FLASH! (பிறர்) பதிவுகளை காப்பி-பேஸ்ட் செய்வது எப்படி?






ரொம்ப சீரியஸாக படிக்க வந்தவர்கள் டென்ஷன் ஆவாம இதைப் பார்க்கவும்!


வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



54869

ஜாலியாக சில பழைய புதிர்கள் (Dont Miss!!!)



இன்னா வாத்யார் ரெடியா? சில புதிர்கள் எங்கியோ கேட்ட மாதிரி இருக்கும். பார்க்கலாம் எவ்ளோ கரீட்டா சொல்றீங்கன்னு!

ஜூட்!



1) மொதல்ல ஒரு சின்ன வார்ம் அப்! மேலே படத்துல எத்தினி பேர் கீறாங்க?

2) ஒரு பெட்டியில் பத்து கறுப்பு சாக்ஸ், பத்து வெள்ளை சாக்ஸ் இருக்குன்னு வச்சுகுங்க. கண்ணை மூடிக்கினு கொறஞ்ச பட்சம் எத்தினி சாக்சை எடுத்தா ஒரு ஜோடி ஒரே கலர் சாக்ஸ் கெடைக்கும்?

3) அடுத்த நம்பர் இன்னா வர வேண்டும்?

1
11
21
1211
111221
312211
13112221


4) பத்து கிலோ இரும்பு, ஐந்து கிலோ பஞ்சு இது இரெண்டையும் எல் ஐ சி பில்டிங் மாடியிலிருந்து கீழே போட்டால் எது முதலில் மௌன்ட் ரோடில் விழும்?


5) நீங்கள் ஒரு குதிரை மேல் மிக வேகமாக போய் கினு கீறீங்க. வலது பக்கம் ரொம்ப பள்ளம். இடது பக்கம் ஒரு யானை அதே வேகத்தில் கூடவே வந்துகினு கீது. உங்களுக்கு முன்னால் ஒரு புலி உங்கள் வேகத்திலேயே போய்க்கினு கீது. பின்னாலயே ஒரு சிங்கம்! இந்த ஆபத்தான கட்டதிலிருந்து எப்டி தப்பிச்சு வருவீங்க?


6) உங்க கிட்ட 8 தங்க கட்டிகள் கீது (சும்மா ஒரு பேச்சுக்குதான்!). அதுல ஒரு கட்டி மட்டும் கொஞ்சம் வெய்ட் ஜாஸ்தி. ஒரு தராசுல ஒரே ஒரு தபா வெய்ட் போட்டு எந்த தங்க கட்டி வெய்ட் ஜாஸ்தின்னு கண்டு புடிக்கணும். முடியுமா?


7) இதுல இன்னா விசேஷம்? 8, 5, 4, 9, 1, 7, 6, 10, 3, 2, 0


அவ்ளோதான் மேட்டர்.


வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


54325



ஸ்டெடியான பதிவர்களுக்கு மட்டும் ஒரு விளையாட்டு! (18+)


இன்னா? ஸ்டெடியாத்தான இருக்கீங்க?


ரெடியா?


விளையாடலாமா?


...


...


...






ரூல்ஸ் அல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது தான்! இன்னா ஒரே ஒரு வித்தியாசம்: வெட்டின பீஸை வெட்டின ஆட்டக்காரர் கபால்னு மடக் மடக்... அவ்ளோதான் மேட்டர்!


இன்னா ரெடியா?


மொதல் பின்னூட்டம் போடற வாத்யார் மொதல் பீஸை வெளையாடலாம்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


53634

QUICK ! பத்து செகண்டில் பதில் சொல்ல வேண்டும்!!!


வழக்கம் போல இந்த தபாவும் சுலபமான புதிர்கள் தான்... சட்டுனு சொல்லுங்க வாதயார்!


1) இது இன்னா? : 10ஒருவன்00

2) ஒரு காதலன் ஏன் இப்டி சொல்லிகினான்? ABCDEFGHIJKLMNOPQRSTVWXYZ

3) இது எந்த இடம்? DWDEDSDTD

4) இது இன்னா? AID AID AID

5) இவர் யார்? லைர்


அவ்ளோதான் கேள்வி, வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


52615

இந்த படத்தில் இருப்பது எத்தினி பேர்? (கண்டிப்பாக 18+ புதிர்)




இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


52006


நூறு வயது வாழ ஒரு எளிய வழி!




இன்னா கரீட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



51775


இந்திய கிரிக்கெட் அணியில் ரகசிய மாற்றம்?!!!




ஓப்பனிங் பேட்ஸ்மேனாக யாரை அனுப்பலாம்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


15295

இந்தியா உலகக் கோப்பையை ஜெயிக்க அதிரடித் திட்டம்?!!!!






நீங்க எந்த பக்கம் ஆடுவீங்க?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

50060

கிளு கிளுப்பான காதல் டெஸ்ட் உங்களுக்கு (18+) Dont Miss!

கிளு கிளுப்பான காதலரா நீங்க? உங்களுக்காகவே டெஸ்ட் ஒன்றை அமெரிக்காவுல கண்டுபுடிச்சு கீறாங்க. இந்த டெஸ்ட கண்டி நீங்க சரியா எடுத்தீங்கன்னா உங்களப் பத்தின மேட்டர் அல்லாம் கரீட்டா தெரிஞ்சு பூடும்!


டென்ஷன் ஆவாம, ஜரூரா பண்ணுங்க, ரொம்ப சுலவம் தான்.

இன்னா? ரெடியா?

இப்போ நீங்க ஒரு காட்டு வழியா போய்க்கினு கீறீங்க. போற வழில ஒரு பனைமரம். அந்த மரத்து மேல ஒரு வாழைப் பழத் தார் கீது. அவ்ளோ ஒசரமான மரத்துல கீற வாழைப் பழத்தை இந்த நாலு பேருல யாரும் சீக்கிரமா எடுத்துருவாங்க?

அ) கறுப்புக் கரடி
ஆ) ஒட்டைச் சிவிங்கி
இ) ஒரு அழகான 20 வயசுப் பெண்
ஈ) அணில்

அவ்ளோதான் கேள்வி. நல்லா, நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க. நீங்க சொல்ற பதில வச்சுதான் உங்களைப் பத்தின முக்கியமான மேட்டர் தெரியப் போவுது!

இன்னா, முடிவு பண்ணிட்டீங்களா? அப்டீன்னா கீழ டெஸ்ட் ரிசல்ட்டை பாத்துக்கங்க வாத்யார்!

...


...


...



அ) கறுப்புக் கரடின்னு சொன்னீங்களா?

சொல்றேனேன்னு தப்பா நெனச்சுக்தாதீங்க வாத்யார், சுத்த மோசமாக் கீது. எதுக்கும் ஆஃபீஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க.

...

...

...



ஆ) ஒட்டைச்சிவிங்கின்னு சொன்னீங்களா?

தப்பு வாத்யார்! எதுக்கும் ஒரு நல்ல டாக்டரா பாத்துருங்க!

...

...

...


இ) ஒரு அழகான 20 வயசுப் பெண் அப்டீன்னு சொன்னீங்களா?


ஹி..ஹி... சுத்தமா தப்பு வாத்யார். எதுக்கும் எதுனச்சும் யோகா, மெடிட்டேஷன் மாதிரி எதுனாச்சும் ட்ரை பண்ணி பாருங்க!

...

...

...

ஈ) அணில்னு சொன்னீங்கள?

ஆஹா, கண்டிப்பா தப்பு வாத்யார். மேல சொன்ன மூணு ட்ரீட்மென்ட்டையும் பண்ணிடுங்க, ஆமாம்!

...

...

...


ஆனா ஏன்? ஏன்? ஏன்?


...

...

...

...


சொன்னா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே?


பனை மரத்துல வாழைப்பழம் இருக்காது வாத்யார், வாழை மரத்துலதான் வாழைப்பழம் காய்க்கும்! ஹி..ஹி...


இதுக்குதான் டென்ஷன் ஆவாதீங்கன்னு ஆரம்பத்துலேயே சொன்னேன்!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


50146

உங்கள் பொறுமைக்கு ஒரு சவால்!!!





வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


49965

FLASH NEWS!!! பதிவர்கள் சண்டையை நிறுத்துவது எப்படி?

வாங்க வாத்யார்! இன்னா வரும்போதே ஒரு சந்தேகமாவே வர்றீங்க! டென்ஷன் ஆவாம நான் சொல்றதை இந்த தபாவாவது நம்புங்க வாத்யார்!


கொஞ்ச நாளா ஒரே களேபரமா கீதே நம்ம எதுனாச்சும் செய்யணும்னு நெனைக்கிறீங்களா? அப்டீன்னா சரியான எடத்துக்குதான் வந்து கீறீங்க!

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதான்:

1) புதுசா ஒரு Note Padஐ ஓப்பன் பண்ணிக்கங்க. (Note Padக்கும் நம்ம மேட்டருக்கும் இன்னா சம்பந்தம் அப்டீன்னு கேக்கக் கூடாது, ஆமாம்!). All Programs -> Accessories -> NotePad இல்லாங்காட்டி Start -> Run -> NotePad.

2) இன்னா ஓப்பன் பண்டீங்களா? இப்ப அந்த ஃபைல் குள்ளாற இதை டைப் பண்ணுங்க: Stop the bad fight

3) ஆச்சா? Copy-Paste பண்ணக் கூடாது. ஜாக்கிரதையா டைப் பண்ணுங்க. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆச்சுன்ன்னா களேபரம் ஜாஸ்தியா பூடும், ஆமாம்!

4) இப்ப இந்த text ஃபைலுக்கு ஒரு பேர் வச்சு Desktop-ல Save பண்ணி Close பண்ணுங்க (உதாரணம்: Jaggu.txt).

5) க்ளோஸ் பண்டீங்களா? அவ்ளோதான் மேட்டர்.

...

இப்ப, Desktop-ல போய் அந்த ஃபைல double-click பண்ணி தொறந்து பாருங்க!!!


இன்னா ஆச்சு (ஏன் இப்டி ஆச்சு)ன்னு, டென்ஷன் ஆவாம பின்னூட்டததுல சொல்லுங்க வாத்யார்!


வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்ப்ஜார் ஜக்கு


48806

நீ இன்னான்ற வில்லீஸூ! (புதிரின் விடை!)



காரி கோல்மேன்!

இந்த பேர் நியாபகத்துக்கு வர்லேன்னாலும் Different Strokes அப்டீன்னா ரொம்ப பேருக்கு டக்குனு புரியலாம். 1978லேர்ந்து 1986 வரைக்கும் சக்கை போடு போட்ட அந்த சீரியலில் (நம்ம தூர்தர்ஷன் உட்பட) வந்த துரு துரு, பட படா பையனை அவ்ளோ சீக்கிரத்தில் மறக்க முடியாது. "நீ இன்னான்ற வில்லீஸூ..!!!" (Whatchu talkin' 'bout, Willis?) அப்டீன்ற டைலாக்கு காதுகக்குள்ளாற் இன்னும் சுத்திகினு கீது வாத்யார்.

குழந்தை நட்சத்திரமா அப்டி அசத்தின பையன் பெரியவனான பின்னால எப்டி அல்லாம் வருவான்னு நெனச்சது உண்டு. நல்ல பேரை அல்லாம் தொலச்சு, சொந்த அப்பா அம்மா மேலயே கேஸ் போட்டு, அடிதடி கேஸ்ல அரஸ்ட் ஆகி, கொஞ்ச நாளைக்கி செக்யூரிட்டி கார்ட் வேலைக்குப் போயி.... வாணாம் இன்னாத்துக்கு... உடுங்க,

போன புதன்கிழமை காரிக்கு ஹெமரேஜ் ஆகி நேத்து வரை ஹாஸ்பிடலில் இருந்தார். இனனிக்கு இல்லை.




வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


48480

வருத்தமாய் ஒரு புதிர், வாத்யார்! (Dont Miss ...)






மேலே இருக்கிற இரண்டு பேரும் யார்?


இந்த புதிருக்கு விடை சொன்னால் இந்த பதிவின் தலைப்பு புரியும் வாத்யார்.


விடை, விவரம் இங்கே...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


48019

பீச்சில் ஒரு கிளுகிளுப்பான Sunbath (18+)


ஜாக்கிரதையா படிங்க! காலம் ரொம்ப கெட்டுப் போச்சு. பீச்சுல, பப்ளிக்கா, கூட்டமா இப்பிடி ஒரு சன்பாத் ... இன்னாவோ போங்க!



...


...


...


...


...


...


...



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


47845

இன்னாது?!!!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


46925

வெளிநாட்டில் வசிப்பவர்கள் கண்டிப்பாக இதைப் படிக்காதீர்கள்!!!

வாத்யார் நீங்க ஊருக்குப் போயி எத்தினி நாள் ஆச்சு?



(படத்துல க்ளிக்கினா பெருசாத் தெரியும்!)


இன்னா? கரீட்டா கீதா? சும்மா லூஸ்ல வுடுங்க வாத்யார்!



வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

46666

பதிவர்களுக்கான புதிய டெக்னாலஜி! (Dont Miss !!!)

வாத்யார் எங்க கொஞ்ச நாளா ஆளையே காணும்னு யோசிக்கிறீங்களா? சொன்னா நம்ப மாட்டீங்க இந்த கேப்புக் குள்ளார ஒரு புது டெக்னாலஜி கண்டு புடிச்சுக் கீறாங்களாம். (வேற எங்க, அமெரிக்காவுல ஏதோ ஒரு வாய்ல நுழையாத ஒரு யூனிவர்ஸிட்டிலதான்).


அந்த டெக்னாலஜியோட பேரு web-based olfactory stimulation (WOS Technology). அது இன்னா மேட்டருன்னா ரெண்டு டைமென்ஷன், மூணு டைமென்ஷன் அல்லாம் தாண்டி ஒரு சின்ன ட்ரிக் பண்ணி வலைப்பதிவுலே இருந்து உங்க olfactory nerves (அதான் வாத்யார், மூக்குக் குள்ளார கீற சென்சார்ஸ்) அல்லாம் தூண்டி உடலாம்னு கண்டு புடிச்சுக் கீறாங்களாம்.

உங்களுக்காகவே ஸ்பெஷலா அதுலேர்ந்து ஒரு சின்ன பீஸ் கீழே குடுத்துக்கிறேன் பாருங்க.

கீழே இருக்கிற பட்டனை தொடர்ந்து 7 செகண்டு க்ளிக் அண்ட் ஹோல்ட் பண்ணீங்கன்னா உங்க olfactory nerves அல்லாம் stimulate ஆகி சுமார் மூணு செகண்ட் நேரம் கற்பூர வாசனை தெரியும்.

ட்ரை பண்ணி பாருங்க!







இன்னா கரீட்டா? தெரிஞ்சுதா கற்பூர வாசனை?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


46440

புத்தாண்டுப் புதிர்! (புத்திசாலிகளுக்கு மட்டும்)


டென்ஷன் ஆவாதீங்க வாத்யார். இன்னிக்கு புத்தாண்டு உண்டா இல்லையா அப்டீன்றது புதிர் இல்லை.



மேல இருக்கிற படத்துல இன்னா தவறு அதான் புதிர்! நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.


விடை: பெடல் ரெண்டும் 180 டிகிரில இல்லேன்றது தான் சரியான விடை. மத்ததெல்லாம் சுவாரஸ்யமா கீது!

கோபி, ஸ்ரீராம், பிரகாஷ், திவா வாத்யார்களுக்கு சபாஷ்!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


44754

QUICK ! பத்து செகண்டில் ஒரு புதிர் !


டக்குன்னு ஒரு பென்சிலை எடுங்க. (மானிட்டர் பத்திரம்!)




ஒரே ஒரு கோடு கிழிங்க. மேல இருக்குற படத்தை நாலு பாகமா பிரிங்க. இன்னா கண்டிஷன்னு கேக்குறீங்களா?


அ) நாலு பாகமும் ஒரே சைஸா இருக்கணும்.
ஆ) நாலு பாகமும் ஒரே ஷேப்பா இருக்கணும்.



அவ்ளோதான் மேட்டர்.



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


43924

இன்னிக்கு GMAIL-ல் ஒரு ஆச்சரியம்!

இன்னிக்கு ஜிமெயில் ஹோம் பேஜை கவனிச்சிங்களா?


இன்னா மேட்டருன்னு புரீதா?


கூகுள் சொல்ற காரணத்தை இங்க படிங்க!

கூகுள் Translate அடிச்ச லூட்டியை இங்க பார்த்தீங்களா?

அதுக்கு முன்னல இதையும் ஒரு தபா பாத்துருங்க!


வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கழுதை பேசுவதை மொழி பெயர்க்கும் GOOGLE TRANSLATE!



இந்த லேட்டஸ்ட் மேட்டரை உங்கள் மொபைல் போனில் டௌன்லோட் செய்ய இங்க பாருங்க வாத்யார்!








வாத்யார், இதையும் ஒரு தபா பாத்துருங்க!



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாக்கிரதை! ஏப்ரல் 1ம் தேதி APRIL FOOL ஆகிவிடாதீர்கள்!


வாத்யார், ஜாக்கிரதையா இருங்க! ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருது. கூகுள்ல ஆரம்பிச்சு எல்லாரும் நம்மளை முட்டாள் ஆக்க காத்துகினு இருக்காங்க!


ஆனா, நம்ம கிட்ட அவுங்க வேலையெல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு நமக்குதான் தெரியுமே!


இருந்தாலும் எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க வாத்யார்!


ஏப்ரல் ஃபூல் ஆகாமல் இருக்க ஒரு எளிய வழி!







இன்னா ஜாக்கிரதையாத் தானே இருக்கீங்க?


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

43164

Breaking News! உலகத்திலேயே மிக அதிக ஹிட் வாங்கும் பதிவு!!!



வாத்யார் உலகத்துலேயே அதிகமா ஹிட் வாங்குற பதிவு (அது இல்லாங்காட்டி பேஜு) எதுன்னு தெரியுமா?


கூகுள்ல தேடாதீங்க, அப்பாலிக்கா டென்ஷனா பூடுவீங்க...


இன்னா? கண்டு புடிச்சீங்களா?


...


...


...


...


சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு நாளைக்கு சுமார் 10 கோடி பேர் பாக்குறாங்களாம்!


...


...


...


...


...


...


இன்னா? இன்னுமா தெரியல?

...


...


...


...


...


...


...


சரி...சரி... வழக்கம் போல நானே சொல்றேன் வாத்யார் ...!


...


...


...



இன்னா க்ரீட்டா? டென்ஷன் ஒண்ணும் ஆவுலியே?



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


42559

கோபத்தை கட்டுப் பட்டுத்துவது எப்படி? (படிச்சுட்டு கோவப்படாதீங்க!)

ராமசாமி ரொம்ப சாதுவான ஆசாமி. அதிர்ந்து பேசமாட்டார். அவருக்கு அன்று காலை திடீரென்று 3.33 மணிக்கு போன் வந்த போது நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.


போனில் ஒரு கோபமான குரல்.

"யோவ்! நான் தான் குப்புசாமி பேசறேன். உங்க விட்டு நாய் குரைக்குற சத்ததுல என் தூக்கம் கெட்டுப் போவுது! அறிவில்லை? நாயை குரைக்காம இருக்க சொல்லுய்யா!"

ராமசாமி, கொஞ்சமும் கோபப்படவில்லை.

பொறுமையோடு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அத்தோடு குப்புசாமியின் டெலிபோன் நம்பரையும் மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார்.

அடுத்த நாள் காலை. மணி சரியாக மூன்று முப்பத்து மூன்று.

ராமசாமி எழுந்தார். போனை எடுத்து குப்புசாமியின் எண்ணை சுழற்றினார்.

"மிஸ்டர் குப்புசாமி. தூக்கத்தில் எழுப்புவதற்கு மன்னிக்கவும். நேற்று இரவு நீங்கள் ரொம்பக் கோபமாக இருந்ததால் சொல்ல முடியவில்லை..."

...


...


...


...


...


...


"எங்கள் வீட்டில் நாய் கிடையாது!"



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


41857

புத்திசாலிகளுக்குப் புதிய புதிர்கள் (Dont Miss!)


வாத்யார், புதிர்கள் போட்டு கொஞ்ச நாளாகி விட்டது. சும்மா கட கடன்னு பதில் சொல்லுங்க பார்ப்போம்!


1) இந்த வார்த்தைகளுக்குள் இன்னா ஒற்றுமை? (நியூஸெல்லாம் படிச்சு டென்ஷன் ஆவாம பதில் சொல்லணும், ஆமா!)
  • அந்த
  • பக்தி
  • புள்ளி
  • சீ

2) இந்த வார்த்தைகளுக்கு இன்னா அர்த்தம்? (கொஞ்சம் யோசிச்சாப் புரியும்)

STANDS
0_23456789


3) இந்த வார்த்தைகளுக்குள் இன்னா ஒற்றுமை?
  • சந்தி
  • கோணம்
  • காலி
  • முனை

4) ரோமியோ இங்கே. ஜூலியட் எங்கே?


க்ளூ: இதோ ஜூலியட்!



5) கோடிட்ட இடங்களை நிரப்புக!

அ-ர -த- எ-த்-ல்-ம் ஆ- ப-வ- மு-ற்- உ-கு.


அவ்ளோதான் வாத்யார்!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


41425

Mothers Day! ஒரு கதையும் ஒரு புதிரும்!!


அந்த அம்மா ரொம்ப அதிர்ஷடசாலி என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். அவருக்கு மூன்று பிள்ளைகள். எல்லாருமே வெளிநாடுகளில் மிக உயர்ந்த பதவிகளில் இருந்தார்கள். முன்று பேருக்குமே பணம் மரத்தில் காய்த்தது.

அந்த வருடம் அன்னையர் தினம் வந்தது. அம்மாவுக்கு யார் என்ன பரிசு கொடுத்தார்கள் என்று சகோதரர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

முதல்வன் சொன்னான்: "மூவாயிரம் சதுர அடியில் சலவைக் கல் பதித்த பங்களா ஒன்றை நான் அம்மாவுக்காக கொடுத்து இருக்கிறேன். விலை கிட்டதிட்ட மூணு கோடி. இருந்தாலும் பெற்ற தாய்க்கு செய்யும் போது இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, சேச்சே, இல்லவே இல்லை!"

மற்ற இரண்டு பேரும் அசந்து போனார்கள்.

இரண்டாமவன் சொன்னான்: "அம்மாவுக்கு லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் ஒன்றை வாங்கித் அனுப்பி வைத்திருக்கிறேன். இனிமேல் அம்மா எங்கே போனாலும் அதில்தான் போக வேண்டும். விலை கிட்டதட்ட ஒண்ணரை கோடி. இருக்கட்டுமே. அம்மாவுக்கு செய்யும் போது விலையெல்லாம் பார்க்க முடியுமா?"

மற்ற இரண்டு பேரும் சந்தோஷப் பட்டார்கள்.

மூன்றாமவன் சொன்னான்: "அம்மாவுக்கு ஒரு ஆச்சரியமான கிளி ஒன்றை பரிசாக அனுப்பி இருக்கிறேன். கிளி என்றால் சாதாரண கிளி இல்லை. நான்கு பாஷைகளில் நன்றாகப் பேசத் தெரிந்த அதிசயக் கிளி. கிட்டதிட்ட இருபது ப்ரொஃபசர்கள் பத்து வருடங்களாக ட்ரெயினிங் கொடுத்த கிளி. அம்மா தனியாக இருக்கும் போது பேச்சுக்கு துணையாக இருக்கும் அல்லவா, அதனால் தான் விலையைப் பார்க்காமல் அதை வாங்கி அனுப்பினேன்!"

மற்ற இரண்டு பேரின் ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.

மூன்று பேருடைய பரிசுகளில் எது உயர்ந்தது என்று சொல்ல முடியவில்லை. ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக இருந்தது. அம்மாவிடமிருந்து என்ன பதில் வரும் என்று மூன்று பேருமே ஆவலோடு காத்திருந்தார்கள்.

பதிலும் வந்தது.


...


அன்புள்ள மகனுக்கு, வீடு நன்றாக இருக்கிறது. மிகப் பெரியதாக இருக்கிறது. எனக்கு வயதாகி விட்டது. நடக்க முடியவில்லை. கண்ணும் சரியாகத் தெரியவில்லை. எனவே நான் வாசல் கதவுக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய அறையை மட்டும் உபயோகப் படுத்திக் கொள்கிறேன். சலவைக் கல் காலுக்கு குளிர்ச்சி அதிகமாகி உடம்பு படுத்துகிறது. இருந்தாலும் நீ அன்போடு கொடுத்த வீடு என்பதால் காலில் எப்போது செருப்பு அணிந்து நடக்கிறேன். நீ குழந்தையாக இருக்கு போது உனக்கு முதல் முதலில் சிவப்புக் கலரில் செருப்பு வாங்கியது ஞாபகம் வருகிறது.

...

அன்புள்ள மகனுக்கு, கார் நன்றாக இருக்கிறது. என்னால் இப்போதெல்லாம் வெளியே போக முடிவதில்லை. தள்ளாமை அதிகமாக இருக்கிறது. கார் நீலக் கலரில் அழகாக இருக்கிறது. ஆனால், பக்கத்து வீட்டுப் பெண் அது மஞ்சள் கலர் என்கிறாள். ஜன்னல் வழியாக நீ வாங்கிக் கொடுத்த காரை தினமும் பார்த்து, உன்னைப் பார்த்தது போல சந்தோஷப் படுகிறேன்.

...

...

...

...

அன்புள்ள மகனுக்கு, நீ எனக்கு உபயோகமான பரிசை அனுப்பியிருக்கிறாய். நீ அனுப்பியதை பக்கத்து வீட்டுப் பெண் சூப் செய்து கொடுத்தாள். சிக்கன் சூப் ரொம்ப நன்றாக இருந்தது! நீ சின்ன வயதில் சிக்கன் சூப் என்றால் விரும்பி சாப்பிடுவாய். உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

......


அவ்ளோதான் கதை. Mother's Day அன்னிக்கு ஒரு நிமிட் நின்னு யோசிங்க வாத்யார்!


இப்போ, கேள்வி:

Mother's Day எந்த தேதியில் கொண்டாடப் படுகிறது? (கூகுளாண்டவரை கேட்பவர்கள் போட்டியிலிருந்து நீக்கப் படுவார்கள்!)

வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


41284