Breaking News! சர்தார்ஜி ஜோக் இனி உலகில் கிடையாது!

அத்தியாயம் 1 - பான்டாவின் சோகம்

ந‌ம்ப‌ பான்டா சிங் அண்ணாத்தைக்கு ரொம்ப வ‌ருத்த‌மா பூட்சி. இது இன்னாடா எங்கப் போனாலும் ச‌ர்தார்ஜி ஜோக், ச‌ர்தார்ஜி ஜோக்னு சொல்லி ந‌ம்ம‌ள‌ ரொம்ப ச‌த்தாய்கிறாங்க‌ளே இதுக்கு எப்டினாச்சும் ஒரு முடிவு க‌ட்டணும்னு ரொம்ப‌ யோசிச்சிகினே இருந்தாரு. அதுவும் இந்த‌ இன்ட‌ர்நெட் வந்த‌துக்கு அப்பால‌ ந‌ம்ப‌ நெல‌ம‌ ரொம்ப‌ மோச‌மா பூட்சேன்னு ரொம்ப பேஜார் பட்டுக்கினாரு.

அத்தியாயம் 2 - கடவுள் வந்தார்

எவ்ளோ யோசிச்சும் வேற‌ வ‌ழி ஒண்ணும் தோணாத்னால‌, ச‌ரி நம்ப பெரிய அண்ணாத்த‌ க‌ட‌வுள் கிட்ட‌யே கேட்டுக்க‌லாம்னு க‌டுமையா... அது இன்னா... ஆங்...பிரார்த்த‌ன‌ ப‌ண்ண ஆர‌ம்பிச்சாரு. ஒரு வார‌ம் ஆச்சு. அதுக்குமேல‌ க‌ட‌வுளுக்கே பொறுக்க முடியாம ந‌ம்ப பான்டா அண்ணாத்த‌ முன்னால‌ வ‌ந்துட்டாரு! "உன் பக்தியை மெச்சினோம், இன்னா வேணும் கொளந்தாய்னு" சும்மா ஏபி நாகராஜன் படம் கணக்கா பான்டாவப் பாத்து கேட்டாரு.

அத்தியாயம் 3 - மறைந்தன சர்தார்ஜி ஜோக்குகள்

பான்டா அண்ணாத்த‌ இதுக்குதான‌ காத்துகினு இருந்தாரு! "ஆண்ட‌வா இனிமே இந்த‌ ஒல‌க‌த்துல‌ ஒரு ப‌ய‌ ச‌ர்தார்ஜி ஜோக்னு வாயத்‌ தொற‌க்கக் கூடாது. அது மாத்ரம் இல்ல... த‌மிழ்ம‌ண‌ம், ப‌திவு, இன்ட‌ர்னெட்டு, புக், ரேடியோ, டிவி, சினிமா அல்லாத்ல‌யும் இதுவரைக்கும் இருக்குற‌ ச‌ர்தார்ஜி ஜோக் அல்லாம் இந்த‌ நிமிட்லேர்ந்து காணாம‌ பூட‌ணும்" அப்டீன்னு கேட்டுகினாரு. ஆண்டவன் "அப்டியே ஆகட்டும்" அப்டீன்னாரு.

அடுத்த‌ நிமிட் இந்த உல‌க‌த்லேர்ந்து எல்லா ச‌ர்தார்ஜி ஜோக்கும் காணாம‌ பூட்ச்சு. ந‌கைச்சுவை ஒல‌கம் அப்டியே ...இன்னாது...ஸ‌த‌ம்பிச்சு நின்னு போச்சு. "இனிமே ஈரேழு ப‌தினாலு ஒல‌க‌த்ல‌யும் ந‌கைச்சுவையின் எதிர்கால‌ம் இன்னா ஆவுமோ"னு அல்லாரும் திகைச்சு பூட்டாங்க‌...

~தொட‌ரும்.

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

19 comments:

ரிலாக்ஸிங் said...

ஆ..!!!!!! அப்பாலிக்கா இன்னா ஆச்சி?

Anonymous said...

//அப்பாலிக்கா இன்னா ஆச்சி?//

Repeateaaaay!!!

அபூர்வ ராகம் said...

இந்த கதை எப்படி? அதன் முடிவெப்படி...? (சஸ்பென்ஸ் தாங்கலை, சீக்கிரமா சொல்லுங்க ஜக்கு சார்!)

Sen22 said...

:)))))

//ஆண்ட‌வா இனிமே இந்த‌ ஒல‌க‌த்துல‌ ஒரு ப‌ய‌ ச‌ர்தார்ஜி ஜோக்னு வாயத்‌ தொற‌க்கக் கூடாது. அது மாத்ரம் இல்ல... த‌மிழ்ம‌ண‌ம், ப‌திவு, இன்ட‌ர்னெட்டு, புக், ரேடியோ, டிவி, சினிமா அல்லாத்ல‌யும் இதுவரைக்கும் இருக்குற‌ ச‌ர்தார்ஜி ஜோக் அல்லாம் இந்த‌ நிமிட்லேர்ந்து காணாம‌ பூட‌ணும்" அப்டீன்னு கேட்டுகினாரு. ஆண்டவன் "அப்டியே ஆகட்டும்" அப்டீன்னாரு.//

எங்களுக்கு Phone ஒன்னே போதும் Boss...

திவா said...

ஆ, வாத்யாரே! மர்ம கத எளுதறீயா? ஆவட்டும்! நல்லாகீது.

கீதா சாம்பசிவம் said...

mmmmmmmm அப்புறமா என்னனு எப்போ சொல்லுவீங்க????

PPattian : புபட்டியன் said...

அப்போ இந்த பதிவும் காணாம பூடுமா வாத்யாரே?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

டோமரு said...

என்னாண்ட மட்டும் ஒண்ணேஒண்ணு கீது.சொல்டா.

ஒரு சர்தார்ஜி ஒயிப் மேல சந்தேகப்பட்டுக்கினு pcoலருந்து வூட்டுக்கு போன் பண்ணினான்,...

சரி இன்னாத்துக்கு வுடு...

Mathivaanan said...

ஜக்கு சார்,

What is the secret of all your posts going to சூடான இடுகைகள் as soon as they are published?

:-))))

Anonymous said...

kalakkuriye thaliva!

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

திவா said...

இன்னா வாத்யாரே ஆளே காணோம்!

தமிழ்ப்பறவை said...

எங்க போயிட்டீங்க.. ஆளையே காணோம்... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்...

கீதா சாம்பசிவம் said...

என்ன ஆச்சு ஜக்குவிற்கு?? ரொம்ப நாளா ஆளே காணோம்???

திவா said...

வா வாத்யாரே பதிவாண்டே, நீ வராங்காட்டி நா வுடமாட்டேன்! ஜாம்பஜார் ஜக்கு நா "மைலாபூரு" சொக்கு!

பதிவு போடாமலே நிறைய hit வாங்கிற ஆசாமி நீராதான் இருக்கணும். நெசமா Hit வாங்காம பாத்துக்குங்க. பதிவு போடலேனா அதான் நடக்கும். :-)))

எம்.ரிஷான் ஷெரீப் said...

ரொம்ப நாளாக் காணோமே உங்களை..எப்படியிருக்கீங்க தல ?

Namakkal Shibi said...

ஓ! இந்த கதையின் கடைசிப் பகுதி கடவுள் கொடுத்த வரத்தின் படி காணாம பூடுச்சா!

:((

(அப்போ அந்த கடைசி பகுதி பகுதிலே அவ்ளோ பெரிய காமெடி இருந்திருக்கும்னு நினைக்கேன்)

Zero to Infinity said...

APR08 - 9 POSTS
MAY08 - 8 POSTS
JUL09 - 15 POSTS
AUG09 - 26 POSTS
SEP09 - 19 POSTS
OCT09 - 12 POSTS
NOV09 - 9 POST
DEC09 - 3 POST
JAN10 - 11 POST
MAR10 - 7 POST
APR10 - 4 POST

AFTER DOING SEVERAL REGRESSION ANALYSIS...IT SEEMS YOUR OFFICE WORK LOAD
OR YOUR LAZINESS FOLLOWS "HACKSAW" PATTERN.

ANOTHER COINCIDENCE...IF I PLOT YOUR NO OF POST PER MONTH CURVE...
IT IS FOLLOWING CRUDE OIL PRICE (APR08 TO MAR10)AT FEW MONTH TIME DELAY.

RESEARCH WILL CONTINUE....MORE RESULTS WILL COME IN FUTURE...FOR THAT YOU SHOULD WRITE REGULARLY....