தமிழ்மணத்தில் ஒரு BUG?

இதுல இன்னா பொடி இருக்குதோன்னு டென்ஷன் ஆவாதீங்க தலீவா! மெய்யாலுமே தமிழ்மணத்துல ஒரு bug இருக்கிற மாதிரி கீது!


இன்னா மேட்டருன்னா நீங்க பதிவுக்கு தலைப்பு வைக்கும் போது தலைப்புல ' அப்டீங்கிற எளுத்த (அதான் வாத்யார் apostrophe இல்லாங்காட்டி சிங்கிள் கோட்) யூஸ் பண்ணீங்கன்னு வைங்க தமிழ்மணம் உங்க பதிவ திரட்டும் போது சுத்தமா தலைப்பே காணாம பூடுது!

உதாரணமா இப்டி எல்லாம் தலைப்பு வைச்சீங்கன்னா கண்டிப்பா தமிழ்மண முகப்புல உங்க தலைப்பு தெரியாது!!!

1) Don't Miss it
2) 'அதுவும்', 'இதுவும்'
3) அவரு சொல்றாரு 'ஹி..ஹி'

இன்னா, சொன்னா நம்ப மாட்டீங்களா? சரி ஒரு தபா இப்டி தலைப்ப வச்சு இன்னா ஆவுதுன்னு பாத்து சொல்லுங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


பின்குறிப்பு: அப்புறம் இந்தப் பதிவு தலைப்ப பாருங்க! இன்னா புரியுது?

9 comments:

சென்ஷி said...

:-)))

ஆச்சரியம்தான்!!

Anonymous said...

எப்டி, எப்டி, எப்டிங்ணா கண்டுபுடிக்கிறீங்க?

Jawarlal said...

ம்ம்ம் ஹூம் நாங்க அடுத்தவங்க கஷ்டத்துல பாடம் படிக்கிறவங்க நைனா!

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

This problem happens in SQL queries when data has a single quote like O'Henry. Is it happening in Tamil Manam also?

:-)))

Anonymous said...

To fix this, They have to find single quote and replace with double quote.

Kumar

ரவிசங்கர் said...

//அவரு சொல்றாரு 'ஹி..ஹி'//

இதுல உள்குத்து ஒன்றும் இல்லையே? (வர வர எதைப் பார்த்தாலும் சந்தேகமா இருக்கு!)

நா. கணேசன் said...

ஜக்கு,

உங்கள் பிரச்சினை தீர
ஒரு வழிமுறையைக் கண்டேன்:
http://nganesan.blogspot.com/2009/09/test.html

ஜாம்பஜார் ஜக்கு said...

கணேசன் வாத்யார்,

உங்க ஐடியா டெக்னிகலா கீது. ரொம்ப டாங்க்ஸ்! நான் இன்னா சொல்றேன்னா சிங்கிள் கோட்ஸ் இல்லாம தலைப்ப வச்சு தமிழ்மணத்துல இணைச்சுட்டு, உடனே தலைப்ப எடிட் பண்ணிட்டா சரியா பூடும்.

அதெல்லாம் சரி வாத்யார், இது இன்னா அவ்ளோ பெரிய மேட்டரா? தமிழ்மணத்துல இத்த ஏன் சரி பண்ண மாட்டேன்றாங்க?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Mãstän said...

பொதுவா ' சிம்பிள் என்பது, ஏதாவது பேக்எண்ட் அதாவது தகவல் சேமிப்பு சர்வர் (sql server, mysql...) ஸ்ட்ரிங் (எழுத்துக்கள்) பதிவு செய்ய பயன் படும். தமிழ்மணம் உபயோகப்படுத்தும் பேக்எண்ட் கூட அப்படி ஒற்றாகத்தான் இருக்கும், அதன் இந்த bug... சரி செஞ்சுடுவாங்க