இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.

இது இன்னாபா படா பேஜாராப் போச்சுது! இன்னிக்கு நம்ம தலைப்புல 3 தபா தப்பாப் பூடுச்சாம். அது இன்னா இன்னானு விலா வாரியா கண்டுபுடிச்சு பின்னூட்டத்துல சொல்லுங்க மஹா சனங்களே. இதுல இன்னா மேட்டருன்னா இது வரீக்கும் 100 பேருக்கு மேல இதக் காட்டிட்டேன். யாரும் இன்னும் கண்டுபுடிக்கல, புரீதா?

பார்ப்போம் உங்க சாமோர்த்தியத்தை!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


விடை (ஏப்ரல் 26 அன்னிக்கு சேர்த்தது):

1. மூண்று : மூன்று

2. தவருகள்: தவறுகள்

3. ரெண்டு மிஷ்டேக் ம‌ட்டுமே கீற‌ ஒரு மேட்ட‌ர்ல‌ நாக்கு மேல‌ ப‌ல்ல‌ப் போட்டு மூணு மிஷ்டேக் இருக்குனு சொன்னம்பாரு, அதான் வாத்யார் மூணாவ‌து மிஷ்டேக்.

கரீட்டா சொன்னவுங்க (அல்லாரும் ஜோரா ஒரு தபா கைத்தட்டுங்க!)

பினாத்தல் சுரேஷ் (இவுருதான் பர்ஸ்டு!)
கீதா
Senyo (அனானி)
நெல்லை சிவா (இவருக்கு மட்டும் ரெண்டு தபா கைத்தட்டுங்கோ!)
New Bee
லதா
கன்னாபின்னான்னு யோசிப்பவன் (அனானி)
மாதங்கி (நக்கீரர் கணக்கா சொல்லிக்கிறாங்கோ!)
தமிழ் பறவை


பின்குறிப்பு:

ரெண்டு மட்டும் இருக்கிற மேட்டர்ல மூணுன்னு சொல்லி ரெண்டு நாளா அல்லாரையும் ரெண்டு, ரெண்டு, ரெண்டுதான்னு சொல்ல வச்சதுனால இந்த பதிவ வவா சங்கம் ரெண்டு போட்டிக்கு அனுப்பி வச்சுக்கிறேன். என்ன கரீட்டா? (Out of the box யோசிக்கணுமுன்னு நம்ம வெட்டிப்பயல் சொல்லிகிறாரு :-))

32 comments:

பினாத்தல் சுரேஷ் said...

மூண்று = மூன்று

தவருகள் = தவறுகள்

இந்தத் தலைப்பில் - இது மட்டும் கன்பூசனா இருக்குது. இந்த மாதிரி சந்திப்பிழை வாய்ப்புள்ள வார்த்தை எழுத நேர்ந்தால் அந்த வாக்கியத்தையே டெண்டிங் பண்ணி மாத்திருவேன் நான். (இத்தலைப்பில்)

ஜாம்பஜார் ஜக்கு said...

அதான் சுரேஷு...படா சோக்கான ஐடியாவா கீதே! சரி தலைப்பை...அது இன்னா...ஆங் டெண்டிங் பண்ணிட்டேன்!!!

ஆனா தலீவா அப்பிடியும் மூணு தப்பு கீதாமே, யார் கண்டுகிறாங்கன்னு பாக்கலாம்! இத்தொட்டு 101 பேரு ஆச்சு :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பினாத்தல் சுரேஷ் said...
This comment has been removed by a blog administrator.
ஜாம்பஜார் ஜக்கு said...

பெனாத்தல் வாத்யார், ரொம்ப கரீட்டு. ஒரு தபா வேற யாருனாச்சும் சொல்லிகிறாங்களான்னு பாப்போம்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"இருக்கின்றது" என வரவேண்டுமா???

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க யோகன் அண்ணாத்தே! எப்டி கீறிங்க? ஒரு தப்புன்னா "இருக்கின்றது"னு வரும். மூணு பன்மையாப் பூட்டுதே, அதனால "இருக்கின்றன" தான் கரீட்டு. வேற மாதிரி யோசிச்சு பாருங்க.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அறிவன்#11802717200764379909 said...

மூண்று - மூன்று
தவருகள் - தவறுகள்
தவறுகள் அல்ல - 'தவறு' மட்டுமெ.

ஜாம்பஜார் ஜக்கு said...

அறிவன் நல்லா கீறீங்களா?

//தவறுகள் அல்ல - 'தவறு' மட்டுமெ.//

பன்மைல "தவறுகள்"னே சொல்லலாம். மிஷ்டேக் ஒண்ணுமில்ல. மாத்தி யோசிங்க!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Sabes said...

You can not put .(full stop) in the heading.
Is it?

ஜாம்பஜார் ஜக்கு said...

//You can not put .(full stop) in the heading.//

வாத்யார், இப்போ, த‌லைபபுல‌ கேள்வி கேக்குறோம்னு வ‌ச்சுக்க‌, அப்போ கேள்விகுறி போடோணுமா வாணாமா? அத்தொட்டு, புல்ஸ்டாப்பும் வைக்க‌லாம். க‌ரீட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கீதா said...

முதல் தவறு - மூண்று அல்ல மூன்று
இரண்டாம் தவறு - தவருகள் இல்லை தவறுகள்
மூன்றாம் தவறு - மூன்று தவறுகள் அல்ல இரண்டு தவறுகள்

சரியா? :)

Anonymous said...

சீக்கிர‌ம் ப‌திலைப் போடுங்க‌ள். விடை தெரியாவிட்டால் ம‌ண்டை வெடித்துவிடும் போலிருக்கிற‌து
:-)))))

Anonymous said...

'iththalaippil irandu thavarugal irukkinrana' endru irundhirukka vendum... moondru enbathu thavaru... adhudhan moondravadhu thavaru...

-senyo

நெல்லை சிவா said...

I know, it has only two mistakes and goes to VV competition..right?

Sabes said...

தவறு என்ற வார்த்தை தான் மூன்றாம் தவறு?

NewBee said...

பழைய ஞாபகம் வந்துடுச்சு!:))))

தலைப்புல் இரண்டு தவுறு தான் இருக்கு. அதனால,மூன்று(தவறு)ன்னு சொன்னது தான் மூன்றாவது தவறு.

சரியா? ;-)

Anonymous said...

Rendu thavaru thaan...


Moodru thavaru endra thavrana thagaval thaan moondram thavaru :)

Anonymous said...

//அத்தொட்டு, புல்ஸ்டாப்பும் வைக்க‌லாம். க‌ரீட்டா?//

எல்லாம் கரீட்ட்டு தான். விடையை சொல்லுங்க தலைவா. மண்டை காயுது :-((((

லதா said...

இரண்டு தவறுகள் மட்டுமே இருக்கும்போது மூன்று தவறுகள் என்று எழுதியதுதான் மூன்றாவது தவறு
:-)

துளசி கோபால் said...

இத்தலைப்பில்

மூண்று

தவருகள்

மூணு சரியாப் போச்சா?:-)

இப்படிக்கு,
சைதாப்பேட்டை கொக்கு.

ஜாம்பஜார் ஜக்கு said...

//விடையை சொல்லுங்க தலைவா. மண்டை காயுது//

அனானி அண்ணாத்தே, காலீல விலாவாரியா சொல்றேன்!


//மூணு சரியாப் போச்சா//

துளசி மேடம், கொக்கு சொல்றது சரியா பிரியிலியே? இருந்தாலும் மொத தபா வந்துகிறீங்க, ரொம்ப சந்தோஷமா கீது.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

கன்னா பின்னாவென்று யோசிப்பவன் said...

இருக்கற ரெண்டு தவறை மூன்று தவறு என்று தப்பாக கூறியிருப்பது மூன்றாவது தவறு.

மாதங்கி said...

ஜாம்பஜார் ஜக்கு,

ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

'இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.'

இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கியம்

தவறு 1:

மூண்று- ண் தவறு ன் வரும்

தவறு 2: தவருகள்- இதில் ரு தவறு று தான் சரி

தவறு 3: இத்தலைப்பில் 3 பிழைகள் இருக்கின்றன என்று பொருள்பட எழுதியுள்ளீர்கள்

அது தவறு 2 பிழைகள்தான் இருக்கின்றன

ஆக இரண்டு எழுத்துப்பிழைகளும் ஒரு பொருள் பிழையும் உள்ளன

thamizhparavai said...

muthal thavaRu: 'iththalaippil 3 thavaRukal IrukkinRana.' enpathuthan thavaRu. Iththalaippil IRANDU thavaRukal irukkinrana enpathaey sari.
2m thavaRu: 'mooNRu' alla 'moonRu' enpathey sari.
3m thavaRu: 'thavarukaL' alla 'thavaRukaL' enpathey sari.

sariya annathaey...?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எங்கிட்டிருந்துய்யா இப்படியெல்லாம் யோசிச்சிட்டு வர்றீங்க.. எங்கயாச்சும் ரூம் போட்டு யோசிச்சீங்களா..? அவனவன் எழுதறதுக்கு மேட்டர் கிடைக்காம அல்லாடிக்கிட்டிருக்கான்.. சரி.. சரி.. நல்லாயிரு ஜக்கு..

'சைதைப்பேட்டை கொக்கு' எப்ப ரிலீஸ்..?

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க‌ உண்மைத் த‌மிழன் அண்ணாத்த‌.

//அவனவன் எழுதறதுக்கு மேட்டர் கிடைக்காம அல்லாடிக்கிட்டிருக்கான்.. //

ஆஹா...இத்த நீங்க சொல்லலாங்களா? நாலு பதிவு மேட்டர ஒரே பதிவுல எழுதற ஆளாச்சே தலீவா :‍)

//சரி.. சரி.. நல்லாயிரு ஜக்கு..//

அதான், அதான் வோணும்! உங்க ஆசீர்வாதம் வாத்யார்!

//சைதைப்பேட்டை கொக்கு' எப்ப ரிலீஸ்..?//

இன்னாது? ரிலீஸா? சைதாப்பேட்ட கொக்க அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?!!! :)))))

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

ஜாம்பஜார் ஜக்கு அய்யா,

//நம்ம தலைப்புல 3 தபா தப்பாப் //

தப்பை, தவறுன்னு சொன்னா அது தப்பா அல்லது தவறா?தெரிந்து செய்வது தவறு,தெரியாம செய்வது தப்புன்னு எங்க வத்யார் அய்யா(மக்கள் திலகம்) சொல்லியிருக்கரய்யா.அவர் சொன்னது தப்பா,தவறா.முதல்ல அதை சொல்லுங்கய்யா.

பாலா

domaru said...

தப்பு தப்பா இருந்தாலும் தப்பே இல்லை.
ஆனா தப்ப தப்பில்லாம தப்பாம தவறாம தப்பாமலயே தப்பு தப்பா
கரீட்டா சொல்றியே நைனா.

ஜாம்பஜார் ஜக்கு said...

டொமரு அண்ணாத்தே,

இந்த "தப்பா"ட்டத்துக்கு நான் வர்ல. கலக்குங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவா said...

ஜக்கு, டெம்ப்ளேட்ல ஏதோ சரியா இல்லபா.
newer post வேலை செய்யலை. கவனிக்கிறீங்களா?

ஜாம்பஜார் ஜக்கு said...

திவா அண்ணாத்தே, நல்லாகீறீங்களா?

//டெம்ப்ளேட்ல ஏதோ சரியா இல்லபா.
newer post வேலை செய்யலை. கவனிக்கிறீங்களா?//

செக் பண்ணி பாத்தேன். சரியாத்தானே கீது? உங்க ப்ரெளசர கொஞ்சம் பாருங்க.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

திவா said...

நா நல்லாதான்பா கீறேன்.

ஆ! ஆச்சரியமா கீதுபா!
நானும் பேஜ் சோர்ஸ் பாத்தேன். சரியாகீது. ஆனா பயர்பாக்ஸ் லிங்க் ன்னு ஒத்துக்க மாட்டேங்குது. பிரிலை. ஸ்கிரீன் ஷாட் எடுத்தேன். ம்ம்ம்ம்.. போட்டம் பர்வால, வுடு.