கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)
வாத்யார், இன்னிக்கு கொலம்பஸ் தினம் அப்டீன்றது ரொம்ப பேருக்கு தெரியாது. ஆனா அது இல்லை இந்த பதிவோட மேட்டரு. நம்ப கொலம்பஸுக்கு மட்டும் கல்யாணம் ஆகி இருந்துச்சுன்னா அவுரு அமெரிக்காவையே கண்டுபுடிச்சு இருக்க மாட்டாருன்னு ஒரு சித்தாந்தம் கீது வாத்யார். ஏன்னு கேக்குறீங்களா?


***

எங்க போறீங்க?

யார் கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்டி போகப் போறீங்க?

உங்க ஆபீஸ்ல எல்லாரும் இப்டிதான் போய்கிட்டு இருக்காங்களா?

எதுக்கு நீங்க மட்டும் இதுக்கெல்லாம் போறீங்க?

ஏன் தான் இப்டி இருக்கீங்களோ, எல்லாம் என் தலை எழுத்து

நானும் கூட வர்றேன்.

எப்போ திரும்ப வருவீங்க?

டின்னர் சாப்பிட வந்துருவீங்க இல்ல?


***

கேட்டுகிட்டே இருகன்ல, பதில் சொல்லுங்க

நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்

நீங்க போற வழில என்ன அங்க விட்டுட்டு போங்க

திரும்ப வரவே மாட்டேன், ஆமா சொல்லிட்டேன்


***

என்ன? ஓக்கேன்னா என்ன அர்த்தம்?

போகாதேன்னு ஏன் சொல்ல மாட்டேன்றீங்க?


***

அது என்ன டிஸ்கவரியோ எனக்கு ஒண்ணும் புரியல

போன தடவையும் இதேதான் சொன்னீங்க

நானா இருந்தா ரெண்டே நாள்ல கண்டுபுடிச்சுருவேன்

சும்மா டையத்த வேஸ்ட் பண்ணாதீங்க

ஆபீஸ் உட்டா நேர வீட்டுக்கு வ்ர்ற வழிய பாருங்க

என்ன சொல்றது புரியுதா?

***

இதுக்கு மேலயும் வாத்யார் அமெரிக்கா வெல்லாம் போயிருப்பாருன்னா சொல்றீங்க?

கொலம்பஸ் தினம் இன்டரஸ்டிங்கானா மேட்டர் இங்கே!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

8 comments:

களப்பிரர் - jp said...

கலக்கலா இருக்கு வாத்யார் !!!

Anonymous said...

ஹஹஹா:)

நான் அம்மா வீட்டுக்கு போகணும்னு அவ்வளவு சீக்கிரம் பொயறமுடியாது :)

ஷங்கி said...

ஹிஹிஹி, மெய்யாலுமே சூப்பராத்தான் கீது நைனா!

Anonymous said...

ஜக்குக்கு கல்யாணம் ஆகலயோன்னு நெனசுட்ருந்தேன்... ...!!!!!

Uncle Sen...

ரகுநாதன் said...

கலக்குற வாத்யாரே :)

Tamilish Team said...

Tamilish Support to me
show details 12:24 PM (9 hours ago)

Hi jambajarjaggu,

Congrats!

Your story titled 'கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th October 2009 09:24:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/124527

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

இமெயிலில் வந்தது

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Toto said...

Super post Vaadhyaar.

-Toto. [ Adhe crossword Toto :) ]
www.pixmonk.com

செந்தழல் ரவி said...

:)))))))