வாத்யார், கேள்வி அல்லாம் கேட்டு ரொம்ப நாளா பூட்சு. அத்தொட்டு ரொம்ப சுலவமா நாலே நாலு கேள்வி கேட்டுக்கிறேன். சொம்மா நச்சுனு பதில் சொல்லுங்க பாக்கலாம்...
2. ஒரு நம்பர் கீது. அத்த 5 ஆல பெருக்குனாலும் இல்லாங்காட்டி 5-ஐ கூட்டினாலும் ஒரே ஆன்சர் தான் வரும். இன்னா நம்பர் அது?
3. இதுக்கு அப்பால வர்ற நாலு எளுத்து இன்னா, இன்னா, இன்னா, இன்னா?
Y
Y
H
L
Y
E
Y
T
1. இப்பாலிக்கா நீங்க செஸ் ஆடிக்கினு கீறீங்க. மொதல்ல நீங்கதான் ஆடோணும்.மொத்தம் எத்தினி விதமா .:பஸ்ட் காய்ன நவுத்தறதுக்கு உங்களுக்கு சாய்ஸ் கீது? (அவசரப் படாம ரோசிச்சு சொல்லுங்க!)
2. ஒரு நம்பர் கீது. அத்த 5 ஆல பெருக்குனாலும் இல்லாங்காட்டி 5-ஐ கூட்டினாலும் ஒரே ஆன்சர் தான் வரும். இன்னா நம்பர் அது?
3. இதுக்கு அப்பால வர்ற நாலு எளுத்து இன்னா, இன்னா, இன்னா, இன்னா?
Y
Y
H
L
Y
E
Y
T
க்ளூ: மாதங்களில் அவள் மார்கழி!
4. கட்சீயா ஒரு கேள்வி. ராமசாமிக்கு 10, குப்புசாமிக்கு 12, நமீதாவுக்கு 8, அப்டீன்னா ஜாம்பஜாருக்கு எவ்ளோ?
க்ளூ: (n+1)2
இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு
19 comments:
Answer for the Chess question :
Pawn 8*2 = 16
Knight(horse) 2 * 2 = 4
16 + 4 = 20
--
Answer for the second question
5 + X = 5X
4X = 5
X = 5 / 4 = 1.25
----
Answer for the 4th Question
Jambajarjakku ku 6
-----
வாங்க வினையூக்கி வாத்யார்!
ரெண்டு கேள்விக்கு கரீட்டா சொல்டீங்க. ஒரு ஆன்சர் தப்பாக் கீது. ஒரு கேள்விய சாய்ஸ்ல வுட்டுடீங்க போல. மத்த பேரு இன்னா சொல்றாங்கன்னு பாக்கலாம். அடிக்கடி வூட்டாண்ட வாங்க.
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
1.20
which one is wrong?
வினையூக்கி வாத்யார்!
அத்த சொல்லிட்டா த்ரில்லே பூடுமே! இருந்தாலும் கேக்குறீங்க: நாலாவது கொச்சின்!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
வாங்க தலீவா மின்னுது மின்னல்!
ஒரே பதில் சொன்னாலும் நச்சுனு கீது! மத்ததும் யோசிங்க!!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
மூன்றாவது கேள்வி ரொம்ப தெரிஞ்ச மாதிரி இருக்கிறது. ஆனால் புரியவில்லை :-(
நாலாவது சுத்தம் :-((((
லீவு போட்டு யோசிப்பீங்களா?
இது போன்ற கடுமையான கேள்விகளை நமீதாவிடம் கேட்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்
//ரொம்ப சுலவமா நாலே நாலு கேள்வி கேட்டுக்கிறேன். //
ரொம்ப சுலபம் தான். சின்னதா ஒரு க்ளூ கொடுக்கக்கூடாதா?
;))
சின்னதா ஒரு க்ளூ கொடுக்கக்கூடாதா?
:))
//சின்னதா ஒரு க்ளூ கொடுக்கக்கூடாதா?//
தலீவா, இது கூட பண்ண மாட்டமா? க்ளூ குடுத்தாச்சு!
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
Jaggu Sir, where do you get these questions from? Even if I google I don't get the answers!
3 - September
4. 12
3 - R (not september)
யாரோ ஒருவன் வாத்யார்,
அடுத்து வர்ற 4 எளுத்துமே R, R, R, R தான். இன்னா கரீட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
(n+1)2
(4+1)2 = 10
(5+1)2 = 12
(3+1)2 = 8
(4+1)2 =10
ஜக்குக்கு 10 சரியா.
//ஜக்குக்கு 10 சரியா//
இல்லியே தலீவா! (3+1)2=8. எட்டுதானே வருது. இன்னா நான் சொல்றது?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
எந்த மாதிரியான லாஜிக் இது.
ஜாம்பஜார்
மொத்த எழுத்துக்கள் ஐந்து
(n+1)=(5+1)
(5+1)2=12
Post a Comment