மதியம் சனி, செப்டம்பர் 26, 2009
மதியம் வியாழன், செப்டம்பர் 17, 2009
நேற்று ஒரு தகவல்...
"அறிவியல், பொது அறிவு தகவல்கள் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதுமா? ஆன்மிக தகவல்களும் கொடுக்க வேண்டும்" என்று நிலைய இயக்குநர் உத்தரவு போட்டுவிட்டார். எனக்கோ ஆன்மிகம் பற்றி அவ்வளவாக தெரியாது. அதனால் தமிழகத்தில் பிரபலமான ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகையை வாங்கி, அதிலுள்ள தகவல்களை எனது ஸ்டைலில் கொஞ்சம் பாலிஷ் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அந்த நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கவில்லை. ஆன்மிக தகவல்கள் கொடுத்ததால் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு.
ஒரு நாள் அந்த பத்திரிகையை நடத்திவரும் ராமகிருஷ்ண மடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. என்னை சுவாமி கமலாத்மானந்தா (பத்திரிகையின் ஆசிரியர்) சந்திக்க வேண்டும் என்று அவரது உதவியாளர் கடுமையான குரலில் பேசினார். எனக்கு கை, கால்கள் உதறியது. அனுமதி கேட்காமல் தகவல்களை தொடர்ந்து எடுத்ததால், என் மீது வழக்கு தொடரப் போகிறார்கள் என்று என் அதிகாரிகள் பயமுறுத்தினர். நேராக சென்று கவாமிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேள் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினர்.
பயத்துடன் மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றேன். சுவாமிகள், என்னைப் பார்த்தார். "நா..நான் ரேடியோல இருந்து வர்றேன். இன்று ஒரு தகவல்ல நான் சொல்ற ஆன்மிகத் தகவல் எல்லாம்..." என்று முடிப்பதற்குள் "தெரியும்..அது விஷயமாத்தான் உன்னை வரச் சொன்னேன்" என்றார்.
"எதுவும் சொல்ல வேண்டாம், முதல்ல நான் சொல்றத மட்டும் கேளு. நீ சொல்ற ஆன்மிக தகவல் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு. எங்கேருந்து உனக்கு மட்டும் இவ்ளோ நல்ல தகவல்கள் கிடைக்குது? இனிமேல் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகைல நீ தொடர்ந்து எழுதணும்!
இதற்கு நான் கொடுத்த அசடு வழிந்த ரியாக்ஷனை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது!
மதியம் புதன், செப்டம்பர் 16, 2009
உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு அதிசயமான TEST !!!!!

மதியம் சனி, செப்டம்பர் 12, 2009
உடுங்க கழுதை! இதுக்கெல்லாமா டென்ஷன் ஆவாங்க?!!!
மதியம் வெள்ளி, செப்டம்பர் 11, 2009
பாரதியாருக்கு ஹார்மோனியத்தின் மீது இன்னா கோவம்?
மதியம் வியாழன், செப்டம்பர் 10, 2009
Printer வேலை செய்யாத போது அவசரமாய் காப்பி எடுப்பது எப்படி?
மதியம் செவ்வாய், செப்டம்பர் 8, 2009
அவனும் அவளும்... தனியாக ரயில் கூப்பேவில் (18+ சிறுகதை)!!!
எடக்கு மடக்கு ... ஜக்குவின் முதல் சிறுகதை (இன்னாது?!!!)
தாங்க்யூ சார். கந்தசாமி சார்.
எந்த வேலைக்கு இன்டெர்வியூக்கு வந்து இருக்கீங்கன்னு தெரியுமா?
தெரியும் சார். ரயில்வே சிக்னல் மேன் வேலைக்கு சார்.
வெரி குட். உங்க மொதல் கேள்வி. நீங்க டியூட்டில இருக்கும் போது திடீர்னு ஒரே ட்ராக்ல எதிரும் புதிருமா ரெண்டு ட்ரெயின் வந்து கொண்டிருப்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள்?
ஒடனே லீவரை யூஸ் பண்ணி ஒரு ட்ரெயினை அடுத்த ட்ராக்குக்கு மாத்திருவேன் சார்.
லீவர் உடைந்து போயிருந்தால் என்ன செய்வீர்கள்?
உடனே சிக்னலை சிவப்பாக மாத்தி ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.
சிக்னலும் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
உட்னே பக்கத்து ஸ்டேஷனுக்கு போன் பண்ணி ட்ரெயினை நிறுத்த சொல்வேன் சார்.
உங்க ஸ்டேஷனில் போன் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
சிவப்பு லைட்டை காண்பித்து தூரத்துலயே ஒரு ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.
சிவப்பு லைட்டும் உடைந்து போயிருந்தால் என்ன செய்வீர்கள்?
சிவப்பு கொடியை தூக்கிக் கொண்டு ட்ராக்கிலேயே வேகமாய் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்ளோ தூரம் ஓடிப் போய் எப்படியாவது ஒரு ட்ரெயினை நிறுத்திருவேன் சார்.
சிவப்பு கொடியும் காணாமல் போயிருந்தால் என்ன செய்வீர்கள்?
உடனே வூட்டுக்கு ஓடிப் போய் அண்ணாத்தய இட்டாந்துருவேன் வாத்யார்!
வா...ட்? எதற்காக உங்கள் அண்ணாத்தையை ... ஐ மீன் ... அண்ணனை அழைத்துக் கொண்டு வருவீர்கள்?
எங்க அண்ணாத்த இதுவரைக்கும் ஒரு தபா கூட ட்ரெயின் ஆக்ஸிடென்டே பார்த்ததில்லையாம் வாத்யார்!!!
Revealing Secret! கூகுளின் ரகசிய பக்கங்கள்!!!!



மதியம் திங்கள், செப்டம்பர் 7, 2009
பொழுது போகாதவர்களுக்கு ஒரு Special பதிவு!
செட்டியார் பேட்டைதான் Chetpet என்று மாறியதா?!

சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிறத்திலுள்ள கட்டடங்களை உருவாக்கிய கட்டட மேதை, 'தாட்டிகொண்ட நம்பெருமாள்' செட்டியார் என்பவர்.பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை. பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த இவரது மாளிகை, "வெள்ளை மாளிகை' என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர் மேத்தா மருத்துவமனையின் பின்னால் உள்ளது.இதில், மூன்று மாடிகள், 30 அறைகள் உள்ளன.இது அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப் பட்ட அரிய கலைப் பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஆரிங்டன் சாலை வரை (தற்போதைய டெய்லர்ஸ் ரோடு) உள்ள நிலப்பரப்பு அவருக்கு சொந்தமாக இருந்தது.அதனால், "செட்டியார் பேட்டை" என அழைக்கப் பட்டது. நாளடைவில், "செட்டிபேட்டை' என மருவி, இன்று, "செட்பெட்' என மாறிவிட்டது. அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், அமைதியை விரும்பியதால், செட்டியாரின் நிலத்தை வாங்கி, அவரையே வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண் டனர்.அப்பகுதியில் இன்றும் அனேக வீடுகள் ஆங்கிலேய பெயர்களாக காசா மேஜர், ஜாரட்ஸ் கார்டன் (தற்போது சமூக சேவா பள்ளி) ஹாரிங்டன், பாந்தியன் என்று பெயர்.
கணிதமேதை - ராமானுஜம்: காலம் சென்ற கணித மேதை கடைசி நாட்களை செட்டியார் வீட்டில் கழித்தார்.இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் அதிகமாகி விட்டதால், அவரது உறவினர்கள் பயந்துபோய், திருவல்லிக் கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை.அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார்.ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். தமிழ்நாடு மிகப்பெரிய கணிதமேதையை இழந்தது. அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்ற முதல் வைசியர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.,) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச் டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் யுனைடெட் கம்பெனி சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது.
தன் சொந்த உபயோகத்திற்காக, நான்கு பெட்டிகள் தனி ரயில் வண்டி வைத்திருந்தார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார்.
தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோவில்களின் திருப் பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வடசென்னையில் பல பள்ளிகளும், சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் நடைபெறுகின்றன.சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது.
மதியம் ஞாயிறு, செப்டம்பர் 6, 2009
For Husbands Only! (மனைவிகள் படிக்க வேண்டாம்)!!
கந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு-Part 3
டென்ஷன் பார்ட்டிகளுக்கு ஒரு Dolphin Test (கண்டிப்பா படிங்க)!
மதியம் சனி, செப்டம்பர் 5, 2009
ஆனந்த விகடனாருக்கு ஒரு சபாஷ்!
இன்னிக்கு வாத்யார் தினம் வாத்யார்!
அமெரிக்கர்களை விட இந்தியர்கள் புத்திசாலிகளா?
நான் சொன்னா நம்ப மாட்டீங்க ... சின்னதா ஒரு டெஸ்ட் பண்ணி பாத்துரலாம். இன்னா ரெடியா?
மதியம் புதன், செப்டம்பர் 2, 2009
கந்தசாமி விமர்சனம் எழுதின பதிவர்களுக்கு-Part 2
இத்த படிச்சே டென்ஷன் ஆனவுங்க இத்த படிச்சா இன்னா சொல்வாங்களோ தெரீல வாத்யார்!