கோபத்தை கட்டுப் பட்டுத்துவது எப்படி? (படிச்சுட்டு கோவப்படாதீங்க!)

ராமசாமி ரொம்ப சாதுவான ஆசாமி. அதிர்ந்து பேசமாட்டார். அவருக்கு அன்று காலை திடீரென்று 3.33 மணிக்கு போன் வந்த போது நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.


போனில் ஒரு கோபமான குரல்.

"யோவ்! நான் தான் குப்புசாமி பேசறேன். உங்க விட்டு நாய் குரைக்குற சத்ததுல என் தூக்கம் கெட்டுப் போவுது! அறிவில்லை? நாயை குரைக்காம இருக்க சொல்லுய்யா!"

ராமசாமி, கொஞ்சமும் கோபப்படவில்லை.

பொறுமையோடு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அத்தோடு குப்புசாமியின் டெலிபோன் நம்பரையும் மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார்.

அடுத்த நாள் காலை. மணி சரியாக மூன்று முப்பத்து மூன்று.

ராமசாமி எழுந்தார். போனை எடுத்து குப்புசாமியின் எண்ணை சுழற்றினார்.

"மிஸ்டர் குப்புசாமி. தூக்கத்தில் எழுப்புவதற்கு மன்னிக்கவும். நேற்று இரவு நீங்கள் ரொம்பக் கோபமாக இருந்ததால் சொல்ல முடியவில்லை..."

...


...


...


...


...


...


"எங்கள் வீட்டில் நாய் கிடையாது!"வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


41857

6 comments:

ராஜ நடராஜன் said...

சிரிக்க வச்சிட்டீங்க:)

அகல்விளக்கு said...

என் இனமடா நீ.....

:-))

ரவிசங்கர் said...

//படிச்சுட்டு கோவப்படாதீங்க//

இல்லியே! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஜூப்பர் தலீவா!

ரவி

ஜெய்லானி said...

கோவமா அப்டீன்னா !!!!

Anonymous said...

ஜக்கு சார், என்ன யோசிச்சாலும் அந்த கடைசி பன்ச்சை கண்டுபிடிக்க முடியவில்லை.. இந்த தடவையும்!

நகைச்சுவையும் சஸ்பென்சும் உங்களுக்கு இயல்பாக வருகிறது!

Anonymous said...

Hilarious!!!!
:-)))))))))