தமிழ் பதிவர்களுக்கு ஜக்குவின் அறிவுரை (இன்னா...து???)

தலைப்பைப் பாத்து டென்ஷன் ஆவாதிங்க தலீவா. நானே முந்தா நேத்து வந்தவன். அறிவாது, உரையாது? ஒரு வேண்டுகோள்னு வச்சுக்க வாத்யார். நானும் ஒரு 3 வர்ஷமா இங்கிலீஷு (சொன்னா நம்பணும்) டமிளு ரெண்டு ப்ளாகும் மேஞ்சுகினு வர்றேன். சில‌ நேரத்துல நம்ம பதிவுலக‌ பால்டீக்ஸெல்லாம் பட்சு மன்ஸு நொந்து நூடுல்ஸா பூடுது தலீவா. அப்போன்னு பாத்து ந‌ம்ம‌ தாடிக்கார‌ரோட‌ கீதாஞ்ச‌லிய‌ப் ப‌டிச்சுகினு இருந்தேனா, பேனாவ‌ எட்து ச‌ர‌ ச‌ர‌ன்னு அத்த‌ த‌மிழ்ல (அதாம்பா டமிள்ல) எளுதிட்டேன். க‌ட்சீ வரில‌‌ ம‌ட்டும் ஒரே ஒரு வார்த்தைய கொஞ்சம் மாத்திக்கிறேன்.

ஜக்குவின் கீதாஞ்சலி!

எங்க மன்சு தில்லாக் கீதோ
எங்க நமம தலை டாப்ல நேரா நிக்குதோ
எங்க‌ அறிவு அல்லார்க்கும் ப்ரீயா கெடைக்குதோ
எங்க‌ ந‌ம்ம‌ ஊரு சின்ன‌ சின்ன‌ மேட்ட‌ரால‌
பீஸ் பீஸா போவாம கீதோ
எங்க‌ மெய்யாலுமே வார்த்தை ம‌ன்ஸுக்கு
அடீலேர்ந்து வ‌ர்தோ
எங்க நம்ம பகுத்த‌றிவு, மூட‌ ப‌ள‌க்க‌ வ‌ள‌க்க‌ம்ன்ற‌
புதைகுழில தொலஞ்சு போவாம‌‌ கீதோ
எங்க‌ ம‌னஸ‌ ப‌டா ஒஸ்தியான நென‌ப்புலயும்
வேலைலயும் நீ வுடாம இஸ்துகினு போறியோ
அப்பேர்க் கொத்த‌ சொர்க‌த்த்துல‌ த‌லீவா, நைனா,
என் தமிழ் பதிவுலகம் கண் தொறந்து விழிக்க‌ட்டும்......பெரிய‌ ம‌ன்ச‌ங்க‌ள்ளாம் என்னா நென‌க்கிறீங்க‌ன்னு ஒரு வார்த்த‌ சொல்லுங்க வாத்யார். தமிழ் பதிவுலகம் ரொம்ப‌ தூர‌ம் போவோணும்.

என்ன‌ க‌ரீட்டா?

இப்ப‌டிக்கு,
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

15 comments:

ரசிப்பவன் said...

அற்புதமான கவிதை ஜக்கு. ஒரிஜினலின் சுட்டி தர இயலுமா?

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஒரிஜினலின் சுட்டி தர இயலுமா?//

வாங்க வாத்யார், இதான் ஒரிஜினல்:

Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments by narrow
domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the
dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening thought
and action--
Into that heaven of freedom, my Father, let my country awake.

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

விக்னேஷ் said...

க‌ரீட்டு தலீவா...

Anonymous said...

Dear Jaggu,

Truly this is an excellent translation of the original. Many times I had felt the same way you have expressed. English Bloggers have already gone to the "next level". But Tamil Blog World seems to have go stuck at a particular point.

I appreciate your concern. I am sure this will be backed by all the people who want Tamil Blog World to grow to the levels that it deserves.

Yours,
Anony

Anonymous said...

//அப்பேர்க் கொத்த‌ சொர்க‌த்த்துல‌ த‌லீவா, நைனா,
என் தமிழ் பதிவுலகம் கண் தொறந்து விழிக்க‌ட்டும்......//

Kalakkal வாத்யார்..!

Tagore said...

//எங்க நம்ம பகுத்த‌றிவு, மூட‌ ப‌ள‌க்க‌ வ‌ள‌க்க‌ம்ன்ற‌
புதைகுழில தொலஞ்சு போவாம‌‌ கீதோ//

:-)) Good Translation!

துளசி கோபால் said...

//let my country awake//

இன்னும் நாடே முழிக்கலை போல இருக்கு. அப்புறம் எங்கே தமிழ்ப்பதிவுலகம்?

'முழி' பெயர்ப்பு அற்புதம்.

ஆமாம் ,//English Bloggers have already gone to the "next level". //

இது என்னன்னு கொஞ்சம் வெளக்குபா ஜக்கு.............

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க துளசி மேடம்!

//'முழி' பெயர்ப்பு அற்புதம்.//

என் முழியே அப்டிதாங்கோ!

//English Bloggers have already gone to the "next leveல்"// இது என்னன்னு கொஞ்சம் வெளக்குபா ஜக்கு...//

இத்தப் பத்தி தனீயா ஒரு பதிவு எளுதனும்!!

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//க‌ரீட்டு தலீவா...//

வாங்க விக்னேஷ். பொன்னியின் செல்வன் அட்டகாசமா ஆரம்பிச்சு கீறீங்க. அந்த காலத்துல பட்சது. உங்க புண்ணியத்துல இன்னெரு தபா பட்சிகிறேன்!

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

விக்னேஸ்வரன் said...

அட நான் தானு கண்டுபிடிச்சிட்டியா தலீவா... உன் முன்னாடி நாங்களாம் தூசு தல.. ஏதொ பொழைச்சு போரோம் விடு கழுதைய...

ஜாம்பஜார் ஜக்கு said...

விக்னேசு வாங்க!

//உன் முன்னாடி நாங்களாம் தூசு தல.. ஏதொ பொழைச்சு போரோம் விடு கழுதைய...//

கழுதைய நான் எப்பவோ வுட்டுட்டேனே, இன்னமா வூட்டுக்கு வரல? :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எம்.ரிஷான் ஷெரீப் said...

இன்னாத்த சொல்வேனுங்கோ..?
அதான் அக்கு வேற,ஆணி வேற கணக்கா நம்ம ஜக்கு அண்ணாத்த சொல்லீட்டாரே...
நல்லாக்கீது தல.. :)

Anonymous said...

/கழுதைய நான் எப்பவோ வுட்டுட்டேனே, இன்னமா வூட்டுக்கு வரல?///

Tamaasu :-)))

திவா said...

சர்தாம்பா. கரீட்டாத்தான் சொல்றேங்கோ! வெறுத்து போய் கெடக்கறேன் நானு!

நாமக்கல் சிபி said...

சூப்பர் தலைவா!