தமிழில் பெயர் வைக்கலாமா? (டென்ஷன் ஆவதீங்க வாத்யார்!)இங்கிலீஷ்ல சில பேரு செய்யுற தொழிலையே பேரா வச்சுப்பாங்க (Goldsmith, Contractor அப்டீன்ற மாதிரி). இந்தியாவுலயும் ஒரு சில பகுதில இப்பிடி ஒரு பழக்கம் உண்டு.

இப்போ மேட்டர் இன்னான்னா அது மாதிரி நம்ம தமிழ்லயும் பேர் வச்சா எப்டி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தா கொஞ்சம் டென்ஷனா பூட்சு வாத்யார்..!

Doctor -- வைத்தியனாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேஸன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்

Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோகரன்
Sex Therapist -- காமேஸ்வரன்
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist -- கண்ணாயிரம்

ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்ரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Mentalist -- புத்திசிகாமணி

Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்ரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்

Agriculturist -- பச்சையப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Hair Stylist-- சிகாமணி
Beggar -- பிச்சை

Bartender -- மதுசூதனன்
Alcoholic -- கள்ளபிரான்
Exhibitionist -- அம்பலவாணன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- அழகுசுந்தரம்
Milk Man -- பால்ராஜ்

Dairy Farmer -- பசுபதி
Dog Trainer -- நாயகன்
Snake Charmer -- நாகப்பன்
Mountain Climber -- மலைச்சாமி
Javelin Thrower -- வேலாயுதம்
Pole Vaulter -- தாண்டவராயன்

Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டுராவ்
Long jumper--தாண்டவன்
Marksman--நல்லகண்ணு
Bowler -- பாலாஜி

Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திருப்புரசுந்தரி
Driver -- சாரதிநீங்க யோசிக்கறதுக்காக ரெண்டு மூணு பேரு உட்டு வச்சுகிறேன். டென்ஷனாவாம யோசிச்சு கண்டுபுடிங்க வாத்யார்.


இத்த தவிர வேற வேற எதுனாச்சும் பேரு தெரிஞ்சாலும் பின்னூட்டதுல அண்ணாத்த சொல்ல சொல்றாரு!

வர்ட்டா?இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

14 comments:

Anonymous said...

North Indian Lawyer - Kesavji
Ophthalmologist - Pallavarayan
Exorcist - Paeyandi
Makeup Man - Azhagu sundaram

மணிகண்டன் said...

கலக்கல். அதுவும் திருப்புரசுந்தரி சூப்பர்.

நெடுஞ்சளியன்! said...

நைனா ஜாம்பஜார் ஜக்கு....சிர்ச்சி சிர்ச்சி

கண்ணுல தண்ணி கொட்டுது

மார்சளி கரைஞ்சி மேல வந்துடிச்சி

(இதுனால தான் வாய் விட்டு சிரிச்சா நோய் உட்டுபுடும் இன்றாங்களா ? )படா சோக்கு நைனா....

சின்ன அம்மிணி said...

//Exorcist -- ______//

பூதத்தாழ்வார்

சின்ன அம்மிணி said...

//Ophthalmologist -- ______//

கண்ணாயிரம்

Anonymous said...

Exorcist = Mathru Bootham ?!!!

SUPER PATHIVU JAGGU SIR

கள்ளபிரான் said...

Exorcist - சுடலை.

சுடலை என்ற கிராமத்து தேவதையின் தொழிலே சுடுகாட்டில் அலையும் பேய்களை ஊருக்குள் நுழையவிடாமல் தடுப்பது.

Opthamalogist - கண்ணாயிரம்

ENT specialist - காத்தவராயன்

Make-up man - அழகு, அழகு சுந்தரம்

Alcoholist - கள்ளபிரான் என்பது என்பெயர். மாற்றி, மதுசூதன் என வைத்துக்கொள்க.

Female spin bowler - திருப்புரசுந்தரி

திரிபுரசுந்தரி என்று எழுதவேண்டும்.

Simulation said...

//Female Spin Bowler -- திருப்புரசுந்தரி//

இன்னமும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் "பால திருப்புரசுந்தரி" என்று சொல்ல வேண்டும்.

- சிமுலேஷன்

Anonymous said...

opthalmologist kannayiram?

nila said...

எங்க இருந்துதான் இப்படியெல்லாம் யோசிபீங்களோன்களோ போங்க....................
அதுலயும் பால திரிபுரசுந்தரி செம கலக்கல்

ஜாம்பஜார் ஜக்கு said...

//எங்க இருந்துதான் இப்படியெல்லாம் யோசிபீங்களோ//

ஜாம்பஜார்லேர்ந்துதான் :-)) எங்க ஆளையே காணும்?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

துளசி கோபால் said...

சின்ன அம்மிணி,

இது பேயாழ்வார்!

ஜாம்பஜார் ஜக்கு said...

//சின்ன அம்மிணி,இது பேயாழ்வார்!//

எச்சூஸ்மீ, இங்க யாரை பத்தி பேசிக்கினு கீறீங்க?!!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாத்யார், இப்பத்தான் கவனிச்சேன்: North Indian Lawyer யாரும் சரியா சொல்லலை. மேல அப்டேட் பண்ணிகிறேன் பாருங்க.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு