ஆஹா! இவ்ளோதான் மேட்டரா? தெரியாம பூட்சே!!!

Crossword புதிர் அப்டீன்றதே ஒரு சுவரஸ்யமான மேட்டர் வாத்யார்! மத்த புதிருக்கும் க்ராஸ்வேர்டுக்கும் ரொம்ப, ரொம்ப வித்யாசம் கீது. ஆடிப் பாத்தவுங்களுக்குபுரியும்! ஒரு தபா கைல எடுத்துட்டீங்கன்னா கீள வைக்க முடியாது. நாலஞ்சு க்ளூ ஒண்ணா சேந்து மூளைக்குள்ளாற ஒரே ஞமஞமன்னு கொடையும். அதுவும் சில சமயம் ஆன்சரு அப்டியே மூளைக்குள்ளாற எங்கியோ ஒரு மூலைல ஸ்டார்ட் ஆகி அப்டியே தொண்டைல வந்து ஸடக் ஆகி தவிக்கிற டைம் கீதே ... நொந்து நூடுல்ஸா பூடும் வாத்யார்! ஆனா அதுவே, திடீர்னு, கொஞ்சம் கூட எதிர்பாக்காத ஒரு டைம்ல கபால்னு ஆன்ஸர் மனசுல வந்து குதிக்கும் பாருங்க... தலீவா, அப்டியே ரூம் ஃபுல்லா தவுஸண்ட் வாட்ஸ் பல்பு போட்ட கணக்கா பிரகாசமா ஆய்டும்!

இப்போ போன புதிருக்கு விடை:


பழனிலேர்ந்து சுரேஷ் வாத்யார் அடிச்சு காலி பண்ணி கிட்டத் தட்ட முக்கால் தூரம் வந்துட்டாரு. ஆனா, இந்த வந்தியத்தேவனும், சிவாஜியும், மலர்கொடியும் அவுர கொஞ்சம் கவுத்துட்டாங்க. ஆனா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த TOTO மெய்யாலுமே பின்னி பெடலெடுத்துட்டாரு வாத்யார்! அதுவும் ரொம்ப கஷ்டமான குடந்தை ஜோதிடரையும், ஆதியையும், துப்பாரையும், கிக்பாவையும் வுடாம ட்ரை பண்ணி கண்டு புடிச்சது மெய்யாலுமே சூ..ப்பர்!!!

அதனால, ஒண்ணு வுடாம எல்லா கேள்விக்கும் கரீட்டா
பதில் சொன்ன TOTO இன்னிலேர்ந்து

TOTO - The Crossword திலகம்
அப்டீன்னு அழைக்கப்படுவார்!


மத்த பேருக்கல்லாம், வேற என்ன? Better Luck Next Time!!!!இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


4 comments:

nila said...

அடடா மிஸ் பண்ணிட்டனே ... கொஞ்சம் சீக்ரமா வந்திருக்கணும்...

ஜாம்பஜார் ஜக்கு said...

நிலா,

//கொஞ்சம் சீக்ரமா வந்திருக்கணும்...//

அதுனால என்ன? ஆன்ஸர பாக்காம ஒரு தபா ட்ரை பணணி பாருங்க. கவிஞராச்சே, கண்டிப்பா அசத்திடுவீங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Toto said...

ஜா.ஜ‌க்கு,

ஒரு க‌ல‌க்க‌லான‌ புதிருக்கும், யோசிச்சி ப‌திலெழுத‌ வ‌ச்ச‌துக்கும், உங்க‌ பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த‌ ந‌ன்றி !

-Toto
Film4thwall.blogspot.com

SUMAZLA/சுமஜ்லா said...

என்னென்னமோ நடக்குதே!