ஒரு கிளு கிளு காதல் கதை (கண்டிப்பாக 18+)!

இரவு நேரம். தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது. கல்யாணமாகி இன்றோடு இருபது வருஷம் ஆகிவிட்டது. அவள் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு படுத்தாள்.


திடீரென்று அவளுடைய கணவனின் கை அவளுடைய கழுத்தின் பின்புறம் மெதுவாகத் தடவியது. என்ன ஆச்சரியம்! இருந்தாலும் அவள் கண்களைத் திறக்கவில்லை! அவனுடைய கை கழுத்திலிருந்து இப்போது அவளுடைய முதுகை நோக்கி மெல்ல நகர்ந்தது. அவனுடைய மூச்சுக் காற்றை சுலபத்தில் கேட்க முடிந்தது. அவள் பிடிவாதமாக கண்களை மூடியபடி கவனித்தாள்.

அவனுடைய கை இப்போது முதுகைத் தாண்டி அவளுடைய இடுப்பை நெருங்கிவிட்டது. அவளுடைய இதயம் சிலிர்த்தது. இருந்தாலும் கண்ணைத் திறக்கவில்லை. அவனுடைய கையின் பயணம் இன்னும் நிற்கவில்லை. இடுப்பையும் தாண்டி அவளுடைய முழங்கால்களுக்குக் கீழே ஒரு கணம் தயங்கியது. அடுத்த கணம் அவளுடைய பாதங்களுக்கு அடியில் சட்டென்று நகர்ந்தது.

மூடிய இமைகளுக்குள் அவளுடைய கண்கள் பட படத்தன.

அந்த நொடியில் திடீரென்று டிவி உயிர் பெற்றது. "உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முதலாக...!"

"என்னாங்க... என்ன ஆச்சு?"

...


...


...


...


...


...


...


...


"டிவி ரிமோட் கெடச்சுடுச்சு!"


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



39096

QUICK ! இந்த மூணு படங்களுக்கும் என்ன சம்பந்தம்?


வாத்யார், க்ளூ அல்லாம் ஒண்ணும் கெடையாது, டக்குன்னு சொல்லுங்க!






சரி..சரி.. ஒரு சின்ன(?) க்ளூ:


இப்பப் புரீதா?


கரீட்டா பதில் சொன்ன ஸ்ரீனி, துளசி கோபால், வானம்பாடிகள் மூணு பேருக்கும் ஒரு சபாஷ். அதெல்லாம் சரி ஒரு வேளை பூனையக் கேட்டா இப்டி சொல்லுமோ? ஹி..ஹி...





வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



38669

இருட்டான கார் பார்க்கில் தனியாக அவனும் அவளும்! (18+ கதை)


வாத்யார், கதைய படிச்சுட்டு சந்தேகமெல்லாம் கேக்கக் கூடாது, சொல்லிட்டேன் ஆமாம்!

***


ஏட்டு ஏகாம்பரத்த்துக்கு கேஸ் கிடைச்சு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்ஸ்பெக்ட்டர் வேற ஒரு மாதிரி முறைக்கிறார். இன்னிக்கு சரியா ஒரு கேஸை புடிக்காமல் திரும்பக் கூடாது.

அட, அந்த இருட்டான கார் பார்க்கில் ஒரு கார் தனியா நிக்குதே. இந்த ஏரியா வேற ஒரு மாதிரியான இடம். காருக்குள்ள லைட் எரியுதே? உள்ளே யாரு?

இன்னாது? ஒரு பையனும் ஒரு பெண்ணுமா? இன்னிக்கு சரியான கேஸு ஒண்ணும் மாட்டும் போல இருக்கே.

ஏகாம்பரம் காரை நெருங்கினான்.

அட, இது என்ன ஆச்சரியம். அந்த பையன் முன் சீட்டுல உட்கார்ந்து ஏதோ புக்கை படிச்சுகினு இருக்கிறான். அந்த பெண் பின் சீட்டில் நூல் கண்டோடு உட்கார்ந்துகினு இருக்கு. இது இன்னா மேட்டரு? ஒண்ணும் புரியலயே?

ஏகாம்பரம் லட்டியால் கார்க் கதவைத் தட்டினான்.

ஏய்! இன்னா பண்ற இங்க?

குட் ஈவினிங் சார்! பார்த்தா தெரியலயா சார், புக் படிச்சு கிட்டு இருக்கேன்.

அந்த பொண்ணு இன்னா பண்ணுது?

இருங்க பார்த்து சொல்றேன். ஐ திங்க் ஸ்வெட்டர் பின்னுதுன்னு நெனைக்கிறேன்.

உனக்கு இன்னா வயசாவுது?

25 வயசு ஆவுது சார்.

அந்த பொண்ணுக்கு இன்னா வயசு ஆவுது? ... ஏய்! இன்னா வயசைக் கேட்டா வாட்சைப் பாக்குற?

...

...

...

...

...

...

...


இன்னும் இருவது நிமிஷத்துல 18 வயசு ஆகும் சார்.


இந்த நேரத்துல இங்க இன்னா பண்றீங்க? கார்ல பெட்ரோல் தீந்து போயிடுச்சு சார். டிரைவர் பெட்ரோல் வாங்க போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு சார்!


இதுக்குதான் முன்னாலயே சொன்னேன். கதைய பட்ச்சுட்டு சந்தேகமெல்லாக் கேக்கக் கூடாதுன்னு. (இன்னும் புரியலன்னா ஒரு தபா Ctrl-A வை அமுக்கிப் பாத்துருங்க!)


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



37895

கெட்டப் பழக்கம் இருப்பவர்கள் இதை படிக்க வேண்டாம்!!!


ஐயா! சாமி! தருமம் பண்ணுங்க சாமி!

அட போப்பா, காலங்கார்த்தால கார் பார்க்குல வந்து டிஸடர்ப் பண்ணாத.

ஐயா தர்ம தொரை எதுனாச்சும் குடுங்கய்யா.

சரி சரி, இங்க வா. இந்த டீ கடையில ஒரு டீ சாப்பிடு. பில்லை நான் குடுக்கறேன்.

இல்லீங்கய்யா. டீ, காப்பி அல்லாம் கெட்ட பழக்கம் அய்யா. நான் சாப்பிட மாட்டேங்கய்யா.

என்னாது? அப்டீன்னா இந்தா இந்த சிகரெட்டை வச்சுக்க. ட்ரிபிள் ஃபைவ் ரொம்ப நல்ல பிராண்டு.

இல்லீங்கய்யா, சிகரெட் புடிக்குறது ரொம்ப கெட்டபழக்கம் அய்யா. வாணாங்க அய்யா.

இது என்னப்பா வம்பாப் போச்சு. இந்த கடையில ஒரு பாட்ட்ல் பீர் வாங்கிக்க. நான் பணம் கொடுத்துடறேன்.

வாணாங்கய்யா, குடிக்குறது ரொம்ப கெட்ட பழக்கங்க அய்யா. வாணாங்கய்யா.

அடக் கடவுளே! கடசியா உனக்கு ஒரு சான்ஸ் தரேன். நான் இப்ப ரேஸ் ஆடறத்துக்குதான் போயிட்டு இருக்கேன். முதல் ரேஸ்ல உன் பேர்ல பணம் கட்டறேன். எவ்ளோ கெடச்சாலும் எல்லாத்தையும் நீயே வச்சுக்கலாம். என்ன சொல்றே?

மன்னிச்சுக்கங்க அய்யா. ரேஸுக்கு போறது ரொம்ப கெட்ட பழக்கம் அய்யா. வாணாங்க அய்யா.

அடடா! இந்தா என் விசிட்டிங் கார்டு. இன்னிக்கு சாயங்காலம் என்ன வீட்டுல வந்து பாரு!

ரொம்ப தாங்க்ஸ் அய்யா. கண்டிப்பா வர்றேங்க அய்யா. வூட்டுக்கு வந்தா எதுனாச்சும் தரீங்களா அய்யா?



...

...

...

...

...

...

...

...

...


அது இல்லப்பா... எந்த கெட்ட பழக்கமுமே இல்லாத ஒரு ஆளு எப்டி இருப்பான்னு என் பொண்டாட்டிக்கு காட்டணும், அதான்!




வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



36900

சந்தோஷமாய் இருப்பது எப்படி?!



வாத்யார், நம்ம கேக்குறது அல்லாம் கெடைக்குதுன்ன்னா சந்தோஷமாத்தான் இருக்கும். இப்ப மேட்டர் இன்னான்னா, கேக்குற விஷயம் கெடைக்கலேன்னாலும் சந்தோஷமா இருக்கறதுக்கு இன்னா வழி?



...


...


...


...


...


...






அவ்ளோதான் மேட்டர். இன்னா நான் சொல்றது?


வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


36607

பதிவர் வாழ்வில் ஒரு நாள்!





இன்னா, கரீட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


36307

ஜாக்கிரதை! உங்கள் மனைவிக்குத் தெரியாமல் படிக்கவும்!!! (18+)


டார்லிங்!

என்னாங்க, நான் கிச்சன்ல இருக்கேன்!

கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்கே?

தோசை பண்ணிட்டு இருகேங்க!

தோசையா? ஜாக்கிரதை! ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணை விடு!
சீக்கிரம்! சீ...கிரம்! பாத்து....பாத்து....
கையை சுட்டுக்கப் போற... ஜாக்கிரதை.... இவ்ளோ எண்ணையா விடுவாங்க...
பாத்து.... கீழ எல்லாம் சிந்துது பாரு.. சீக்கிரம்... சீக்கிரம்... திருப்பு... திருப்பு....
தோசையை திருப்பு..... கறுப்பாயிடும்...
பாரு பாரு இன்னும் கொஞ்சம் எண்ணை வேணும்...
சீக்கிரம்.... தோசை பண்ணும் போது நான் சொன்னதை என்னிக்குதான் கேட்டு இருக்கே?
பயமா இருக்கு...
இன்னிக்கு கல்லுல தான் ஒட்டிக்க போவுது....
ஜாக்கிரதை....சீக்கிரம்... உப்பு...உப்பு...
எங்க வச்சு இருக்கே? உப்பு போட்டியா இல்லியா?
எங்க வேடிக்கை பாக்குறே? தோசை பண்ணும் போது அடுப்ப நேரப் பாத்து பண்ணனும்....
கையை சுட்டுக்கப் போறே....
பாத்து... பாத்து....
ஜாக்கிரதை...
சீக்கிரம்.. சீக்கிரம்...சீக்கிரம்...
திருப்பு.. திருப்பு....



என்னாங்க ஆச்சு உங்களுக்கு? கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. எனக்கு ஒரு தோசை பண்ணத் தெரியாதா?


...

...

...

ஹி.. ஹி... நான் கார் ஓட்டும் போது நீ பண்றது எனக்கு எப்டி இருக்கும்னு இப்ப புரியுது இல்ல?



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

35770

இதெல்லாம் இன்னா ஜுஜூபி மேட்டரு!





எங்க ஊர்ல காரு பஸ்ஸு எல்லாம் வேகமா போவாம இருக்க இப்டீத்தான் ரோட்ட தோண்டி போட்டுருவோம்!


ஹி..ஹி.. இதெல்லாம் இன்னா ஜுஜூபி மேட்டரு! மெட்ராஸுல வந்து பாருங்க இத்த விட ஏரி கணக்கா பெரிய பெரிய பள்ளமெல்லாம் கீது!


நீங்க சொன்னா கரீட்டாத்தான் இருக்கும் ... ஆனா எதுக்கும் அப்டியே ஒரு தபா கீள வந்து ஒரு லுக்கு உட்டுங்க...


...


...


...


...


...


...


...


...


...



வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு