அறை எண் 306 ல் அண்ணாத்த!!!

ஒரு தபா நம்ப‌ அண்ணாத்த ஆஃபீஸ் வேலையா வெளியூர் போயிருந்தப்ப அவருக்கு ஒரு படா ஹோட்டல்ல ரூம் போட்டிருந்தாங்க. நைட் ரும்ல தங்கிட்டு காலீல ஆஃபீஸுக்கு வர்றதா ஏற்பாடு.

ஆனா காலீல 10 மணி ஆகியும் அண்ணாத்த ஆஃபீஸ் வந்து சேராததால அல்லாரும் ரொம்ப டென்ஷன் ஆகிப் பூட்டாங்க. கட்சீல ஹோட்டலுக்கு போன் பண்ணிப் பாத்தா அண்ணாத்த பயங்கர கோவமா கீறாரு.

இன்னா மேட்டர்னா, அந்த ரூம்ல 3 கதவு இருந்து கூட அண்ணாத்தயால ரூம விட்டு வெளில வர முடியல. ஏன்?

விஷயம் இதான்: மொத கதவு துணி வைக்கிற அலமாரி கதவு. அது வளியா வெளில வர முடியுமா? ரெண்டாவது கதவு பாத்ரூம் கதவு. ஆச்சா, அதுவும் வேலைக்கு ஆவாது. சரியா? இந்த மூணாவது கதவு இருக்கு பாரு அத்தோட‌ கைப்புடில "Please Do Not Disturb" அப்டீன்னு ஒரு அட்டை தொங்கிகினு கீதுபா.

நீயே சொல்லு வாத்யார், நம்ப அண்ணாத்த எப்டி வெளில வருவாரு?

(சரீ, சரீ, கேள்விக்கு பதில் தெரீலேன்னா உட்ற‌ வேண்டிது தான? இதுக்கெல்லாம் ஏன் இப்டி டென்ஷன் ஆயி பல்ல நற நறன்னு கடிக்கிறீங்க?)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

16 comments:

U.P.Tharsan said...

சூப்பராகீதுப்பா

U.P.Tharsan said...

சூப்பராகீதுப்பா

Gokulan said...

அண்ணாத்த.. இன்னிக்குத்தான் உங்க சைட்டுக்கு வந்தேம்பா..

சும்மா ஜோரா கீதுபா!!!

கலக்கு வாத்யாரே...

வம்புதேவன் said...

ஜக்குண்ணா, எப்டிங்ணா இப்டியெல்லாம் யோசிக்றீங்ணா? முடியலண்ணா!

ரசிகன் said...

:)))))

ஜாம்பஜார் ஜக்கு said...

//சூப்பராகீதுப்பா//

வாங்க தர்ஸன் அண்ணாத்த. ஒரு தபாக்கு ரெண்டு தபா சொல்லிகிறீங்க. அடிக்கடி வூட்டாண்ட வாங்க!

//சும்மா ஜோரா கீதுபா!!!கலக்கு வாத்யாரே...//

டாங்ஸ் கோகுலன் வாத்யார். நல்லா கீறீங்களா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எம்.ரிஷான் ஷெரீப் said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
இன்னா நைனா,சும்மா ஷோக்கா ஒரு கத சொல்லப்போறீங்கன்னு நென்ச்சு உள்ள வேல அல்லாத்தயும் போட்டுட்டு ஓடிவந்தா இப்படி மொக்கை பண்ணிட்டியளே..

அது சரி..அங்கிட்டு தான் வெயில் ஜாஸ்தியாம்ல..?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க ரசிகன் ;)))
வாங்க வம்புதேவன் வாத்யார்!

பேரே ஒரு மார்க்க மாத்தான் கீது!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

நாகு (Nagu) said...

நைனா,

ரொம்ப ரூம் போட்டு ரோசிச்சா இப்படிதான் ஆவும். அப்பாலிக்கா ரூம்லியே மாட்டிக்குவே. :-)

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க ஷெரீப்பு அண்ணாத்த,

//ஷோக்கா ஒரு கத சொல்லப்போறீங்கன்னு நென்ச்சு உள்ள வேல அல்லாத்தயும் போட்டுட்டு ஓடிவந்தா//

எம் மேல இம்மாம் நம்பிக்க வச்சு கிறீங்களா...ரொம்ப ஃபீல்ங்ஸ் ஆயிட்சுப்பா :)))

//அங்கிட்டு தான் வெயில் ஜாஸ்தியாம்ல//

ஏன் கேக்றீங்கன்னு புரியுது. அங்கிட்ட‌ விட இங்கிட்டு வெய்யில் கம்மிதான். வந்துருங்க :))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க நாகு,

//ரொம்ப ரூம் போட்டு ரோசிச்சா இப்படிதான் ஆவும். அப்பாலிக்கா ரூம்லியே மாட்டிக்குவே//

அண்ணாத்த ரூம்லேர்ந்து வெளில வர்த்துக்கு வளி கேட்டா, என்னியும் மாட்டி உட்றதுக்கு வளி சொல்லிகிறீங்க... நல்லாருங்க :))))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவா said...

:-))))))))))

டோமரு said...

ஒரு வாரம் ஊருக்கு போவக்கூடாதே.
கேக்கஆளில்லையா?
(வெகேஷன்ல நெட்ல கை வச்சா,டைவர்சாம்பா,.....)
அதான் வந்துட்டோமில்ல.
என்னாதிது? சின்னப்பிள்ளைதனமாஇருக்கு?

ஜாம்பஜார் ஜக்கு said...

//அதான் வந்துட்டோமில்ல.
என்னாதிது? சின்னப்பிள்ளைதனமாஇருக்கு?//

வாங்க டோமரு! சந்தோஷமாக் கீது! ஒரு வாரமாக் காணுமா, நீங்களும் எதுனாச்சும் ரூம் உள்ளாற மாட்டிக்கினீங்களோன்னு ஒரே ரோசனையாப் போச்சு!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

தமிழன்... said...

:))))

ஒரு முடிவோடதான் வந்திருக்காப்புல...:)

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க தமிழன் அண்ணாத்த,

//ஒரு முடிவோடதான் வந்திருக்காப்புல...//

யாரு, நீங்க‌ளா? என்ன‌ முடிவா இருந்தாலும் ந‌ம‌க்குள்ள‌ பேசி தீத்துப்போம், டென்ஷ‌னே வாணாம்!

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு