வாத்யார், எங்க ஆளைக் காணும்?


இப்படிக்கு

ஜாம்பஜார் ஜக்கு

நேற்று ஒரு தகவல்...

"அறிவியல், பொது அறிவு தகவல்கள் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதுமா? ஆன்மிக தகவல்களும் கொடுக்க வேண்டும்" என்று நிலைய இயக்குநர் உத்தரவு போட்டுவிட்டார். எனக்கோ ஆன்மிகம் பற்றி அவ்வளவாக தெரியாது. அதனால் தமிழகத்தில் பிரபலமான ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையை வாங்கி, அதிலுள்ள தகவல்களை எனது ஸ்டைலில் கொஞ்சம் பாலிஷ் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அந்த நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கவில்லை. ஆன்மிக தகவல்கள் கொடுத்ததால் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு.

ஒரு நாள் அந்த பத்திரிகையை நடத்திவரும் ராமகிருஷ்ண மடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை சுவாமி கமலாத்மானந்தா (பத்திரிகையின் ஆசிரியர்) சந்திக்க வேண்டும் என்று அவரது உதவியாளர் கடுமையான குரலில் பேசினார். எனக்கு கை, கால்கள் உதறியது. அனுமதி கேட்காமல் தகவல்களை தொடர்ந்து எடுத்ததால், என் மீது வழக்கு தொடரப் போகிறார்கள் என்று என் அதிகாரிகள் பயமுறுத்தினர். நேராக சென்று கவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினர்.

பயத்துடன் மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றேன். சுவாமிகள், என்னைப் பார்த்தார். "நா..நான் ரேடியோல இருந்து வர்றேன். இன்று ஒரு தகவல்ல நான் சொல்ற ஆன்மிகத் தகவல் எல்லாம்..." என்று முடிப்பதற்குள் "தெரியும்..அது விஷயமாத்தான் உன்னை வரச் சொன்னேன்" என்றார்.

"எதுவும் சொல்ல வேண்டாம், முதல்ல நான் சொல்றத மட்டும் கேளு. நீ சொல்ற ஆன்மிக தகவல் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு. எங்கேருந்து உனக்கு மட்டும் இவ்ளோ நல்ல தகவல்கள் கிடைக்குது? இனிமேல் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகைல நீ தொடர்ந்து எழுதணும்!

இதற்கு நான் கொடுத்த அசடு வழிந்த ரியாக்ஷனை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது!



இன்னிக்கு வரல வாத்யார்...


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அதிசயமான TEST !!!!!

நீங்க எத்தினியோ டெஸ்ட் அல்லாம் பாத்து இருப்பீங்க. ஆனா இது வேற வாத்யார். 100% க்ரீட்டா இருக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க, முழுசா படிங்க உங்களுக்கே புரியும்.


இப்போ நீங்க ஒரு காட்டு வழியா நடந்து போய்கினு இருக்கீங்க. அப்டி போவச் சொல்ல ஒரு ஆறு (six இல்ல வாத்யார்... நதி இல்லாங்காடி ரிவர்). அந்த ஆத்தங்கரையில் ஒரு குடிசை கீது. அந்த குடிசைக் குள்ளார என்டர் ஆவுறீங்க. இடது பக்கம் ஒரு அழகான கட்டிலு கீது. வலது பக்கம் ஒரு டேபிளு, அத்த சுத்தி ஆறு சேர் போட்டுக் கீது. அந்த டேபிள் மேல ஒரு தட்டுல இதெல்லாம் கீது:

1) வாழைப்பழம்
2) பலாப்பழம்
3) மாம்பழம்
4) கொய்யாப் பழம்
5) அன்னாசிப் பழம்

இப்போ மேட்டர் இன்னானா இந்த அஞ்சு பழத்துல நீங்க எந்த பழத்தை எடுத்துப்பீங்க? நீங்க சொல்ற பதில்லேர்ந்து உங்களப் பத்தின ஒரு முக்கியமான விஷயம் இப்ப புரிஞ்சு பூடும்!


எந்த பழம்? முடிவு பண்ணிடீங்களா?


மொதல்லயே சொல்லிகிறேன் இது 100% சரியா வர்க் பண்ணும், ஜாக்கிரதையா முடிவு பண்ணுங்க...



இன்னா? ஆச்சா?



முடிவு பண்டீங்களா?



அப்புறம் மாத்தக் கூடாது, சொல்லிட்டேன்...!



உங்களப் பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சு பூடும், கியாபகம் இருக்கில்ல?


எவ்ளோ நேரம்? ட்க்குனு முடிவு பண்ணுங்க (வேணுன்னா லிஸ்ட ஒரு தபா பாத்துக்கங்க).


ஆச்சா?


இப்போ...டெஸ்ட் ரிஸ்ல்ட்ட பாக்கலாமா?


...


...


...



விடைகள்:


1) நீங்க வாழைப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு வாழைப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

2) நீங்க பலாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு பலாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

3) நீங்க மாம்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு மாம்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

4) நீங்க கொய்யாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு கொய்யாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

5) நீங்க அன்னாசிப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு அன்னாசிப்ப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.


இன்னா 100% கரீட்டா இருந்திச்சா? அதான் நான் மொதல்லயே சொன்னேன்... நம்ப மாட்டீன்னுடீங்க.


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உடுங்க கழுதை! இதுக்கெல்லாமா டென்ஷன் ஆவாங்க?!!!

ஹலோ, எப்டி கீற?

நல்லா கீறேன். நான் குடுத்த மிஸ்டு கால் கெடச்சுதா?

அக்காங்! இன்னா மேட்டரு?

ஒண்ணுமில்ல, புச்சா ஒரு செல்போன் வாங்கி கிறேன்.

இன்னாத்துக்கு புது போனு, பழைய போன் நல்லாத்தான இருந்திச்சு?

அது இன்னா பண்றது? பக்கத்து ஊட்டு களுதை கூட புது போன் வாங்கிட்சு. நாம சும்மா இருக்க முடியுமா? அதான்.

அத்த உடு களுத!

அது எப்டி உட்றது? வர வர கண்ட களுதையெல்லாம் புது போன் வாங்கி சீன் ஓட்டுது.

சரி..சரி...நீ ஓண்ணியும் டென்ஷன் ஆவாத. என் போட்டோவை MMS பண்ணிகீறேன். புது போன்ல செட்டிங்க்ஸ் அல்லாம் கரீட்டா கீதான்னு செக் பண்ணிக்கோ.

ஆஹா...சூப்பரா கீது உங்க போட்டோ! அப்புறம் புதுசா ஒரு படம் ரிலீஸ் ஆகி கீதாம். பெரிய பெரிய போஸ்டர் அல்லாம் ஒட்டிகிறாங்களாம். சாப்டுட்டு வந்து அப்புறமா போன் பண்றேன். Bye!

Bye!


*

*

*

*

*

*

*

*

*

*






வாத்யார், வர வர அநியாயத்துக்கு டென்ஷன் ஆவுறீங்க! சும்மா லூஸ்ல உடுங்க..ஹி..ஹி.. வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


பாரதியாருக்கு ஹார்மோனியத்தின் மீது இன்னா கோவம்?

தமிழ்நாட்டு மாதர்களுக்குள்ளே நல்ல பாட்டு வளர்ச்சி பெற வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் அதற்கு ஹார்மோனிய பெட்டி ஒரு விக்கினமாக வந்து சேர்ந்திருக்கிறது. இந்த பெட்டி நமது நாட்டிலே பழகுவதினால் சங்கீதத்திற்கு பலவிதமான தீங்கு உண்டாவதாக வித்வான்களிலே பெரும்பாலோர் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதை நிறுத்துவதற்கு யாரும் வழி தேடவில்லை. நமது சங்கீதத்திலுள்ள சுருள்கள், வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்ட முடியாது. ஆதலால் அந்த வாத்தியத்தில் உள்ள விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன. இதையெல்லாம் காட்டிலும் அந்த பெட்டி போடுகின்ற பெரும் கூச்சல்தான் என் காதுக்கு பெரும் கஷ்டமாக தோன்றுகிறது.

மேலும் சங்கீதத்தில் கொஞ்சமேனும் பழக்கம் இல்லாதவர்களுக்கெல்லாம் இந்தக் கருவியைக் கண்டவுடனே "ஷோக்" பிறந்து விடுகிறது. சத்தமுண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாக பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி, முன் பக்கத்து சாவிகளை இழுத்துவிட்டு, துருத்தியை அசைத்தால், "ஹோ" என்ற சத்தமுண்டாகிறது. (உடனே பாமரனும்) "நாம் அல்லவா இந்த இசையை உண்டாக்கினோம்?" என்று நினைத்துக் கொள்கிறான். உடனே வெள்ளைக் கட்டைகளையும், கறுப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டு தட்டுகிறான். பேஷான தொனிகள்! மேலான தொனிகள்!! பாமரன் பூரித்து போகிறான். பிறகு சரளி, அலங்காரம், பிள்ளையார் கீதம், சங்கராபரண வர்ணம், 'பவநுத' கீர்த்தனம், இத்தனையும் ஹார்மோனியத்தில் மூன்று மாதத்திற்குள் பழக்கமாய் விடுகிறது. பாமரனின் மனத்திலே "நாம் ஒரு வித்வான்" என்ற ஞாபகம் உறுதியாய் பதிந்து விடுகிறது. ராக விஸ்தாரங்களைத் தொடங்கி விடுகிறான்.

ஒரு வீட்டில் ஹார்மோனியம் வாசித்தால் பக்கதிலே ஐம்பது வீட்டிற்குக் கேட்கிறது. அறியாதவன் தன் அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்கு பிரச்சாரம் பண்ணவேண்டுமானால், அதற்கு இந்த கருவியைப் போலே உதவி வேறொன்றுமில்லை. வீணை தவறாக வாசித்தால் வீட்டிலுள்ள ஜனங்களுக்கு மாத்திரந்தான் துன்பம். ஹார்மோனியம் தெரு முழுவதையும் ஹிம்சை படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து சங்கீத உணர்ச்சி குறையும்படி செய்யவேண்டுமானால், கிராமந்தோறும் நாலைந்து ஹார்மோனியம் பரவும்படி செய்தால் போதும்.

- பாரதியார்

இப்ப ஜாம்பஜார் ஜக்கு: நம்ம பாரதியாருக்கு மீசிக்ல நல்லா ஞானம் உண்டுன்னு தெரியும். இருந்தாலும் அவருக்கு இந்த ஹார்மோனியம் மேல இன்னா வாத்யார் இவ்ளோ கோவம்? அதே மாதிரி சமீபத்துல நம்ம ஜவஹர்லால் நேருவுக்கும் இந்த ஹார்மோனியம் புடிக்காதுன்னும் அத்தொட்டு ஆல் இந்தியா ரேடியோல ரொம்ப நாள் ஹார்மோனியமே போடம இருந்தாங்கன்னும் அண்ணாத்த சொல்றாரு. அதுனால நம்ம பித்துக்குளி முருகதாஸு ரொம்ப நாளு ரேடியோல பாடாமயே இருந்தாராம்.


மெய்யாலுமா வாத்யார்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Printer வேலை செய்யாத போது அவசரமாய் காப்பி எடுப்பது எப்படி?



கம்ப்யூட்டர் மானிட்டர்ல ஒரு டாக்குமென்ட் கீது. ஆனா உங்க ஆபீஸ்ல பிரிண்டர் திடீர்னு வேல செய்யலன்னு வச்சுக்கங்க. இப்ப அவசரமா அந்த டாகுமென்ட பேப்பர்ல எப்டி காப்பி பண்ணுவீங்க?







சொல்றெனேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க வாத்யார்...





இதெல்லாம் டெக்னிகல் சமாச்சாரம்.




பிரிண்டர் இல்லாம காப்பி எடுக்க முடியும்னு மெய்யாலுமா நெனைக்கிறீங்க?




ரொம்ப நல்லவரா இருக்கீங்க...





இவ்ளோ தூரம் வந்துட்டீங்க...






சொல்றேனேன்னு தப்பா நெனச்சுக் காதீங்க...






இப்டி வாணா ட்ரை பண்ணி பாருங்க...










வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அவனும் அவளும்... தனியாக ரயில் கூப்பேவில் (18+ சிறுகதை)!!!


ஹலோ!

ஹலோ!!

இந்த கூப்பேல வேற யாரும் இல்ல போலிருக்கு...

ஐ திங்க் ஸோ... அது வந்து... தட்கால்ல கடசீல போட்டதுனால... வந்து... இப்படி அலாட் பண்ணிட்டாங்க போல இருக்கு... உங்களுக்கு ஒண்ணும்...

ரொம்ப குளுருது ஜன்னல சாத்திரலாமா?

அது வந்து... சரிங்க...

டிடிஆரும் வந்துட்டு போய்ட்டாரு. மணி பத்தாயிடுச்சு. அடுத்த ஸ்டேஷன் காலைலதான் வரும்.

அதுனால...?

ராத்திரில திருட்டு பயம் ஜாஸ்தி. கூப்பே கதவை சாத்திரலாமா?

அது...அது... வந்து...சரிங்க...

நான் கீழ் பெர்த்துல படுத்துக்கறேன். நீங்க மேல் பெர்த்த எடுத்துக்கங்க.

சரிங்க.

*******************************************************

ஹலோ... வந்து... பாதி ராத்திரில டிஸ்டர்ப் பண்றேனேன்னு நெனச்சுகாதீங்க...

இல்ல பரவால்ல சொல்லுங்க.

வந்து... ரொம்ப குளுரா இருக்கு. இஃப் யூ டோண்ட் மைண்ட்....கீழே சீட்டுக்கு அடீலேர்ந்து அந்த ரெட் பிளான்கட்டை எடுத்துத் தரீங்களா? வந்து.... மேல் பெர்த்லேர்ந்து எட்டலை.

அதை விட சூப்பரா நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?

என்னங்க?

இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும் நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் ஆனவுங்க மாதிரி ஆக்ட் பண்ணிக்கலாமா?

ஆங்... எ...ன்...ன...ங்..க....? ச...ரி...ங்...க...

*

*

*

*

*

*

*

*

*

*

(குறுக்க வர்றதுக்கு மன்ச்சுக்க வாத்யார்.
இன்னும் ஒரே வரியில் இந்த கதை முடியப் போவுது!)

*

*

*

*

*

*

*

*

அப்படீன்னா நீங்களே இறங்கி வந்து பிளான்கட்டை எடுத்துட்டு போங்க. பாதி ராத்திரில தொண தொணன்னு பேசி ஏன் என் உயிர வாங்கறீங்க?




இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


எடக்கு மடக்கு ... ஜக்குவின் முதல் சிறுகதை (இன்னாது?!!!)


வாங்க உக்காருங்க. உங்க பேரு?

தாங்க்யூ சார். கந்தசாமி சார்.

எந்த வேலைக்கு இன்டெர்வியூக்கு வந்து இருக்கீங்கன்னு தெரியுமா?

தெரியும் சார். ரயில்வே சிக்னல் மேன் வேலைக்கு சார்.

வெரி குட். உங்க மொதல் கேள்வி. நீங்க டியூட்டில இருக்கும் போது திடீர்னு ஒரே ட்ராக்ல எதிரும் புதிருமா ரெண்டு ட்ரெயின் வந்து கொண்டிருப்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

ஒடனே லீவரை யூஸ் பண்ணி ஒரு ட்ரெயினை அடுத்த ட்ராக்குக்கு மாத்திருவேன் சார்.

லீவர் உடைந்து போயிருந்தால் என்ன செய்வீர்கள்?

உடனே சிக்னலை சிவப்பாக மாத்தி ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.

சிக்னலும் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

உட்னே பக்கத்து ஸ்டேஷனுக்கு போன் பண்ணி ட்ரெயினை நிறுத்த சொல்வேன் சார்.

உங்க ஸ்டேஷனில் போன் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

ஓடிப் போய் பக்கத்துல இருக்குற பப்ளிக் போன் பூத்லேர்ந்து போன் பண்ணுவேன் சார்.

பப்ளிக் பூத்திலும் போன் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

சிவப்பு லைட்டை காண்பித்து தூரத்துலயே ஒரு ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.

சிவப்பு லைட்டும் உடைந்து போயிருந்தால் என்ன செய்வீர்கள்?

சிவப்பு கொடியை தூக்கிக் கொண்டு ட்ராக்கிலேயே வேகமாய் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்ளோ தூரம் ஓடிப் போய் எப்படியாவது ஒரு ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.

சிவப்பு கொடியும் காணாமல் போயிருந்தால் என்ன செய்வீர்கள்?

உடனே வூட்டுக்கு ஓடிப் போய் அண்ணாத்தய இட்டாந்துருவேன் வாத்யார்!

வா...ட்? எதற்காக உங்கள் அண்ணாத்தையை ... ஐ மீன் ... அண்ணனை அழைத்துக் கொண்டு வருவீர்கள்?

எங்க அண்ணாத்த இதுவரைக்கும் ஒரு தபா கூட ட்ரெயின் ஆக்ஸிடென்டே பார்த்ததில்லையாம் வாத்யார்!!!



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Revealing Secret! கூகுளின் ரகசிய பக்கங்கள்!!!!

வாத்யார் வர வர கூகுள் இல்லாம பல் தேய்க்ககூட முடியாதுன்னு ஆகி போச்சு. இன்னாதான் ஒரு நாளைக்கு நூறு தபா கூகுள மேஞ்சாலும் அதுல இருக்கிற சில ரகசிய பக்கங்களை நீங்க பாத்திருக்க மாட்டீங்க.

அதுக்கு முன்னால ஒரு சின்ன புதிர்:


கீள கீற மூணு கூகுள்ல எது சரியான கூகுள்? (இத்த செக் பண்றதுக்கும் கூகுள்ல தேடக்கூடாது. ஒடனே சொல்லணும், ஆமா!).





இப்ப கூகுளோட ரகசிய பக்கங்களை பார்க்கலாமா? சொன்னா நம்பணும். இதுல ட்ரிக்ஸ் ஒண்ணும் கெடையாது வாத்யார். மெய்யாலுமே கூகுள் பக்கங்கள் தான். ஒண்ணு ஒண்ணா க்ளிக் பண்ணி பாருங்க!











கூகுள் மென்டல்ல நீங்க நெனச்ச படத்த கரீட்டா பாத்தீங்களா? டென்ஷன் ஆவாதீங்க! இன்னா படத்த நெனச்சீங்கன்ன்னு பின்னூட்டத்துல போட சொல்லி கேக்க மாட்டேன் வாத்யார்!



இப்படிக்கு

பொழுது போகாதவர்களுக்கு ஒரு Special பதிவு!

























இன்னா? கொஞ்சமாவது பொழுது போச்சா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


செட்டியார் பேட்டைதான் Chetpet என்று மாறியதா?!




இந்த சென்ட்ரல் ஸ்டெஷன், மீசியம், லா-காலேஜு மாதிரி பில்டிங்கை அல்லாம் பொதுவா "பிரிட்டிஷ்காரன் கட்டுனது" அப்டீன்னு ரொம்ப பேரு சொல்லி கேள்வி பட்டுகிறோம். ஆனா அதை அல்லாம் கட்னது ஒரு மெட்ராஸ்காரர் அதுவும் ஒரு தமிழர் அப்டீன்னு படிச்சு ரொம்ப ஆச்சரியமா(வும் சந்தோஷமாவும்) பூட்சு வாத்யார்!

பட்சு பாருங்க!


தாட்டிகொண்ட நம்பெருமாள் செட்டியார்!

சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, 'தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டியார் என்பவர்.பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த இவரது மாளிகை, "வெள்ளை மாளிகை' என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின்னால் உள்ளது.இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன.இது அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப் பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.


எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஆரிங்டன் சாலை வரை (தற்போதைய டெய்லர்ஸ் ரோடு) உள்ள நிலப்பரப்பு அவருக்கு சொந்தமாக இருந்தது.அதனால், "செட்டியார் பேட்டை" என அழைக்கப் பட்டது. நாளடைவில், "செட்டிபேட்டை' என மருவி, இன்று, "செட்பெட்' என மாறிவிட்டது. அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், அமைதியை விரும்பியதால், செட்டியாரின் நிலத்தை வாங்கி, அவரையே வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண் டனர்.அப்பகுதியில் இன்றும் அனேக வீடுகள் ஆங்கிலேய பெயர்களாக காசா மேஜர், ஜாரட்ஸ் கார்டன் (தற்போது சமூக சேவா பள்ளி) ஹாரிங்டன், பாந்தியன் என்று பெயர்.


கணிதமேதை - ராமானுஜம்: காலம் சென்ற கணித மேதை கடைசி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார்.இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் அதிகமாகி விட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக் கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். தமிழ்நாடு மிகப்பெரிய கணிதமேதையை இழந்தது. அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்ற முதல் வைசியர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.,) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச் டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் யுனைடெட் கம்பெனி சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது.


தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு பெட்டிகள் தனி ரயில் வண்டி வைத்திருந்தார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார்.


தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோவில்களின் திருப் பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வடசென்னையில் பல பள்ளிகளும், சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் நடைபெறுகின்றன.சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.





இன்னா மாதிரியான பெரிய மன்சங்கல்லாம் நம்ம மெட்ராஸ்ல இருந்துகிறாங்க வாத்யார்! மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்னு பெரியவங்க சும்மாவா சொல்லிகிறாங்க?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

For Husbands Only! (மனைவிகள் படிக்க வேண்டாம்)!!


ஆஹா! வாத்யார் படா கில்லாடியான ஐடியாவா கீது! அடுத்த தபா ட்ரை பண்ணி பாருங்க! (டிஸ்கி: விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு!)





அப்பால, மனைவிகளுக்கு ஒரு சின்ன... அது இன்னாது....ஆங்... ரிக்வஸ்டு (நான் இன்னாதான் தலைப்பு வச்சாலும் படிக்காமயா இருக்க போறீங்க!): ஆபீஸுக்கு போன் பண்ணா இந்த ஹஸ்பண்டுக்கும் பத்து நிமிஷத்துக்கு ஒரு தபாவாவது ரெண்டு வார்த்தை பேசறதுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க. இல்லாங்காட்டி பாருங்க இன்னா டகாலடி வேலையெல்லாம் பண்றாங்க!


வாத்யார்! அங்க பாருங்க உங்க போன் அடிக்குது.... ஹலோ... ம்.... ம்ம்... ம்ம்ம்... ம்ம்... ம்ம்ம்...


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


கந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு-Part 3

அடங்கவே மாட்டாங்க போல! கந்தசாமி படம் அப்டி இப்டின்னு மாத்தி மாத்தி வேற வேற டைட்டில்ல பதிவு போட்டு தாக்கிகினே கீறாங்க வாதயார். (அதுலயும் சில பதிவர்கள் part-1, 2, 3 ன்னு வேற பின்னி பெடலெடுத்து பேஜார் பண்றாங்க!). ஒரே ஒரு மேட்டர் தான் உட்டு போச்சு வாத்யார்.




அவ்ளோதான் மேட்டர். இன்னா நான் சொல்றது? வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

டென்ஷன் பார்ட்டிகளுக்கு ஒரு Dolphin Test (கண்டிப்பா படிங்க)!


வர வர டென்ஷன் பார்ட்டிகள் ரொம்ப ஜாஸ்தியா பூட்டாங்க வாத்யார். அத்தொட்டு இந்த பழைய டென்ஷன் மீட்டரை அவுங்களுக்காக தூசி தட்டி எடுக்க வேண்டிதா போச்சு!

இது எப்டி வேலை செய்யுதுன்னு இத்தினி வருஷமா யாருக்கும் புரில ஆனா இதை டெஸ்ட் பண்ணி பாத்தீங்கன்னா அப்டியே அசந்து பூடுவீங்க! அவ்ளோ கரீட்டா இருக்கும்.

கீழே இருக்கிற படத்துல ஒரே மாதிரியா ரெண்டு டாலஃபின் கீது வாத்யார். ஒரே மாதிரின்னா அப்டியே அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கும். கொஞ்சம் கூட டென்ஷனே இல்லாதவுங்க அத்த பார்த்தாங்கன்னா ரெண்டு டால்ஃபினும் அப்டியே ஒரே மாதிரி தான் தெரியும்.

ஆனா, இதுல இன்னா மேட்டர்னா, மனசுல எவ்ளவுக்கு எவ்ளோ டென்ஷன் கீதோ அவ்ளவுக்கு அவ்ளோ ரெண்டு டால்ஃபினுக்கு வித்யாசம் தெரியும்.

இன்னா புரீதா?

...

ஒண்ணும் கொழப்பம் இல்லியே?


...


இப்போ டால்ஃபின்களை பார்க்கலாமா?


...

டென்ஷன் இல்லாம பொறுமையா வாங்க...


...


ரெண்டு மூணு வித்யாசத்துக்கு மேல தெரிஞ்சுதுன்னா எதுக்கும் ஒரு பத்து நாளு லீவு போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க.

...

...

...

இன்னா ரெடியா?

...

...

ரிலாக்ஸா தான கீறீங்க?

...

...


இப்போ படத்த நல்லா பாருங்க


...


...






இன்னா வாத்யார் ஒரு மாதிரியா கீறீங்க? ரெண்டு டால்ஃபினுக்கும் எவ்ளோ வித்யாசம் தெரிஞ்சுது? ஜாஸ்தி ஒண்ணும் டென்ஷன் இல்லியே?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஆனந்த விகடனாருக்கு ஒரு சபாஷ்!



போன மாசம் விகடன்.காம் பேஜார் பண்ணுதுன்னு ஒரு பதிவு போட்டு இருந்தேன். கிட்டத்ட்ட ரெண்டு வாரம் களிச்சு நேத்துதான் அந்த பிராபளத்த சரி முழுசா சரி பண்ண முடிஞ்சுது. ஆனா நான் சொல்ல வந்த மேட்டர் அது இல்ல!

மேட்டர் இன்னான்னா, இன்னிக்கு விகடன் வெப்மாஸ்டர் ரெண்டு வாரம் இந்த பிராபளம் இருந்ததால அல்லாருக்கும் ஒரு மாசம் சந்தா ஃப்ரீயா எக்ஸ்டெண்டு பண்ணிகிறோம்னு ஒரு இமெயில் போட்டுகிறார்.

சபாஷ் விகடன்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இன்னிக்கு வாத்யார் தினம் வாத்யார்!


பென்ச்சு மேல நிக்க சொன்ன கணக்கு வாத்யார்
பெரம்பால அடிச்ச சயன்ஸ் வாத்யார்
மத்யான வெயில்ல முட்டிபோட வச்ச தமிழ் வாத்யார்
காதைப் புடிச்சு திருகின ஹிஸ்டரி டீச்சர்
இம்போசிஷன் எழுத சொன்ன இங்கிலீஷ் டீச்சர்
கடசீ நாள் ஸ்கூல் டேல கண் கலங்கின கிளாஸ் வாத்யார்...

இவுங்களை எல்லாம் இனிமே எப்போ பார்ப்போம்..?
உங்களாலத்தான் இந்த ஒசரத்துக்கு வந்தோம்னு எப்டி சொல்வோம்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அமெரிக்கர்களை விட இந்தியர்கள் புத்திசாலிகளா?

நான் சொன்னா நம்ப மாட்டீங்க ... சின்னதா ஒரு டெஸ்ட் பண்ணி பாத்துரலாம். இன்னா ரெடியா?


1. கூகுளாண்டவரை ஓப்பன் பண்ணிக்கங்க.
2. மொதல்ல "why are indians" அப்டீன்னு டைப் அடிங்க. கூகுள் டாப்ல (Auto fill) இன்னா சொல்லுது?
3. இப்ப "why are americans" அப்டீன்னு டைப் அடிங்க.

கூகுள் இப்போ இன்னா சொல்லுது. இப்போ புரியுதா? அவ்ளோதான் மேட்டர்.

வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

மூன்றே நிமிஷத்தில் உங்கள் கழுத்துவலி தீர வேண்டுமா?





இன்னா வாத்யார், சரியா பூட்சா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு-Part 2

இத்த படிச்சே டென்ஷன் ஆனவுங்க இத்த படிச்சா இன்னா சொல்வாங்களோ தெரீல வாத்யார்!


வசூலில் சிவாஜியை மிஞ்சியது கந்தசாமி

"கந்தசாமி படத்தின் வசூல், ஒரே வாரத்தில் 37 கோடி ரூபாயை தாண்டி, தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது' என்று, நடிகர் விக்ரம் தெரிவித்தார்....சென்னையில் 16 தியேட்டர்களில் திரையிடப்பட்ட, "சிவாஜி' பட வசூலை, "கந்தசாமி' முறியடித்துள்ளது.

முழு நியூஸ் இங்கே

Moral of the Story இன்னான்னா... வாணாம்... நீங்களே முடிவு பண்ணிக்கங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு