ஜாக்கிரதை! ஏப்ரல் 1ம் தேதி APRIL FOOL ஆகிவிடாதீர்கள்!


வாத்யார், ஜாக்கிரதையா இருங்க! ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருது. கூகுள்ல ஆரம்பிச்சு எல்லாரும் நம்மளை முட்டாள் ஆக்க காத்துகினு இருக்காங்க!


ஆனா, நம்ம கிட்ட அவுங்க வேலையெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு நமக்குதான் தெரியுமே!


இருந்தாலும் எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க வாத்யார்!


ஏப்ரல் ஃபூல் ஆகாமல் இருக்க ஒரு எளிய வழி!இன்னா ஜாக்கிரதையாத் தானே இருக்கீங்க?


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

43164

Breaking News! உலகத்திலேயே மிக அதிக ஹிட் வாங்கும் பதிவு!!!வாத்யார் உலகத்துலேயே அதிகமா ஹிட் வாங்குற பதிவு (அது இல்லாங்காட்டி பேஜு) எதுன்னு தெரியுமா?


கூகுள்ல தேடாதீங்க, அப்பாலிக்கா டென்ஷனா பூடுவீங்க...


இன்னா? கண்டு புடிச்சீங்களா?


...


...


...


...


சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு நாளைக்கு சுமார் 10 கோடி பேர் பாக்குறாங்களாம்!


...


...


...


...


...


...


இன்னா? இன்னுமா தெரியல?

...


...


...


...


...


...


...


சரி...சரி... வழக்கம் போல நானே சொல்றேன் வாத்யார் ...!


...


...


...இன்னா க்ரீட்டா? டென்ஷன் ஒண்ணும் ஆவுலியே?வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


42559

கோபத்தை கட்டுப் பட்டுத்துவது எப்படி? (படிச்சுட்டு கோவப்படாதீங்க!)

ராமசாமி ரொம்ப சாதுவான ஆசாமி. அதிர்ந்து பேசமாட்டார். அவருக்கு அன்று காலை திடீரென்று 3.33 மணிக்கு போன் வந்த போது நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.


போனில் ஒரு கோபமான குரல்.

"யோவ்! நான் தான் குப்புசாமி பேசறேன். உங்க விட்டு நாய் குரைக்குற சத்ததுல என் தூக்கம் கெட்டுப் போவுது! அறிவில்லை? நாயை குரைக்காம இருக்க சொல்லுய்யா!"

ராமசாமி, கொஞ்சமும் கோபப்படவில்லை.

பொறுமையோடு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அத்தோடு குப்புசாமியின் டெலிபோன் நம்பரையும் மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார்.

அடுத்த நாள் காலை. மணி சரியாக மூன்று முப்பத்து மூன்று.

ராமசாமி எழுந்தார். போனை எடுத்து குப்புசாமியின் எண்ணை சுழற்றினார்.

"மிஸ்டர் குப்புசாமி. தூக்கத்தில் எழுப்புவதற்கு மன்னிக்கவும். நேற்று இரவு நீங்கள் ரொம்பக் கோபமாக இருந்ததால் சொல்ல முடியவில்லை..."

...


...


...


...


...


...


"எங்கள் வீட்டில் நாய் கிடையாது!"வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


41857

புத்திசாலிகளுக்குப் புதிய புதிர்கள் (Dont Miss!)


வாத்யார், புதிர்கள் போட்டு கொஞ்ச நாளாகி விட்டது. சும்மா கட கடன்னு பதில் சொல்லுங்க பார்ப்போம்!


1) இந்த வார்த்தைகளுக்குள் இன்னா ஒற்றுமை? (நியூஸெல்லாம் படிச்சு டென்ஷன் ஆவாம பதில் சொல்லணும், ஆமா!)
  • அந்த
  • பக்தி
  • புள்ளி
  • சீ

2) இந்த வார்த்தைகளுக்கு இன்னா அர்த்தம்? (கொஞ்சம் யோசிச்சாப் புரியும்)

STANDS
0_23456789


3) இந்த வார்த்தைகளுக்குள் இன்னா ஒற்றுமை?
  • சந்தி
  • கோணம்
  • காலி
  • முனை

4) ரோமியோ இங்கே. ஜூலியட் எங்கே?


க்ளூ: இதோ ஜூலியட்!5) கோடிட்ட இடங்களை நிரப்புக!

அ-ர -த- எ-த்-ல்-ம் ஆ- ப-வ- மு-ற்- உ-கு.


அவ்ளோதான் வாத்யார்!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


41425

Mothers Day! ஒரு கதையும் ஒரு புதிரும்!!


அந்த அம்மா ரொம்ப அதிர்ஷடசாலி என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். அவருக்கு மூன்று பிள்ளைகள். எல்லாருமே வெளிநாடுகளில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். முன்று பேருக்குமே பணம் மரத்தில் காய்த்தது.

அந்த வருடம் அன்னையர் தினம் வந்தது. அம்மாவுக்கு யார் என்ன பரிசு கொடுத்தார்கள் என்று சகோதரர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

முதல்வன் சொன்னான்: "மூவாயிரம் சதுர அடியில் சலவைக் கல் பதித்த பங்களா ஒன்றை நான் அம்மாவுக்காக கொடுத்து இருக்கிறேன். விலை கிட்டதிட்ட மூணு கோடி. இருந்தாலும் பெற்ற தாய்க்கு செய்யும் போது இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, சேச்சே, இல்லவே இல்லை!"

மற்ற இரண்டு பேரும் அசந்து போனார்கள்.

இரண்டாமவன் சொன்னான்: "அம்மாவுக்கு லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் ஒன்றை வாங்கித் அனுப்பி வைத்திருக்கிறேன். இனிமேல் அம்மா எங்கே போனாலும் அதில்தான் போக வேண்டும். விலை கிட்டதட்ட ஒண்ணரை கோடி. இருக்கட்டுமே. அம்மாவுக்கு செய்யும் போது விலையெல்லாம் பார்க்க முடியுமா?"

மற்ற இரண்டு பேரும் சந்தோஷப் பட்டார்கள்.

மூன்றாமவன் சொன்னான்: "அம்மாவுக்கு ஒரு ஆச்சரியமான கிளி ஒன்றை பரிசாக அனுப்பி இருக்கிறேன். கிளி என்றால் சாதாரண கிளி இல்லை. நான்கு பாஷைகளில் நன்றாகப் பேசத் தெரிந்த அதிசயக் கிளி. கிட்டதிட்ட இருபது ப்ரொஃபசர்கள் பத்து வருடங்களாக ட்ரெயினிங் கொடுத்த கிளி. அம்மா தனியாக இருக்கும் போது பேச்சுக்கு துணையாக இருக்கும் அல்லவா, அதனால் தான் விலையைப் பார்க்காமல் அதை வாங்கி அனுப்பினேன்!"

மற்ற இரண்டு பேரின் ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.

மூன்று பேருடைய பரிசுகளில் எது உயர்ந்தது என்று சொல்ல முடியவில்லை. ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக இருந்தது. அம்மாவிடமிருந்து என்ன பதில் வரும் என்று மூன்று பேருமே ஆவலோடு காத்திருந்தார்கள்.

பதிலும் வந்தது.


...


அன்புள்ள மகனுக்கு, வீடு நன்றாக இருக்கிறது. மிகப் பெரியதாக இருக்கிறது. எனக்கு வயதாகி விட்டது. நடக்க முடியவில்லை. கண்ணும் சரியாகத் தெரியவில்லை. எனவே நான் வாசல் கதவுக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய அறையை மட்டும் உபயோகப் படுத்திக் கொள்கிறேன். சலவைக் கல் காலுக்கு குளிர்ச்சி அதிகமாகி உடம்பு படுத்துகிறது. இருந்தாலும் நீ அன்போடு கொடுத்த வீடு என்பதால் காலில் எப்போது செருப்பு அணிந்து நடக்கிறேன். நீ குழந்தையாக இருக்கு போது உனக்கு முதல் முதலில் சிவப்புக் கலரில் செருப்பு வாங்கியது ஞாபகம் வருகிறது.

...

அன்புள்ள மகனுக்கு, கார் நன்றாக இருக்கிறது. என்னால் இப்போதெல்லாம் வெளியே போக முடிவதில்லை. தள்ளாமை அதிகமாக இருக்கிறது. கார் நீலக் கலரில் அழகாக இருக்கிறது. ஆனால், பக்கத்து வீட்டுப் பெண் அது மஞ்சள் கலர் என்கிறாள். ஜன்னல் வழியாக நீ வாங்கிக் கொடுத்த காரை தினமும் பார்த்து, உன்னைப் பார்த்தது போல சந்தோஷப் படுகிறேன்.

...

...

...

...

அன்புள்ள மகனுக்கு, நீ எனக்கு உபயோகமான பரிசை அனுப்பியிருக்கிறாய். நீ அனுப்பியதை பக்கத்து வீட்டுப் பெண் சூப் செய்து கொடுத்தாள். சிக்கன் சூப் ரொம்ப நன்றாக இருந்தது! நீ சின்ன வயதில் சிக்கன் சூப் என்றால் விரும்பி சாப்பிடுவாய். உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

......


அவ்ளோதான் கதை. Mother's Day அன்னிக்கு ஒரு நிமிட் நின்னு யோசிங்க வாத்யார்!


இப்போ, கேள்வி:

Mother's Day எந்த தேதியில் கொண்டாடப் படுகிறது? (கூகுளாண்டவரை கேட்பவர்கள் போட்டியிலிருந்து நீக்கப் படுவார்கள்!)

வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


41284

ரஷ்ய மொழி தெரிந்தவர்களுக்கு மட்டும் ஒரு புதிர்!


வழக்கமா க்ளூதான் கெடையாது. இந்த தபா கேள்வியே கெடையாது!


விடை:

எதிர்பார்த்த மாதிரியே சும்மா அல்லாரும் அடிச்சு காலி பண்ணிகிறீங்க. வாழ்த்துக்கள்! இது இன்னா மேட்டருன்னு கொஞ்சம் பாத்துரலாமா? டக்குனு பாத்தா ஏதோ (கம்யூனிச?) கவர்னுமென்ட் அறிவிப்பு மாதிரி தெரியும். அதையே கண்ணாடில பார்த்தா இங்கிலீஷுல கொஞ்சம் ஆச்சரியமா தெரியும். (இளந்தென்றல் வாத்யார் சொல்லிகிற மாதிரி கார் ரியர் வ்யூ இல்லாங்காட்டி சினிமா தியேட்டர் டாய்லெட் கண்ணாடிக்கு எதிரில்!).

அது சரி, இது இன்னா எழுத்து? சிரிலிக் - Cyrillic alphabet (Кириллица) அப்டீன்ற வகையை சேர்ந்தது. ஒரிஜினல் இல்லை டூப்ளிகேட்டு! ஒரிஜினல் வேணும்னா நம்ப தென்னவன் வாத்யார் கீழே பூந்து வெள்ளாடி கீறாரு பாருங்க! அவரு சொல்லி கீறதுக்கு ஒரு குத்து மதிப்பா "பதில் இல்லாத கேள்வி" அப்டீன்னு அர்த்தம் (கரீட்டா வாத்யார்?).

இத்த பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்னா வாத்யார் இங்க ஒரு விஸிட் அடிச்சுருங்க!


கரீட்டா விடை சொன்ன அல்லாருக்கும் ஒரு சபாஷ்!


அதெல்லாம் சரி, "Real men don't drink and drive" அப்டீன்றது உண்மையில் எப்டி இருக்க வேண்டும்?

இப்டிதான்: "Настоящие мужчины не пьют и дисков" !!!வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


40765


இந்த படத்தில் என்ன தவறு?


நல்லா கவனிங்க வாத்யார். இந்த படத்துல இன்னா தப்பு?
(படத்து மேல க்ளிக்கினா பெருசாத் தெரியும்!)


விடை:

நங்கூரம் பின்னால கீதுன்றது பெரிய தப்பு. மத்த மேட்டரெல்லாம் நம்ம லேட்டரல் திங்கிங்கப் பொறுத்ததுன்னு வச்சுக்கலாம். உதாரணமா, நகர்ந்தா புகை வரணும் நின்னா நங்கூரம் போடணும் அப்டீன்றது கப்பலின் தப்பு இல்ல, மாலுமியின் தப்புன்னு வச்சுக்கலாம் (இஞ்சின ஆஃப் பண்ணிட்டு நங்கூரத்த போடலை!). இல்லாங்காட்டி இஞ்சினை ஆஃப் பண்ணி கப்பல் நிக்கறதுக்கு முன்னால எடுத்த படம் இதுன்னும் வச்சுக்கலாம். கொடிமரம் மேட்டரும் அப்டித்தான். ரெண்டு இஞ்சின் இன்னா மூணு கூட இருக்கலாம்.

இதைத் தவிர லைஃப் போட் கரீட்டான எடத்துல இருக்கா? சைடுல கீழால இருக்குற ஜன்னல் அல்லாம் தண்ணிலேர்ந்து கரீட்டன உசரத்துல கீதான்னு கூட யோசிக்கலாம்! பறவைகள் பறக்குதே, கப்பல் கரையிலிருந்து எவ்ளோ தூரத்தில் கீது அப்டீன்றது இன்னொரு கோணம்!

மொத்தத்துல, லேட்டரல் திங்கிங்க்ல வாத்யார்ஸ் அல்லாம் பூந்து வெள்ளாடரது மெய்யாலுமே ரொம்ப சந்தோஷமா கீது! ஜமாய்ங்க!!!

கரீட்டா விடை சொன்ன

அகல் விளக்கு
கடைநிலை ரசிகன்
பெருசு
அனானி

அல்லாருக்கும் சபாஷ்! பல கோணத்துல யோசிச்ச ஜெய்லானிக்கும் ஒரு ஸ்பெஷல் சபாஷ்! புபட்டியன் வாத்யார், கலர் பூட்ச்சுன்றது அல்லாம் ஆனாலும் கொஞ்சம் ஓவர்!

வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


40116