அட, திருக்குறளில் ஒரு புதிர்! (Dont miss!)

வாத்யார், இந்த உலகத்துல பொறந்த... அது இன்னாது...ஆங்... தலைசிறந்த அறிவாளிகள் ரொம்ப ரொம்ப கொஞ்சம் பேர்ல நம்ம திருவள்ளுவரு ரொம்ப டாப்ல கீறாரு அப்டீங்கறதுல நானு ரொம்ப தெளிவா கீறேன்! இன்னா பண்றது? அவுரு பாட்டுக்கு கபால்னு மைலப்பூர்ல பொறந்து தமிழ்ல எளுதிட்டு பூட்டாரா அத்தொட்டு ரொம்ப பேருக்கு.... சரி இன்னாத்துக்கு வுடுங்க. அத்த பத்தி இன்னோரு நாளைக்கு வச்சுக்கலாம்.

இன்னிக்கு மேட்டருக்கு வருவோம். வள்ளுவரு ரொம்ப பெரிய மேட்டரு ஒண்ண வளக்கம் போல சும்மா பளீர்னு ரெண்டு வரீல இப்டி சொல்லிட்டாரு:

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.


இதுக்கு இன்னா அர்த்தம்னா வாத்யார், நீங்க இன்னா இன்னா மேட்டர்ல இருந்து கொஞ்சம் தள்ளி நின்னுகிறீங்களோ... அட்டாச்மென்ட வுட்டுறீங்களோ... அந்த அந்த மேட்டரால உங்களுக்கு கஷ்டம் வர்றாது! அவ்ளோதான் மேட்டரு! இன்னா? கேக்குறதுக்கு ரொம்ப ஸிம்பிளா கீதா? கொஞ்சம் சைலன்டா உக்காந்து யோசிச்சு பாருங்க இன்னான்னவோ புரியும்!

புதிர்:

இப்போ புதிர் இன்னான்னா, மத்த 1329 திருக்குறள்லயும் இல்லாத ஒரு மேட்டர் இந்த குறள்ல கீது. அது இன்னா?

க்ளூ:

வள்ளுவரு சொன்ன மேட்டருக்கும் இந்த புதிருக்கும் ரொம்ப சம்பந்தம் கீது!


அவ்ளோதான், வர்ட்டா? யோசிச்சு சொல்லுங்க.


விடை: ஒவ்வொரு மேட்டர்லயும் நம்ம போய் ஒட்றதை உட்டுடணும்னு சொல்ல வந்த வள்ளுவரு அந்த குறள் முழுசும் உதடு ரெண்டும் ஒட்டாமயே பாட்டு எளுதிகிறாரு தலீவா! இப்பொ அந்த குறளை ஒரு தபா சொல்லி பாருங்க புரியும். (ஆச்சா, இப்போ பதிவோட மொதல் வரிய மறுபடியும் ஒரு தபா படீங்க... வர்ட்டா?)

கரீட்டா சொன்னவர்கள்

மணிகண்டன் நீலன் ( இவுருதான் First!)
அருப்புக்கோட்டை பாஸ்கர்
ஜவஹர்
அனானி (1 & 2)

ஜோரா ஒரு தபா கை தட்டிடுங்க வாத்யார்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

15 comments:

ரவிசங்கர் said...

//நம்ம திருவள்ளுவரு ரொம்ப டாப்ல கீறாரு//

ரொம்ப சரி!

புதிருக்கு விடை என்னன்னு யோசித்துவிட்டு வருகிறேன்!

:-))))))

Manikandan Neelan said...

When your telling this "kural" your lips are not going to touch each other. that is the secret of this "kural"

Source : Suki. Sivam speech.

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க மாணிக் நீலன் வாத்யார்,

இதுக்கு எதுக்கு "ஸோர்ஸ்" எல்லாம்? நீங்களே "சொல்ல" லாமே?!

அது இருக்கட்டும் 2008க்கு அப்பால எதுவும் எளுதலையா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

இரண்டு வார்த்தைகள் இரண்டு முறை ரிப்பீட் ஆகிறதே அதுவா?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இக்குறளை சொல்லும்போது உதடுகள் ஒட்டாது . !!!

Jawahar said...

ஒட்டுதல் இருக்கக் கூடாது என்கிற திருக்குறளை உதடு இரண்டும் ஒட்டாமலே படிக்கிற மாதிரி எழுதி இருப்பதுதான் சிறப்பு!

http://kgjawarlal.wordpress.com

ப்ரியா said...

எப்ப பாரு என் தலையில இருக்கற களிமண்ண கெளரறதே உங்களுக்கு வேலையா போய்டுச்சு..... சரி பரவால்ல வுடுங்க ....நானே கெளறி பார்த்ததுல எனக்கு தெரிஞ்ச ஆன்சறு என்னன்னா ஆரோ அனானிமஸ் சொன்னாங்களே அதேதான்.. ரெண்டு வேடு ரெண்டு தபா வருதே அதேதான் கரிக்கீட்டா.......

ஜாம்பஜார் ஜக்கு said...

//ரெண்டு வேடு ரெண்டு தபா வருதே அதேதான் கரிக்கீட்டா.//

ரெண்டு தபாவா? ஒரே வர்த்தைய நாலு தபால்லாம் வள்ளுவரு போட்டு தாக்கி கீறாரு :-))) (எந்த குறள்???)

ஆனா, அத்த வுட இதுல குறளோட அர்த்தத்துக்கு ஏத்த மாதிரி வார்த்தையோட வெளையாடி கீறாரே அதான் அசத்தல்.

இன்னும் ஒரு மணி நேரத்துல விடைய சொல்றேன்...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

அதாவது, உதடு டச் ஆகலை வாத்யார்...சரியா?!

nila said...

விடை எங்கே??

Anonymous said...

no lip touching

Anonymous said...

when you read this kural, our lips don't touch.உதடுகள் ஒட்டாது.
thyagarajan

ஜாம்பஜார் ஜக்கு said...

//விடை எங்கே??//

மேலே, பதிவுல!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

இத்தினி பேருக்கு தெரிஞ்சு இருக்கே!

Radhakrishnan said...

மிகவும் அருமை. நானும் யோசித்துப் பார்த்தேன், விடை தெரியவில்லை. திருக்குறளில் தேடினேன். விடை இங்கு கிடைத்தது.