நீங்க டென்ஷன் பார்ட்டியா? அப்படீன்னா இதை கண்டிப்பா படிக்காதீங்க!

வாங்க‌. ந‌ல்லா‌ நிதான‌மாத்தான‌ கீறீங்க‌? அப்ப‌ இத‌ மெள்ள்ள்ள்ள்ள்ள்ள‌மா ப‌டீங்க. டென்ஷனே வாணாம். ஆமா, சொல்லிட்டேன்.


அன்னிக்கு ஒரு நாளு, 8 பேரு ஒரு ஹோட்ட‌லுக்கு வ‌ந்தாங்க‌. வ‌ந்தாங்க‌ளா, அந்த ஹோட்ட‌ல்ல‌ 7 ரூமுதான் காலியா இருந்திச்சி. ஆனா, வ‌ந்த பேருங்க அல்லாரும் த‌னித் தனி ரூம் குட்த்தாத்தான் த‌ங்குவோம்னு க‌ண்டிஷ‌னா சொல்லிட்டாங்க‌. அப்புற‌ம் இன்னா அச்சுன்னு கேக்றீங்க‌ளா? அந்த‌ ஹோட்ட‌ல் மேனேஜ‌ரரு அதெல்லாம் நான் பாத்துக்க‌றேன்னு சொல்லி அவுங்க‌ள‌ அவுங்க‌ கேட்டா மாதிரியே த‌ங்க‌ வ‌ச்சுட்டாரு.


இன்னாது? அது எப்டி முடியும்னு கேக்றீங்களா? ஒண்ணும் டென்ஷன் ஆவுலியே?


அந்த மேனேஜர் இன்னா பண்ணார்னா, மொத ரெண்டு பேர 1ஸ்டு ரூம்ல கொஞ்ச நேரம் இருங்கன்னு சொல்லிட்டு மூணாவது ஆள 2வது ரூம்ல இருக்க சொன்னாரு. ஆச்சா? இப்போ நாலாவது ஆள 3வது ரூம்க்கு அனுப்பினாரு. புரிஞ்சுதா? அப்புறம் அஞ்சாவது ஆள 4வது ரூம்லயும், ஆறாவது ஆள 5வது ரூம்லயும், ஏழாவது ஆள 6வது ரூம்லயும் அலாட் பண்ணிட்டாரு. இப்டீக்கா 7 பேரு முடிஞ்சிதா. இப்போ மொதல் ரூம்ல ரெண்டு பேர் இருக்காங்கல்ல, அதுல ஒருத்தரக் கூப்டு கட்சீ ருமுக்கு, அதான், 7வது ரூமுக்கு அனுப்பிட்டாரு. இப்டிக்கா, 8 பேரையும் 7 ரூம்ல ஆளுக்கு தனித் தனியா அலாட் பண்ணிட்டாரு.


அவ்ளோதான். நா வர்ட்டா?

ஆரம்பத்துலேயே சொன்னல்ல டென்ஷன் ஆவாதீங்கன்னு. வாணாம்...வாணாம்.... அப்டி பாக்காதீங்க...ஒடம்புக்கு ஆவாது...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

17 comments:

அகில் பூங்குன்றன் said...

அப்டீக்கீனா அந்த எட்டாம் ஆளு எந்த ரூமாண்ட?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க அகில் பூங்குன்றன். மொத தபா வந்துகிறீங்க.

//அப்டீக்கீனா அந்த எட்டாம் ஆளு எந்த ரூமாண்ட?//

டென்ஷன் ஆவாதீங்க. அவுருதாங்க ஏழாவது ரூம்ல கிறாரு.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Tension Party said...

நான் டென்ஷனே ஆகாம சாந்தமா கேட்கிறென்: இன்னிக்கு ஏன் இந்த கொல வெறி?

Anonymous said...

//டென்ஷன் ஆவாதீங்க. அவுருதாங்க ஏழாவது ரூம்ல கிறாரு.//

There is some confusion in this. Then where is the 7th man?

சின்ன அம்மிணி said...

நல்லா ரூம் போட்டு யோசிக்கிரீங்கப்பா

ஜாம்பஜார் ஜக்கு said...

//There is some confusion in this. Then where is the 7th man?//

என்ன தலீவா கன்பூஸன் அவுருதான் 6வது ரூம்ல கிறாருல்ல?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கீதா said...

மொத்தம் 8 பேர், 7 ரூம்

1ரூம் - 1-ம் நபர், 2-ம் நபர்
2ரூம் - 3ம் நபர்
3ரூம் - 4-ம் நபர்
4ரூம் - 5ம் நபர்
5ரூம் - 6ம் நபர்
6ரூம் - 7ம் நபர்
7ரூம் - இப்ப காலி
8ம் நபருக்கு இடமில்லை

முதல் ரூம்ல இருக்கிற 2-ம் நபர் இப்ப 7ம் ரூமுக்கு வரார்
1ரூம் - 1-ம் நபர்
2ரூம் - 3ம் நபர்
3ரூம் - 4-ம் நபர்
4ரூம் - 5ம் நபர்
5ரூம் - 6ம் நபர்
6ரூம் - 7ம் நபர்
7ரூம் - 2ம் நபர்
8ம் நபருக்கு இப்பவும் இடமில்லை

:) சரியா பாருங்க, கணக்கு தப்பா வருது :)

விக்னேஸ்வரன் said...

யேவ்... இன்னா நம்மாண்ட விளையாட்டு காட்டிரீயா... நான் மேப்பு போட்டு பார்த்துட்டேன்... நீ ஏதோ டாகால்டி வேலை காட்டுர... உண்மைய சொல்லல... இன்னிக்கு நீ கைமாதான் மாப்பு...

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க கீதா.

//சரியா பாருங்க, கணக்கு தப்பா வருது //

இவ்ளோ தீவிரமா யோசிச்சீங்கன்னா எனக்கே டென்ஷனா ஆவுதுல்ல?:)))

உங்க பதிவப் பாத்தேன் டெம்ளேட், எளுத்து ரெண்டுமே அழகாக்கீது.

//நீ வழக்கமாக ஒளியுமிடம்
தெரியாதா எனக்கு??//

கவிதைய ரசிச்சுப் பட்சேன். வுடாம எளுதுங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//உண்மைய சொல்லல... இன்னிக்கு நீ கைமாதான் மாப்பு...//

மாப்பு, வைக்கப் பாக்கிறியே ஆப்பு! எதுவா இருந்தாலும் பேசித் தீத்துகலாம், டென்ஷனாவாத விக்னேசு வாத்யார்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

சின்ன அம்மிணி said... //நல்லா ரூம் போட்டு யோசிக்கிரீங்கப்பா//

:-))))))))))

டோமரு said...

நைனாஜக்கு,
கில்லாடிபா நீ எனக்கு டோட்டலா
9 பேருவராமாறி தெர்துபா.
காலைல தம்மாதூண்டு வுட்டுகினேனா...

ஜாம்பஜார் ஜக்கு said...

//கில்லாடிபா நீ எனக்கு டோட்டலா
9 பேருவராமாறி தெர்துபா//

டென்ஷனாவாதீங்க டோமரு. வந்தது 8 பேரு. சின்ன அம்மிணி சொன்னா மாதிரி ரூம்பு போட்டு யோசிச்சது ஒருத்தரு. மொத்தம் 9. கரீட்டா?

திவா said...

க்ரேட்! எங்கய்யா பிடிச்சீர் இத?
சரி சரி நதி மூலம் ரிஷி மூலம் மாதிரி இது . ஆராயக்கூடாது இல்ல?
;-))

திவா said...

ஜக்கு, atom feed பிரச்சனையாப்பா? வரமாட்டேங்குதே? syndicated அல்லது meant to be read by newsreader ன்னு சொல்லுது

ரசிகன் said...

டென்ஷனே இல்லை.. யோவ் மாமே.. ஏன் இந்த கொலைவெறி?? மக்கா.. கைமா ஆகிடுவே கைமா..

மக்கள்ஸ்,மாம்ஸ்ச என்னிய மாதிரி சாந்தமா ஹாண்டில் பண்ண கத்துக்கோங்க:P

Sanjay Karan said...

Ha..Ha...:-))))))))