மேனேஜ்மென்ட் சிந்தனைகள் (ஹி..ஹி..): Communication!







...

...

...

...

...

...

...

...

...

...




நம்ப இன்னா சொல்றோம்கிறது முக்கியமில்லை வாத்யார். கேக்குறவுங்க இன்னா புரிஞ்சுகிறாங்க, அதான் மேட்டரு.



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

யார் இந்த ஜாம்பஜார் ஜக்கு? (100வது பதிவு!)





வாத்யார், இப்பத்தான் முந்தாநாள் "
அட இது யாருப்பா புதுசாக் கீது"ன்னு ஒரு பதிவு போட்டா மாதிரி கீது, 'எண்ணி'ப் பாத்தா அதுக்குள்ளாற(?) நூறு பதிவு ஆகி பூட்சு. மொதல் பதிவுல மொதல் பின்னூட்டமே நம்ம வால்பையன் அண்ணாத்த கொலவெறியோட இப்டி எளுதியிருந்தாரு:

"சும்மா ரீல் வுடாத நைனா!
ஒன் எழுத்து பார்த்தா தெரியலையா நீ பழைய ஆளு தான்னு!"

இப்பவும் அப்டிதான் சொல்றாரான்னு அவுரத்தான் கேக்கணும்! அது இருக்கட்டும். அடிக்கடி யாரு இந்த ஜாம்பஜார் ஜக்குன்னு ஒரு கேள்வி வந்துகினே இருக்கு. அதுக்கு இந்த நூறாவது பதிவுலயாவது பதில் சொல்லிடுன்னு அண்ணாத்த கண்டிஷனா சொல்லிட்டாரு. வேற வழி இல்ல சொல்லித்தான் ஆகணும்.

சரி, யார் இந்த ஜாம்பஜார் ஜக்கு?

எனக்குத் தெரிஞ்சு மொத்தம் மூணு ஜாம்பஜார் ஜக்கு கீறாங்க.


ஜாம்பஜார் ஜக்கு-1:

நம்ம மனோரம ஆச்சி ஆக்ட் குடுத்த "பொம்மலாட்டம்" அப்டீன்ற படத்துல "வா வாத்யாரே வூட்டண்ட"ன்னு நம்ம பதிவோட டைட்டில் சாங்க் வரும். வி.குமார் மீசிக்ல அசத்தலா மனோரமா ஆச்சி சொந்த குரல்ல பாடி இருப்பாங்க. அதுல நம்ம சோ வாத்யார் ஜாம்பஜார் ஜக்குன்ற பேரோட வருவாரு. அத்த பத்தின நம்ம புதிர் இங்க.

ஜாம்பஜார் ஜக்கு-2:

ஆச்சா? அடுத்தாப்ல, விவேகா ஃபைன ஆர்ட்ஸின் ஆரம்ப காலத்துல "மெட்ராஸ் பை நைட்" அப்டீன்னு ஒரு டிராமா. சூஸைட் பண்ணிக்க போற ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஒரு ராத்திரில மெட்ராஸ்ல சந்திக்குற அனுபவங்கள பத்தின கதை. அதுல மறுபடியும் நம்ம சோ வாத்யார் ஜாம்பஜார் ஜக்குன்ற பேர்ல போலிஸ் கான்ஸ்டபிளா வந்து தூள் கிளப்புவாரு. அதுவும், அந்த காலேஜ் ஸ்டூடன்ட் மெரினா பீச்சுல தற்கொலை பண்ணிக்க ட்ரை பண்ணி ஜக்கு கிட்ட மாட்டிகிற சீன் இப்டி போவும்:

காலேஜ் ஸ்டூடன்ட்: தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன தப்பு? என் உயிரை நான் எடுத்துக்க எனக்கு உரிமை கிடையாதா?

கான்ஸ்டபிள் ஜக்கு: இப்போ, உனக்கு ஒரு புள்ளை கீறான்னு வச்சுக்க. அவனோட உயிர எடுக்குறதுக்கு உனக்கு ரைட்ஸ் கீதா?

காலேஜ் ஸ்டூடன்ட்: ஐயோ! அது எப்படி? எனக்கு உரிமை கண்டிப்பா கிடையாது.

கான்ஸ்டபிள் ஜக்கு: அப்டி வா வாத்யார். நீ பெத்த புள்ள உயிர எடுக்கவே உனக்கு உரிமை கெடையாதே, உங்க அப்பன் பெத்த புள்ள நீ, உன் உயிர எடுக்க உனக்கு எப்டி உரிமை இருக்கும்? என் கிட்ட லா பாயின்ட் பேசாத, நட ஸ்டேஷன்னுக்கு!


ஜாம்பஜார் ஜக்கு-3:

அதுவும் சரி. மூணாவதா ஒரு ஜாம்பஜார் ஜக்கு கீறாரு. பதிவெல்லாம் எளுதி அல்லாரையும் டென்ஷன் பண்ணிகினு கீறாரு. அவுரு யாருன்னு தெரியுமா? இன்னாது? தெரியாதா?

அட, இன்னாங்க இப்டி சொல்லிட்டீங்க?


அவுரு யாருன்னு தெரிஞ்சுகணும்னா டென்ஷன் ஆவாம அப்டியே கீள வாங்க...


...


...



...


...


...


...

அந்த ஜாம்பஜார் ஜக்கு யாருன்னா...

...


...


...


...


...


...


அட, நான் தான் வாத்யார்!


வர்ட்டா...


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


பி.கு.: அல்லாருக்கும் ஜக்குவின் நன்றிகள். தொடர்ந்து அடிக்கடி வூட்டாண்ட வாங்க வாத்யார்!

புத்திசாலிகளுக்கு ஒரு தமிழ்ப் புதிர்! (Dont Miss!)

வாத்யார் இந்த வார்த்தை வெளையாட்டெல்லாம் இங்கிலீஷ்ல ஆடி இருப்பீங்க. ஒரு தபா தமிழ்ல ஆடிப் பாருங்க அப்டியே ஆ...டி பூடுவீங்க!



க்ளூ எல்லாம் எதுவும் கிடையாது, சும்மா அசத்துங்க!



இதெல்லாம் இன்னா?



1) கஈரம்ல்



2) துண்டு வெட்டு துண்டு



3) காமழைடு



4) காவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரிகாவிரி



5) காஞ்சீபுரம்



படிப்பு
6)



7) ர்பா



8) சி1த்3த5ப்7பா



9) ட்டு, ட்டு



10) 120 செ.மீ யார்



விடைகள்:

1. கல்லுக்குள் ஈரம்
2. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
3. காட்டுல மழை
4. காவிரி ஆறு
5. சின்ன காஞ்சீபுரம்
6. மேல் படிப்பு
7. திரும்பிப்பார்
8. ஒண்ணு விட்ட சித்தப்பா
9. இருட்டு
10. நாலடியார்

தமிழ் புதிரை அசத்தலா ஆடின எல்லாருக்கும் ஸ்பெஷல் நன்றி. எல்லா கேள்விகளும் ஒரிஜினல் ஜாம்பஜார் கேள்விகள். அதுனால கூகுள்ல தேடினாலும் விடை கிடைக்காது. இருந்தாலும் எல்லா கேள்விக்கும் பளிச்சுனு மின்னல் வேகத்துல பதில் சொன்ன பினாத்தல் சுரேஷ் வாத்யாருக்கு எல்லாரும் ஜோரா ஒரு தபா கைத்தட்டிடுங்க!

வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்? (ஜாலியாய் ஒரு புதிர்!)





வாத்யார், புதிர் போட்டு ரொம்ப நாள் ஆகி பூட்சு. ஈஸியா யோசிச்சு ஜாலியா பதில் சொல்லுங்க. டென்ஷனே வாணாம்!


1) ஒரு மனிதனின் குறட்டை ஒலி அதிக பட்சம் எவ்ளோ இருக்கலாம்?


2) ஒரு மனிதனின் கால் நீளம் குறைந்த பட்சம் எவ்ளோ இருக்க வேண்டும்?


3) இது ரெண்டில் எது கரீட்டு?
அ) A married man is happy
ஆ) An married man is happy


4) இது இன்னா?
SHUT
SIT


5) எட்டுக்கால் பூச்சிக்கு எத்தினி கால்கள்?



அவ்ளோதான் மேட்டர்.


வர்ட்டா?


விடை:

பின்னூட்டத்துல பாருங்க!

எல்லா கேள்விக்கும் கரீட்டா பதில் சொன்ன பாஸ்டன் ஸ்ரீராம் வாத்யாருக்கும், அஞ்சுல நாலு கரீட்டா சொன்ன நையாண்டி நைனா வாத்யாருக்கும் ஒரு தபா ஜோரா கை தட்ட்டிடுங்க!



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

குப்புசாமி என்ன செய்யக் கூடாது?



விடை: தன் மகனுக்கு ரங்கு என்று பெயர் வைக்ககூடாது!

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

பிகு: ஏன்னு கேக்குறீங்களா? சரியாப் போச்சு போங்க!



வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

தமிழில் பெயர் வைக்கலாமா? (டென்ஷன் ஆவதீங்க வாத்யார்!)



இங்கிலீஷ்ல சில பேரு செய்யுற தொழிலையே பேரா வச்சுப்பாங்க (Goldsmith, Contractor அப்டீன்ற மாதிரி). இந்தியாவுலயும் ஒரு சில பகுதில இப்பிடி ஒரு பழக்கம் உண்டு.

இப்போ மேட்டர் இன்னான்னா அது மாதிரி நம்ம தமிழ்லயும் பேர் வச்சா எப்டி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தா கொஞ்சம் டென்ஷனா பூட்சு வாத்யார்..!

Doctor -- வைத்தியனாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேஸன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்

Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோகரன்
Sex Therapist -- காமேஸ்வரன்
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist -- கண்ணாயிரம்

ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்ரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Mentalist -- புத்திசிகாமணி

Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்ரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்

Agriculturist -- பச்சையப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Hair Stylist-- சிகாமணி
Beggar -- பிச்சை

Bartender -- மதுசூதனன்
Alcoholic -- கள்ளபிரான்
Exhibitionist -- அம்பலவாணன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- அழகுசுந்தரம்
Milk Man -- பால்ராஜ்

Dairy Farmer -- பசுபதி
Dog Trainer -- நாயகன்
Snake Charmer -- நாகப்பன்
Mountain Climber -- மலைச்சாமி
Javelin Thrower -- வேலாயுதம்
Pole Vaulter -- தாண்டவராயன்

Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டுராவ்
Long jumper--தாண்டவன்
Marksman--நல்லகண்ணு
Bowler -- பாலாஜி

Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திருப்புரசுந்தரி
Driver -- சாரதி



நீங்க யோசிக்கறதுக்காக ரெண்டு மூணு பேரு உட்டு வச்சுகிறேன். டென்ஷனாவாம யோசிச்சு கண்டுபுடிங்க வாத்யார்.


இத்த தவிர வேற வேற எதுனாச்சும் பேரு தெரிஞ்சாலும் பின்னூட்டதுல அண்ணாத்த சொல்ல சொல்றாரு!

வர்ட்டா?



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி? (100% GUARANTEED!)



இன்னாவெல்லாமோ செஞ்சு பார்த்தும் உடல் எடை குறைய மாட்டேங்குதா? கவலையை உடுங்க! உங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் பதிவு!!

எக்ஸர்சைஸ் பண்ண மாட்டேன்!

டயட் கண்ட்ரோல் ... மூச்!!

மருந்து மாத்திரை எதுவும் சாப்பிட மாட்டேன்!!

பாட்டரி பெல்ட், மேக்னட் பெல்ட் இதெல்லாம் கண்டிப்பாக கூடாது!!

ஆனா ஒரே நாள்ல வெய்ட் கொறையணும்.... அப்டீன்னு நெனைக்குற ஆசாமியா நீங்க?

வாங்க வாத்யார், உங்களத்தான் எதிர் பாத்துகினு இருந்தேன் உங்களுக்காகவே ஸ்பெஷலா ஒரு ஏற்பாடு அண்ணாத்த பண்ணிகிறாரு. ஒரே நாள்ல டக்குனு வெய்ட் கொறஞ்சுடும்.



இன்னா? நம்ப மாட்டீங்களா? என்னிக்குதான் நான் சொன்னத நம்பி கீறீங்க?






டென்ஷன் ஆவாம அப்டியே கீள வாங்க...


*

*

*

*

*

இதே மாதிரி செஞ்சீங்கன்னா வெய்ட் ஒடனே கொறஞ்சுரும்...

*

*

*

*

க்ரீட்டா, ஜாக்கிரதையா செய்யணும்...

*

*

*

*





இன்னா? பண்ணீங்களா? வெய்ட் எவ்ளோ காட்டுது? அதான் அப்பவே சொன்னேன். நம்ப மாட்டேன்னுட்டீங்க!!!

வர்ட்டா?




இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கணக்குப் புலிகளுக்கு நச்சுன்னு ஒரு புதிர்!

வாத்யார் இது ரொம்ப ஈஸியான மேட்டர்தான். டக்குனு ரெண்டு நிமிட்ல பதில் சொல்லுங்க பார்க்கலாம்...



5, 6, 7, 42, 30

6, 8, 10, 56, 40

7, 9, 11, 45, 36

8, 8, 14, 52, 41

9, 7, 11, ? 36


விடை: 45
க்ளூ:
a, b, c, d, e
e = (a+b+c+d)/2




அவ்ளோதான் மேட்டர்... வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு



இந்த படத்தில் இருப்பது யார்? (Quick! பத்து செகண்ட் புதிர் !!!)






படத்தை நல்லா பாருங்க.

பாத்தீங்களா?

இதுல இருக்குறது யாருன்னு தெரீதா?



(இன்னாவோ ட்ரிக்கு கீதுன்னு டென்ஷன் ஆவாதீங்க. நல்லா பார்த்து தைரியமா சொல்லுங்க வாத்யார்!)


விடை:

ஐன்ஸ்டின், மார்லின் மன்றோ. முழு எஃபெக்ட் வேணும்னா ஒரு பத்து அடியாவது தள்ளி நின்னு பாருங்க... அட!

க்ரீட்டா சொன்ன சம்பத், வானம்பாடிகள், அஷோக்பரன், ஆதவன், அகல்விளக்கு வாதயார்ஸுக்கு ஒரு தபா ஜோரா கை தட்டிடுங்க!



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஒரு 18+ சர்தார்ஜி ஜோக் (Dont Miss it !!!)

ஒரு தபா ஒரு படத்துக்கு ரெண்டு மூணு சர்தார்ஜிகள் நண்டு சிண்டுகள் உட்பட குடும்பத்தோடு வந்திருந்தார்கள். தியேட்டருக்கு வந்ததுக்கு அப்பாலதான் போஸ்டரைப் பார்த்தா அது அடல்ட்ஸ் ஒன்லி படம். கவுண்டர்ல வேற, "ரொம்ப சாரி உங்க எல்லாரையும் உள்ள உட முடியாது. இது 18+ படம்"னு கண்டிஷனா சொல்லிட்டாங்க.


ஆனா கவுண்டர்ல இருந்ததும் ஒரு சர்தார்ஜிதான். அவுருகிட்ட போய் நம்ம அண்ணாத்த இன்னாவோ சொன்னாரு. உடனே அவுரு அப்டியே ஆடிப் போயி அல்லாரையும் உள்ளே அனுமதிச்சுட்டாரு.

அண்ணாத்த அப்டி இன்னாதான் சொல்லி இருப்பாரு?


*

*

*

*

*

*

*

"இது 18+ படம்தானே? நல்லா எண்ணி பாருங்க நாங்க மொத்தம் 19 பேர் வந்து இருக்கோம்!"



ஹி..ஹி.. வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


பெண்கள் கிரிக்கெட் ஏன் பிரபலம் ஆகவில்லை?




இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அப்படி அந்த அம்மா இன்னாதான் சொல்லி இருப்பாங்க?




ஹி..ஹி.. வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இதுதான் தருணம் (This is it ! )








இன்னா சொல்றது வாத்யார். மிஸ் பண்ணாதீங்க. அவ்ளோதான்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஒரு பழைய போட்டோ (இது இன்னான்னு தெரீதா?)




இது இன்னா மேட்டர்னு கண்டுபுடிங்க வாத்யார்.

*


*


*


*


*





இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Urgent! இந்த ஜோக் புரியுதா பாருங்க!!!


டாக்டர்! கண் வலி கொறையவே இல்லை டாக்டர்!

நான் கொடுத்த ஐ-ட்ராப்ஸை கண்ணுல டெய்லி போட்டீங்களா?

ஒரு நாள் தவறாம டெய்லி மூணு வேளையும் போட்டேன் டாக்டர்.

மாத்திரையை விடாம சாப்டீங்களா?

ஒரு வாரமா தினமும் சாப்புட்டேன் டாக்டர். ஒரு வேளைகூட விடலை டாக்டர்.

ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்தீங்களா?

இதோ இருக்கு டாக்டர்.

ம்...ம்... ஸ்கேன் எல்லாம் நார்மலாதான் இருக்கு... எதாவது வெய்யில்ல இல்ல ஹீட்ல கண்ணை எக்ஸ்போஸ் பண்ணீங்களா?

அதல்லாம் இல்லை டாக்டர். ஒரு மாசமா கூலிங் கிளாஸ் இல்லாம வீட்டை விடு வெளியில போகவே இல்லை டாக்டர்.

அப்படியுமா கண்ணை வலிக்குது?

அமாம் டாக்டர் தெனமும் கண்வலி வந்துகிட்டே இருக்கு டாக்டர்.

நல்லா யோசிச்சு சொல்லுங்க, தினமுமா வலிக்குது?

ஆமாம் டாக்டர் தெனமும் கண்வலி வருது டாக்டர்.

தினமுமா?

ஆமாம் டாக்டர். அதுவும் தெனம் ரெண்டு தடவை கண்ணை வலிக்குது டாக்டர்.

இருங்க, இருங்க. கொஞ்சம் நிதானமா யோசிச்சு சொல்லுங்க. கண்வலி எப்போ எல்லாம் வருது?

தெனமும் காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவை வருது டாக்டர்.

இன்னும் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க. கரெக்டா எந்த சமயத்துல கண்ணை வலிக்குது?

இருங்க டாக்டர்... யோசிக்கிறேன் ... ஆங்... டெய்லி காப்பி சாப்பிடும் போதுதான் கண்ணை வலிக்குது டாக்டர்.

என்னது? காப்பி சாப்பிடும்போது கண்ணை வலிக்குதா?

ஆமாம் டாக்டர். கரெக்டா ஞாபகம் வந்துருச்சு. நான் தெனமும் ரெண்டு வேளை காப்பி சாப்பிடுவேன். அப்பதான் கண்ணை வலிக்குது.

விளையாடாதீங்க, காப்பி சாப்பிடும்போதா கண்ணை வலிக்குது?

ஆமாம் டாக்டர், நெஜமாவே காப்பி சாப்பிடும்போது மட்டும் தான் கண்ணை வலிக்குது.

*

*

*

*

*

*

*

*

*

*

*

*



யோவ்! காப்பி குடிக்கும்போது கப்புலேர்ந்து ஸ்பூனை எடுத்துட்டு சாப்பிடுய்யா! கண்வலி சரியா பூடும்!!!



வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு









QUICK ! ஐந்தே செகண்டில் பதில் சொல்ல வேண்டும்...!!!




ஐந்து செகண்டில் சொல்ல வேண்டும், சொன்னதுக்கு அப்பால மாத்தக் கூடாது!


இந்த நான்கில் எது பெருசு?

1) வேர்க்கடலை
2) யானை
3) நிலா
4) கெட்டில்


இன்னா பதில் சொன்னீங்க? ஹி..ஹி.. (பக்கத்துல யாராவது இருந்தா ஒரு தபா கேட்டு பாருங்க!)


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உலகத்தின் மிக வேகமான பின்னூட்டம்...




தலைப்பை படிச்சீங்க இல்ல?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஆனாலும் Google-க்கு இவ்ளோ இது கூடாது வாத்யார்!!!

சொன்னா நம்ப மாட்டீங்க, கூகுளுக்கு ஆனாலும் ரொம்பவே ஒரு... இது.... அது இன்னாது... ஆங் ... ஒரு தன்னடக்கம் வாத்யார். நம்ம எல்லாம் கூகுள் மாதிரி கெடையாதுன்னு சொல்லிகினு கீறமே, நம்ம கூகுள் அத்த பத்தி இன்னா சொல்லுதுன்னு பார்த்தா கொஞ்சம் டென்ஷனா பூட்சு தலீவா.


ஒரு தபா கூகுள்ல போய் "Best Search Engine" அப்டீன்னு தேடிப் பாருங்க. இன்னா சொல்லுது?

வர்ட்டா?

இப்படிக்கு

இது எங்கே இருக்கிறது?





ஒரு சின்ன க்ளூ: கிரிக்கெட்டுக்கும் இந்த ஊருக்கும் ரொம்ப சம்பந்தம் உண்டு!
இன்னொரு க்ளூ: இந்த ஊர் இந்தியாவில் இல்லை.




எல்லாருக்கும் தீவாளி வாழ்த்துக்கள் வாத்யார்!


விடை:

பதில் சொன்ன அல்லாருமே கூகிளாண்டவரை தரிசனம் பண்ணிகினு வந்து கீறாங்கன்னு நல்லா தெரீது! இருக்கட்டும்!! இந்தியாவுக்கு வெளியில தீபாவளிய பிரமாதமா கொண்டாடுற ஒரு இடம் Trinidad அப்டீன்றாரு அண்ணாத்த. (Brian Lara பொறந்த இடமும் இதான்). ஒரு சாம்பிள் கீழே:



Trinidad அப்டீன்ன ஒடனே World Cup நடந்ததும் இந்தியா கன்னா பின்னான்னு தோத்ததும் கியாபகத்துக்கு வருதா? தீபாவளியும் அதுவுமா அந்த கதை எதுக்கு வாத்யார்?!! ஹி..ஹி...

இன்னொரு தபா அல்லாருக்கும் தீவாளி வாழ்த்துக்கள்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)




வாத்யார், இன்னிக்கு கொலம்பஸ் தினம் அப்டீன்றது ரொம்ப பேருக்கு தெரியாது. ஆனா அது இல்லை இந்த பதிவோட மேட்டரு. நம்ப கொலம்பஸுக்கு மட்டும் கல்யாணம் ஆகி இருந்துச்சுன்னா அவுரு அமெரிக்காவையே கண்டுபுடிச்சு இருக்க மாட்டாருன்னு ஒரு சித்தாந்தம் கீது வாத்யார். ஏன்னு கேக்குறீங்களா?


***

எங்க போறீங்க?

யார் கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்டி போகப் போறீங்க?

உங்க ஆபீஸ்ல எல்லாரும் இப்டிதான் போய்கிட்டு இருக்காங்களா?

எதுக்கு நீங்க மட்டும் இதுக்கெல்லாம் போறீங்க?

ஏன் தான் இப்டி இருக்கீங்களோ, எல்லாம் என் தலை எழுத்து

நானும் கூட வர்றேன்.

எப்போ திரும்ப வருவீங்க?

டின்னர் சாப்பிட வந்துருவீங்க இல்ல?


***

கேட்டுகிட்டே இருகன்ல, பதில் சொல்லுங்க

நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்

நீங்க போற வழில என்ன அங்க விட்டுட்டு போங்க

திரும்ப வரவே மாட்டேன், ஆமா சொல்லிட்டேன்


***

என்ன? ஓக்கேன்னா என்ன அர்த்தம்?

போகாதேன்னு ஏன் சொல்ல மாட்டேன்றீங்க?


***

அது என்ன டிஸ்கவரியோ எனக்கு ஒண்ணும் புரியல

போன தடவையும் இதேதான் சொன்னீங்க

நானா இருந்தா ரெண்டே நாள்ல கண்டுபுடிச்சுருவேன்

சும்மா டையத்த வேஸ்ட் பண்ணாதீங்க

ஆபீஸ் உட்டா நேர வீட்டுக்கு வ்ர்ற வழிய பாருங்க

என்ன சொல்றது புரியுதா?

***

இதுக்கு மேலயும் வாத்யார் அமெரிக்கா வெல்லாம் போயிருப்பாருன்னா சொல்றீங்க?

கொலம்பஸ் தினம் இன்டரஸ்டிங்கானா மேட்டர் இங்கே!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு