யோசிக்காமல் பதில் சொல்ல ஒரு கேள்வி!

புதிர் இன்னாலே ரொம்ப யோசிக்க வேண்டி கீதேன்னு ரொம்ப யோசிக்கிறீங்களா? இந்த தபா யோசிக்கவே வாணம் வாத்யார். கண்ணால பாத்து அப்டியே கபால்னு பதில சொல்லிடுங்க!


கேள்வி: இந்த கேட்டுக்குப் பின்னால ஒண்ணு நின்னுகினு கீதே அது இன்னா? அது எந்த ஊர்ல இருந்து வந்து கீது?

விடை: வாத்யார், செடி கொடிக்குள்ளாற சின்னதா தேடதீங்க! இது ஒரு sterogram படம்! சரியா பாத்தீங்கன்னா பெரீ......சா யானை ஒண்ணு தெரியும்! எவ்ளோ பெரிசுன்னு கீழ பாருங்க!இன்னும் சரியா தெரியலியா? இங்க போய் பாருங்க வெவரமா புரியும்!!!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

34 comments:

ரவிசங்கர் said...

ஜக்கு, திரட்டியில் (Thiratti.com) உங்கள் பதிவு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியும் தமிழ்மணத்தில் காணோமே? என்ன காரணம்?

ரவிசங்கர்

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க ரவிசங்கர் வாத்யார்,

அது இன்னாமோ தமிழமணத்தின் பர்ஃபார்மன்ஸ் அப்டிதான் இருக்கு. ஆனால் தமிழ்மணம் க்ளாஸிக் ரொம்ப ஃபாஸ்டா கீது!

இத ஒரு தபா படிச்சு பாருங்க:

http://jambazarjaggu.blogspot.com/2009/07/blog-post_25.html

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ரவிசங்கர் said...

காடு மாதிரி இருக்கிறது. வலது பக்கம் சிங்கம் ஒண்ணு இருக்கிற மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு. இருங்க, இன்னும் கொஞ்சம் பாத்துட்டு வரேன். ஹி..ஹி..


ரவிசங்கர்

அமுதா கிருஷ்ணா said...

குதிரைகள் நிறைய இருக்கிற மாதிரி தெரியுது....

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க அமுதா டீச்சர்!

//குதிரைகள் நிறைய//

உங்களுக்கு மட்டும் இன்னொரு க்ளூ தர்றேன்: ஒரே ஒரு விலங்கு தான் கீது, ஆனா அது குதிரை இல்லை!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அப்பன் said...

ஆ!ஆ! ஓ! ஓ!

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க அப்பன்!

பாக்கியெல்லாம் உட்டுடீங்களே : உ, ஊ, எ, ஏ, ஐ...."

:-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கோடங்கி said...

ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா... மோத ரெண்டு கம்பிகெடையில ஒரு மனுசன் தெரியரான்னு ஜக்கம்மா சொல்றா..

ஜாம்பஜார் ஜக்கு said...

சரியா பாக்க சொல்லுங்க கோடங்கி வாத்யார். கேள்வியில விலங்குன்னு சொல்லிகிறேனே!

மன்ஸன மாட்டி வுட்டீங்களே வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கோடங்கி said...

நைனா... அது "நாய்" இல்லாங்காட்டி "நரி" சரி?

ஜாம்பஜார் ஜக்கு said...

நாய், நரி ... சரி இல்லை! மன்சுக்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கோடங்கி said...

வரிக்குதிரை ... ஆனா அதோட வரியைஎல்லாம் கேட் கம்பி மரச்சுகிச்சு..

ஜாம்பஜார் ஜக்கு said...

//வரிக்குதிரை//

மறுபடியும்... இல்ல வாத்யார். கொஞ்சம் மாத்தி யோசிங்க பளிச்சுனு புரியும் / தெரியும்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

☀நான் ஆதவன்☀ said...

யோவ் உத்து உத்து பார்த்து கண்ணு வலிக்குதுய்யா......மருவாதையா நீயே சொல்லிடு

ஜாம்பஜார் ஜக்கு said...

//யோவ் உத்து உத்து பார்த்து //

ஆதவன் வாத்யார், காத கொண்டாங்க ஒரு சீக்ரெட் மாட்டர் சொல்றேன். உத்து பாக்கக்கூடாது அதான் டெக்னிக். புரிதா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கடைநிலை ரசிகன் said...

சிறுத்தையா வாத்தியார்?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க இளையராஜா ரசிகன்,

சிறுத்தை, புலி ரெண்டுமே இல்லை தலீவா! வேற மாதிரி யோசிச்சு பாருங்க. ஜரூரா தெரியும்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எதிர் வீட்டு ஜன்னல் said...

சார் அது ஒட்டக சிவிங்கியா... ப்ளீஸ் ரொம்ப யோசிக்க வைக்காதீங்க...

ஜாம்பஜார் ஜக்கு said...

//அது ஒட்டக சிவிங்கியா//

அஹா! இன்னும் ரெண்டே ரெண்டு அனிமலு கெட்ச்சா ஒரு ஜூவே ஆரம்பிச்சுடலாம் போல கீதே!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எதிர் வீட்டு ஜன்னல் said...

அது உரான்குட்டானானு எங்கம்மா கேக்கறாங்க சரியாய் சார் ?

ஜாம்பஜார் ஜக்கு said...

//அது உரான்குட்டானானு//

பெரிய மன்ஸு பண்ணி உங்க அம்மாவை மன்ச்சுக்க சொல்லுங்கம்மா :-)) அது உரான்குட்டானோ இல்லாங்காட்டி வேறெதுனாச்சும் குரங்கோ இலலவே இல்லை!

அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிகறேன். இது ரொம்ப ஈஸியான புதிரு. இன்னோரு க்ளூ சொல்டமா? படத்துல ஒரு கோளாரும் இல்ல. நம்ம பார்வைல தான் கீது! இது புரிஞ்சா கரீட்டா தெரியும், இன்னா நான் சொல்றது?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கடைநிலை ரசிகன் said...

இவ்ளோ பெரிய கேட் பின்னாடி யானை தான் இருக்க முடியும் ! கரீட்டா வாத்யார்?

எதிர் வீட்டு ஜன்னல் said...

ஒரு சைடா யானை மாதிரி தெரியுது சரியா அண்ணாத்தே ?

nila said...

அண்ணாத்த ஏன் இந்த கொலை வெறி????
குத்து மதிப்ப ஒரு அனிமல் சொல்றேன்...
கங்காரூ................ சரியா????????????

கடைநிலை ரசிகன் said...

யோசிச்சு யோசிச்சு தாவு தீர்ந்திடுச்சி வாத்யார் - பதில சீக்கிரம் சொல்லிடுமே...

FloraiPuyal said...

ஐ யானை! தும்பிக்கைய ஏன் வெளில நீடடிக்கிட்டு நிக்குது?

Anonymous said...

எச்சூஸ்மி! இங்க என்ன நடக்குது?

Anonymous said...

//ஐ யானை! தும்பிக்கைய ஏன் வெளில நீடடிக்கிட்டு நிக்குது?//

யோவ்! இது உனக்கே ரொம்ப ஓவரா தெரியலை? அவனவனுக்கு யானையே தெரிய மாட்டேங்க்குது. உனக்கு தும்பிக்கை எல்லாம் தெரியுதா?

எனக்கு கேட் மட்டும் நல்லா பளிச்சுன்னு தெரியுது.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

:-((((

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

உத்து உத்து பார்த்து கண்ணு வலிக்குது.
பதில சீக்கிரம் சொல்லிடுமே...

Anonymous said...

என் பின்னூட்டம் எங்கே? யானை சாப்பிடிருச்சா?

nila said...

விடை சொல்லவே இல்லியே!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஜாம்பஜார் ஜக்கு said...

//உத்து உத்து பார்த்து கண்ணு வலிக்குது.
பதில சீக்கிரம் சொல்லிடுமே...//

மேல பாருங்க வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

nila said...

எப்படி பார்த்தாலும் நீங்க போட்டிருக்க மாதிரி யானை அங்க எனக்கு தெரியலை :( :(

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க நிலா!

இன்னும் தெரியலியா? அப்போ இங்க போய் பாருங்க. வெவரமா சொல்லிகிறேன்:

http://jambazarjaggu.blogspot.com/2009/08/blog-post_02.html

ஓக்கேவா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு