எந்திரன் முடிந்ததும் ரஜினி அரசியலுக்கு வருகிறார்!

ரஜினி அரசியலுக்கு வந்துருவாருன்னு 4215வது முறையாக இன்னிக்கு "பர பரப்பான" நூஸ் வந்துகிது வாத்யார். எந்திரன் முடிஞ்ச ஒடனே வந்துருவாராம். அது இன்னான்னு ரஜினி ரசிகர்கள் அல்லாம் விளுந்து அடிச்சிகினு போய் பாத்தா "ரஜினி தற்போது எந்திரன் படப்பிடிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் அரசியல் கட்சி துவக்குவது குறித்து சரியான நேரத்தில், சரியான முடிவை அறிவிப்பார்." அப்டீன்னு போட்டுகிறாங்க! ரஜினி ரசிகர்களைப் பார்த்தா மெய்யாலுமே பாவமா கீது வாத்யார்!

நேத்து விஜய் நூஸ் வந்ததுக்கும் இதுக்கும் எதுனாச்சும் சம்பந்தம் கீதான்னு அண்ணாத்த கேக்க சொன்னாரு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு!

நான் எதுனாச்சும் சொன்னா டென்ஷன் ஆய்டுவீங்க, உடுங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி.

தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ்ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.

முழு நியூஸ் இங்க: ThatsTamil

விடுமுறை நாள் வாழ்த்துக்கள் (Dont Miss It !!!!)

டென்ஷன் பார்ட்டிங்க அல்லாம் ஜோரா ஒரு தபா கை தட்டுங்க! போட்டோஷாப் அப்டி இப்டீன்னு ஒண்ணும் பேசப்படாது ஆமா!உங்கள் வாழ்க்கை பலாப்பழமாக இனிக்க வாழ்த்துக்கள் வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

விகடன் சைட்டில் (Vikatan.com) வைரஸ் இருக்கிறதா?

இன்னிக்கு விகடன் சைட்டை தொறந்தா avast! இப்டி சொல்லுது வாத்யார்:


சரி அவாஸ்டுதான் அப்டீன்னா கூகுள் குரோம் இப்டி திட்டுது வாத்யார்!


இன்னா நடக்குது விகடன்ல? கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க தலீவா.


Update: தினத்தந்தி சைட்டையும் கூகுள் குரோம் உட மாட்டேன்னுது. ஆனா அவாஸ்ட் ஒண்ணும் கண்டுக்கல! (டாங்க்ஸ் அனானி).

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இன்னிக்கு திங்கள் கிழமை!

இல்லேன்றீங்களா?

இது ஒரு சோதனைப் பதிவு...

கண்டுக்காதீங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Install Immediately! பின்னூட்ட ஜெனரேட்டர்! Guaranteed to Work!

வாத்யார், உங்க பதிவுக்கு வரவுங்க பதிவப் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம எஸ்கேப் ஆயிட்றாங்களா? ஹிட் கவுண்டர் 200 இல்ல 300ன்னு எகிறிகினே போனாலும் பின்னூட்டம் மட்டும் வுள மாட்டேன்னுதா? கவலைய உடுங்க! உங்களுக்குன்னே அமெரிக்காவுல புதுசா பின்னுட்ட ஜெனரேட்டர்ன்னு ஒண்ணு கண்டு புடிச்சு கீறாங்க!

இத்த மட்டும் நீங்க உங்க பதிவுல இன்ஸ்டால் பண்டீங்கன்னு வைங்க, அப்பாலிக்கா உங்க பதிவுக்கு வர்ற அல்லாரும் பின்னூட்டம் போடாம திரும்பவே மாட்டாங்க.

இன்னா? வளக்கம் போல சொன்னா நம்ப மாட்டீங்களா? அப்டீன்னா அப்டியே கீள வாங்க...


பின்னூட்ட ஜெனரேட்டரை இன்ஸ்டால் பண்ணிக்கிறேன்...


நீங்களே பாருங்க...

...

...

...

...

...

...

இன்னா இன்ஸ்டால் ஆயிட்ச்சா?

இப்போ இதுமேல ஒரு க்ளிக் பண்ணுங்க, நான் சொல்றது உங்களுக்கே புரியும்!


இன்னா கரீட்டா வர்க் பண்ணுதா வாத்யார்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வாலிப வயோதிக அன்பர்கள் மன்னிக்கவும்!


சின்ன வயசுல Super Mario விளையாடி பைத்தியம் புடிச்சிருக்கீங்களா? அப்டீன்னா இத்த ஒரு தபா பாருங்க! ஆடி பூடுவிங்க! வெறும் 5.21 நிமிட்ஸ் வாத்யார்!!!
இந்த வீடியோ யூ-டியூபுல வந்தப்போ 4500 பின்னூட்டத்துக்கு மேல போட்டு தாக்கிட்டாங்க! (சரி.. சரி...காதுல புகையா வருது பாருங்க!)

World Record, Cheat Code, Fake, இன்னாவோ ஏமாத்றாங்க... இன்னா வேணா சொல்லுங்க, இப்போ பாத்தாலும் டென்ஷனாத்தான் கீது வாத்யார்!

Super Marioன்னா இன்னான்னு கேக்குறவங்க தலைப்ப ஒரு தபா படிச்சுருங்க. போலாம்...ரை....ட்!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வாழ்த்துக்கள் வாத்யார்!


எங்க மன்சு தில்லாக் கீதோ
எங்க நமம தலை டாப்ல நேரா நிக்குதோ
எங்க‌ அறிவு அல்லார்க்கும் ஃப்ரீயா கெடைக்குதோ
எங்க‌ ந‌ம்ம‌ ஊரு சின்ன‌ சின்ன‌ மேட்ட‌ரால‌
பீஸ் பீஸா போவாம கீதோ
எங்க‌ மெய்யாலுமே வார்த்தை ம‌ன்ஸுக்கு
அடீலேர்ந்து வ‌ர்தோ
எங்க நம்ம பகுத்த‌றிவு, மூட‌ ப‌ள‌க்க‌ வ‌ள‌க்க‌ம்ன்ற‌
புதைகுழில தொலஞ்சு போவாம‌‌ கீதோ
எங்க‌ ம‌னஸ‌ ப‌டா ஒஸ்தியான நென‌ப்புலயும்
வேலைலயும் நீ வுடாம இஸ்துகினு போறியோ
அப்பேர்க் கொத்த‌ சொர்க‌த்த்துல‌ த‌லீவா, நைனா,
என் தேசம் கண் தொறந்து விழிக்க‌ட்டும்......இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Breaking News! ஆச்சரியம், ஆனால் உண்மை!!!


ரெண்டு கண்ணுக்கும் நடூல ஒரு நிமிஷம் அசையாம உத்து பாருங்க

...
...

அசையக் கூடாது

...
...

இன்னா தெரீது?


...

...

...

...

...

...

...

...


"உற்ற பதிவுகள் ஐம்பதும்...
கற்ற அனுபவம் ஒரு நூறும்...
பெற்ற வலை நண்பர்கள் பல நூறும்...
மற்ற பதிவர்க்கு வாழ்த்துக்கள் ஓர் ஆயிரமும்..."


எல்லாம் கரீட்டா தெரீதா வாத்யார்?
(இல்லாங்காட்டி இன்னொரு தபா பாத்துருங்க!)அல்லாருக்கும் ரொம்ப டாங்க்ஸ்!
எப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குUrgent! Microsoft Calculatorல் ஒரு பிராபளம்! Please Help!!!

சொன்னா நம்ப மாட்டீங்க மைக்ரோ சாஃப்ட் கால்குலேட்டர்ல ஒர் பிரபளம் கீது வாத்யார். வேணா நீங்களே ட்ரை பணணி பாருங்க:

உங்க கம்ப்யூட்டர்ல கால்குலேட்டர ஓப்பன் பண்ணிக்கங்க. என்ன மாதிரி ஆளா இருந்தா Start-->All Programs-->Accessories-->Calculator. இல்ல, நீங்க கம்யூட்டர்ல பெரிய புலியா இருந்தா Start-->Run- ->type Calc அப்டியும் பண்ணலாம்.

ஆச்சா? கால்குலேட்டர் வந்துட்சா? இப்போ இதப் பண்ணி பாருங்க!


2401/47 = 51.085106382978723404255319148936 கரீட்டா கீது
2401/48 = 50.020833333333333333333333333333 கரீட்டா கீது
2401/49 =
வேல செய்ய மாட்டேங்குது வாத்யார்
2401/50= 48.02 கரீட்டா கீது
2401/51 = 47.078431372549019607843137254902 கரீட்டா கீது

Microsoft
Calculator ஃபெயிலா பூட்சுப்பா!

இவ்ளோ காஸ்ட்லியா கம்ப்யூட்டர் வாங்கியும் கால்குலேட்டர் சரியா வேல பண்ணாங்காட்டி எப்டி வாத்யார்? நீங்களே ஒரு தபா ட்ரை பணணிப் பாத்து, இத்த எப்டி சரி பண்றதுன்னு பின்னூட்டத்துல கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க தலீவா!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஆஹா! இவ்ளோதான் மேட்டரா? தெரியாம பூட்சே!!!

Crossword புதிர் அப்டீன்றதே ஒரு சுவரஸ்யமான மேட்டர் வாத்யார்! மத்த புதிருக்கும் க்ராஸ்வேர்டுக்கும் ரொம்ப, ரொம்ப வித்யாசம் கீது. ஆடிப் பாத்தவுங்களுக்குபுரியும்! ஒரு தபா கைல எடுத்துட்டீங்கன்னா கீள வைக்க முடியாது. நாலஞ்சு க்ளூ ஒண்ணா சேந்து மூளைக்குள்ளாற ஒரே ஞமஞமன்னு கொடையும். அதுவும் சில சமயம் ஆன்சரு அப்டியே மூளைக்குள்ளாற எங்கியோ ஒரு மூலைல ஸ்டார்ட் ஆகி அப்டியே தொண்டைல வந்து ஸடக் ஆகி தவிக்கிற டைம் கீதே ... நொந்து நூடுல்ஸா பூடும் வாத்யார்! ஆனா அதுவே, திடீர்னு, கொஞ்சம் கூட எதிர்பாக்காத ஒரு டைம்ல கபால்னு ஆன்ஸர் மனசுல வந்து குதிக்கும் பாருங்க... தலீவா, அப்டியே ரூம் ஃபுல்லா தவுஸண்ட் வாட்ஸ் பல்பு போட்ட கணக்கா பிரகாசமா ஆய்டும்!

இப்போ போன புதிருக்கு விடை:


பழனிலேர்ந்து சுரேஷ் வாத்யார் அடிச்சு காலி பண்ணி கிட்டத் தட்ட முக்கால் தூரம் வந்துட்டாரு. ஆனா, இந்த வந்தியத்தேவனும், சிவாஜியும், மலர்கொடியும் அவுர கொஞ்சம் கவுத்துட்டாங்க. ஆனா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த TOTO மெய்யாலுமே பின்னி பெடலெடுத்துட்டாரு வாத்யார்! அதுவும் ரொம்ப கஷ்டமான குடந்தை ஜோதிடரையும், ஆதியையும், துப்பாரையும், கிக்பாவையும் வுடாம ட்ரை பண்ணி கண்டு புடிச்சது மெய்யாலுமே சூ..ப்பர்!!!

அதனால, ஒண்ணு வுடாம எல்லா கேள்விக்கும் கரீட்டா
பதில் சொன்ன TOTO இன்னிலேர்ந்து

TOTO - The Crossword திலகம்
அப்டீன்னு அழைக்கப்படுவார்!


மத்த பேருக்கல்லாம், வேற என்ன? Better Luck Next Time!!!!இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


தமிழில் ஒரு குறுக்கெழுத்துப் புதிர்! (Crossword Puzzle)

அட்டகாசமா ஒரு புதிர். கட கடன்னு பத்து நிமிஷத்துல அடிச்சு காலி பண்ணுங்க வாத்யார்!

Clues:

இடமிருந்து வலம்:

1. ஆச்சியின் குரலில் பொம்மலாட்டம் பாட்டு. "பிரபல" பதிவர்! (5,3)

4. மீதம் உள்ளது திரும்பி வரும் (3)

5. ஒளிச்சு வைங்க! நாளைக்கு கல்யாணம் (3)

7. கவுண்டமணிக்கு பிடித்தது? (2)

9. பலிக்கலாம். பலிக்காமலும் போகலாம் (5)

10. சிவாஜிக்கே அந்த காலத்து வில்லன் (2)

11. வான் சிறப்பு. உண்பார் (4)


மேலிருந்து கீழ்:

1. பட்டணத்தில் பூதம் (3,5)

2. ராமனின் மனைவி நல்ல பாடகி (3)

3. வந்தியத்தேவனுக்கு பிடித்தவள் எதிர்காலம் தெரிய வேண்டுமா? (4,4)

6. மலர் கொடி நடிகை (5)

8. இருகோடுகளில் பெரியது இல்லை (4)


அசத்துங்க வாத்யார்!

(ஆகஸ்டு 13 சேர்த்தது)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்குடென்ஷன் பார்ட்டிகளுக்காக ஒரு special பதிவு!

இன்னா பதிவு போட்டாலும் சில பேர் டென்ஷனா பூட்ராங்க வாத்யார். அவுங்களுக்காக ரொம்ப யோசிச்சு இந்த தபா இந்த புதிரை ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா போட்டுகிறேன்.அ) குறுக்கெழுத்துப் போட்டி:


Cryptic Clues:
1. இடமிருந்து வலம்
2. மேலிருந்து கீழ்


ஆ) புள்ளிகளைச் சேருங்கள்:

. . . . . .


இ) இந்த எழுத்துகளில் இருந்து எத்தனை வார்த்தைகளை அமைக்க முடியும்?
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ


ஈ) வார்த்தைகளைக் கண்டுபிடியுங்கள்:

1) ஜாம்பஜார் ஜகுக்
2) சூடான டுஇகை
3) வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அ


உ) Optical Illusion: இந்தப் புள்ளியை உற்றுப் பாருங்கள்:எதுனாச்சும் டவுட் இருந்தா கூச்சப் படாம கேளுங்க வாத்யார்.

வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

100க்கு 99 பேர் சொன்னா கேக்க மாட்டாங்க வாத்யார் !

இந்த பொட்டி கீதுல்ல, அதுல கிளிக்கினா ஒரு பிரயோசனமும் இல்ல வாத்யார்.

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

...

அதான் சொன்னேன் இல்ல,
ஒரு பிரயோசனமும் இல்லைன்னு.
(தலைப்பை படிச்சீங்களா?)


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


ஆறே வார்த்தைகளில் இந்த கதையை முடிக்க முடியுமா?

சொப்பனம் பலிக்குமா?

சொப்பனங்களில் நம்பிக்கை வைக்கிற ஜனங்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கத்தான் இருக்கிறார்கள். அவை பலிதமாகும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கென்னமோ, சொப்பனத்தைப் பற்றி இரண்டாந்தரம் நினைக்கக் கூடத் தோன்றுகிறதில்லை. இருந்தாலும் இதைக் கேளுங்கள், ரொம்ப அபூர்வமான விஷயம்.

ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாலே, நான் ஒரு சந்து வழியாக நடந்து கொண்டிருக்கிறாப் போலிருந்தது. போகப் போக அந்தச் சந்தும் போய்க்கொண்டே இருந்தது. ஏது, முடிவே கிடையாது போலிருக்கிறதே என்றுகூட நினைத்து விட்டேன். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தச் சந்து எங்கிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சமயம் சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் பக்கத்தில் நாற்றமடித்துக்கொணடிருக்கும் சந்தாக இருக்குமோ என்று தோன்றும். மற்றொரு சமயம், அப்படியிருக்க முடியாது, திருவிடமருதூரில் வடம்போக்கியோடு பொதுஜன சௌகரியத்துக்காக இருக்கும் சந்து தானோ என்று தோன்றும். எனக்கு இது விஷயம் கவலையாகத் தானிருந்தது. ஆனால் லக்ஷியம் செய்யாமல் மேலே நடந்து போய்க் கொண்டிருந்தேன்.

சட்டென்று ஒரு வீட்டு வாசலுக்கு வந்து நின்றேன். இந்த வீட்டுக் கதவை இடித்தாலென்ன என்று தோன்றிற்று எனக்கு. அப்படியே இடித்தேன். கதவைத் திறந்துகொண்டு, ரொம்ப ரொம்பக் கிழவனாக ஒருவன் வந்தான்.

"உங்கள் வீட்டுக் கதவை இடித்தது எதற்கென்றால்…" என்று ஆரம்பித்தேன்.

ஆனால் அந்தக் கிழவன் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியே போய் விட்டான்.

ஒருகால் இவன் இந்த வீட்டுக்காரனாயிருக்கமாட்டான். வேறு யாராவது வருவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, வெகு வெகு அழகான மங்கை ஒருத்தி வந்தாள். நான் கண்ணில் பட்டதும், சட்டென்று பின்வாங்கி, தடாரென்று கதவைச் சாத்திக்கொண்டு போய் விட்டாள்.

இதேதடா வம்பாயிருக்கிறது என்று அப்படியே திண்ணையில் சற்று நேரம் உட்கார்ந்தேன். சுமார் பத்து நிமிஷம் உட்கார்ந்திருப்பேன். வெகு தூரத்தில் ஒரு மோட்டார் வரும் சப்தம் கேட்டது. மேலும் பதினைந்து நிமிஷங்கள் காத்திருந்தும், அந்த மோட்டார் வரும் சப்தம் கேட்டதே யொழிய, அது சமீபத்தில் வந்ததாகக் காணவில்லை. எனக்கென்னவோ பயமாகப் போய்விட்டது. வந்தது வரட்டுமென்று அந்த வீட்டுக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

சுற்றும் ஒரே இருட்டாக இருந்தது; ரேழியைத் தாண்டி, கூடத்துக்குப் போனேன்; யாருமில்லை. தொடர்ந்து சென்று அறை அறையாக நுழைந்தேன். கடைசியில் ஓர் அறையில் மேஜை நாற்காலி போட்டு ஒருவர் வாசிப்பதற்குத் தயாராய்ப் புத்தகமும் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு டம்ளரில் காப்பி இருந்தது. அது சுட்டுக்கொண்டிருந்தது!

"அடே!" என்று ஆச்சரியத்துடன் என்னையறியாமல் சொல்லிவிட்டேன்.

இனி என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சட்டென்று ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. நான் நின்று கொண்டிருந்த அறைக் கதவு மெதுவாக மூடிக்கொள்வது தெரிந்தது!

நான் பிரமித்து விட்டேன். ஏனெனில் அதை யாரும் சாத்தவில்லை. அது தானாகவே மெதுவாய்ச் சப்தம் செய்யாமல் சாத்திக் கொண்டிருந்தது.

எனக்கு இப்போது ஒரு பயம் தோன்றிற்று. அது ஏன் தோன்றிற்று என்று எனக்கே தெரியாது. இந்தக் கதவு பூராவும் சாத்திக்கொண்டால், ஏதோ பெரிய விபத்து ஏற்படும் என்று மட்டும் சந்தேகமின்றித் தோன்றிவிட்டது எனக்கு. ஆகவே நான் ஒரே பாய்ச்சலாகக் கதவின் சமீபம் பாய்ந்து சென்றேன். கதவையும் பிடித்து விட்டேன். என் வாய் என்னையும் அறியாமல் என்னென்னவோ கத்திக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று...

"என்ன, தூக்கத்தில் உளறுகிறீர்கள்?" என்றாள் ராஜி.

சட்டென்று விழித்துக்கொண்டு விட்டேன். கண்டதெல்லாம் வெறும் சொப்பனம்.

எனக்குத் தான் சொப்பனத்தின் மேல் நம்பிக்கை கிடையாதென்று முன்னமேயே சொல்லி இருக்கிறேனே! ஆகையால் எல்லாவற்றையும் மறந்துவிடத் தீர்மானித்து மறந்தும் போய்விட்டேன். இதெல்லாம் ஏழெட்டு வருஷத்திற்கு முந்தி நடந்தவை என்று முதலிலேயே சொன்னதும் ஞாபகம் இருக்கட்டும்.

மறுபடி கேளுங்கள். போன வெள்ளிக்கிழமை இரவு, நான் ஒரு சந்தின் வழியாகப் போய்க்கொண்டேயிருந்தேன். சட்டென்று என் மனத்தில் ஒரு விஷயம் பட்டது. அந்தச் சந்தை அதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போலத் தோன்றிற்று.

எங்கே பார்த்திருக்கலாம் என்று யோசனை செய்து கொண்டே மேலும் மேலும் நடந்துகொண்டே போனேன். "ஏது, இதற்கு முடிவே இராது போலிருக்கிறதே" என்று தோன்றிற்று. திடீரென்று ஒரு வீட்டைக் கண்டதும் என்னையும் அறியாமல் நின்றேன். ஒரு பீதி வந்து என்னைப் பற்றிக் கொண்டது. என் தேகம் பூராவும் மயிர் குத்திட நின்றது.

அந்த வீட்டை எனக்குத் தெரியும். கதவை இடித்தால் ஒரு கிழவன் வந்து திறப்பான். திறந்து விட்டுப் பேசாமல் போய் விடுவான்.

அப்படியே கதவை இடித்தேன். இடிக்காமல் இருக்க முடியவில்லை. முன் போலவே ரொம்ப ரொம்பக் கிழவர் ஒருவர் வந்து, என் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்காமல் போனார். திண்ணையில் வந்து உட்கார்ந்து கொணடேன். ஒரு பெண்மணி வந்து பார்த்து விட்டுத் திடுக்கிட்டுப் பின் வாங்கி, கதவைப் படீரென்று அடைத்துக் கொண்டு சென்றாள். "என்ன! எட்டு வருஷத்துக்கு முன் கண்ட ஒரு சொப்பனமும் இப்படி உண்மையாய் நடக்க முடியுமா!" என்று நான் யோசனையில் ஆழ்ந்திருக்கும் போதே, மோட்டார் வருவது போன்ற சத்தம் கேட்டது.

ஆனால் அது வராதென்று எனக்குத்தான் தெரியுமே! வீட்டுக்குள் தைரியமாய் நுழைந்தேன். முன்போல் அது ஜன சூன்யமாகத்தான் இருந்தது. கடைசியில் மேஜை நாற்காலி போட்டிருந்த அறைக்குள்ளும் வந்தேன். புத்தகம் பிரித்தபடிதான் இருந்தது. காப்பியும் சுட்டுக் கொண்டுதானிருந்தது.

நான் முன் ஜாக்கிரதையாக நடந்து கொண்டேன். நுழைந்தவுடனேயே கதவின் மேல் ஒரு கண் வைத்து விட்டேன். வாயைத் திறந்து ஒரு கத்தலும் போடவில்லை. இதெல்லாம் எனக்குப் புதிதா, என்ன? முன்னே ஒரு தரம் சொப்பனத்தில் கண்ட விஷயங்கள்தானே?

கதவு இன்னும் சாத்திக்கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஒரே பாயச்சலாய்ப் பாய்ந்து சென்று கதவின் சமீபத்தை அடைந்தேன். அதைக் கெட்டியாய்ப் பிடித்து என் பலங் கொண்ட மட்டும் அழுத்தினேன். அப்போது சட்டென்று எதிர்பாராத விதமாய் - என்ன நடந்திருக்குமென்று உங்களுக்குத் தோன்றுகிறது?


இப்போ ஜக்கு: வாத்யார், அம்பது வருஷத்துக்கு முன்னால அமரர் தேவன் (துப்பறியும் சாம்பு எளுதின ஜீனியஸ்!) இந்த கதையை இன்னும் ஆறே வார்த்தைகளில் முடிச்சுட்டார். ட்ரை பண்ணி பாருங்க...

...

...

...

...

...

...

...

...

...

...

...


ஆமாம், தூக்கத்திலிருந்து மறுபடி விழித்துக் கொண்டு விட்டேன்!மறுபடியும் ஜக்கு: இன்னாமா ஒரு எளுத்தாளர் தேவன். சிஐடி சந்துரு படிச்சி கீறீங்களா வாத்யார்?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சினிமா புதிர், மூணே மூணு கேள்விகள்!

ரொம்ப, ரொம்ப, ரொம்ப ஈ..........ஸி யான புதிர் வேணும்னு கேட்டவுங்களுக்காக இந்த புதிர். டக்குனு சொல்லுங்க பாக்கலாம்:


1) காமெடி குவீன் மனோரமா ஆச்சி தன்னோட சொந்த குரலில் பாடி நடித்த முதல் பாட்டு எது?
2) அது எந்த படம்?
3) மீசிக் டைரக்டரு யாரு?

அவ்ளோதான். இன்னாது? க்ளூவா? ஏகப்பட்ட க்ளூ ஏற்கெனவே கீது வாத்யார்! இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக ஒரு க்ளூ: இந்த புதிரு இன்னாத்துக்கு? விடை: ஒரு வெளம்பரம் தான்.


200 பேருக்கு மேல் க்ளிக்கி தள்ளிவிட்டதால்... முதல் கேள்விக்கு பதில் இதோ:
இப்போ புரீதா ;-)
விடை:

1) வா வாத்யாரே வூட்டாண்ட...
2) பொம்மலாட்டம்
3) வி.குமார்


வர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வங்கி ஊழியர்களுக்கு ஒரு கேள்வி!

செய்தி-1:


வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

வங்கிப் பணியில் கடைநிலை ஊழியர்களாக சேர்பவர்கள், ஆரம்ப நிலையில் அனைத்துப் படிகளையும் சேர்த்து 7,000 ரூபாயில் இருந்து 8,500 ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர். எழுத்தர் பணியில் இருப்பவர்கள் 8,300 ரூபாயில் இருந்து 9,000 ரூபாய் வரை வாங்குகின்றனர். பணிபுரியும் இடத்தைப் பொறுத்து, இதரப் படிகள் மாறுபடுகின்றன. இவர்களில், 25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்திருப்பவர்கள், 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். அதிகாரிகளின் அடிப்படை சம்பளம், அனைத்துப் படிகளையும் சேர்த்து 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இவர் கள் பதவி உயர்வின் அடிப்படையில் பொது மேலாளர், இயக்குனர் பதவிகளில் அமர முடியும். அப்போது இவர்களது அடிப்படை சம்பளம் 32,600 ரூபாயாக உயர்கிறது. இதரப் படிகளாக 17 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கிறது. உ முதன்மை இயக்குனர், சேர்மன் போன்றோரின் மாத சம்பளம் 75 ஆயிரத்தைத் தொட்டுவிடுகிறது.

செய்தி-2:

என்ன போராட்டம் நடத்துவது எனத் தெரியாமல், மாத வருமானம் 351 ரூபாய் கொண்ட 1.5 கோடி பேர் தமிழகத்தில் தவிக்கின்றனர்.


நீங்க இன்னா சொல்றீங்க?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

10,000 உதை (Hit) வாங்கிய அபூர்வ சிகாமணி!


இந்த படத்துல உங்களுக்கு இன்னா
விசேஷமா தெரீது?
..
..
..

டாங்க்ஸ் வாத்யார்!
எப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கம்ப்யூட்டரில் hair cutting செய்ய எளிய வழி (இன்னாது?!)வாங்க வாத்யார்! சும்மா தைரியமா வாங்க! தலைப்ப பார்த்து டென்ஷன் ஆவாதீங்க! மெய்யாலுமேதான் சொல்றேன்! இன்னா? நம்ப மாட்டீங்களா?

அப்டீன்னா இப்டி பண்ணுங்க!

1) உங்க ஹெட் ஃபோனை கம்ப்யூட்டரில் கனெக்ட் பண்ணுங்க (Head Phone முக்கியம். கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் வேலைக்கு ஆவாது). Left & Right ஸ்பீக்கரை கரீட்டா காதுல வச்சுக்கங்க.

2) ஆச்சா? ஒண்ணும் டென்ஷன் ஆவுலியே? இப்போ கீள இருக்குற ப்ளே பட்டனை க்ளிக் பண்ணீட்டு அப்டியே கண்ணை மூடிக்கினு ரிலாக்ஸ்டா உக்காருங்க!

3) க்ளிக் பண்டீங்களா? ரிலாக்ஸ்...ஸ்டார்ட் மீசிக்... enjoy the hair cut!!! (கட்டிங் முடியற வரைக்கும் கண்ணை தொறக்கக் கூடாது, ஆமா...சொல்ட்டேன்!!!)
இன்னா? ஆச்சா? கண்ணாடில பாத்தீங்களா? எப்டி இருக்கு? அப்டியே சிரிச்சுகினே பின்னூட்டத்துல சொல்லுங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

தமிழ்மணத்தில் ஒரு BUG?

இதுல இன்னா பொடி இருக்குதோன்னு டென்ஷன் ஆவாதீங்க தலீவா! மெய்யாலுமே தமிழ்மணத்துல ஒரு bug இருக்கிற மாதிரி கீது!


இன்னா மேட்டருன்னா நீங்க பதிவுக்கு தலைப்பு வைக்கும் போது தலைப்புல ' அப்டீங்கிற எளுத்த (அதான் வாத்யார் apostrophe இல்லாங்காட்டி சிங்கிள் கோட்) யூஸ் பண்ணீங்கன்னு வைங்க தமிழ்மணம் உங்க பதிவ திரட்டும் போது சுத்தமா தலைப்பே காணாம பூடுது!

உதாரணமா இப்டி எல்லாம் தலைப்பு வைச்சீங்கன்னா கண்டிப்பா தமிழ்மண முகப்புல உங்க தலைப்பு தெரியாது!!!

1) Don't Miss it
2) 'அதுவும்', 'இதுவும்'
3) அவரு சொல்றாரு 'ஹி..ஹி'

இன்னா, சொன்னா நம்ப மாட்டீங்களா? சரி ஒரு தபா இப்டி தலைப்ப வச்சு இன்னா ஆவுதுன்னு பாத்து சொல்லுங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


பின்குறிப்பு: அப்புறம் இந்தப் பதிவு தலைப்ப பாருங்க! இன்னா புரியுது?

English தெரியாதவங்க கண்டிப்பா படிக்காதீங்க!

வந்துடீங்களா? அப்டீன்னா உங்களுக்கு இங்கிலீஷு ரொம்ப நல்லா தெரியும்னு சொல்லுங்க! சூப்பர்!இப்போ டென்ஷன் ஆவாம கொஞ்சம் நல்...லா யோசிச்சு இதுக்கு பதில சொல்லுங்க பாக்கலாம்!


கேள்வி ரொம்ப சுலவம் தான் வாத்யார்!

இங்கிலீஷு அரிச்சுவடில (அதாம்பா ஆல்ஃபபெட்டு) 27வது எளுத்து எது?

அவ்ளோதான் கேள்வி.


...

...

தெரிலன்னா கீள வாங்க!


...

...

...

...

...

இன்னும்


....

...

...

...

தெரீலயா?

...

...

...

...

...

...

மெய்யாலுமே விடைய பார்க்க வந்தீங்களா?


ரொம்ம்......ம்ப நல்லா கீது!எந்த ஸ்கூலு?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


பின்குறிப்பு:

ரொம்ப டென்ஷன் ஆனவுங்க மட்டும் இத்த ஒரு தபா கிளிக்கி பாத்துருங்க! கொஞ்சம் ஆறுதலா இருக்கும்... ஹி...ஹி....