தமிழில் ஒரு குறுக்கெழுத்துப் புதிர்! (Crossword Puzzle)

அட்டகாசமா ஒரு புதிர். கட கடன்னு பத்து நிமிஷத்துல அடிச்சு காலி பண்ணுங்க வாத்யார்!

Clues:

இடமிருந்து வலம்:

1. ஆச்சியின் குரலில் பொம்மலாட்டம் பாட்டு. "பிரபல" பதிவர்! (5,3)

4. மீதம் உள்ளது திரும்பி வரும் (3)

5. ஒளிச்சு வைங்க! நாளைக்கு கல்யாணம் (3)

7. கவுண்டமணிக்கு பிடித்தது? (2)

9. பலிக்கலாம். பலிக்காமலும் போகலாம் (5)

10. சிவாஜிக்கே அந்த காலத்து வில்லன் (2)

11. வான் சிறப்பு. உண்பார் (4)


மேலிருந்து கீழ்:

1. பட்டணத்தில் பூதம் (3,5)

2. ராமனின் மனைவி நல்ல பாடகி (3)

3. வந்தியத்தேவனுக்கு பிடித்தவள் எதிர்காலம் தெரிய வேண்டுமா? (4,4)

6. மலர் கொடி நடிகை (5)

8. இருகோடுகளில் பெரியது இல்லை (4)


அசத்துங்க வாத்யார்!

(ஆகஸ்டு 13 சேர்த்தது)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு17 comments:

ரவிசங்கர் said...

மீ...த...ஃபர்ஸ்டேய்!

விடையோட சீக்கிரம் வருகிறேன்!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

1. வா வாத்தியாரே ஊட்டாண்டே பாட்டில் வரும் பெயர் நினைவுக்கு வரமாட்டேங்குதே..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

5.சீப்பு

SUREஷ் (பழனியிலிருந்து) said...

7.உதை 9.கனவு

SUREஷ் (பழனியிலிருந்து) said...

மேலிருந்து கீழ்

1. ஜாவர் சீதாராமன்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

2.ஜானகி 8.சின்னது

ஜாம்பஜார் ஜக்கு said...

சுரேஷ் வாத்யார்,

அஞ்சு நிமிஷத்துல அஞ்சு பின்னூட்டம்...புயல் வேகம். 9-acrossஐ கொஞ்சம் கவனிங்க. மூணு எளுத்து இல்லை. அஞ்சு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜெகநாதன் said...

வித்யாசமா இருக்கு.. விடைகளை எதிர்பார்க்கிறேன்!!! எஸ்கேப்!

Toto said...

1. ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு
4. கிள‌வி
5. சீப்பு
7. உதை
9. பலிக்கலாம். பலிக்காமலும் போகலாம் (5)
10. ராதா
11. துப்பார்


மேலிருந்து கீழ்:

1. ஜாவ‌ர் சீதாராம‌ன்
2. ஜான‌கி
3. வந்தியத்தேவனுக்கு பிடித்தவள் திர்காலம் தெரிய வேண்டுமா? (4,4)
6. புஷ்ப‌ல‌தா
8. சின்ன‌து

:)
-Toto
Film4thwall.blogspot.com

ஜாம்பஜார் ஜக்கு said...

Toto வாத்யார்,

கிளவி, ராதா தப்பு.

6க்கும் 11க்கும் ஒரு ஸ்பெஷல் சபாஷ். பின்னிட்டீங்க!

மத்ததும் முயற்சி பண்ணுங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

சூப்பர் ஜக்கு சார்!

//சிவாஜிக்கே அந்த காலத்து வில்லன்//

குழப்பமா இருக்கு.

// வந்தியத்தேவனுக்கு பிடித்தவள் எதிர்காலம் தெரிய வேண்டுமா?//

ரொம்ப குழப்பமா இருக்கு.

மீ த திங்கிங்....

Anonymous said...

எனக்கு மட்டும் சொல்லுங்க: 3-க்கு என்ன க்ளூ? வந்தியத்தேவன் புரியுது. ஆனால் அதுக்கப்புறம் வருவது புரிய மாட்டேங்க்குது.

:)))

Toto said...

4. கிக்பா [ பாக்கி ] - I'll come back with the remaining 2 questions. :)

Toto said...

9.ராசிப‌ல‌ன். Still Sivaji villain and vanthiyathevan are pending. Let me try. Thanks. :)

Toto said...

1. ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு
4. கிக்பா [ பாக்கி ]
5. சீப்பு
7. உதை
9. ராசிப‌ல‌ன்
10. ஆதி
11. துப்பார்

===

1. ஜாவ‌ர் சீதாராம‌ன்
2. ஜான‌கி
3. குட‌ன்தை சோதிட‌ர்
6. புஷ்ப‌ல‌தா
8. சின்ன‌து

ப‌ரிசு ரெடியா ம‌ன்னா ?! Thanks Jakku for the crossword. It's good. Pls do visit my blog.

:)
-Toto
Film4thwall.blogspot.com

ஜாம்பஜார் ஜக்கு said...

விடைகள் ரிலீஸ்!

// Thanks Jakku for the crossword. It's good.//

டாங்க்ஸ் TOTO! பின்னிட்டீங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

சுரேஷ் வாத்யார்,

//வா வாத்தியாரே ஊட்டாண்டே பாட்டில் வரும் பெயர் நினைவுக்கு வரமாட்டேங்குதே.//

:-)))))))))

ரவிசங்கரு,

//விடையோட சீக்கிரம் வருகிறேன்//

விடையெல்லாம் வந்தாச்சு, நீங்க ஜாக்ரதையா வந்து சேருங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு