டென்ஷன் பார்ட்டிகளுக்கு ஒரு Dolphin Test (கண்டிப்பா படிங்க)!


வர வர டென்ஷன் பார்ட்டிகள் ரொம்ப ஜாஸ்தியா பூட்டாங்க வாத்யார். அத்தொட்டு இந்த பழைய டென்ஷன் மீட்டரை அவுங்களுக்காக தூசி தட்டி எடுக்க வேண்டிதா போச்சு!

இது எப்டி வேலை செய்யுதுன்னு இத்தினி வருஷமா யாருக்கும் புரில ஆனா இதை டெஸ்ட் பண்ணி பாத்தீங்கன்னா அப்டியே அசந்து பூடுவீங்க! அவ்ளோ கரீட்டா இருக்கும்.

கீழே இருக்கிற படத்துல ஒரே மாதிரியா ரெண்டு டாலஃபின் கீது வாத்யார். ஒரே மாதிரின்னா அப்டியே அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கும். கொஞ்சம் கூட டென்ஷனே இல்லாதவுங்க அத்த பார்த்தாங்கன்னா ரெண்டு டால்ஃபினும் அப்டியே ஒரே மாதிரி தான் தெரியும்.

ஆனா, இதுல இன்னா மேட்டர்னா, மனசுல எவ்ளவுக்கு எவ்ளோ டென்ஷன் கீதோ அவ்ளவுக்கு அவ்ளோ ரெண்டு டால்ஃபினுக்கு வித்யாசம் தெரியும்.

இன்னா புரீதா?

...

ஒண்ணும் கொழப்பம் இல்லியே?


...


இப்போ டால்ஃபின்களை பார்க்கலாமா?


...

டென்ஷன் இல்லாம பொறுமையா வாங்க...


...


ரெண்டு மூணு வித்யாசத்துக்கு மேல தெரிஞ்சுதுன்னா எதுக்கும் ஒரு பத்து நாளு லீவு போட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க.

...

...

...

இன்னா ரெடியா?

...

...

ரிலாக்ஸா தான கீறீங்க?

...

...


இப்போ படத்த நல்லா பாருங்க


...


...


இன்னா வாத்யார் ஒரு மாதிரியா கீறீங்க? ரெண்டு டால்ஃபினுக்கும் எவ்ளோ வித்யாசம் தெரிஞ்சுது? ஜாஸ்தி ஒண்ணும் டென்ஷன் இல்லியே?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

16 comments:

சென்ஷி said...

ஹா ஹா ஹா.. உங்கள் குறும்பை வெகுவாய் ரசித்தேன். டென்சன் ஓடியேப்போச்சு. :-)

ஆனாலும் ஒரு டால்பின் மாத்திரம் கண்ணுக்குத்தெரியுது.. அவ்வ்வ்வ்வ்!

நிஜமா நல்லவன் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Anonymous said...

சிரிச்சு சிரிச்சு எல்லாரும் என்னைப் பார்த்தே டென்ஷன் ஆகிவிட்டார்கள்.

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஆனாலும் ஒரு டால்பின் மாத்திரம் கண்ணுக்குத்தெரியுது.//

வாங்க சென்ஷி. டென்ஷன் ஓடிப் போனதுக்கு அப்பாலயும் ஒரு டால்பின் தான் தெரியுதா? அப்டீன்னா இப்ப எனக்கு டென்ஷனா கீது வாத்யார்! :-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஹா ஹா ஹா ஹா ஹா ஹா//

நீங்க நிஜமா நல்லவனா இருக்க்கலாம், அதுக்காக இப்டி சிரிச்சல்லாம் மழுப்பக் கூடாது. டால்ஃபின் தெரிஞ்சுதா இல்லியா, அத்த சொல்லுங்க மொதல்ல!!!

:-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

என்ன வாத்தியாரே

படத்தை காணும்

அப்பாலிக்கா டென்ஷன் ஆயிடுவேன்

இராகவன் நைஜிரியா said...

தாங்க முடியலை...

Jawarlal said...

டால்பின் எங்க இருக்கு?

http://kgjawarlal.wordpress.com

ஜாம்பஜார் ஜக்கு said...

//தாங்க முடியலை...//

டென்ஷனைத் தானே சொல்றீங்க இராகவன்?!!

:-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சங்கா said...

குறும்பு பார்ட்டி போல?!
ஆ! ரொம்ப டென்ஷனாயிருக்கே?! இருங்க, போய் எதாவது ஸீரியஸ் கட்டுரை படிச்சிட்டு அப்பாலிக்கா வரேன்!

tharudhalai said...

இன்னா டகுல்பாஜி வேல நைனா இது? ஒரு செகண்டு மெர்சலாயிட்டேன்.ரெண்டு டால்பின தேடுனா ரெண்டு பன்னிங்கோ பறக்குது.

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

ஜாம்பஜார் ஜக்கு said...

ஜவஹரு,

//டால்பின் எங்க இருக்கு?//

ஆஹா, அந்த அளவுக்கு ஆய்ட்ச்சா வாத்யார்? :-))

இப்படிக்கு
ஜாம்ப்ஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க சங்கா,

//இருங்க, போய் எதாவது ஸீரியஸ் கட்டுரை படிச்சிட்டு அப்பாலிக்கா வரேன்!//

பேசாம ஒரு கந்தசாமி விமர்சனம் பட்சுட்டு வாங்க வாத்யார். பளிச்சுனு ஆய்டும்!

:-))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//ரெண்டு பன்னிங்கோ பறக்குது//

tharudhalai வாத்யார், நல்லா நிதானமா இன்னொரு தபா பாருங்க. இன்னா பறக்குது? டால்பினே மெர்ஸலாயிடும் போல கீது...

:-)))


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Rajkumar said...

WOOOOOOOOOOOOOWWWWWWWWWWWW....BOTH THE DOLPHINS ARE LOOKING VERY BEAUTIFUL...I LIKE THE SECOND DOLPHIN'S COW SKIN DRESS.....THINK THAT DOLPHIN GOING TO ATTEND FANCY DRESS COMPETITION......