ரொ...ம்ப ரொமான்டிக்காக ஒரு கவிதை!

அன்பே
என்ன ஆச்சர்யம்
இன்பமான இரவு வரும் போதெல்லாம்
அந்த இனிய உணர்வும்
கூடவே வருகிறதே

வைகறையின் வசந்தத்தில்
வராத அந்த உணர்வு
மத்தியான மத்தாப்பில்
மலராத அந்த உணர்வு
அந்தி நேரத்து அழகில்
ஆர்ப்பரிக்காத அந்த உணர்வு

பொல்லாத இந்த இரவு வந்ததும்
எங்கிருந்து வருகிறது என்று கூடத்
தெரியாமல் ரகசியமாய்
வந்து விடுகிறதே

இதோ
இந்த இரவு வந்து விட்டது
நட்சத்திரங்கள் மின்னுகின்றன
நிலவும் எழுந்து விட்டது
அற்புதமான அந்த
உணர்வும்....ந்


தே

.

.

.


வி


ட்
து

.

.

.

தூக்கம்!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

10 comments:

T.V.Radhakrishnan said...

:-))

ஜெரி ஈசானந்தா. said...

நான் கூட "என்னடா இது? தூங்கப்போற நேரத்தில இப்படி மூட கிளப்பிகிட்டு இருக்காரேன்னு தப்பா நினச்சுட்டேன்."

இறக்குவானை நிர்ஷன் said...

எப்படியெல்லாம் து}க்கத்த குழப்புறாங்க

Anonymous said...

ஹா....வ்....ழொம்ப நழ்ழா இ..ரு...க்........கு...ஹா..ஆ..ஆ..ஆ...வ்....!

Anonymous said...

லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

http://ulalmannargal.blogspot.com/

பின்னோக்கி said...

ஜாம்பஜார் ஜக்கு போட்டாவ இது வரை பார்க்கலையேன்னு பீலிங்குல இருந்தேன். இப்ப திருப்தியா இருக்கு :)

ஜாம்பஜார் ஜக்கு said...

//ஜாம்பஜார் ஜக்கு போட்டாவ இது வரை பார்க்கலையேன்னு பீலிங்குல இருந்தேன். இப்ப திருப்தியா இருக்கு //

பின்னோக்கி வாத்யார்,

போட்டோவா?!! பதிவுல ஒரு கண்ணாடி இல்ல ஃபிக்ஸ் பண்ணி இருந்தேன்... பளிச்சுனு தெரியுதா? ஹி..ஹி..

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

நாமக்கல் சிபி said...

:))

அது சரி!

Jawarlal said...

ஓஹோ.. அப்ப ஞாயத்தி கிழமைலே பகல் தூக்கம் போடறதில்லையா?

http://kgjawarlal.wordpress.com

நாஞ்சில் பிரதாப் said...

அய்யோ தூக்கம் வர்தே...
எப்படி தல..எப்டி இதெல்லாம்...