ஜாக்கிரதையா இருங்க‌! உங்களுக்கு ஒரு டெஸ்ட்!!!

ஒரு தபா நம்ம அண்ணாத்த ஒரு மனநல காப்பகத்துக்கு ஒரு வேலையா போயிருந்தப்போ அவருக்கு ஒரு டெளட் வந்து டாக்டர பாத்து இப்பிடி கேட்டாரு:

அண்ணாத்தே: டாக்டர், இப்போ ஒரு பேஷண்டுக்கு நல்லா சரியாப் பூடுச்சுன்னு எப்டி கண்டுகுவீங்க?

டாக்டர்: அதுவா? ஒரு பாத்டப் (bathtub) நிறைய‌ தண்ணிய ரொப்பிடுவோம். அப்புறம் பேஷண்டுக் கிட்ட ஒரு ஸ்பூன், ஒரு கப், ஒரு பக்கெட் மூணையும் கொடுத்து அந்த டப்‍பில் இருக்கும் தண்ணீரை காலி பண்ண சொல்லுவோம்.

அண்ணாத்தே: ஆங்..! புரிஞ்சிகினேன். பேஷண்டுக்கு சரியாப் பூட்டிருந்துதுன்னா பக்கெட்டால தண்ணிய காலி பண்ணுவாரு. ஏன்னா அதான் மத்த ரெண்டையும் விட பெருசு.

*

*

*

*

டாக்டர்: அதான் இல்லை. பேஷண்டுக்கு சரியா போயிருந்தா பாத்டப்பில் இருக்கும் ப்ளக்கைப் புடுங்கி விடுவார். தண்ணி தானா ஓடி போயிடும். உங்களை ஜெனரல் வார்டுல அட்மிட் பண்ண சொல்லட்டுமா இல்ல ஸ்பெஷல் ரூம் வேணுமா?

***
***
***

இப்போ மறுபடியும் ஜக்கு: என்னா, டெஸ்ட்ல நீங்க பாஸ் பண்ணீங்களா, இல்ல உங்களுக்கும் எனக்கு பக்கத்து வார்ட்ல ஏற்பாடு பண்ணிடலாமான்னு பின்னுட்டத்துல சொல்லுங்க தலீவா :-)))


இப்ப‌டிக்கு,
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

14 comments:

Singapoorkaran said...

ஆஹா தெரியாமல் இந்த பக்கம் வந்து மாட்டிக்கிட்டேன் போல இருக்கே. சரி, சரி யாருக்கும் தெரியாமல் ஸைலன்டா ஸ்பெஷல் வார்டில் நமக்கு ஒரு பெட் ஏற்பாடு பண்ணு ஹி..ஹி..

:))

Anonymous said...

யோவ், அப்புறம் எதுக்கையா பக்கெட் குடுத்தீங்க? கன்ப்யூஸ் ஆயிட்சில்ல? அது சரி, அந்த நாலாவது பெட்ல இருக்காரே அவரை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே... ஓ... அவ‌ரா சரி..சரி... நமக்குள்ள இருக்கட்டும்!!!

Anonymous said...

//நாலாவது பெட்ல இருக்காரே அவரை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே... ஓ... அவ‌ரா சரி..சரி... //

I know who is that person :-))

ஜாம்பஜார் ஜக்கு said...

//சரி, சரி யாருக்கும் தெரியாமல் ஸைலன்டா ஸ்பெஷல் வார்டில் நமக்கு ஒரு பெட் ஏற்பாடு பண்ணு //

வாங்க சிங்கப்பூர் தோஸ்த்! ஹிட் கவுண்டர் வேகத்தப் பாத்தா புது வார்டு கட்டோணும் போல கீது.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//அந்த நாலாவது பெட்ல இருக்காரே //

//I know who is that person//

அனானி அண்ணாத்தேங்களா, இன்னிக்கு கும்மிக்கு வேற எடம் கெடக்க்கிலியா? :))) நட்த்துங்க...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எம்.ரிஷான் ஷெரீப் said...

இன்னா நைனா ஜக்கு,
உங்களை என்னிக்கோ எதிர்பார்த்துகினு இருந்தேன்...நான் போகச் சொல்லோ வர்ரீகளே.. :P

துளசி கோபால் said...

எனக்கும் அங்கே ஒரு ஸ்பெஷல் ரூம் போடுங்கப்பா. நெட் கனெக்ஷ்ன் இருக்கணும்.

கொஞ்ச நாளைக்கு ஓய்வெடுத்துக்கறேன் (வீட்டு) வேலைகளில் இருந்து:-)

ஜாம்பஜார் ஜக்கு said...

//இன்னா நைனா ஜக்கு,
உங்களை என்னிக்கோ எதிர்பார்த்துகினு இருந்தேன்...நான் போகச் சொல்லோ வர்ரீகளே.//

இன்னாது, ரிஷான் அண்ணாத்தே நீங்க கெளம்பிட்டீங்களா? :)))

உங்க போட்டொ கலீக்ஷன் (உங்க பதீவுல) பார்த்தேன். மெய்யாலுமே அம்சமா கீது! எனக்கு மட்டும் சீக்ரெட்டா சொல்லுங்க: அது எப்டி வாத்யாரே ஒரே சமயத்தில இத்தினி ப்ளாக் மெய்ன்டெய்ன் பண்றீங்கோ? ஒரு ப்ளாகுக்கே அவனவனுக்கு தாவு தீந்து போவுதே? அசத்துங்க!


இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

Syam said...

//பேஷண்டுக்கு சரியாப் பூட்டிருந்துதுன்னா பக்கெட்டால தண்ணிய காலி பண்ணுவாரு//

உங்க அண்ணாத்த சரியான லூசுதான் போலகீது, தண்ணி மோண்டு ஊத்த யாராவது பக்கட்ட யூஸ் பண்ணுவாங்களா...என்கிட்ட கேட்டு இருந்தா கப் ணு கரீட்டா சொல்லி இருப்பேன்..... :-)

//உங்களை ஜெனரல் வார்டுல அட்மிட் பண்ண சொல்லட்டுமா இல்ல ஸ்பெஷல் ரூம் வேணுமா?//

நாங்கள்ளாம் 10 வருசமா ஸ்பெசல் வார்டுலதான் இருக்கோம்.....

ஜாம்பஜார் ஜக்கு said...

//நாங்கள்ளாம் 10 வருசமா ஸ்பெசல் வார்டுலதான் இருக்கோம்.....//

வாங்க ஸ்யாம்! 10 வருசமா கீறீங்களா, அதான் ஸ்புன்லேர்ந்து கப் வரீக்கும் வந்து கீறீங்க! அண்ணாத்தக் கிட்ட சொல்றேன், ஏதோ ஒத்தருககொத்தர் தொணையா இருக்கும் :))

சமயம் கெடைக்கும் போது ப்ளாகாண்ட வாங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எம்.ரிஷான் ஷெரீப் said...

///உங்க போட்டொ கலீக்ஷன் (உங்க பதீவுல) பார்த்தேன். மெய்யாலுமே அம்சமா கீது! எனக்கு மட்டும் சீக்ரெட்டா சொல்லுங்க: அது எப்டி வாத்யாரே ஒரே சமயத்தில இத்தினி ப்ளாக் மெய்ன்டெய்ன் பண்றீங்கோ? ஒரு ப்ளாகுக்கே அவனவனுக்கு தாவு தீந்து போவுதே? அசத்துங்க!///

இன்னா நைனா இப்படிக் கேட்டுப்புட்டீய...?நானென்ன நாலஞ்சு கண்ணாலமா கட்டினுகீறேன் மாசத்துக்கு பதிவொண்ணாச்சும் எழுதாமகீறதுக்கு...?ஏதோ இங்க ஆபிஸாண்ட சும்மா வேல பார்க்குற மாதிரி ஷோ காட்டிக்கினு ஒண்ணு,ரெண்டு பதிவு எழுதுறதுக்குள்ள இருக்குற தாவு எல்லாமே தீர்ந்துட்து நைனா..இதுல நீங்க வேற சீக்ரெட்டு,பீடின்னுக்கினு..
அதுல நீங்க வேற கட்சீல அசத்துங்கன்னு வாழ்த்திட்டீக..நன்றி அண்ணாத்தே..இன்னா சொல்றதுன்னு யோசிச்சுக்கினுகீறேன்..
ஜாம்பஜார் ஜக்கு வாழ்க :D

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஏதோ இங்க ஆபிஸாண்ட சும்மா வேல பார்க்குற மாதிரி ஷோ காட்டிக்கினு //

ஷெரீப் அண்ணாதே, இந்தா மாதிரிதான் ஒரு ஆஃபீஸ்தான் ரொம்ப நாளா தேடிக்கினு கீறேன் ஆப்ட மாட்டேங்குது! இருந்தாலும் மெய்யாலுமே அசத்துங்க! நானும் அடிக்கடி அந்தப்பக்கம் வந்துகினு போய்கினு கீறேன்!

//அண்ணாத்தே..இன்னா சொல்றதுன்னு யோசிச்சுக்கினுகீறேன்..
ஜாம்பஜார் ஜக்கு வாழ்க //

மன்ஸ டச் பண்ட்ட தலீவா!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வால்பையன் said...

முதல்ல நீங்க எந்த வார்டுல இருக்கிங்கன்னு சொல்லுங்க ஆரஞ்சு பழம் வாங்கியாரனும்

வால்பையன்

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க வால்பையன் அண்ணாத்தே!

//முதல்ல நீங்க எந்த வார்டுல இருக்கிங்கன்னு சொல்லுங்க ஆரஞ்சு பழம் வாங்கியாரனும்//

வரச்சொல்ல ஜாக்கிரதையா வாங்க. ஆரஞ்சு பழத்துக்கு வேற தனீயா டெஸ்ட் வச்சுகிறாங்க. கிலோல வாங்கணுமா லிட்டர்ல வாங்கணுமான்னு! தப்பா சொல்டீங்க... அப்டியே உங்களையும் அட்மிட் பண்ணிடுவாங்க :))))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு