நேற்று ஒரு தகவல்...

"அறிவியல், பொது அறிவு தகவல்கள் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதுமா? ஆன்மிக தகவல்களும் கொடுக்க வேண்டும்" என்று நிலைய இயக்குநர் உத்தரவு போட்டுவிட்டார். எனக்கோ ஆன்மிகம் பற்றி அவ்வளவாக தெரியாது. அதனால் தமிழகத்தில் பிரபலமான ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையை வாங்கி, அதிலுள்ள தகவல்களை எனது ஸ்டைலில் கொஞ்சம் பாலிஷ் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அந்த நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கவில்லை. ஆன்மிக தகவல்கள் கொடுத்ததால் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு.

ஒரு நாள் அந்த பத்திரிகையை நடத்திவரும் ராமகிருஷ்ண மடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை சுவாமி கமலாத்மானந்தா (பத்திரிகையின் ஆசிரியர்) சந்திக்க வேண்டும் என்று அவரது உதவியாளர் கடுமையான குரலில் பேசினார். எனக்கு கை, கால்கள் உதறியது. அனுமதி கேட்காமல் தகவல்களை தொடர்ந்து எடுத்ததால், என் மீது வழக்கு தொடரப் போகிறார்கள் என்று என் அதிகாரிகள் பயமுறுத்தினர். நேராக சென்று கவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினர்.

பயத்துடன் மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றேன். சுவாமிகள், என்னைப் பார்த்தார். "நா..நான் ரேடியோல இருந்து வர்றேன். இன்று ஒரு தகவல்ல நான் சொல்ற ஆன்மிகத் தகவல் எல்லாம்..." என்று முடிப்பதற்குள் "தெரியும்..அது விஷயமாத்தான் உன்னை வரச் சொன்னேன்" என்றார்.

"எதுவும் சொல்ல வேண்டாம், முதல்ல நான் சொல்றத மட்டும் கேளு. நீ சொல்ற ஆன்மிக தகவல் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு. எங்கேருந்து உனக்கு மட்டும் இவ்ளோ நல்ல தகவல்கள் கிடைக்குது? இனிமேல் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகைல நீ தொடர்ந்து எழுதணும்!

இதற்கு நான் கொடுத்த அசடு வழிந்த ரியாக்ஷனை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது!இன்னிக்கு வரல வாத்யார்...


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

7 comments:

அங்கிள் சென்...... said...

கடைசியாகவும் மீண்டும் நாளை சந்திப்போம்னு சொன்னார் ஜக்கு!!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

குஷி மும்தாஜ் :-ஐயோ பாவம்.

SUBBU said...

:((((((((

நிகழ்காலத்தில்... said...

:-((

Tamilish Team said...

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'நேற்று ஒரு தகவல்...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th September 2009 08:33:02 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/113874

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இ மெயிலில் வந்தது

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Rajkumar said...

'நேற்று ஒரு தகவல்....very touching article....

Toto said...

Nice post.. What happened to you posts? they are not updated recently.

-Toto.