இதுதான் தருணம் (This is it ! )
இன்னா சொல்றது வாத்யார். மிஸ் பண்ணாதீங்க. அவ்ளோதான்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஒரு பழைய போட்டோ (இது இன்னான்னு தெரீதா?)
இது இன்னா மேட்டர்னு கண்டுபுடிங்க வாத்யார்.

*


*


*


*


*

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Urgent! இந்த ஜோக் புரியுதா பாருங்க!!!


டாக்டர்! கண் வலி கொறையவே இல்லை டாக்டர்!

நான் கொடுத்த ஐ-ட்ராப்ஸை கண்ணுல டெய்லி போட்டீங்களா?

ஒரு நாள் தவறாம டெய்லி மூணு வேளையும் போட்டேன் டாக்டர்.

மாத்திரையை விடாம சாப்டீங்களா?

ஒரு வாரமா தினமும் சாப்புட்டேன் டாக்டர். ஒரு வேளைகூட விடலை டாக்டர்.

ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்தீங்களா?

இதோ இருக்கு டாக்டர்.

ம்...ம்... ஸ்கேன் எல்லாம் நார்மலாதான் இருக்கு... எதாவது வெய்யில்ல இல்ல ஹீட்ல கண்ணை எக்ஸ்போஸ் பண்ணீங்களா?

அதல்லாம் இல்லை டாக்டர். ஒரு மாசமா கூலிங் கிளாஸ் இல்லாம வீட்டை விடு வெளியில போகவே இல்லை டாக்டர்.

அப்படியுமா கண்ணை வலிக்குது?

அமாம் டாக்டர் தெனமும் கண்வலி வந்துகிட்டே இருக்கு டாக்டர்.

நல்லா யோசிச்சு சொல்லுங்க, தினமுமா வலிக்குது?

ஆமாம் டாக்டர் தெனமும் கண்வலி வருது டாக்டர்.

தினமுமா?

ஆமாம் டாக்டர். அதுவும் தெனம் ரெண்டு தடவை கண்ணை வலிக்குது டாக்டர்.

இருங்க, இருங்க. கொஞ்சம் நிதானமா யோசிச்சு சொல்லுங்க. கண்வலி எப்போ எல்லாம் வருது?

தெனமும் காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவை வருது டாக்டர்.

இன்னும் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க. கரெக்டா எந்த சமயத்துல கண்ணை வலிக்குது?

இருங்க டாக்டர்... யோசிக்கிறேன் ... ஆங்... டெய்லி காப்பி சாப்பிடும் போதுதான் கண்ணை வலிக்குது டாக்டர்.

என்னது? காப்பி சாப்பிடும்போது கண்ணை வலிக்குதா?

ஆமாம் டாக்டர். கரெக்டா ஞாபகம் வந்துருச்சு. நான் தெனமும் ரெண்டு வேளை காப்பி சாப்பிடுவேன். அப்பதான் கண்ணை வலிக்குது.

விளையாடாதீங்க, காப்பி சாப்பிடும்போதா கண்ணை வலிக்குது?

ஆமாம் டாக்டர், நெஜமாவே காப்பி சாப்பிடும்போது மட்டும் தான் கண்ணை வலிக்குது.

*

*

*

*

*

*

*

*

*

*

*

*யோவ்! காப்பி குடிக்கும்போது கப்புலேர்ந்து ஸ்பூனை எடுத்துட்டு சாப்பிடுய்யா! கண்வலி சரியா பூடும்!!!வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

QUICK ! ஐந்தே செகண்டில் பதில் சொல்ல வேண்டும்...!!!
ஐந்து செகண்டில் சொல்ல வேண்டும், சொன்னதுக்கு அப்பால மாத்தக் கூடாது!


இந்த நான்கில் எது பெருசு?

1) வேர்க்கடலை
2) யானை
3) நிலா
4) கெட்டில்


இன்னா பதில் சொன்னீங்க? ஹி..ஹி.. (பக்கத்துல யாராவது இருந்தா ஒரு தபா கேட்டு பாருங்க!)


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

உலகத்தின் மிக வேகமான பின்னூட்டம்...
தலைப்பை படிச்சீங்க இல்ல?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஆனாலும் Google-க்கு இவ்ளோ இது கூடாது வாத்யார்!!!

சொன்னா நம்ப மாட்டீங்க, கூகுளுக்கு ஆனாலும் ரொம்பவே ஒரு... இது.... அது இன்னாது... ஆங் ... ஒரு தன்னடக்கம் வாத்யார். நம்ம எல்லாம் கூகுள் மாதிரி கெடையாதுன்னு சொல்லிகினு கீறமே, நம்ம கூகுள் அத்த பத்தி இன்னா சொல்லுதுன்னு பார்த்தா கொஞ்சம் டென்ஷனா பூட்சு தலீவா.


ஒரு தபா கூகுள்ல போய் "Best Search Engine" அப்டீன்னு தேடிப் பாருங்க. இன்னா சொல்லுது?

வர்ட்டா?

இப்படிக்கு

இது எங்கே இருக்கிறது?

ஒரு சின்ன க்ளூ: கிரிக்கெட்டுக்கும் இந்த ஊருக்கும் ரொம்ப சம்பந்தம் உண்டு!
இன்னொரு க்ளூ: இந்த ஊர் இந்தியாவில் இல்லை.
எல்லாருக்கும் தீவாளி வாழ்த்துக்கள் வாத்யார்!


விடை:

பதில் சொன்ன அல்லாருமே கூகிளாண்டவரை தரிசனம் பண்ணிகினு வந்து கீறாங்கன்னு நல்லா தெரீது! இருக்கட்டும்!! இந்தியாவுக்கு வெளியில தீபாவளிய பிரமாதமா கொண்டாடுற ஒரு இடம் Trinidad அப்டீன்றாரு அண்ணாத்த. (Brian Lara பொறந்த இடமும் இதான்). ஒரு சாம்பிள் கீழே:Trinidad அப்டீன்ன ஒடனே World Cup நடந்ததும் இந்தியா கன்னா பின்னான்னு தோத்ததும் கியாபகத்துக்கு வருதா? தீபாவளியும் அதுவுமா அந்த கதை எதுக்கு வாத்யார்?!! ஹி..ஹி...

இன்னொரு தபா அல்லாருக்கும் தீவாளி வாழ்த்துக்கள்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)
வாத்யார், இன்னிக்கு கொலம்பஸ் தினம் அப்டீன்றது ரொம்ப பேருக்கு தெரியாது. ஆனா அது இல்லை இந்த பதிவோட மேட்டரு. நம்ப கொலம்பஸுக்கு மட்டும் கல்யாணம் ஆகி இருந்துச்சுன்னா அவுரு அமெரிக்காவையே கண்டுபுடிச்சு இருக்க மாட்டாருன்னு ஒரு சித்தாந்தம் கீது வாத்யார். ஏன்னு கேக்குறீங்களா?


***

எங்க போறீங்க?

யார் கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்டி போகப் போறீங்க?

உங்க ஆபீஸ்ல எல்லாரும் இப்டிதான் போய்கிட்டு இருக்காங்களா?

எதுக்கு நீங்க மட்டும் இதுக்கெல்லாம் போறீங்க?

ஏன் தான் இப்டி இருக்கீங்களோ, எல்லாம் என் தலை எழுத்து

நானும் கூட வர்றேன்.

எப்போ திரும்ப வருவீங்க?

டின்னர் சாப்பிட வந்துருவீங்க இல்ல?


***

கேட்டுகிட்டே இருகன்ல, பதில் சொல்லுங்க

நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்

நீங்க போற வழில என்ன அங்க விட்டுட்டு போங்க

திரும்ப வரவே மாட்டேன், ஆமா சொல்லிட்டேன்


***

என்ன? ஓக்கேன்னா என்ன அர்த்தம்?

போகாதேன்னு ஏன் சொல்ல மாட்டேன்றீங்க?


***

அது என்ன டிஸ்கவரியோ எனக்கு ஒண்ணும் புரியல

போன தடவையும் இதேதான் சொன்னீங்க

நானா இருந்தா ரெண்டே நாள்ல கண்டுபுடிச்சுருவேன்

சும்மா டையத்த வேஸ்ட் பண்ணாதீங்க

ஆபீஸ் உட்டா நேர வீட்டுக்கு வ்ர்ற வழிய பாருங்க

என்ன சொல்றது புரியுதா?

***

இதுக்கு மேலயும் வாத்யார் அமெரிக்கா வெல்லாம் போயிருப்பாருன்னா சொல்றீங்க?

கொலம்பஸ் தினம் இன்டரஸ்டிங்கானா மேட்டர் இங்கே!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வாத்யார், தமிழ்மணம் CLASSIC எங்கே?இதை படிச்சீங்களா?

அப்புறம், இதை?

எனக்குப் புடிச்ச
தமிழ்மணம் CLASSIC
எங்கே வாத்யார்?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

10 செகண்டில் சொல்ல வேண்டும்! இந்த படத்தில் என்ன தவறு?


க்ளூவா? அதெல்லாம் ஒண்ணும் கெடையாது வாத்யார்! டக்குன்னு சொல்லுங்க... இந்த படத்துல இன்னா தப்பு?!!!


இதான் சாக்குன்னு ரொம்ப நேரம் பாத்துகினே இருக்கக் கூடாது! தலைப்ப பாத்தீங்கல்ல பத்து செகண்டுதான் டைம்... ஆமாம் சொல்லிட்டேன்!!!!இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ZOOM..! சந்திராயன் எடுக்காத சில ரகசிய புகைப்படங்கள்!


400x ZOOMல் எடுத்த புகைப்படம்


*
*
*

40000x ZOOMல் எடுத்த புகைப்படம்


*
*
*
*
*
*
*4000000x ZOOMல் எடுத்த புகைப்படம்


வாத்யார் காமிரா எப்டி கீது?


நம்ம ஜவஹரு வாத்யார் பின்னூட்டத்துல கேட்ட மாதிரி காமிராவ இன்னும் கொஞ்சம் ZOOM பண்ணி பாத்தா, அட, இதோ கீது டீக்கடை... ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ரொ...ம்ப ரொமான்டிக்காக ஒரு கவிதை!

அன்பே
என்ன ஆச்சர்யம்
இன்பமான இரவு வரும் போதெல்லாம்
அந்த இனிய உணர்வும்
கூடவே வருகிறதே

வைகறையின் வசந்தத்தில்
வராத அந்த உணர்வு
மத்தியான மத்தாப்பில்
மலராத அந்த உணர்வு
அந்தி நேரத்து அழகில்
ஆர்ப்பரிக்காத அந்த உணர்வு

பொல்லாத இந்த இரவு வந்ததும்
எங்கிருந்து வருகிறது என்று கூடத்
தெரியாமல் ரகசியமாய்
வந்து விடுகிறதே

இதோ
இந்த இரவு வந்து விட்டது
நட்சத்திரங்கள் மின்னுகின்றன
நிலவும் எழுந்து விட்டது
அற்புதமான அந்த
உணர்வும்....ந்


தே

.

.

.


வி


ட்
து

.

.

.

தூக்கம்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு