எடக்கு மடக்கு ... ஜக்குவின் முதல் சிறுகதை (இன்னாது?!!!)


வாங்க உக்காருங்க. உங்க பேரு?

தாங்க்யூ சார். கந்தசாமி சார்.

எந்த வேலைக்கு இன்டெர்வியூக்கு வந்து இருக்கீங்கன்னு தெரியுமா?

தெரியும் சார். ரயில்வே சிக்னல் மேன் வேலைக்கு சார்.

வெரி குட். உங்க மொதல் கேள்வி. நீங்க டியூட்டில இருக்கும் போது திடீர்னு ஒரே ட்ராக்ல எதிரும் புதிருமா ரெண்டு ட்ரெயின் வந்து கொண்டிருப்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

ஒடனே லீவரை யூஸ் பண்ணி ஒரு ட்ரெயினை அடுத்த ட்ராக்குக்கு மாத்திருவேன் சார்.

லீவர் உடைந்து போயிருந்தால் என்ன செய்வீர்கள்?

உடனே சிக்னலை சிவப்பாக மாத்தி ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.

சிக்னலும் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

உட்னே பக்கத்து ஸ்டேஷனுக்கு போன் பண்ணி ட்ரெயினை நிறுத்த சொல்வேன் சார்.

உங்க ஸ்டேஷனில் போன் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

ஓடிப் போய் பக்கத்துல இருக்குற பப்ளிக் போன் பூத்லேர்ந்து போன் பண்ணுவேன் சார்.

பப்ளிக் பூத்திலும் போன் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

சிவப்பு லைட்டை காண்பித்து தூரத்துலயே ஒரு ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.

சிவப்பு லைட்டும் உடைந்து போயிருந்தால் என்ன செய்வீர்கள்?

சிவப்பு கொடியை தூக்கிக் கொண்டு ட்ராக்கிலேயே வேகமாய் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்ளோ தூரம் ஓடிப் போய் எப்படியாவது ஒரு ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.

சிவப்பு கொடியும் காணாமல் போயிருந்தால் என்ன செய்வீர்கள்?

உடனே வூட்டுக்கு ஓடிப் போய் அண்ணாத்தய இட்டாந்துருவேன் வாத்யார்!

வா...ட்? எதற்காக உங்கள் அண்ணாத்தையை ... ஐ மீன் ... அண்ணனை அழைத்துக் கொண்டு வருவீர்கள்?

எங்க அண்ணாத்த இதுவரைக்கும் ஒரு தபா கூட ட்ரெயின் ஆக்ஸிடென்டே பார்த்ததில்லையாம் வாத்யார்!!!



இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

11 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தக் கதையப் படிச்ச மக்கள் இப்படி பண்றாங்களாம்

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க சுரேஷு வாத்யார்!

//இந்தக் கதையப் படிச்ச மக்கள் இப்படி பண்றாங்களாம்//

அட, ஆமாம்! எப்டி கண்டுபுடிச்சீங்க? இத்தோட ஒண்ணே முக்கால் பேர் ஆச்சு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கலா said...

சூப்பர் ஜக்கு சார்.

சார் சார் என்று சொல்லிக் கொண்டு வந்தவன் கடைசியில் வாத்யார் என்று ஜக்கு ஸ்டைலுக்கு மாறியதை ரசித்தேன்! :-))))))

அடிக்கடி கதை எழுதுங்களேன்!

யாசவி said...

it happened to me in one interview too

:-)

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க கலா,

//கடைசியில் வாத்யார் என்று ஜக்கு ஸ்டைலுக்கு மாறியதை ரசித்தேன்//

ரொம்ப நுணுக்கமா படிப்பீங்க போல கீது (ஜாக்ரதையா எளுதணும் வாத்யார்).

:-)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க யாசவி,

//it happened to me in one interview too//

இன்னாது? நீங்களும் ரயில்வே இன்டெர்வியூக்கு போனீங்களா? ஹி..ஹி.. கொஞ்சம் கன்ப்யூஸ் ஆகிட்டேன்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வழிப்போக்கன் said...

பினிஷிங் பிடித்தது..

ஆனால் இது விவேக் காமெடி தானே???
:)))

Unknown said...

இன்னா ஜக்கு நைனா...
இத்துனூண்டு தமாசு பண்ணீட்டு , பஸ்ட் சுடோரினு, அதாங்காட்டியும் மொத தபா கத எய்திருகேன்னு பெரூமியா பீத்திக்கிரே.. ஐய்யே...சரி சரி .. பீல் பண்ணாதே ரொம்ப.. அடுத்தவாட்டி ஒரு கத உருப்படியா எய்தப் பாரு..

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஆனால் இது விவேக் காமெடி தானே???//

அப்டியா சொல்றீங்க வழிப்போக்கன்?! ஒருவேள ரெண்டு பேரும் ஒரே எடத்துலேர்ந்து சுட்டுட்டமோ?! :-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//மொத தபா கத எய்திருகேன்னு //

வாங்க சுந்தரவடிவேலு வாத்யார். அத்தொடுதான் "இன்னாது?"ன்னு தலைப்புலேயே போட்டுகிறோமே? ஹி.ஹி..

//அடுத்தவாட்டி ஒரு கத உருப்படியா எய்தப் பாரு.//

ரொம்ப நம்பிக்கை வாத்யார். ரெண்டாவது "கதை"யும் போட்டாச்சு. இன்னா சொல்வீங்களோ?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Tamilish Team said...

Tamilish Support to me

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'எடக்கு மடக்கு ... ஜக்குவின் முதல் சிறுகதை (இன்னாது?!!!)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th September 2009 02:55:01 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/110397

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு