் (8)

மட்டில் வேகத்து பலப் பதிவு தாம் இடுவார்
கட்-அன்-பேஸ்ட் கைகொள் பவர் (9)

நெருநல் விடை பெறுவார் மறுநாள் மீண்டுவரும்
பெருமை உடைத்தபதி வுலகு. (10)



ஜக்குவின் பின்னூட்டம்:

1) நம்ம பாரதியாரு சொன்னாப்ல 'மொக்கையே ஆனாலும் ஆன்ற தமிழ் புலவீர்' இதுல அர்த்தம் எதுனாச்சும் கீதான்னு பாத்து சொல்லுங்க.

2) நமக்கு சின்ன வயசுலேர்ந்தே வள்ளுவரு கிட்ட ஒரு இது. அத்தொட்டு வள்ளுவராண்ட ஒரு வார்த்த: "மன்ச்சுக்க வாத்யார்!"


சரியான விடை சொன்னவர்கள் (28 July சேர்த்தது)
மூன்று வார்த்தையையும் கரீட்டா சொன்னவர்கள்:

1. நாமக்கல் சிபி (இவுருதான் ஃபர்ஸ்டு!)
2. சீனா

வாழ்த்துக்கள் வாத்யார்!!!!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

தமிழ்மணத்துக்கு மறுபடியும் அதே கேள்வி!

ஒரு வருஷத்துக்கு முன்னால இப்டி ஒரு பதிவு போட்டு இருந்தேன். இன்னிக்கும் நம்ம கேள்வி அப்டியேதான் கீது.


  • புது பதிவு போட்டிங்கன்னா தமிழ்மணத்துல வர்றதுக்கு முன்னால தமிழ்மணம் க்ளாஸிக்ல பளிச்சுன்னு வந்துடுதே அது ஏன்?
  • பின்னூட்டம் ரிலீஸ் பண்ணீங்கன்னா க்ளசிக்ல வந்து ரொம்ப நே......ரம் களிச்சுதான் தமிழ்மணத்துல வருதே அது ஏன்?

பளச விட புதுசு... அது இன்னாது... ஆங் ... எஃபிஷியண்டா இருக்க வாணாமா?

நீங்க இன்னா சொல்றீங்க வாத்யார்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


முப்பது வினாடிகளில் பிரபல பதிவர் ஆவது எப்படி? (Money Back Guarantee)


வர வர பிரபல பதிவரா இல்லாங்காட்டி வேலைக்கு ஆவாது போல கீது. பிரபல பதிவரா இருக்கிறதுன்னால இன்னா லாபம்னு கேக்குறீங்களா?

1) நீங்க இன்னா எளுதினாலும் ஒரு 500 பேரு வந்து அட்டென்டென்ஸ் போட்ருவாங்க.

2) இருவது பின்னூட்டம் கண்டிப்பா காரண்டி.

3) வேற பதிவருங்க எதுனாச்சும் நல்ல ப்திவு எளுதினா நீங்க அதுல பின்னூட்டம் போட வாணாம். அத்த அப்டியே தூக்கி உங்க பதிவுல போட்டு 'நான் ஆதரிக்கிறேன்" இல்லாங்காட்டி "எதிர்க்கிறேன்"ன்னு புது பதிவு போட்டுறலாம்.

4) செய்தி பதிவுன்னு தினமலர், தினத்தந்தின்னு எதுலேர்ந்துனாச்சும் காப்பி-பேஸ்ட் பண்ணி போட்டுறலாம்.

5) பத்து கேள்வி, இருவது பதில்னு போட்டுத் தாக்கலாம்.

6) தொடர் வெளையாட்டு வெளையாடலாம்.

7) நம்மள படிப்பவர்கள்னு கலர் கலரா ஃபோட்டோ போட்டுக்கலாம்.

8) அப்ப அப்போ எதுனாச்சும் சர்வே வச்சுகிறேன்னு கேள்வி கேக்கலாம்.

9) ..... .... .....

10) ...... ..... ...... ..... இது ரெண்டையும் உங்க சாய்ஸுக்கு உட்டுக்கிறேன். நீங்களே எளுதிக்கங்க!


அதெல்லாம் கேக்குறதுக்கு நல்லாத்தான் கீது. ஆனா பிரபல பதிவர் ஆவுறது எப்படின்னு கேக்குறீங்களா? ரொம்ப ஈஸி வாத்யார்:


1) உங்களுக்குன்னு "பிரபல பதிவர்" அவார்ட் மேல குடுத்து கீறேன். அத்த அப்டியே காப்பி பண்ணிக்கோங்க.

2) லே-அவுட் ஆப்ஷன்ல போய் இத்த உங்க் டெம்ளேட்ல சேத்து உட்றுங்க.

3) அவ்ளோதான் மேட்டர், நீங்களும் இப்போ பிரபல பதிவர் ஆய்டீங்க!!!


இன்னாது? அவார்ட் போட்டுக்க வெக்கமா கீதா? அப்டீன்னா நீங்க ஒரு நாலு பேருக்கு இத்த குடுக்கறதா ஒரு பதிவு போடுங்க. நீங்க நாலு பேருக்கு குடுத்தா ஒருத்தராவது உங்களுக்கு குடுக்காமலா பூடுவாங்க?

பதிவுக்கு பதிவு ஆச்சு! அவார்டுக்கு அவார்டு ஆச்சு!!! இன்னா, நான் சொல்றது, கரீட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு.

உங்களிடமிருந்து "விடை" பெறுவதற்காக இந்த கேள்வி !!!!!!!!!!!!!!!!!

வாத்யார், உங்க கைல 5 லெட்டரும் 5 அட்ரஸ் எளுதின கவரும் இருக்குன்னு வச்சுக்கங்க. இப்போ இந்த 5 லெட்டரையும் 5 கவருக்குள்ளார கண்ண மூடிக்கினு போட்டீங்கன்னு வைங்க. ஆச்சா? இப்போ கேள்வி இன்னான்னா அதுல 4 லெட்டர் மட்டும் கரீட்டான கவருக்குள்ளார போவறதுக்கு எத்தினி சான்ஸ் கீது?


பதில்:

அ) 4/5 சான்ஸ்

ஆ) 3/5 சான்ஸ்

இ) 5/5 சான்ஸ்


சரியான பதில்: ஹையோ! ஹையோ! எந்த ஸ்கூலல படிச்சீங்க?

சரியான பதிலை தெரிந்து கொள்ள Ctrl-A வை அமுக்குங்க! (உங்க பதிலை பின்னூட்டத்துல சொல்லுங்க)

சரியான விடை (பிறகு சேர்த்தது)

சான்ஸே இல்ல தலீவா. அஞ்சுல நாலு லெட்டரு கரீட்டான கவருல பூட்சுன்னா பாக்கி இருக்கிற அஞ்சாவது லெட்டரும் கரீட்டான அஞ்சாவது கவருக்குள்ள போக வேண்டீது தானே வாத்யார்?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



பிரபல பதிவரும் ஔவையாரும்!

வாத்யார், நம்ம தமிழ்மணத்துல இன்னா நடக்குதோ இல்லியோ வருஷத்துக்கு நாலு தபா யாராவது ஒரு பிரபல பதிவரு 'விடைபெறுகிறேன்' ன்னு ஒரு ஃபிலிம் காட்டுறது மட்டும் கண்டிப்பா நடந்தே தீரும். ஒடெனே ஒரு பதினஞ்ச்சு பேரு "போவதே, போவாதே என் பதிவா"ன்ற கணக்கா பின்னூட்டம் போட்டு தாக்கி அவுர மறுபடி இட்டாந்துருவாங்க. (அந்த காலத்துல ஒரு பதிவரு யாரும் கூப்டாமயே ஸைலன்டா தானாவே திரும்ப வந்துட்டாரு! அது வேற கத!!!).


இதுக்கு நடூல நம்ப கு_ம்பன், ட_ள்ஸ் மாதிரி நாலு பேரு "வடை பெறுகிறேன் இட்லி பெறுகிறேன்"னு பதிவு போட்டு மேற்படி பிரபல பதிவர்களை கலாய்ச்சு, போட்டுத் தாக்கி, பின்னி பெடலெடுத்துறுவாங்க!

அதெல்லாம் சரி வாத்யார், இதுல ஔவையார் எங்க வந்தாருன்னு கேக்கிறீங்களா? நேத்து நம்ம அண்ணாத்த சொன்னாரு இத்தப் பத்தியெல்லாம் ஔவையாரு சமீபத்தில ஐநூறு வருஷத்துக்கு முன்னால்யே ஒரு பாட்டு எளுதிக்கிறாராம்:

பதிவருக்கு ஏற்ற பின்னூட்டம் ஆமாயின்
எத்தாலும் கூடி இருக்க்கலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருக்குமே ஆமாயின்
கூறாமல் சன்யாசம் கொள்!

ஔவையாரு மெய்யாலுமா இப்டி சொல்லிகிறாரு? இன்னாவோ டகாலடி வேல மாதிரி கீது. யாருக்குனாச்சும் ஒரிஜினல் பாட்டு தெரிஞ்சா சொல்லுங்க தலீவா!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

காணாமல் போன சர்தார்ஜி ஜோக்ஸ் (பாகம்-2)

அத்தியாயம்3 - பான்டாவின் மகிழ்ச்சி

நம்ம பான்டா சிங் வேண்டிகினு கடவுள் "அப்டியே ஆகட்டும்" னு சொன்ன ஒடனே ஒலகத்துல எல்லா சர்தார்ஜி ஜோக்கும் காணாம பூட்ச்சா? "இனிமே ஈரேழு ப‌தினாலு ஒல‌க‌த்ல‌யும் ந‌கைச்சுவையின் எதிர்கால‌ம் இன்னா ஆவுமோ"னு அல்லாரும் திகைச்சு பூட்டாங்க‌. பான்டா சிங் மெய்யாலுமே ரொம்ப குஷி ஆய்ட்டாரு. ஆஹா... இனிமே ஒரு பய நம்மள டபாய்க்க முடியாதுன்னு எல்லா சர்தார்ஜிகளும் பெருமூச்சு உட்டுகினாங்க.

அத்தியாயம்4 - கடவுள் தந்த இரண்டாவது வரம்

இத்தையெல்லாம் பார்த்து கடவுள் கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆய்ட்டாரு. அவுரு பான்டாவப் பாத்து: "பக்தனே பான்டா! நானே நேரில் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டும் கூட நீ உனக்கு என்று எதையும் கேட்காமல் மற்றவர்களுக்காக வரம் கேட்டாயே அந்த பெருந்தன்மையை மெச்சுகிறேன். அதனால் உனக்காக இன்னும் ஒரு வரமும் தருகிறேன். என்ன வேண்டுமோ கேள்" அப்டீன்னாரு. அல்லாரும் அப்டியே அசந்து போய் நின்னுட்டாங்க.

அத்தியாயம்5 - பான்டாவின் யோசனை

ஆனா, கடவுள் இப்டி சொன்னதுக்கு அப்பாலயும் நம்ம பான்டா தனக்குன்னு எதுவுமே வாணாம்னு சொல்லிட்டாரு. ஆனாலும் கடவுள் உடல. பான்டாவோட நல்ல மன்சுக்கு கண்டிப்பா எதுனாச்சும் கேட்டுத்தான் ஆவணும்னு அன்போட கண்டிப்பா சொல்லிட்டாரு. பான்டாவுக்கு ஒண்ணுமே புரியல. தனக்குன்னு இன்னாத்த கேக்குறதுன்னு ரொம்ப யோசிச்சு, யோசிச்சு பாத்தாரு. இப்டியே அரை மணி ஓடிப் பூட்ச்சு. கடவுளோ சிரிச்சுகினே வெய்ட் பண்ணிகினே கீறாரு. கட்சீல ஒரு வளியா பான்டா வாயைத் தொறந்தாரு. தொண்டைய ஒரு தபா கனச்சுக்கினாரு. கடவுளும் நல்லா காதை தீட்டிகினு கவனமா கேக்குறதுக்கு தயாரானாரு...

~தொட‌ரும்.

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

Top Secret! ஆபீஸில் ரகசியமாக தமிழ்மணம் படிக்க வேண்டுமா?


  • வாத்யார்... ஆபீஸ்ல எவ்ளோதான் ஆணி பிடுங்கினாலும், உங்க டேமேஜர் உங்க பின்னாலியே நின்னுகினாலும்...யாருக்கும் தெரியாம ரகசியமா தமிழ்மணம் படிக்கணுமா?
  • இதெல்லாம் ஒரு பதிவாங்காட்டியும்னு அல்லாரும் பெருமையா காறி துப்பினாலும் உடாம ஆபீஸ்லேயே பதிவு எளுதி தள்ளணுமா?
  • கைக்கு வந்த வரியை கட் அண்ட் பேஸ்டு பண்ணி "நல்லா சொல்லிகிறே வாத்யாரே" ன்னு மத்த பேரு பதிவுக்கெல்லாம் ஆபீஸ்லியே பின்னூட்டம் போட்டு தாட்ண்மா?
  • தமிழ்மணத்தின் சில மூத்த மற்றும் பிரபல பதிவர்கள் ஒருத்தரு மேல ஒருத்தர் பாஞ்சு பிராண்டி அன்போட போட்டு தாக்குறத ரகசியமா பட்ச்சு பரிந்துரை பட்டனை கிளிக்கோணுமா?

இதுக்கெல்லாம் இப்போ ரகசியமா ஒரு வழி வந்து கீது வாத்யார்.


ஒரு பய கண்டுபுடிக்க முடியாது.


வெளில யார் கைலயும் சொல்லிடாம சீக்ரட்டா அப்டியே கீள வாங்க.


.
.
.
.
.
.
.
.
.
வந்துடீங்களா?



வாணாம், வாணாம், இதுக்கெல்லாம் அப்டி டென்ஷன் ஆவாதீங்க! ஒடம்புக்கு ஆவாது!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

நீங்க கணக்குல புலியா? அப்டீன்னா இத்த கண்டிப்பா படிங்க!



கீழ இருக்கிற எல்லா நம்பரையும் .... ஒண்ணு கூட வுடக்கூடாது ... வரிசையா, சத்தமா படிங்க. ஜாக்ரதை... ஒரு நம்பரையும் மிஸ் பண்ணக்கூடாது.

கரீட்டா படிக்கோணம்...


1 2 3 4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26 27
28 29 30


மெதுவா, ஒண்ணு ஒண்ணா, சத்தமா படீங்க.






இன்னா ஆச்சா?








ஒரு நம்பரையும் உடலையே?







அப்டீன்னா கீழ வாங்க










சவாசு! அசத்திட்டீங்க!!!

அடுத்த பதிவுல
அ, ஆ, இ, ஈ.... சொல்லித் தாரேன்!

வர்ட்டா? ஜூட்..!!!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Breaking News! சர்தார்ஜி ஜோக் இனி உலகில் கிடையாது!


அத்தியாயம் 1 - பான்டாவின் சோகம்

ந‌ம்ப‌ பான்டா சிங் அண்ணாத்தைக்கு ரொம்ப வ‌ருத்த‌மா பூட்சி. இது இன்னாடா எங்கப் போனாலும் ச‌ர்தார்ஜி ஜோக், ச‌ர்தார்ஜி ஜோக்னு சொல்லி ந‌ம்ம‌ள‌ ரொம்ப ச‌த்தாய்கிறாங்க‌ளே இதுக்கு எப்டினாச்சும் ஒரு முடிவு க‌ட்டணும்னு ரொம்ப‌ யோசிச்சிகினே இருந்தாரு. அதுவும் இந்த‌ இன்ட‌ர்நெட் வந்த‌துக்கு அப்பால‌ ந‌ம்ப‌ நெல‌ம‌ ரொம்ப‌ மோச‌மா பூட்சேன்னு ரொம்ப பேஜார் பட்டுக்கினாரு.

அத்தியாயம் 2 - கடவுள் வந்தார்

எவ்ளோ யோசிச்சும் வேற‌ வ‌ழி ஒண்ணும் தோணாத்னால‌, ச‌ரி நம்ப பெரிய அண்ணாத்த‌ க‌ட‌வுள் கிட்ட‌யே கேட்டுக்க‌லாம்னு க‌டுமையா... அது இன்னா... ஆங்...பிரார்த்த‌ன‌ ப‌ண்ண ஆர‌ம்பிச்சாரு. ஒரு வார‌ம் ஆச்சு. அதுக்குமேல‌ க‌ட‌வுளுக்கே பொறுக்க முடியாம ந‌ம்ப பான்டா அண்ணாத்த‌ முன்னால‌ வ‌ந்துட்டாரு! "உன் பக்தியை மெச்சினோம், இன்னா வேணும் கொளந்தாய்னு" சும்மா ஏபி நாகராஜன் படம் கணக்கா பான்டாவப் பாத்து கேட்டாரு.

அத்தியாயம் 3 - மறைந்தன சர்தார்ஜி ஜோக்குகள்

பான்டா அண்ணாத்த‌ இதுக்குதான‌ காத்துகினு இருந்தாரு! "ஆண்ட‌வா இனிமே இந்த‌ ஒல‌க‌த்துல‌ ஒரு ப‌ய‌ ச‌ர்தார்ஜி ஜோக்னு வாயத்‌ தொற‌க்கக் கூடாது. அது மாத்ரம் இல்ல... த‌மிழ்ம‌ண‌ம், ப‌திவு, இன்ட‌ர்னெட்டு, புக், ரேடியோ, டிவி, சினிமா அல்லாத்ல‌யும் இதுவரைக்கும் இருக்குற‌ ச‌ர்தார்ஜி ஜோக் அல்லாம் இந்த‌ நிமிட்லேர்ந்து காணாம‌ பூட‌ணும்" அப்டீன்னு கேட்டுகினாரு. ஆண்டவன் "அப்டியே ஆகட்டும்" அப்டீன்னாரு.

அடுத்த‌ நிமிட் இந்த உல‌க‌த்லேர்ந்து எல்லா ச‌ர்தார்ஜி ஜோக்கும் காணாம‌ பூட்ச்சு. ந‌கைச்சுவை ஒல‌கம் அப்டியே ...இன்னாது...ஸ‌த‌ம்பிச்சு நின்னு போச்சு. "இனிமே ஈரேழு ப‌தினாலு ஒல‌க‌த்ல‌யும் ந‌கைச்சுவையின் எதிர்கால‌ம் இன்னா ஆவுமோ"னு அல்லாரும் திகைச்சு பூட்டாங்க‌...

~தொட‌ரும்.

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

நமீதாவுக்கு... ஒரு கேள்வி! (கில்லாடிகளுக்கு மட்டும் இந்த பதிவு!)

வாத்யார், கேள்வி அல்லாம் கேட்டு ரொம்ப நாளா பூட்சு. அத்தொட்டு ரொம்ப சுலவமா நாலே நாலு கேள்வி கேட்டுக்கிறேன். சொம்மா நச்சுனு பதில் சொல்லுங்க பாக்கலாம்...

1. இப்பாலிக்கா நீங்க செஸ் ஆடிக்கினு கீறீங்க. மொதல்ல நீங்கதான் ஆடோணும்.மொத்தம் எத்தினி விதமா .:பஸ்ட் காய்ன நவுத்தறதுக்கு உங்களுக்கு சாய்ஸ் கீது? (அவசரப் படாம ரோசிச்சு சொல்லுங்க!)

2. ஒரு நம்பர் கீது. அத்த 5 ஆல பெருக்குனாலும் இல்லாங்காட்டி 5-ஐ கூட்டினாலும் ஒரே ஆன்சர் தான் வரும். இன்னா நம்பர் அது?

3. இதுக்கு அப்பால வர்ற நாலு எளுத்து இன்னா, இன்னா, இன்னா, இன்னா?

Y
Y
H
L
Y
E
Y
T

க்ளூ: மாதங்களில் அவள் மார்கழி!

4.
கட்சீயா ஒரு கேள்வி. ராமசாமிக்கு 10, குப்புசாமிக்கு 12, நமீதாவுக்கு 8, அப்டீன்னா ஜாம்பஜாருக்கு எவ்ளோ?

க்ளூ: (n+1)2

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

மூத்த பதிவர்களுக்கு ஒரு சூடான கேள்வி (டென்ஷன் ஆவாதீங்க)

கேக்குறேனேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க.


தமிழ் மணம் முகப்பில் நம்ம போட்டோ வரமாடேங்குதே, அத்த வரவழைக்க இன்னா பண்ணோனும் வாத்யார்? வாணாம்..... பதில் தெரிஞ்சா சொல்லுங்க இல்லேன்னா வுடுங்க. தலைப்ப பாத்து அனாவசியமா டென்ஷன் ஆவாதீங்க.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


அட, எங்க இத்தினி நாளா ஆளையே காணும்?


வணக்கம் வாத்யார்!

பாத்து எத்தினி நாள் ஓடிப் பூட்ச்சு? சொகமா கீறீங்களா? வூட்டாண்ட அல்லாரும் சௌக்கியமா கீறாங்களா? நாட்ல எத்தினி விஷயம் நடந்து பூட்டுது? ஒலகமே கொஞ்சம் பொரண்டு வுளுந்து எழுந்து நின்னாலும் நம்ப தமிழ்மணம் எப்பவும் போல ஸ்டெடியா கீதுன்றது மெய்யாலுமே ஹாப்பியா கீதுப்பா! நீங்க கேக்குறத்துக்கு முன்னால ஒரு தபா நானே கேட்டுகிறேன்:
"அட, எங்க இத்தினி நாளா ஆளையே காணும்?"

எப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க! என்ன நான் சொல்றது? கரீட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு