அவனும் அவளும்... தனியாக ரயில் கூப்பேவில் (18+ சிறுகதை)!!!


ஹலோ!

ஹலோ!!

இந்த கூப்பேல வேற யாரும் இல்ல போலிருக்கு...

ஐ திங்க் ஸோ... அது வந்து... தட்கால்ல கடசீல போட்டதுனால... வந்து... இப்படி அலாட் பண்ணிட்டாங்க போல இருக்கு... உங்களுக்கு ஒண்ணும்...

ரொம்ப குளுருது ஜன்னல சாத்திரலாமா?

அது வந்து... சரிங்க...

டிடிஆரும் வந்துட்டு போய்ட்டாரு. மணி பத்தாயிடுச்சு. அடுத்த ஸ்டேஷன் காலைலதான் வரும்.

அதுனால...?

ராத்திரில திருட்டு பயம் ஜாஸ்தி. கூப்பே கதவை சாத்திரலாமா?

அது...அது... வந்து...சரிங்க...

நான் கீழ் பெர்த்துல படுத்துக்கறேன். நீங்க மேல் பெர்த்த எடுத்துக்கங்க.

சரிங்க.

*******************************************************

ஹலோ... வந்து... பாதி ராத்திரில டிஸ்டர்ப் பண்றேனேன்னு நெனச்சுகாதீங்க...

இல்ல பரவால்ல சொல்லுங்க.

வந்து... ரொம்ப குளுரா இருக்கு. இஃப் யூ டோண்ட் மைண்ட்....கீழே சீட்டுக்கு அடீலேர்ந்து அந்த ரெட் பிளான்கட்டை எடுத்துத் தரீங்களா? வந்து.... மேல் பெர்த்லேர்ந்து எட்டலை.

அதை விட சூப்பரா நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?

என்னங்க?

இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும் நம்ப ரெண்டு பேரும் கல்யாணம் ஆனவுங்க மாதிரி ஆக்ட் பண்ணிக்கலாமா?

ஆங்... எ...ன்...ன...ங்..க....? ச...ரி...ங்...க...

*

*

*

*

*

*

*

*

*

*

(குறுக்க வர்றதுக்கு மன்ச்சுக்க வாத்யார்.
இன்னும் ஒரே வரியில் இந்த கதை முடியப் போவுது!)

*

*

*

*

*

*

*

*

அப்படீன்னா நீங்களே இறங்கி வந்து பிளான்கட்டை எடுத்துட்டு போங்க. பாதி ராத்திரில தொண தொணன்னு பேசி ஏன் என் உயிர வாங்கறீங்க?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


12 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

சூப்பரான முடிவு இந்த மாதிரி

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இன்னிக்கு ஹிட் ஆயிரம் தாண்டிரும்

Anonymous said...

கடைசி வரி படிக்கறதுக்கு முன்னால்:
ச்சீ....போங்க..!

கடைசி வரி படிச்சதுக்கு அப்புறம்:
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க தீர்க்கதரிசி சுரேஷு வாத்யார்!

//சூப்பரான முடிவு இந்த மாதிரி//

நீங்க சொன்னா மாதிரியே ஆயிடுச்சு வாத்யார். கபால்னு அரை அவர்ல பரிந்துரை லிஸ்ட்ல வந்துட்ச்சு! :-)

//இன்னிக்கு ஹிட் ஆயிரம் தாண்டிரும்//

போற போக்க பாத்தா அப்டிதான் தோணுது! ஒரு வேளை அது இன்னாது... ஆங்...சைகாலஜி பட்சு கீறீங்களோ? :-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சென்ஷி said...

ஆஹா :-)

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க சென்ஷி வாத்யார்,

//ஆஹா//

கடசி வரியையும் படிச்சுட்டுதான சொல்றீங்க? (ஸ்மைலி போட்டுகிறீங்களேன்னு கேட்டேன்!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Bhuvanesh said...

வாத்தியார் வாத்தியார் னு சொல்லீட்டு பண்ணறது எல்லாம் நம்பியார் வேலை :)

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

யாரோ ஒருவன் said...

ஜக்கு - SUPER!!!

ரகுநாதன் said...

இன்னா மாமே கலக்குற...18+ அப்படின்னு போட்டு ஏமாத்திடியே வாத்யாரே... -;)

ஜாம்பஜார் ஜக்கு said...

ரகுநாதன் வாத்யார்,

//.18+ அப்படின்னு போட்டு ஏமாத்திடியே வாத்யாரே..//

ஏமாத்திட்டனா? இன்ன எதிர்ப்பாத்து வந்தீங்க வாத்யார்? ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

ஆ..ஹா..!