மல்லிகா ஷெராவத்துக்கு ஒரு டாங்ஸ்!

அல்லாருமே ரொம்ப கொழப்பத்துல இருக்குற மாதிரி தெரீது. இப்பல்லாம் டமிள் பண்பாடு, டமிள் பண்பாடு அப்டீன்னு ஒண்ணு அடிக்கடி ரவுண்டு வந்துகினு கீது. அதுவும் எப்போ வருதுன்னா ஸ்ரேயாவையும், மல்லிகா ஷெராவத்தையும் பாத்த அப்புறம்தான் ரொம்ப பேருக்கு டமிள் பண்பாடு டகால்னு ஞாபகத்துக்கே வருது. ரொம்ப பேருக்கு இதுல கொழப்பம் இன்னான்னா இந்த பண்பாடு அப்டீங்கற லைன எங்க போட்றது அப்டீங்கறதுலதான்.

1. படத்துக்கு டமிள்ல பேர வச்சாத்தான் டமிள் பண்பாடா?
2. டமிள்ல பேர் வச்ச படத்துல வரதெல்லாம் பண்பாட்டோடத்தான் கீதா?
3. டமிள் பத்திரிக்கைல வர படம், கதை எல்லாம் டமிள் பண்பாட்டோடதான் கீதா?
4. டமிள் பதிவுல எளுதறதெல்லாம் டமிள் பண்பாட்டு சமாச்சாரம் தானா?
5. டமிள் டிவில வர்தெல்லாம் டமிள் பண்பாட்டோததான் கீதா?
6. இருவது வர்ஸத்துக்கு முன்னால இருந்த பண்பாட்டு ஸ்கேல இப்போ யூஸ் பண்ணா சரியா வருமா? இல்லாங்காட்டி புது ஸ்கேல் வாங்கணுமா?
7. பண்பாடுங்கறது ட்ரெஸ்ல மட்டும் தான் கெட்டுப் போச்சா? மத்ததெல்லாம் சரியாத்தான் கீதா?

ஒண்ணே ஒண்ணு அல்லாரும் புரிஞ்சிக்கணும். ஒரு பக்கம் கருத்து சொதந்திரம், ஒரு பக்கம் ... அது என்னா சேஷன்...ஆங்... க்ளோபலைசேஷன், ஒரு பக்கம் பணத்தை தொறத்துற பெரிய மன்ஸங்க‌, இன்னொரு பக்கம் கேள்வி கேக்கத் தெரிஞ்சுகின புள்ளைங்க... இதுக்கு நாலுக்கு நடுவுல பண்பாடுங்கற மேட்டர் காணாமப் போய் ரொம்ப நாள் ஆவுது.

அத அப்ப அப்போ ஞாபகப் படுத்தற ஸ்ரேயாவுக்கும், மல்லிகாவுக்கும் ஒரு டாங்ஸ் வாணா சொல்லிக்கலாம்! அவ்ளோதான் மேட்டர். இன்னா சொல்றீங்க‌...?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

6 comments:

விக்னேஸ்வரன் said...

இன்னா ஜக்கு இன்னிக்கு ஒரே ப்லேடா பூட்ட... கேள்வி கீள்வி ஒன்னும் கேகிளியா தலைவா...

திவா said...

இன்னா ஜக்கு, இந்த பண்பாட்டு பாடு படா பேஜாரா போச்சேப்பா. அத போட்டு இளுக்கிறயா?
அத எப்பவோ கடல்ல தூக்கி போட்டாச்சுப்பா.

ஜாம்பஜார் ஜக்கு said...

//கேள்வி கீள்வி ஒன்னும் கேகிளியா தலைவா...//

விக்னேஷு அண்ணாத்தே, நீங்க சொல்லி கேக்காம இருப்பேனா? கேட்டாச்சு, உடனே பாருங்க :))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//அத எப்பவோ கடல்ல தூக்கி போட்டாச்சுப்பா//

திவா வாங்க. கடல்ல பொட்டாலும் மன்சு கேக்காம அப்பப்போ பேஜார் பண்றாங்களே?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

நாகு (Nagu) said...

டாங்ஸ் சொல்றதுதான் சொல்ற. ஒரு படம் போட்டு சொல்லக்கூடாதா?

ஜாம்பஜார் ஜக்கு said...

//டாங்ஸ் சொல்றதுதான் சொல்ற. ஒரு படம் போட்டு சொல்லக்கூடாதா?//

ரொம்ப டாங்க்ஸ் நாகு! இது கூட பண்ண மாட்டமா? உங்க போட்டோ இருந்தா அனுப்புங்க வாத்யார். கண்டிப்பா போட்டுருவோம் :))))))))))