வங்கி ஊழியர்களுக்கு ஒரு கேள்வி!

செய்தி-1:


வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

வங்கிப் பணியில் கடைநிலை ஊழியர்களாக சேர்பவர்கள், ஆரம்ப நிலையில் அனைத்துப் படிகளையும் சேர்த்து 7,000 ரூபாயில் இருந்து 8,500 ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர். எழுத்தர் பணியில் இருப்பவர்கள் 8,300 ரூபாயில் இருந்து 9,000 ரூபாய் வரை வாங்குகின்றனர். பணிபுரியும் இடத்தைப் பொறுத்து, இதரப் படிகள் மாறுபடுகின்றன. இவர்களில், 25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்திருப்பவர்கள், 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். அதிகாரிகளின் அடிப்படை சம்பளம், அனைத்துப் படிகளையும் சேர்த்து 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இவர் கள் பதவி உயர்வின் அடிப்படையில் பொது மேலாளர், இயக்குனர் பதவிகளில் அமர முடியும். அப்போது இவர்களது அடிப்படை சம்பளம் 32,600 ரூபாயாக உயர்கிறது. இதரப் படிகளாக 17 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கிறது. உ முதன்மை இயக்குனர், சேர்மன் போன்றோரின் மாத சம்பளம் 75 ஆயிரத்தைத் தொட்டுவிடுகிறது.

செய்தி-2:

என்ன போராட்டம் நடத்துவது எனத் தெரியாமல், மாத வருமானம் 351 ரூபாய் கொண்ட 1.5 கோடி பேர் தமிழகத்தில் தவிக்கின்றனர்.


நீங்க இன்னா சொல்றீங்க?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

13 comments:

nila said...

i was just wondering why jakku hasn't posted any questions these days... n here it is....

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜக்கு! இதெல்லாம் ஒரு கேள்வியா என்ன? கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க!

வங்கிகள் வியாபார நிறுவனங்கள், ஊழியர்கள் வேலை செய்தால் தான் வியாபாரமே நடக்கும், அப்படி இருக்கும் போது, நல்ல சம்பளத்தை எதிர்பார்ப்பது, போராடுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த சட்ட மன்றம், பாராளுமன்றம், அப்புறம் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் இவங்க எல்லாம் என்ன வேலை செய்யறாங்கன்னு, சம்பளம், கிம்பளம், சலுகைன்னு தெரிஞ்சும் தெரியாமலும் கல்லாக் கட்டறாங்களே, அதைஎப்பக் கேப்பீங்க?

மத்த நாடுகள்ள எல்லாம், சட்டத்தைக் கொஞ்சம் வளைத்து, மீறிச் செய்வதற்குத் தான் அன்பளிப்பு, ஆனாக்க நம்ம ஊர்ல எந்த அரசு அலுவலகத்துக்குப் போனாலும், வாங்கற சம்பளத்துக்குக் கூட வேலை செய்யாம, சட்டப்படி செய்ய வேண்டிய வேலைக்கே கிம்பளம் கேக்குறாங்களே, அதை எப்பக் கேப்பீங்க?

அட அதெல்லாம் உடுங்க ஜக்கு! தாலி கட்டின பொண்டாட்டிதான்! அப்பப்பப் பட்டுப் புடவை, தங்கச் சங்கிலி, மல்லிகைப் பூ சகிதமாக் கொண்டுபோனாத் தான், மரியாதையே கெடைக்குது. அதெயெல்லாம் எப்பக் கேப்பீங்க?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க கிருஷணமூர்த்தி வாத்யார்,

ரொம்ப நாள் பாங்க்ல இருந்து கீறீங்க. நீங்க சொன்னா கரீட்டாத்தான் இருக்கும். அதுவும்,

//வங்கிகள் வியாபார நிறுவனங்கள், ஊழியர்கள் வேலை செய்தால் தான் வியாபாரமே நடக்கும், அப்படி இருக்கும் போது, நல்ல சம்பளத்தை எதிர்பார்ப்பது, போராடுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.//

இது சொன்னீங்களே அது ரொம்ப ரொம்ப கரீட்ட்டு. ஆனா வாத்யார், நீங்க சொன்னீங்களே "மத்த நாடுகள்" அங்கிட்டெல்லாம் வேலை செய்யாமல் டபாய்ச்சுகினு இருந்தாலோ, இல்ல நீங்க சொல்ற வியாபாரம் சரியா நடக்காம பூட்சுனாலோ கபால்னு டவுன்-ஸைசுன்னு ஏதோ பண்ணிடுவாங்களாமே வாத்யார் அது நம்ப ஊர்லயும் வந்துட்ச்சான்னு அண்ணாத்த கேக்குறாரு.

இன்னா சொல்லட்டும் தலீவா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

///25 ஆண்டுகள் சர்வீஸ் முடித்திருப்பவர்கள், 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். ///

நான் மூனரை வருஷத்தில் 22 ஆயிரம் வாங்கியதை நெனச்சா இவங்களைப் பார்க்க பாவமாத்தான் இருக்கு வாத்யார் :-))

ஜாம்பஜார் ஜக்கு said...

//நான் மூனரை வருஷத்தில் 22 ஆயிரம் வாங்கியதை நெனச்சா இவங்களைப் பார்க்க பாவமாத்தான் இருக்கு //

ரொம்ப கரீட்டு அனானி வாத்யார். ஆனா

//மாத வருமானம் 351 ரூபாய் கொண்ட 1.5 கோடி பேர் தமிழகத்தில் தவிக்கின்றனர்//

இதுக்கு இன்னா சொல்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க தலீவா...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

என்னத்த சொல்றது... :-x

கிருஷ்ண மூர்த்தி S said...

/கபால்னு டவுன்-ஸைசுன்னு ஏதோ பண்ணிடுவாங்களாமே வாத்யார் அது நம்ப ஊர்லயும் வந்துட்ச்சான்னு அண்ணாத்த கேக்குறாரு./

கிட்டத்தட்ட இங்கேயும் அது மாதிரி நிலைமை வந்துகொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை!

கிருஷ்ண மூர்த்தி S said...

அப்படியே அண்ணாத்தே கிட்ட நான் கேட்ட கேள்விகளையும் எப்பக் கேக்கப் போறாருன்னும் கேட்டுச் சொல்லுங்க ஜக்கு!

அரசு இயந்திரத்தில் இருக்கும் வெட்டி களை எடுப்பு எப்போ வருமாம்?

அரசியல்வியாதிகளுக்கு எப்போ மருந்து வருமாம்?

ஜாம்பஜார் ஜக்கு said...

//நான் கேட்ட கேள்விகளையும் எப்பக் கேக்கப் போறாருன்னும் கேட்டுச் சொல்லுங்க ஜக்கு!//

மறக்கலை கிருஷணமூர்த்தி வாத்யார், வாணாம்னு வுட்டுட்டேன். எப்போமே, "அவன நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்" லாஜிக் வேலைக்கு ஆவாது. உதாரணமா, இப்போ உங்க வூட்ல திருட்டு பூட்சுன்னு (ஒரு பேச்சுக்கு) வச்சுக்கங்க, ஒடனே திருடன புடிக்க சொல்வீங்களா இல்ல பக்கத்து ஊர்ல திருடினானே அவன புடிக்க சொல்லுங்க, பக்கத்து வூட்ல திருடினானே அவன புடிக்க சொல்லுங்க அப்டீன்னு சொல்லுவீங்களா?

அண்ணாத்த இன்னா சொல்றாருன்னா வூட்டுக்கு ஒரு நாயம், நாட்டுக்கு ஒரு நாயம்னு வச்சுகினா டபுள் கேம் ஆகி பூடும்னறாரு.

அந்த தப்பு தப்புன்றதால இந்த தப்பு தப்பில்லன்னு ஆகிடாதுன்றாரு.

கரீட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கிருஷ்ண மூர்த்தி S said...

கரீட்டு இல்ல, ஜக்கு!

இந்த இரண்டு ஓட்டைகளை அடைத்தாலே,'மாத வருமானம் 351 ரூபாய் கொண்ட 1.5 கோடி பேர் தமிழகத்தில் தவிக்கின்றனர்.' என்று நீங்கள் சொல்வதற்குத் தீர்வு கிடைத்து விடும்.

அதை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாமல், வங்கி ஊழியர்களுடைய வேலை நிறுத்தத்தை மட்டும் தொட்டுப் பேசுவது கரீட்டு இல்லை நைனா!

மொட்டைத் தலையானதுக்கு, மொட்டையடிச்சவன்கிட்ட தான் பரிகாரம் தேடணும்! முழங்காலைத் தடவுவதால் இல்லை!

அண்ணாத்த கிட்ட சொல்லிக் கொஞ்சம் பொறுப்பாப் பேசச் சொல்லுங்க! வர்ர்ட்டா!

கிருஷ்ண மூர்த்தி S said...

/அந்த தப்பு தப்புன்றதால இந்த தப்பு தப்பில்லன்னு ஆகிடாதுன்றாரு.

கரீட்டா?/
கரீட்டு இல்லன்னு சொன்னத பப்ளிஷ் பண்ணாம வச்சாச் சரியாப்பூடுமாமா?

ஊழலை ஒழிச்சு, லஞ்சத்தையும் ஒழிச்சாலே,"என்ன போராட்டம் நடத்துவது எனத் தெரியாமல், மாத வருமானம் 351 ரூபாய் கொண்ட 1.5 கோடி பேர் தமிழகத்தில் தவிக்கின்றனர்" அப்படீன்னு கவலைப்படாமே, கரை சேத்துரலாம்!

அவங்களே இலவச டீவீ, அஞ்சு வருசத்தொரு தபா தேர்தல் கீர்தல் வந்தாக்க கிடைக்கிற பிரியாணி, ஐந்நூறு ரூவா நோட்டிலே சந்தோசமா இருக்காங்க அப்படீன்னு அரசாங்க விளம்பரம் சொல்றதை வாத்தியார் பாக்கலையோ?

அதுக்கும், கூலிக்காரன் கூலி கொஞ்சம் கூட வேணுமின்னு கேக்குறதே தப்புன்னு, வாத்தியாருக்கு எந்த வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்தாரு, ஜக்கு!

கிருஷ்ண மூர்த்தி S said...

/அந்த தப்பு தப்புன்றதால இந்த தப்பு தப்பில்லன்னு ஆகிடாதுன்றாரு.

கரீட்டா?/
கரீட்டு இல்லன்னு சொன்னத பப்ளிஷ் பண்ணாம வச்சாச் சரியாப்பூடுமாமா?

ஊழலை ஒழிச்சு, லஞ்சத்தையும் ஒழிச்சாலே,"என்ன போராட்டம் நடத்துவது எனத் தெரியாமல், மாத வருமானம் 351 ரூபாய் கொண்ட 1.5 கோடி பேர் தமிழகத்தில் தவிக்கின்றனர்" அப்படீன்னு கவலைப்படாமே, கரை சேத்துரலாம்!

அவங்களே இலவச டீவீ, அஞ்சு வருசத்தொரு தபா தேர்தல் கீர்தல் வந்தாக்க கிடைக்கிற பிரியாணி, ஐந்நூறு ரூவா நோட்டிலே சந்தோசமா இருக்காங்க அப்படீன்னு அரசாங்க விளம்பரம் சொல்றதை வாத்தியார் பாக்கலையோ?

அதுக்கும், கூலிக்காரன் கூலி கொஞ்சம் கூட வேணுமின்னு கேக்குறதே தப்புன்னு, வாத்தியாருக்கு எந்த வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்தாரு, ஜக்கு!

ஜாம்பஜார் ஜக்கு said...

ஆஹா, வாத்யார்... பின்னூட்டத்துக்கு மேல பின்னூட்டம் போட்டு தாக்குறீங்களே. இன்னாடா இவ்ளோ டென்ஷன் ஆவுறீங்களேன்னு பார்த்தேன்:

//முன்னாள் வங்கி ஊழியன், தொழிற்சங்கம், இடதுசாரிச் சிந்தனை என்று வாழ்வின் கணிசமான பகுதியை வீணடித்து விட்டு, இப்போது ஆன்மீகம் ஒன்றே மனிதனுக்கு வழி காட்டும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன்.//

அதான் மேட்டரா? புரிஞ்சுட்சு வாத்யார், நீங்க சொன்னா க்ரீட்டாத்தான் இருக்கும்! டென்ஷனே வாணாம்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு