டாக்டர்! கண் வலி கொறையவே இல்லை டாக்டர்!
நான் கொடுத்த ஐ-ட்ராப்ஸை கண்ணுல டெய்லி போட்டீங்களா?
ஒரு நாள் தவறாம டெய்லி மூணு வேளையும் போட்டேன் டாக்டர்.
மாத்திரையை விடாம சாப்டீங்களா?
ஒரு வாரமா தினமும் சாப்புட்டேன் டாக்டர். ஒரு வேளைகூட விடலை டாக்டர்.
ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்தீங்களா?
இதோ இருக்கு டாக்டர்.
ம்...ம்... ஸ்கேன் எல்லாம் நார்மலாதான் இருக்கு... எதாவது வெய்யில்ல இல்ல ஹீட்ல கண்ணை எக்ஸ்போஸ் பண்ணீங்களா?
அதல்லாம் இல்லை டாக்டர். ஒரு மாசமா கூலிங் கிளாஸ் இல்லாம வீட்டை விடு வெளியில போகவே இல்லை டாக்டர்.
அப்படியுமா கண்ணை வலிக்குது?
அமாம் டாக்டர் தெனமும் கண்வலி வந்துகிட்டே இருக்கு டாக்டர்.
நல்லா யோசிச்சு சொல்லுங்க, தினமுமா வலிக்குது?
ஆமாம் டாக்டர் தெனமும் கண்வலி வருது டாக்டர்.
தினமுமா?
ஆமாம் டாக்டர். அதுவும் தெனம் ரெண்டு தடவை கண்ணை வலிக்குது டாக்டர்.
இருங்க, இருங்க. கொஞ்சம் நிதானமா யோசிச்சு சொல்லுங்க. கண்வலி எப்போ எல்லாம் வருது?
தெனமும் காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவை வருது டாக்டர்.
இன்னும் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க. கரெக்டா எந்த சமயத்துல கண்ணை வலிக்குது?
இருங்க டாக்டர்... யோசிக்கிறேன் ... ஆங்... டெய்லி காப்பி சாப்பிடும் போதுதான் கண்ணை வலிக்குது டாக்டர்.
என்னது? காப்பி சாப்பிடும்போது கண்ணை வலிக்குதா?
ஆமாம் டாக்டர். கரெக்டா ஞாபகம் வந்துருச்சு. நான் தெனமும் ரெண்டு வேளை காப்பி சாப்பிடுவேன். அப்பதான் கண்ணை வலிக்குது.
விளையாடாதீங்க, காப்பி சாப்பிடும்போதா கண்ணை வலிக்குது?
ஆமாம் டாக்டர், நெஜமாவே காப்பி சாப்பிடும்போது மட்டும் தான் கண்ணை வலிக்குது.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
யோவ்! காப்பி குடிக்கும்போது கப்புலேர்ந்து ஸ்பூனை எடுத்துட்டு சாப்பிடுய்யா! கண்வலி சரியா பூடும்!!!
வர்ட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
8 comments:
நச்சுனு இருக்கு
ஹா..ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..ஹா..
டாப்பு! சாதா மேட்டர்தானே!
நான் கண்ணுல மருந்து பாட்டில போட்டுட்டான்னு நினைச்சேன்.
ஆனா ஜா.ஜக்கு வேலைய காண்பிச்சுட்டீங்களே :)
சிலருக்கு மூக்கு வலி கூட வரும்!
Tamilish Support to me
show details 7:48 PM (24 minutes ago)
Hi jambajarjaggu,
Congrats!
Your story titled 'Urgent! இந்த ஜோக் புரியுதா பாருங்க!!!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 30th October 2009 04:48:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/132232
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
இமெயிலில் வந்தது
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
ஓ.ஹென்றின்னு ஒருத்தர் இருக்காரு. அவுரு கணக்கா இருக்கு தலைவா :-)))
ஜமாயுங்க!!!!
ஹ ஹ ஹ... ரொம்ப ரசிச்சேன் :-)
Post a Comment