உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அதிசயமான TEST !!!!!

நீங்க எத்தினியோ டெஸ்ட் அல்லாம் பாத்து இருப்பீங்க. ஆனா இது வேற வாத்யார். 100% க்ரீட்டா இருக்கும். சொன்னா நம்ப மாட்டீங்க, முழுசா படிங்க உங்களுக்கே புரியும்.


இப்போ நீங்க ஒரு காட்டு வழியா நடந்து போய்கினு இருக்கீங்க. அப்டி போவச் சொல்ல ஒரு ஆறு (six இல்ல வாத்யார்... நதி இல்லாங்காடி ரிவர்). அந்த ஆத்தங்கரையில் ஒரு குடிசை கீது. அந்த குடிசைக் குள்ளார என்டர் ஆவுறீங்க. இடது பக்கம் ஒரு அழகான கட்டிலு கீது. வலது பக்கம் ஒரு டேபிளு, அத்த சுத்தி ஆறு சேர் போட்டுக் கீது. அந்த டேபிள் மேல ஒரு தட்டுல இதெல்லாம் கீது:

1) வாழைப்பழம்
2) பலாப்பழம்
3) மாம்பழம்
4) கொய்யாப் பழம்
5) அன்னாசிப் பழம்

இப்போ மேட்டர் இன்னானா இந்த அஞ்சு பழத்துல நீங்க எந்த பழத்தை எடுத்துப்பீங்க? நீங்க சொல்ற பதில்லேர்ந்து உங்களப் பத்தின ஒரு முக்கியமான விஷயம் இப்ப புரிஞ்சு பூடும்!


எந்த பழம்? முடிவு பண்ணிடீங்களா?


மொதல்லயே சொல்லிகிறேன் இது 100% சரியா வர்க் பண்ணும், ஜாக்கிரதையா முடிவு பண்ணுங்க...இன்னா? ஆச்சா?முடிவு பண்டீங்களா?அப்புறம் மாத்தக் கூடாது, சொல்லிட்டேன்...!உங்களப் பத்தி ஒரு விஷயம் தெரிஞ்சு பூடும், கியாபகம் இருக்கில்ல?


எவ்ளோ நேரம்? ட்க்குனு முடிவு பண்ணுங்க (வேணுன்னா லிஸ்ட ஒரு தபா பாத்துக்கங்க).


ஆச்சா?


இப்போ...டெஸ்ட் ரிஸ்ல்ட்ட பாக்கலாமா?


...


...


...விடைகள்:


1) நீங்க வாழைப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு வாழைப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

2) நீங்க பலாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு பலாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

3) நீங்க மாம்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு மாம்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

4) நீங்க கொய்யாப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு கொய்யாப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.

5) நீங்க அன்னாசிப்பழத்தை சூஸ் பண்ணி இருந்தா உங்களுக்கு அன்னாசிப்ப்பழம் ரொம்ப புடிக்கும்னு அர்த்தம்.


இன்னா 100% கரீட்டா இருந்திச்சா? அதான் நான் மொதல்லயே சொன்னேன்... நம்ப மாட்டீன்னுடீங்க.


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

9 comments:

சென்ஷி said...

அடங்கொக்கமக்கா!

அதனாலதான் நான் காட்டு வழியா நடந்து போறதே கிடையாது :)

T.V.Radhakrishnan said...

:-))))

கனககோபி said...

ஆகா...
நம்மளுக்க ஞாபகசத்தி எண்டது கொஞ்சமும் இல்லையே...
இரண்டாவது தடவையா ஒரே கேள்வில அவமானப்பட்டிருக்கிறன்...
என்றாலும் வாழ்த்துக்கள்...

Sarika said...

:-(

அங்கிள் சென்...... said...

மொத்ததுல ஜக்குவ தொடர்ந்து படிச்சா ரொம்ப கிறுக்கு புடிக்கும்!!!

Anonymous said...

எனக்கு எலந்த பழம்தான் பிடிக்கும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரகுநாதன் said...

உங்களுக்கு இன்னா பயம் (பழம்) புடிக்கும் ?

நாமக்கல் சிபி said...

நைனா எடுக்கணும்னு முடிவுபண்ணிட்டா நான் எல்லாத்தையும் எடுப்பேன்!

Jawarlal said...

இதுக்கு காட்டு வழியிலே போய் சிங்கம் புலியே அடிச்சித் தின்னிருக்கலாம்.

http://kgjawarlal.wordpress.com