எப்டி இருந்த தமிழ்மணம் இப்டி ஆயி பூட்ச்சு!!!

இன்னிக்கி நாள் பூரா நம்ப இன்டர்னெட் மக்காராப் பூட்ச்சா, இப்பத்தான் வலைக் குள்ளார வரவே முடிஞ்சிது. வளக்கம் போல மொத வேலையா தமிழ்மணத்தத் தொறந்தா (ஜிமெயில் கூட அப்புறம் தான்!)... தலீவா, பக்குனு ஆகிப் பூட்ச்சு!

இத்தினி நாளா கூகிளுக்கு அட்த்தது தமிழ்மணம் தான்னுட்டு தமிழ் தெரியாத வெப் டெவலப்பர் ஆசாமிங்களக் கூட கூப்டுக் கூப்டு காம்சிகினு இருந்தேன். இன்னா ஒரு சிம்பிள் டிசைன்ல சூப்பர் பெர்பார்மன்ஸு! நாள் பூரா (மெய்யாலுமே நாள் பூராத்தான்) பாத்துகினே இருந்தாலும் கண்ண உறுத்தாத ஒரு அம்சமான டிசைன்.

யார் கண்ணு பட்டுச்சோ, திடீர்னு இப்டி ஆகிப் பூட்ச்சு! ஒரு பத்து நிமிட் பாக்குறதுக்குள்ளார டயர்டா பூட்டுதுப்பா. கலர் கலராத்தான் கீது ஆனாலும் அந்த க்ளாரிட்டி எங்க பூட்டுது?

நம்ப அண்ணாத்த சொல்றாரு, எதுவுமே மாறின ஒடனே அப்டிதான் இருக்கும். போக போக பளகிப் பூடும்னு. பெரிய மன்ஸன் சொன்னா கரீட்டாத்தான் இருக்கும்.

நீங்க இன்னா சொல்றீங்க?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

2 comments:

நாகு (Nagu) said...

நைனா,

நல்லாத்தானே கீது. க்ளாரிட்டிய உடு. எய்த்தே படிக்க முடியாம இருந்துது இவ்ள நாளா.

நாகு

Syam said...

//நீங்க இன்னா சொல்றீங்க?//

பெரிய மன்ஸன் சொன்னா கரீட்டாத்தான் இருக்கும் :-)