உடுங்க கழுதை! இதுக்கெல்லாமா டென்ஷன் ஆவாங்க?!!!

ஹலோ, எப்டி கீற?

நல்லா கீறேன். நான் குடுத்த மிஸ்டு கால் கெடச்சுதா?

அக்காங்! இன்னா மேட்டரு?

ஒண்ணுமில்ல, புச்சா ஒரு செல்போன் வாங்கி கிறேன்.

இன்னாத்துக்கு புது போனு, பழைய போன் நல்லாத்தான இருந்திச்சு?

அது இன்னா பண்றது? பக்கத்து ஊட்டு களுதை கூட புது போன் வாங்கிட்சு. நாம சும்மா இருக்க முடியுமா? அதான்.

அத்த உடு களுத!

அது எப்டி உட்றது? வர வர கண்ட களுதையெல்லாம் புது போன் வாங்கி சீன் ஓட்டுது.

சரி..சரி...நீ ஓண்ணியும் டென்ஷன் ஆவாத. என் போட்டோவை MMS பண்ணிகீறேன். புது போன்ல செட்டிங்க்ஸ் அல்லாம் கரீட்டா கீதான்னு செக் பண்ணிக்கோ.

ஆஹா...சூப்பரா கீது உங்க போட்டோ! அப்புறம் புதுசா ஒரு படம் ரிலீஸ் ஆகி கீதாம். பெரிய பெரிய போஸ்டர் அல்லாம் ஒட்டிகிறாங்களாம். சாப்டுட்டு வந்து அப்புறமா போன் பண்றேன். Bye!

Bye!


*

*

*

*

*

*

*

*

*

*


வாத்யார், வர வர அநியாயத்துக்கு டென்ஷன் ஆவுறீங்க! சும்மா லூஸ்ல உடுங்க..ஹி..ஹி.. வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


7 comments:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

அங்கிள் சென்...... said...

ஜக்கு!!!!

Anonymous said...

//பெரிய பெரிய போஸ்டர் அல்லாம் ஒட்டிகிறாங்களாம். சாப்டுட்டு வந்து அப்புறமா போன் பண்றேன்//

கொஞ்ச நேரம் கழித்துதான் புரிந்தது!!!!!!!!

SUBBU said...

asvaghdiqwud2e892dusxgsu1

ஜாம்பஜார் ஜக்கு said...

//அங்கிள் சென்...... said...
ஜக்கு!!!!//

அங்கிள், இப்டி வெறும ஜக்குன்னு மட்டும் போட்டு வேற ஒண்ணும் சொல்லாங்காட்டி எப்டி? மேல போட்டோ வேற கீது! ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

சுப்பு வாத்யார்,

//asvaghdiqwud2e892dusxgsu1//

அக்ல்ட்ஃப்ஜேஓட்ச்ஃப்ல்டுஃடுடக்இயோய்

சரியா பூட்சா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பின்னோக்கி said...

ஹை...ஹை..ஹைய்ய்ய்...நான் ஏமாறலையே..ஏன்னா..படிக்குறத்துக்கு முன்னாடியே போட்டாவ பார்த்துட்டேனே :)