கிளு கிளுப்பான காதல் டெஸ்ட் உங்களுக்கு (18+) Dont Miss!

கிளு கிளுப்பான காதலரா நீங்க? உங்களுக்காகவே டெஸ்ட் ஒன்றை அமெரிக்காவுல கண்டுபுடிச்சு கீறாங்க. இந்த டெஸ்ட கண்டி நீங்க சரியா எடுத்தீங்கன்னா உங்களப் பத்தின மேட்டர் அல்லாம் கரீட்டா தெரிஞ்சு பூடும்!


டென்ஷன் ஆவாம, ஜரூரா பண்ணுங்க, ரொம்ப சுலவம் தான்.

இன்னா? ரெடியா?

இப்போ நீங்க ஒரு காட்டு வழியா போய்க்கினு கீறீங்க. போற வழில ஒரு பனைமரம். அந்த மரத்து மேல ஒரு வாழைப் பழத் தார் கீது. அவ்ளோ ஒசரமான மரத்துல கீற வாழைப் பழத்தை இந்த நாலு பேருல யாரும் சீக்கிரமா எடுத்துருவாங்க?

அ) கறுப்புக் கரடி
ஆ) ஒட்டைச் சிவிங்கி
இ) ஒரு அழகான 20 வயசுப் பெண்
ஈ) அணில்

அவ்ளோதான் கேள்வி. நல்லா, நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க. நீங்க சொல்ற பதில வச்சுதான் உங்களைப் பத்தின முக்கியமான மேட்டர் தெரியப் போவுது!

இன்னா, முடிவு பண்ணிட்டீங்களா? அப்டீன்னா கீழ டெஸ்ட் ரிசல்ட்டை பாத்துக்கங்க வாத்யார்!

...


...


...அ) கறுப்புக் கரடின்னு சொன்னீங்களா?

சொல்றேனேன்னு தப்பா நெனச்சுக்தாதீங்க வாத்யார், சுத்த மோசமாக் கீது. எதுக்கும் ஆஃபீஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க.

...

...

...ஆ) ஒட்டைச்சிவிங்கின்னு சொன்னீங்களா?

தப்பு வாத்யார்! எதுக்கும் ஒரு நல்ல டாக்டரா பாத்துருங்க!

...

...

...


இ) ஒரு அழகான 20 வயசுப் பெண் அப்டீன்னு சொன்னீங்களா?


ஹி..ஹி... சுத்தமா தப்பு வாத்யார். எதுக்கும் எதுனச்சும் யோகா, மெடிட்டேஷன் மாதிரி எதுனாச்சும் ட்ரை பண்ணி பாருங்க!

...

...

...

ஈ) அணில்னு சொன்னீங்கள?

ஆஹா, கண்டிப்பா தப்பு வாத்யார். மேல சொன்ன மூணு ட்ரீட்மென்ட்டையும் பண்ணிடுங்க, ஆமாம்!

...

...

...


ஆனா ஏன்? ஏன்? ஏன்?


...

...

...

...


சொன்னா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே?


பனை மரத்துல வாழைப்பழம் இருக்காது வாத்யார், வாழை மரத்துலதான் வாழைப்பழம் காய்க்கும்! ஹி..ஹி...


இதுக்குதான் டென்ஷன் ஆவாதீங்கன்னு ஆரம்பத்துலேயே சொன்னேன்!


வர்ட்டா?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


50146

5 comments:

திவா said...

ஹிஹிஹிஹி! நண்டு புட்ச்சுட்டேனே!
ஏன் வாத்யார்? யாரும் வாழப்பழ தாரை கொண்டு போய் அங்க வெச்சு இருக்கலாமில்ல? எதுக்கா? இப்படி நீங்க புதிர் போடத்தான்! :-))

Ravi said...

AVVVVV
AVVVVV
AVVVVV
AVVVVV
AVVVVV

Bavan said...

முடியல... அவ்வ்வ்...:D

Anonymous said...

எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும் எனக்கு வேணும்

Anonymous said...

Super Jaggu Sir! :-)