இதுக்கு மட்டும் பதில் சொல்டீங்க, நீங்க பெரிய ஆளுதான்!

வாத்யார் வணக்கம். போன தபா நெறய பேரு கேள்வியப் படிச்சு கொஞ்சம் பேஜார் ஆய்ட்டத்துனால‌ இந்த தபா ரொம்ப சுலுவா கேட்டுக்கிறேன். சும்மா அட்ச்சி காலி பண்ணுங்க.

அல்லா கேள்விக்கும் யாரு கரீட்டா பதில் சொல்றாங்கன்னு பாக்கலாம்.

1. நம்ம சிதம்பரம் சிவசாமிக்கு சராசரியா அல்லாருக்கும் எத்தினி கண்ணு இருக்குமோ அத்த விட கொஞ்சம் ஜாஸ்தியா கீது. அப்டீன்னா அவுருக்கு மொத்தம் எத்தினி கண்ணு? இன்னா காரணம்?

2. ஒரு புக் ஷெல்புல 100 புக் வரீசயா அடுக்கி கீது. ஒவ்வொரு புக்கும் 3 இன்ச் தடிமனாக் கீது. அப்டீன்னா மொத புக் மொத பக்கத்லேர்ந்து கட்சீ புக் கட்சீ பக்கம் வரீக்கும் எவ்ளோ நீளம்?

3. இந்த இங்லீஷ் எளுத்துகளுக்குள் இன்னா ஒத்துமை?

A X H I M O W T V

4. எங்க ஊரு மணிக்கூண்டு ஆறு மணிக்கு ஆறு தபா மணி அடிச்சுது. அதுக்கு அஞ்சு செகண்ட் ஆச்சுது. அப்டீன்னா 12 மணிக்கு எத்தினி தபா மணி அடிக்கும். அதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்?

5. இப்போ இப்டி வச்சுக்குங்க:

1=5
2=6
3=7
4=8 அப்டீன்னா
5=?

6. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தினி கால்?


அவ்ளோத்தான். இன்னா ரெடியா. ஆரம்பிங்க...ஜூட்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


கரீட்டான‌ விடைகள்: (மே 5ம் தேதி சேர்த்தது):

1. ரெண்டு கண்கள். சராசரியாப் (average) பாத்தா மன்ஸனுக்கு ரெண்டு கண்ணுக்கு கொஞ்சம் கம்மியாத்தான் வரும் (பார்வையில்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கிறதுனால‌).

2. 294 இன்ச் (98 x 3). மொதல் புக்கோட மொதல் பக்கம் ரெண்டாவது புக்கை ஒட்டி இருக்கும்! அதே மாதிரி 100வது புக்கோட கடேசி பக்கம் 99வது புக்கை ஒட்டி இருக்கும். (டவுட்டா இருந்தா ஒரு நாலு புக்க ஷெல்புல அடுக்கி வச்சு பாருங்க ஆச்சரியமா இருக்கும்!).

3. கண்ணாடில பாத்தாலும் அதே மாதிரி தெரியும்.

4. 12 தபா அடிக்கும் (இதுல என்ன வாத்யார் சந்தேகம்?!). 11 செகண்டு ஆகும். (12 தபா அடிக்கச் சொல்ல, நடூல 11 கேப் வர்தில்ல, அதான் கணக்கு).

5. 5=1 (அதான் மொதல்லயே 1=5ன்னு சொல்லிட்டமில்ல?!)

6. 8 கால் தான். (இதுல இன்னா தலீவா டவுட்டு? தைரியமா சொல்ல வாணாம்?!!!)


ஆறு கேள்விக்கும் கரீட்டா பதில் சொன்னது...
ஒர்த்தரே ஒர்த்தர் தான்...... And the First Prize goes to...

திவா (அல்லாரும் கண்டிப்பா ஜோரா ஒரு தபா கைத்தட்டுங்க!)

கொஞ்சம் கொறச்சலா சொன்னவுங்க:

கப்பி பய‌
ப்ரியா
ரிஷான் ஷெரீப்
யாரோ ஒருவ‌ன்
பினாத்த‌ல் சுரேஷ்
ம‌ரைக்காய‌ர்
ல‌தா
ம‌துவ‌த‌ன‌ன் மெள‌
ப‌டிப்ப‌வ‌ன்
டோம‌ரு

அனானி
R. சுதாகர்

அல்லாருக்கும் ஜ‌க்குவின் அன்பான‌ வாழ்த்துக்க‌ள்! கூடிய‌ சீக்ர‌ம் ம‌றுப‌டியும் ச‌ந்திக்க‌லாம்! வ‌ர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

50 comments:

பெரிய ஆளு said...

ஐயா, ஜக்கு. எப்படியப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? தலைய சுத்துது. ஒரு டம்ளர் தண்ணி குடிச்சுட்டு வந்து யோசிக்கிறேன். (அதுக்குள்ள எவனாவது சரியான பதிலை எழுதாம இருக்கணும்!!!!)

கப்பி பய said...

//இதுக்கு மட்டும் பதில் சொல்டீங்க, நீங்க பெரிய ஆளுதான்!"//

கரீட்டா சொன்னாலும் ராங்கா சொன்னாலும் பெரிய ஆளுதானா?? இது ஷோக்கா கீதுபா :))

ஜாம்பஜார் ஜக்கு said...

//கரீட்டா சொன்னாலும் ராங்கா சொன்னாலும் பெரிய ஆளுதானா?? இது ஷோக்கா கீதுபா//

வாங்க கப்பி பய அண்ணாத்தே! மொத தபா வந்துகிறீங்க. வரும்போதே கொலவெறியோட தான் வரீங்க. நல்லா இருங்க‌ :))))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கப்பி பய said...

சாரிபா...மொத கமெண்டு போட்டு பதில் சொல்றதுக்குள்ள டேமேஜர் டேமேஜ் பண்ண வந்துக்கினான்


1. சிதம்பரம் சிவசாமியே யாருன்னு தெரியாது..இதுல அவருக்கு எத்தினி கண்ணுனு எனக்கு எப்டிபா தெரியும்?? அல்லாருக்கும் கீறமாரி அவருக்கும் ரெண்டு தான் இருக்கனும்..கரீட்டா?

2. இத்தினி புக்கு கீதே..மொத புக்குக்கும் கட்ச்சீ புக்குக்கும் அட்டை எம்மாந்தடின்னு சொல்லவேல்லியே கண்ணு? அப்படின்னா (100*3-மொத புக் முன் அட்ட தடிமனு - கட்சீ புக் பேக்சைடு அட்ட தடிமனு)


3. இந்த எலுத்து அல்லாமே இங்கீலீசு எலுத்துங்கோ.. இது தெரியாதா பாஸு


4. பதினோரு செகண்டு ஆவும்பா

5. அதான் மொதல்லயே சொல்லிக்கினியே 5=1ன்னு

6. எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால் தான்..ஆனா எட்டுக்காலுக்கு ஒரே காலு


ஏதோ இல்லாத ப்ரெயின ஊஸ் பண்ணி கஷ்டப்பட்டு ஆன்சர் சொல்லிகீரென்..கரீட்டாயிருந்தா நீயா பாத்து எதுனா ப்ரெசெண்டு கொடு...ராங்குன்னா அப்டியே ஜகா வாங்கிக்கிரேன்

ஜாம்பஜார் ஜக்கு said...

//சாரிபா...மொத கமெண்டு போட்டு பதில் சொல்றதுக்குள்ள டேமேஜர் டேமேஜ் பண்ண வந்துக்கினான்//

அங்கியுமா? உங்க பதில அப்டியே வச்சுக்கிறேன். பாக்கி சனங்க இன்னா சொல்றாங்கன்னு பார்க்கலாம் :))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வால்பையன் said...

இந்த ஆறாவது கேள்விக்கு தான் விடை தெரியல!!

முத நாலு கேள்வி உண்மையிலேயே தாவு தீருது

வால்பையன்

ப்ரியா said...

1. சிவன் சாமிக்கு நெற்றிக்கண்ணோட சேத்து 3 கண்ணு.
2. 7.62 மீட்டர்
3. Symmetric. கண்ணாடிலயும் அதே எழுத்து தான் தெரியும்.
4. 12 தபா. 11 செகண்ட்.
5. 9
6. 1 (எழுத்துல இருக்கற 'கா')

திவா said...

1. மூனு. நெத்திக்கண்ணு ஒன்னு வச்சிகீறாரு.

2. முத புக் லெப்ட்லே இருந்தா 294 இன்சி. ரைட்லே இர்ந்தா 300. அப்பறம் அல்லா புக்கும் நேராதான் அடுக்கி இருக்காங்க அப்படி அசூம் பண்ணிக்கிறேந் சொல்லைனாலும்.

3. கண்ணாடிலே பாத்தாலும் சரியாதான் தெரியும்.

4. 12 தபா. 11 செகன்டு

5. 1 அதான் முன்னாலியே சொல்டியேபா!

6. ரொம்ப கஸ்டமாகீதே??ம்ம்ம்ம். ஆங்! எட்டு கரீட்டா?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க ப்ரியா.

நீளம்கிறதால அளகா மீட்டர்ல கன்வர்ட் பண்ணி சொல்லிகிறீங்க! இஸ்கூல் காலத்துல நல்லாப் படிச்சுக் கிறீங்கனு தெரிது :-))) அப்புறம், நம்ப சிவசாமி வாத்யார் டெஸ்பாட்ச் கிளார்க் வேல பாக்குறாரு அப்டீன்னு சொன்னா இதே பதில சொல்லுவீங்களா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க திவா வாத்யார்.

ஒரு தபா பிரியாக்கு சொன்ன பதில நீங்களும் பாத்துருங்க! ரெண்டாவது கேள்விக்கு நீங்க "அசூம்" பண்ணது கரீட்டு தான்.


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

The first and last questions are really tricky! Me the thinking...

விக்னேஷ்வரன் said...

கண்ண கட்டுதே...

திவா said...

இன்னாப்பா பேஜாரா பூட்சு!
கை ன்னு சொல்லி இருந்தா வழுக்கை பொக்கை ன்னு சொல்லிஇருப்பேன். ம்ம்ம்ம் ரோசிக்கலாம்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

இன்னா வாத்யாரே..எப்டிருக்கீய?

ரொம்ப கஷ்டமான கொஸ்டீனெல்லாம் கேட்டு பேஜார் பண்ணிக்கிட்டிருக்கீக..
மன்சுல பட்டத விடையாச் சொல்றேன்..
சரின்னா ட்ரீட் தரணும்..ஒத்துக்குறீகளா?

1.அவருக்கு 22 கண்ணுதான்.
நான் 20 நகக் கண்ணையும் சேர்த்துச் சொல்லிப்புட்டேன் :P

2.நீளம் 298 இன்சுன்னு நினைக்கிறேன்.முதல் புக் முதல் அட்டைக்கும் கட்சீ புக் கட்சீ அட்டைக்கும் நீளம் 2 இன்ச் கழிச்சுட்டேன்.

3.அதுங்களுக்குள்ள இன்னா ஒத்துமைன்னா அதுங்களை மேலிருந்து கீழாக சரி பாதியா பிரிச்சா கண்ணாடி விம்பம் மாதிரி சரி பாதியா பிரிக்கலாம்.கரீக்டா வாத்யாரே?

4.12 மணிக்கு ஒரு பெல்லுதான் அடிக்கும் வாத்யாரே...அதுக்கு ஒரு செக்கன் வச்சுப்போமா?

5.அதான் 5=1 ன்னு ஸ்டார்ட்லயே சொல்லிட்டீங்களே..பேச்சு மாறமாட்டியளே?

6.எட்டுக்கால் பூச்சின்னு சிலந்தியத் தானெ சொல்றீங்க? அப்போ எட்டுக் கால்தான் வாத்யாரே.. :)

திவா said...

ஆகா
3.
மாலைக்கண் மூனாவது
கண்ணுலபிர்ச்சினை கீது.
சர்தானா?

ஜாம்பஜார் ஜக்கு said...

//அவருக்கு 22 கண்ணுதான்.
நான் 20 நகக் கண்ணையும் சேர்த்துச் சொல்லிப்புட்டேன்//

ரிஷான் அண்ணாத்த, இப்டியெல்லாம் யோசிக்க எதுனாச்சியும் ஸ்பெஷலா ட்ரெய்னிங் எடுத்துக்கினிங்களா? ஒரு நிமிட் ஆ...டி பூட்டேன் :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

யாரோ ஒருவன் said...

1) 2 கண்ணு, ஏன்னா எல்லாரோட கண்ணோட சராசரி நிச்சயமா 2 இருக்காது (பார்வையற்றவர்கள், 1 கண் உள்ளவர்கள்)

2)300 இன்ச்? (முதல் பக்கம், கடைசிப்பக்கம் சரியாக இருந்தால்)

3) ரிவர்ஸ்ல பார்த்தாலும் ஒரே மாதிரிதான் தெரியும்

4) 12 மணி, 10 செகண்ட்

5) 5 = 1

6) 8

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க யாரோ ஒருவன்! மொத கேள்விக்கு ச்சும்மா நச்சுன்னு பதில் சொல்லிகிறீங்க! சபாசு! ரெண்டாவது கேள்வி இன்னும் ஒரு தபா பட்சு பாத்துருங்க :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Saidapet Crane said...

//இந்த தபா ரொம்ப சுலுவா கேட்டுக்கிறேன்//

Hello! Where on earth do you find such interesting questions?

///உண்மையிலேயே தாவு தீருது//

Let me see if somebody can solve this, hi..hi :-))))))

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க சைதப்பேட்டை கொக்கு!

//உண்மையிலேயே தாவு தீருது
Let me see if somebody can solve this, hi..hi //

அல்லாரும் ரொம்ப ரூம்பு போட்டு யோசிக்கிறாங்களோன்னு தோணுது. சும்மா நேரா யோசிச்சா ரொம்ப ஈஜியா கண்டுபுடிச்சிடலாம் :)))))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

The answer for the last question is 8..!!!!!!!!!!

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க அனானி,

//The answer for the last question is 8..!!!!!!!!!!//

ஜரூராத்தான் சொல்றீங்களா? மத்த கேள்வியெல்லாம் சாய்ல உட்டுடீங்களா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

3. இந்த இங்லீஷ் எளுத்துகளுக்குள் இன்னா ஒத்துமை?

A X H I M O W T V

answer : MIRROR

ANBUDAN
KRP
http://visitmiletus.blogspot.com/

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க KRP (visitmiletus),

நல்லா கீறீங்களா? ஒரு கேள்விக்கு கரீட்டாத்தான் சொல்லிகீறீங்க. அது இன்னாமோ இது வரீக்கும் யாரும் எல்லா கேள்விக்கும் கரீட்டா சொல்லல. பாக்கலாம் :)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவா said...

ஆகா
அவருக்கு கண்ணு ரெண்டுதாம்பா.

சராசரி பாத்தா - சில பேரு ஒத்த கண்ணு சில பேர் ரெண்டும் இல்லாம இருப்பாங்க இல்ல.- ரெண்டுக்கும் கொறவா வரும்.
சர்தானா நைனா?

ஜாம்பஜார் ஜக்கு said...

(மறுபடியும்) வாங்க திவா!

இந்த தபா மொத கேள்விக்கு "நெத்தி" அடியா பதில் சொல்டீங்க! சூப்பர் வாத்யார்!

இப்ப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவா said...

அல்லாம் கபாலி கணக்கு. டாங்க்ஸ்பா!

ஜாம்பஜார் ஜக்கு said...

வால்பையன் அண்ணாத்தே,

//இந்த ஆறாவது கேள்விக்கு தான் விடை தெரியல!!
முத நாலு கேள்வி உண்மையிலேயே தாவு தீருது //

அப்போ 5வது கேள்வி இன்னா ஆச்சு? விட மாட்டம்ல?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பினாத்தல் சுரேஷ் said...

லேட்டா வந்தாலும் லேட்டா வந்தோமில்ல!

1.சிதம்பரம் சிவசாமிக்கு ரெண்டு கண்ணுதான். கண்ணே இல்லாதவங்களும் இருக்கறதால, ஆவரேஜ் ரெண்டை விடக் கம்மியாதான் இருக்கும். (எனக்கு கூட ஆவரேஜை விட அதிகம்தான். ரம்பாவுக்கு ஆவரேஜை விட கொஞ்சம் கம்மியா இருக்கலாம்.)

2. 297 இஞ்ச் னு சொல்லலாம்னு பாத்தா, அடுக்கி வச்சிருக்கா, நிமித்தி வச்சிருக்கா ன்னு எதாச்சும் கேம் காட்டுவீங்களோன்னு தோணுதே:(

3. மிரர் இமேஜ்லயும் சரியா படிக்க முடியற எழுத்துகள்.

4. 12 மணிக்கு 12 தபா அடிக்கும், 11 செகண்டு ஆவும்.

5. 5=1 அதான் மொதல்லேயே சொன்னீங்களே

6. எட்டு கால் உள்ள எட்டுக்கால் பூச்சிக்கா, ஆறு கால் உள்ள எட்ட்டுக்கால் பூச்சிக்கா?

ஜாம்பஜார் ஜக்கு said...

//லேட்டா வந்தாலும் லேட்டா வந்தோமில்ல!//

வாங்க பினாத்தல் வாத்யார் :))

//எனக்கு கூட ஆவரேஜை விட அதிகம்தான். ரம்பாவுக்கு ஆவரேஜை விட கொஞ்சம் கம்மியா இருக்கலாம்//

ஆஹா! அது எப்டி அண்ணாத்தே வந்த ஒடனே வேலைய கபால்னு ஆரம்பிச்சுறீங்க? :)))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

மரைக்காயர் said...

1. அல்லாருக்கும் சராசரியா ரெண்டுக்கும் குறைச்சலாத்தான் கண்ணு இருக்கும். ஏன்னா, சிலருக்கு ஒரு கண்ணு, சிலருக்கு ஒண்ணரைக் கண்ணு(?) எல்லாம் இருக்குமே. கூட்டிக் கழிச்சுப் பாத்தா, சராசரி ரெண்டுக்கும் கீழதான் இருக்குது. அத்னால சிதம்பரம் சிவசாமிக்கு சராசரியை விட கொஞ்சம் கூடுதலா ரெண்டு கண்ணு இருக்குது!

2. 300 இன்ச்ல மொத புக்கோட மொத அட்டையையும் கட்சீ புக்கோட கட்சீ அட்டையையும் கழிச்சுக்கினா அதுதான் விடை.

3. இந்த எளுத்துக்களை கண்ணாடியில பார்த்தாலும் அப்படியேத்தான் தெரியும்

4. 12 தபா 11 செகண்டு

5. 5=1

6. எட்டுக்கால் பூச்சியிலே ஒர்ரே ஒர்ரு துணைக்கால்தான் இருக்குது

சர்த்தானா அண்ணாத்தே?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க மரைக்காயர் அண்ணாத்த, மொதல் தபா நம்ம வூட்டாண்ட வந்துகிறீங்க. நல்லாருக்கீங்களா?

ந‌ல்லா சொல்லிகிறீங்க‌. இந்த‌ 2வ‌து கேள்விய‌ ம‌றுப‌டியும் ஒரு லுக் உட்டு‌ வேற‌ எதுனாச்சும் தோணுதான்னு பாருங்க‌.

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

லதா said...

1. நெற்றிக்கண்ணைச் சேர்த்து 3 கண்கள் என்று எடுத்துக்கொள்வதா ? இல்லை பார்வதிக்கு 50 % "இட" ஒதுக்கீடு கொடுத்துவிட்டதால் ஒன்றரை கண்தான் என்று கூறுவதா என்று தெரியவில்லை :-(

2. 300 இன்ச் / 297 இன்ச் / 294 இன்ச் ( depending upon the four possible ways the first and the last books be placed with the assumption the first page and last pages face the extreme outside or touch the next book )

3. அந்த எழுத்துகளைத் தனித்தனியாகக் கண்ணாடியில் பார்த்தாலும் இடவலமாற்றம் இருந்தாலும் அதே எழுத்துகளாகத் தெரியும்.

4. 11 செகண்ட். ஆறு மணி அடிக்கும்போது 5 இடைவேளைக்கு 5 செகண்ட். அதுபோல 12 மணி அடிக்கும்போது 11 இடைவேளைக்கு 11 செகண்ட்.

5. 5 = 1 அதுதான் முதலிலேயே இருக்கிறதே

6. இந்தக் கேள்வி out of syllabus / beyond the scope of this quiz. :-)

மதுவதனன் மௌ. said...

ஜக்குவார் ஜாம்பு சார்,

1. சிதம்பரம் சிவசாமின்னா கடவுள் சிவபெருமான் தான சார். அப்ப அவருக்கு மூணு கண்ணு இருக்கும் சரியா..

2. இதுக்கு 300 இஞ்ச்ன்னு சொன்னாலும் விடை வேற ஏதோன்னு பட்சி சொல்லுது

3. ஆமா ஒத்துமைய கண்டுபுடிச்சுட்டேன். இந்த எழுத்துக்களோட Y மற்றும் U வை ஏன் விட்டீங்க.

என்னான்னா..எல்லாமே சமச்சீர் எழுத்துக்கள்...

4. இன்னா சார்..இது ரொம்ப சிம்பிள்..12 தரம் அடிக்கும் ஆனா அதுக்கு 11 செக்கன்கள் எடுக்கும்.

5. 5 = 1 தான் சார். அ = ஆ என்றால் ஆ = அ தான் சார்.

6. முடியல...

என்னோட தம்பி எங்க வூட்டில எட்டுக்கால் பூச்சி ஒண்ணை புடிச்சு ஒரு காலை பிச்சுப் போட்டு எங்கிட்ட வந்து கேட்டான் அண்ணா இப்போ இந்தப் பூச்சிக்கு இன்னா பேரு?..அப்புறம் நடந்த சண்ட அது வேற...என்றாலும் இதுல வாற கருத்து என்னான்னா...எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எக்ஸ்றா தகவல்..

இலங்கையில கொழும்பில மணிக்கூடுகள் 100 ரூபாவுக்கு இருக்குது. அதுக்கு பேர் 100 ரூபா மணிக்கூடு. அதுகள எங்கட ஊரில வாங்கிவந்து விக்குறவங்கள். அப்ப எங்கட ஊர்க கடை ஒன்றில நடந்த சம்பாஷணை இது..

"முதலாளி...100 ரூபா மணிக்கூடு என்ன விலை?"

"அது..130 ரூபா தம்பி.."

padippavan said...

1 . Each of his eye is onraiKan. Hence he has 3 eyes

2. 300 inch minus thickness of 2 covers

3. All made of straight lines

4. 11 seconds

5. 5 =1 ( as per first statement)

6 . 8 legs

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க லதா.

//நெற்றிக்கண்ணைச் சேர்த்து 3 கண்கள் என்று எடுத்துக்கொள்வதா ? இல்லை பார்வதிக்கு 50 % "இட" ஒதுக்கீடு கொடுத்துவிட்டதால் ஒன்றரை கண்தான் என்று கூறுவதா என்று தெரியவில்லை //

இன்னாமா யோசிக்கிறிங்க! "இட" ஒதுக்கீடு சிலேடை சூப்பர்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க மதுவதனன் வாத்யார்.

//இலங்கையில கொழும்பில மணிக்கூடுகள் 100 ரூபாவுக்கு இருக்குது. அதுக்கு பேர் 100 ரூபா மணிக்கூடு. அதுகள எங்கட ஊரில வாங்கிவந்து விக்குறவங்கள். அப்ப எங்கட ஊர்க கடை ஒன்றில நடந்த சம்பாஷணை இது..

"முதலாளி...100 ரூபா மணிக்கூடு என்ன விலை?"

"அது..130 ரூபா தம்பி.." //


அசத்றீங்க தலீவா. உங்க முழு பின்னூட்டத்த சீக்ரம் ரிலீஸ் பண்ணச் சொல்லி "ஜாக்குவார் ஜாம்பு" கிட்ட சொல்லிகிறேன் :)))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க படிப்பவன் வாத்யார்.

//All made of straight line//

இது இன்னா கதை? 0-கூட straight line-ஆ? கண்ண கட்டுது தலீவா ;)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

டோமரு said...

1.2 தான்.ஏன்னா உன்னியப்போல முட்டைக்ண்ணு.
2.3 மீட்டர்தம்பா.
3.ஹி.ஹி.அல்லாமே english தான்
4.1தபா,தம்மா நேரம் தான்
5.5.1 தாம்பா.
6. 8 தான் நைனா.

உனக்கு பதுல சொல்றதுகாட்டியும்..........

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க டோமரு,

//ஹி.ஹி.அல்லாமே english தான்//

முடியல :)))))))))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

padippavan said...

Sorry I have not noticed '0' . I have taken only few minutes to go thro and reply. Next time I will be carefull. What about other answers my dear Jakku

ஜாம்பஜார் ஜக்கு said...

(மறுபடியும்) வாங்க படிப்பவன் அண்ணாத்தே! அடுத்த தபா ஜமாய்ச்சிடலாம்!!

//What about other answers my dear Jakku//

கொஞ்சம் பொறுத்துக்க தலீவா, அல்லாத்தையும் ரிலீஸ் பண்ணிற்றேன்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

R. சுதாகர் said...

1) 2
2) 94 inches
3) ......
4) 11 seconds
5) 5 = 1
6) 8

thanks
R. சுதாகர்

ஜிம்ஷா said...

எட்டு கால் பூச்சிக்கு ஒரு கால்தான்.

திவா said...

நா மொதல்லயா! வெக்கமாகீதுபா! ரொம்ப ரொம்ப டாங்க்ஸ்!

விக்னேஸ்வரன் said...

இன்னா ஜக்கு நம்ம கோமேன்ஸ்கு கோமேன்ஸ் கானும்...

மதுவதனன் மௌ. said...

ஜக்கு சார்,

கொஞ்சம் குறைச்சலா சொன்னவங்க பேரில என்னோட பெயரைப் போட்டிருக்கீங்க. ஆனா என்னோட பின்னூட்டம் எங்கே.. ?

ஜாம்பஜார் ஜக்கு said...

ஒரு 24 மணி நேரமா நம்ப இன்டர்னெட் மக்கர் பண்ணிடிச்சு வாத்யார். அல்லரும் மன்ச்சிகுங்க. இப்போ எல்லா பின்னூட்டமும் ரிலீஸ் பண்ட்டேன். அல்லாருக்கும் ரொம்ப டாங்க்ஸ்.

நல்லாருங்க. அடிக்கடி மீட் பண்ணுவோம்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

Very interesting questions and surprising answers! Congrats Diva!
...clap..clap...clap

:-)))

Sanjay Karan said...

How did I miss your blog all these days?!!! Superb! சூப்பர்! சூப்பர்! சூப்பர்!