உங்களிடமிருந்து "விடை" பெறுவதற்காக இந்த கேள்வி !!!!!!!!!!!!!!!!!

வாத்யார், உங்க கைல 5 லெட்டரும் 5 அட்ரஸ் எளுதின கவரும் இருக்குன்னு வச்சுக்கங்க. இப்போ இந்த 5 லெட்டரையும் 5 கவருக்குள்ளார கண்ண மூடிக்கினு போட்டீங்கன்னு வைங்க. ஆச்சா? இப்போ கேள்வி இன்னான்னா அதுல 4 லெட்டர் மட்டும் கரீட்டான கவருக்குள்ளார போவறதுக்கு எத்தினி சான்ஸ் கீது?


பதில்:

அ) 4/5 சான்ஸ்

ஆ) 3/5 சான்ஸ்

இ) 5/5 சான்ஸ்


சரியான பதில்: ஹையோ! ஹையோ! எந்த ஸ்கூலல படிச்சீங்க?

சரியான பதிலை தெரிந்து கொள்ள Ctrl-A வை அமுக்குங்க! (உங்க பதிலை பின்னூட்டத்துல சொல்லுங்க)

சரியான விடை (பிறகு சேர்த்தது)

சான்ஸே இல்ல தலீவா. அஞ்சுல நாலு லெட்டரு கரீட்டான கவருல பூட்சுன்னா பாக்கி இருக்கிற அஞ்சாவது லெட்டரும் கரீட்டான அஞ்சாவது கவருக்குள்ள போக வேண்டீது தானே வாத்யார்?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு13 comments:

Anonymous said...

1/5

Corporation School

ஜாம்பஜார் ஜக்கு said...

அனானி வாத்யார், உங்க விடை தப்பாப் பூட்ச்சே வாத்யார்.

//Corporation School// நானும் அதே உஸ்கூல் தான்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

சூரியன் said...

சான்ஸே இல்ல ஜக்கு ..

எனக்கு என்னமோ

1/5*4*3*2*1 இருக்கும் போல தெரியுது ..

நான் சொன்னது தப்புனு சொல்லி மானத்த வாங்கப்புடாது சொல்லிப்புட்டேன் ..

வேணுனா நான் சொன்ன பதில் கரெக்ட்தான் ஆனா இந்த கேள்விக்கு இல்லேனு சொல்லிபுடனும் சரியா..

டக்ளஸ்... said...

விடைதெரிய இன்னாத்துக்குமே ctrl+A அமுக்கனும். நீ வெள்ள கலர்ல எயிதியிருக்குறத செலக்ட் பண்ணுனாலே போதுமேப்பா..!
:)

ஜாம்பஜார் ஜக்கு said...

//நான் சொன்னது தப்புனு சொல்லி மானத்த வாங்கப்புடாது சொல்லிப்புட்டேன் ..//

அது வந்து ... வாத்யார்... நா இன்னா சொல்ல வரேன்னா... உங்க பதிலு... கிட்ட திட்ட ... அதாவது... ஓரளவுக்கு...அதாவது... கொஞ்சம் கொஞ்சம்...அதாவது தோராயமா... இந்த தபாவும் சுத்தமா ராங்காப் பூட்சு வாத்யார்!

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க டக்ளஸ் வாத்யார்,

"வடை பெறுகிறேன்"னு தலைப்பப் பாத்தா நீ கண்டிப்பா வருவங்காட்டியும்னு எதிர் பார்த்தேன்

:-))))

//விடைதெரிய இன்னாத்துக்குமே ctrl+A அமுக்கனும். நீ வெள்ள கலர்ல எயிதியிருக்குறத செலக்ட் பண்ணுனாலே போதுமேப்பா..!//

முடியல!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

நானும் மவுஸ் நகரும் போதே பாத்துட்டேஎன்

ஜாம்பஜார் ஜக்கு said...

//நானும் மவுஸ் நகரும் போதே பாத்துட்டேஎன்//

அதெல்லாம் சரி வாத்யார். கேள்விக்கு இன்னா வடை...ஆங்... விடை?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

இன்னாப்பா வடை? சீக்கிரம் சொன்னா டிபனுக்கு ஆகுமில்ல?

ஜாம்பஜார் ஜக்கு said...

சரி, சரி, ரொம்ப பசியோடகீறீங்க. கரீட்டான பதில பதிவுல புளு கலர்ல சொல்லிட்டேன் பாருங்க :))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பிரபல அனானி said...

//சான்ஸே இல்ல தலீவா. அஞ்சுல நாலு லெட்டரு கரீட்டான கவருல பூட்சுன்னா பாக்கி இருக்கிற அஞ்சாவது லெட்டரும் கரீட்டான அஞ்சாவது கவருக்குள்ள போக வேண்டீது தானே வாத்யார்?//

இப்படி தெளிவா சொன்னால் புரியுது!!!

:-))

துபாய் ராஜா said...

ஒரு வடை கேள்வி. :))

மூணு வடைய அண்ணன்,தம்பி ரெண்டு பேருக்கு பிரிச்சி கொடுத்தா மீதி என்ன இருக்கும்.??!!

ஜாம்பஜார் ஜக்கு said...

துபாய் ராசா, திருநெல்வேலிக்கே அல்வாவா?

//மீதி என்ன இருக்கும்?//

"அண்ணன்,தம்பி ரெண்டு பேருக்கு" கொடுத்தா ஆளுக்கு ஒரு வடை. "அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கு" கொடுத்தா ஆளுக்கு ஒண்ணரை வடை.

எப்டி கொடுத்தாலும் மீதி லேதண்டி! கரீட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு