உங்க மூக்கை அப்டியே கம்யூட்டர் ஸ்கிரீன் பக்கத்துல கொண்டாங்க (இன்னாது?)

டென்ஷன் ஆவாதீங்க வாத்யார்! ஒரு விஷயமாத்தான் சொல்றேன்! போன பதிவ படிச்சு கண்ணெல்லாம் எரியுதா? அப்டீன்னா இத்த நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கோணும்!

Stereogram, Stereogram அப்டீன்னு ஒண்ணு கீது. ஒரு படத்த ஒரு டைப்பா கண்ண வச்சுகினு பாத்தா அது 3-டியா மாறிடிச்சுன்னு வைங்க அது தான் Stereogram! இப்போ போன பதிவுல பார்த்த படத்த எடுத்துகங்க. நேரா பார்த்தா கேட்டுக்கு பின்னால ஒரே செடிகொடியா தெரியுதா?இப்போ உங்க மூக்க அப்டியே கொணாந்து இந்த கேட்டுக்கு மத்தில வைங்க! ஹி...ஹி... மூக்கு ஸ்க்ரீன்ல இடிக்க வாணாம்... இடிக்கிற மாதிரி வைங்க. ஆச்சா? இப்போ கண்ண கொஞ்சம் கூட அசக்காம கொஞ்சம்... கொஞ்சமா... பின்னாடி நவருங்க... அல்லாம் டபுள் டபுளா தெரியற எடத்துல அப்டியே நிறுத்தி அசையாம பாருங்க. கண்ணு அசையவே கூடாது.... கொஞ்ச கொஞ்சமா 3-டில ஒரு யானை வெளில வரும். அதுக்கப்புறம் இன்னும் கொஞ்சம் பின்னால நவுந்தீங்கன்னா ரொம்ப பளிச்சுனு தெரியும்! ரெண்டு தபா ட்ரை பண்ணுங்க, அப்புறம் அஸால்டா வந்துரும்!

Stereogram

இத்தப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணுமா இங்க போங்க!

இந்த மாதிரி இன்னும் நெறைய படம் பாக்கணூமா இங்க பாருங்க!

அதெல்லாம் இருக்கட்டும் நீங்களே stereogram பண்ணனுமா (மெய்யாலுமா?!!!) அதுக்கு இங்க ட்ரை பண்ணுங்க!

இன்னா சரியா வந்துச்சா? பின்னூட்டத்துல சொல்லுங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு10 comments:

ரவிசங்கர் said...

ஜக்கு சார், யானை ரொம்ப அசத்தலா தெரியுது. மொதல் தடவை தெரிஞ்ச அப்புறம் அடுத்த தடவை ரொம்ப ஈசியா தெரியுது!

அமர்க்களமான பதிவு, தேங்க்ஸ்!

ரவிசங்கர்

சின்ன அம்மிணி said...

படம் இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்தா நல்லா தெரியும்னு நினைக்கிறேன்.

எதிர் வீட்டு ஜன்னல் said...

ஜக்கு சார் இப்படி பண்ணிடீங்களே.... என் ரெண்டு கண்ணும் அவிஞ்சு போனதுதான் மிச்சம்... எனக்கு யானையும் தெரியல பூனையும் தெரியல.. ரவி சங்கர் சார் உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது.. எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.....

Jawarlal said...

நீளமும் சிவப்புமான மூக்குக்கண்ணாடி அணிந்து பார்க்கிறபோது அட்டகாசமான முப்பரிமாணம் தெரிகிற மாதிரி படங்கள் (கிளுகிளு படங்கள் உள்பட) இணையத்தில் நிறைய இருக்கின்றன. ஜெயா டிவிக்காக வாங்கின கண்ணாடி இருந்தால் முயன்று பாருங்கள்.

http://kgjawarlal.wordpress.com

ஜாம்பஜார் ஜக்கு said...

சின்ன அம்மிணி,

அப்டியே உங்க ப்ரவுசர்ல View Text Size செட்டிங்கல பெருசு பண்ணிக்கலாம்!

எதிர் வூட்டு ஜன்னல்,

இன்னுமா தெரில?

ஜவஹர்,

இன்னா பேச்சு வாத்யார் இது? கிளுகிளு படமெல்லாம் நான் கேட்டனா? சரி, சரி இவ்ளோ தூரம் வந்துடீங்க ஒரு ரெண்டு ஹைப்பர் லிங்க் கொடுத்துட்டு போங்க...ஹி..ஹி..


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

நல்லா இருக்கு!

ஜாம்பஜார் ஜக்கு said...

//நல்லா இருக்கு!//

அதெல்லாம் சரி, யானை தெரிஞ்சுதா இல்லியா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Rajkumar said...

WOOOOOOOOWWWWWWWWWW...THANKS MANY FOR YOUR IDEA...I AM SEEING THE ELEPHANT...FRONT LEG IS ON AIR...TRUNK OUT SIDE THE GATE..WOOOOOOWW...ALMOST AFTER 17 YEARS...FIRST TIME IAM SEEING 3D IMAGE...

http://www.eyetricks.com/3dstereo2.htm...EASILY IAM SEEING THE IMAGES....THANKS...THANKS....

ஜாம்பஜார் ஜக்கு said...

//WOOOOOOOOWWWWWWWWWW.//

ராஜ்குமார் வாத்யார், மொத தபா பாக்க சொல்ல எனக்கும் அப்டிதான் இருந்துச்சு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Rajkumar said...

BOSSSSSS....I SAW ALL THE 3D PICTURES IN http://www.eyetricks.com/3dstereo.htm

THE PROBLEM IS NOW...I AM STARTED TO SEE EVERY THING WITH "TWISTED EYES".....

FIRST 4 - 5 PICTURES TOOK FEW MINS...NOW WITHIN SECONDS...I AM GETTING THE 3D PICUTRES....