பிரபல பதிவரும் ஔவையாரும்!

வாத்யார், நம்ம தமிழ்மணத்துல இன்னா நடக்குதோ இல்லியோ வருஷத்துக்கு நாலு தபா யாராவது ஒரு பிரபல பதிவரு 'விடைபெறுகிறேன்' ன்னு ஒரு ஃபிலிம் காட்டுறது மட்டும் கண்டிப்பா நடந்தே தீரும். ஒடெனே ஒரு பதினஞ்ச்சு பேரு "போவதே, போவாதே என் பதிவா"ன்ற கணக்கா பின்னூட்டம் போட்டு தாக்கி அவுர மறுபடி இட்டாந்துருவாங்க. (அந்த காலத்துல ஒரு பதிவரு யாரும் கூப்டாமயே ஸைலன்டா தானாவே திரும்ப வந்துட்டாரு! அது வேற கத!!!).


இதுக்கு நடூல நம்ப கு_ம்பன், ட_ள்ஸ் மாதிரி நாலு பேரு "வடை பெறுகிறேன் இட்லி பெறுகிறேன்"னு பதிவு போட்டு மேற்படி பிரபல பதிவர்களை கலாய்ச்சு, போட்டுத் தாக்கி, பின்னி பெடலெடுத்துறுவாங்க!

அதெல்லாம் சரி வாத்யார், இதுல ஔவையார் எங்க வந்தாருன்னு கேக்கிறீங்களா? நேத்து நம்ம அண்ணாத்த சொன்னாரு இத்தப் பத்தியெல்லாம் ஔவையாரு சமீபத்தில ஐநூறு வருஷத்துக்கு முன்னால்யே ஒரு பாட்டு எளுதிக்கிறாராம்:

பதிவருக்கு ஏற்ற பின்னூட்டம் ஆமாயின்
எத்தாலும் கூடி இருக்க்கலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருக்குமே ஆமாயின்
கூறாமல் சன்யாசம் கொள்!

ஔவையாரு மெய்யாலுமா இப்டி சொல்லிகிறாரு? இன்னாவோ டகாலடி வேல மாதிரி கீது. யாருக்குனாச்சும் ஒரிஜினல் பாட்டு தெரிஞ்சா சொல்லுங்க தலீவா!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

7 comments:

Anonymous said...

//சமீபத்தில ஐநூறு வருஷத்துக்கு முன்னால்யே//

நீ பழைய ஆளேதான் சந்தேகமே இல்லை.

சுப்பிரமணியன், பழனி said...

கலியாணத்திலே மணமகன் காசி யாத்திரை!

ஜாம்பஜார் ஜக்கு said...

//நீ பழைய ஆளேதான் சந்தேகமே இல்லை//

நீ யார சொல்ற வாத்யார்? 500 வருஷத்துக்கு முன்னாடி இருந்த பழைய ஆளையா?


//கலியாணத்திலே மணமகன் காசி யாத்திரை//

ஒரு தபா கல்யாணத்திலேயே காசிக்கு நெஜம் டிக்கிட் வாங்கி கொடுத்துட்டாங்களாம் :))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பிரபல அனானி said...

//அந்த காலத்துல ஒரு பதிவரு யாரும் கூப்டாமயே ஸைலன்டா தானாவே திரும்ப வந்துட்டாரு!//

ஓ! அவரையா சொல்றீங்க? சரிதான்.

;-)

நாமக்கல் சிபி said...

/(அந்த காலத்துல ஒரு பதிவரு யாரும் கூப்டாமயே ஸைலன்டா தானாவே திரும்ப வந்துட்டாரு! அது வேற கத!!!).//

மேட்டர் ஓவர்! நீ பழைய ஆளுதாம்வே!

நாமக்கல் சிபி said...

//பதிவருக்கு ஏற்ற பின்னூட்டம் ஆமாயின்
எத்தாலும் கூடி இருக்க்கலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருக்குமே ஆமாயின்
கூறாமல் சன்யாசம் கொள்!//

தளை தட்டாம வெண்பா அருமையா எழுதுறீர்யா!

நமக்கும் இலவசமா கிளாஸ் எடுப்பீரா?

நாமக்கல் சிபி said...

ஓய்! கானா உலகநாதா! கலக்குறீர்யா!