தினமலருக்கு ஜூடா ஒரு கேள்வி!

இது உங்களுக்கே நாயமா கீதா? ரீஜன்டா உங்க டெம்ளேட்ட மாத்தினீங்க. சர்தான். அத்தொட்டு பரவாயில்லேன்னு பாத்தா டெக்ஸ்ட் மேட்டர் அல்லாம் காப்பி‍‍‍‍‍ பேஸ்ட் பண்ண முடியாம ஏதோ ட்ரிக்ஸ் பண்ணி கீறிங்களே, இது உங்களுக்கே நாயமா கீதா?

இப்போ பாருங்க எத்தனை கட் அண்டு பேஸ்ட் பதிவர்கள் ரொம்ப பேஜார் ஆய்ட்டாங்க? இதல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல, ஆமாம்.

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு8 comments:

பயங்கரமாய் யோசிப்ப்பவன் said...

////எத்தனை கட் அண்டு பேஸ்ட் பதிவர்கள் ரொம்ப பேஜார் ஆய்ட்டாங்க//

இதுல உள்குத்து ஒண்ணும் இல்லையே?

ஜாம்பஜார் ஜக்கு said...

//இதுல உள்குத்து ஒண்ணும் இல்லையே?//

ஆஹா! அண்ணாத்தே, இப்பதான் கடையத் தொறொந்தேன். அதுக்குள்ள சைக்கிள் கேப்ல வேலைய ஆரம்பிச்சுட்டீங்களே :-)

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

Boston Bala said...

:))

Anonymous said...

FireFoxல் உலவினால் Copy செய்யலாம்.

ஜாம்பஜார் ஜக்கு said...

பாஸ்டன் பாலா, ரொம்ப சந்தோஷமா கீது. அடிக்கடி வூட்டாண்ட வாங்க! நீங்க ஒரு ஸ்மைலி போட்டாலே நூறு கமெண்ட்டு போட்டா மாதிரி :-)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//FireFoxல் உலவினால் Copy செய்யலாம்.//

அனானி அண்ணாத்தே, அதான் மேட்டரா? இன்னாது நம்ம பதிவருங்கல்லாம் ஸைலண்டா கீறாங்களேன்னு பாத்தேன்! இப்ப கண்டுகினேன் :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவா said...

இன்னாப்பா பிரச்சன? print screen போட்டு படமா ஆக்கி பிக்காஸா இர்ந்தா நேரடியா பதிவு போடலாமே?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க திவா.

//இன்னாப்பா பிரச்சன? print screen போட்டு படமா ஆக்கி பிக்காஸா இர்ந்தா நேரடியா பதிவு போடலாமே?//

அதவிட சுலபமா FireFoxல் Copy செய்யலாம்னு ஒரு அண்ணாத்த மேல எளுதிகிறாரே, மெய்யாலுமா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு