வாத்யார், எப்டி கீறீங்க? ஆஃபீஸ்ல, வூட்ல அல்லாம் ஒண்ணும் டென்ஷன் இல்லியே? ஸ்டெடியாத் தானே கீறீங்க?
எதுக்கு கேக்குறேன்னா, சில பேரு எத்னாச்சும் படிச்சு ரொம்ப டென்ஷனாப் பூட்றாங்க. இப்டிதான் நம்ப அண்ணாத்த ஒரு தபா ஏதோ ஒரு பதிவ பட்ச்சுட்டு கீ-போர்டையே தூக்கிப்போட்டு ஒடச்சுட்டாரு.
சே..சே... நீங்க அப்டீல்லாம் பண்ண மாட்டீங்க! ஏன்னா, நீங்கதான் ஸ்டெடியான ஆளாச்சே. அதனாலத்தானே உள்ளாறயே வந்து கீறீங்க!
சரி, இப்போ பதிவுக்கு போவலாமா?
உங்க கண்ணையே உங்களால நம்ப முடியாது!

1) இந்த ரெண்டு வட்டத்துல எது பெருசு? சொன்னா நம்ப மாட்டீங்க, ரெண்டும் ஒரே சைஸுதான்.
(அளந்து வேணா பாத்துக்குங்க).

2) இந்த ரெண்டு ஹரிஸான்டல் கோட்ல எது நீளம்? சொன்னா நம்ப மாட்டீங்க, ரெண்டும் ஒரே சைஸுதான்.

3) இந்த ரெண்டு சதுரமும் ஒரே கலரா, வேற வேற கலரா? சொன்னா நம்பமாட்டீங்க, ரெண்டும் ஒரே கலருதான். (ஒரு கண்ணை மூடிக்குனு வேணா பாருங்க)

4) இணை கோடுகள்? சொன்னா நம்ப மாட்டீங்க, கறுப்பு கோடுகள்ரெண்டும் parallel கோடுகள். (கொஞ்சம் தூர தள்ளி நின்னு வேணா பாத்துக்குங்க).

5) நேர் கோடா? சொன்னா நம்ப மாட்டீங்க, இந்த திக்கான கறுப்பு கோடு ஒரு நேர் கோடு தான்.
(ஸ்க்ரீன்னுக்கு பக்கத்துல நின்னு வேணா பாத்துக்குங்க)
இன்னா க்ரீட்டா? எதுனாச்சும் டவுட் இருந்துச்சுன்னா பின்னூட்டத்தில கேளுங்க!
நோ...நோ....!!!! நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு? கீ போர்ட இன்னா பண்றீங்க? அதெல்லாம் கூடாது, ஏன்னா நீங்க தான் ஸ்டேடியான ஆளாச்சே?
வர்ட்டா வாத்யார்?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
16 comments:
இரண்டாவது மட்டும் சரி மற்றவை எல்லாம் Optical Illusion
வந்தியத்தேவன் வாத்யார்,
//இரண்டாவது மட்டும் சரி மற்றவை எல்லாம் Optical Illusion//
மறுபடியும் கேக்குறேனேன்னு தப்பா நெனச்சுகாதீங்க! ஸ்டெடியாத்தானே இருக்கீங்க?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
ஜக்கு சார், எப்படிங்க இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?
நீங்கள் சொன்ன எல்லாமே தவறு.
//நீங்கள் சொன்ன எல்லாமே தவறு.//
அப்போ வந்தியதேவன் சொன்னதும் தப்பா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
எழுதும்போது ஸ்டெடியா இருந்திருந்தா படிக்கறவங்காளும் ஸ்டெடியா படிக்க வச்தியா இருக்கும்
வேற கீ போர்ட் அனுப்புங்க!!!
//எழுதும்போது ஸ்டெடியா//
அப்டீன்னா நா ஸ்டெடியா இல்லேன்றீங்களா? யா.....ஏஏ....ய். யாருப்பா அந்த கீ போர்ட எடுப்பா....
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//வேற கீ போர்ட் அனுப்புங்க!!!//
Gulf Tamilan துபாய் டூட்டி ஃப்ரீல வாங்கிக்கங்க ஹி..ஹி..
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
//நீங்க தான் ஸ்டேடியான ஆளாச்சே?//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
ரவிசங்கர்
வந்தியத்தேவன் சொனனது தான் சரி. இரண்டாவதை தவிர மற்ற எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் தான்.
//ஆப்டிக்கல் இல்யூஷன்//
இல்லியே, ரொம்ப தெளிவா கீதே!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
நீங்க ஸ்டெடியாத்தானே இருக்கீங்க?
என்னப்பா கடைசில யாருமே ஸ்டெடி இல்லையா ? ௨ நிமிஷம் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம்
//இந்த ரெண்டு சதுரமும் ஒரே கலரா, வேற வேற கலரா? சொன்னா நம்பமாட்டீங்க, ரெண்டும் ஒரே கலருதான். (ஒரு கண்ணை மூடிக்குனு வேணா பாருங்க)//
ரெண்டு கண்ணை மூடிக்குனு பாருங்க
ரெண்டும் ஒரே கலருதான்.
ஜக்கு ஷ்டெடியாத்தாங்கீறேன்.
அல்லாமே தப்புதான். இம்மாரி க்வுஜ் படங்க கீது. ஆனா இது அல்லாமே தப்பு.
Post a Comment