அட, இது யாருப்பா புதுசாக் கீது?

அல்லாருக்கும் வணக்கம்! பெரிய பெரிய மன்சங்கல்லாம் பதிவு எளுதறத பட்ச்சு, பட்ச்சு, நானும் ஒரு மனுசனாங்காட்டியும் வந்துடேனுங்கோ! நம்ப டெம்ப்ளேட் மாதிரியே நானும் ரொம்ப சிம்பிளான ஆளுங்கோ. வள வள எல்லாம் இல்லாம நச்சுனு நாலு வரி சுருக்கமா எழுதப் போறேனுங்கோ. அல்லாரும் ஜோரா ஒரு தபா கை தட்டி நம்மள நல்லாருன்னு சொல்லி போடுங்கோ!இப்படிக்கு,

ஜாம்பஜார் ஜக்கு

14 comments:

வால்பையன் said...

சும்மா ரீல் வுடாத நைனா!
ஒன் எழுத்து பார்த்தா தெரியலையா நீ பழைய ஆளு தான்னு!

வால்பையன்

நையாண்டி நைனா said...

அல்லாரும் வாங்கோ..ட மீ ளுக்கு சேவை பண்ணுங்கோ

Veera said...

நல்லாக்கீதுப்பா.. வா வாத்யாரே!

Vino said...

வாங்க ஜக்கு வாங்க ...வந்து தெரிஞ்ச தத்துவம் எல்லாம் கக்குகங்க

ஜாம்பஜார் ஜக்கு said...

//சும்மா ரீல் வுடாத நைனா!
ஒன் எழுத்து பார்த்தா தெரியலையா நீ பழைய ஆளு தான்னு!//

வாத்யார், சொன்னா நம்பணும். மெய்யாலுமே நான் புச்சு தாம்பா! இருந்தாலும் பரவாயில்ல. நம்ம வூட்டாண்ட (அதாம்பா ப்ளாகாண்ட) வந்துக்கிற மொத பெரிமன்ஸன் ஆய்டீங்க, ரொம்ப டாங்ஸ்பா!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//அல்லாரும் வாங்கோ..ட மீ ளுக்கு சேவை பண்ணுங்கோ//

போக போக பாரு தலீவா, டமிள்ல மாத்ரமில்ல செந்தமிழிலும் வூடு கட்டுவோம்! டாங்ஸ் (நையாண்டி) நைனா!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//நல்லாக்கீதுப்பா.. வா வாத்யாரே!//

டாங்ஸ் வீரா அண்ணாத்த, அடிக்கடி வூட்டாண்ட வாங்க.

//வாங்க ஜக்கு வாங்க ...வந்து தெரிஞ்ச தத்துவம் எல்லாம் கக்குகங்க//

ஆஹா, வினோ வாத்யார், தத்துவம் அது இதுன்னு பெரிய வார்த்தையா சொல்லி போட்டீங்க! உங்க ஆசீர்வாதத்ல பின்னி பெடலெடுதுடுவோம்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

// ******** இன்னொரு அவதாரமா. கிழிஞ்சுது //

மன்ச்சுக்க அனானி அண்ணாத்தே. பாதி பின்னுட்டத்த கடாசிட்டேன் :-) சும்மா லூஸ்ல வுடுங்க! சரியாப் பூடும்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

யாத்திரீகன் said...

Welcome ..

ஜாம்பஜார் ஜக்கு said...

டாங்க்ஸ், யாத்ரீக‌ன். அப்டியே யாத்ர‌ போக‌ச் சொல்ல‌, ந‌ம்ம‌ ப்ளாகாண்ட‌யும் வாங்க‌ :)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

ஜக்கு. இன்னாபா? மெர்ஸல் ஆயிட்டியா? என்னய தம்மாங்கவனி. நானும் புச்சுதாம்பா. ஆஆங்.
நம்ம பேரு டோமரு....
வரட்டா..
இப்ப ஜுட் வுட்டுக்கரேன்...

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க டொமரு அண்ணாத்தே,

உங்க பதிவ பாத்தேன். அது இன்னா தனி வழி?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

நூறாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள்

ஜாம்பஜார் ஜக்கு said...

//நூறாவது பதிவினிற்கு நல்வாழ்த்துகள்//

ரொம்ப டாங்ஸ், சீனா வாத்யார். முதல் பதிவுல நூறாவது பதிவுக்கு வாழ்த்து சொன்ன உங்க டெக்னிக் சூப்பர். நீங்க ஒரு பதிவுல சொன்னா, நூறு பதிவுலயும் சொன்னா மாதிரின்றாரு அண்ணாத்த!

இப்படிக்கு
ஜாம்ப்ஜார் ஜக்கு