மூத்த பதிவர்களுக்கு ஒரு சூடான கேள்வி (டென்ஷன் ஆவாதீங்க)

கேக்குறேனேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க.


தமிழ் மணம் முகப்பில் நம்ம போட்டோ வரமாடேங்குதே, அத்த வரவழைக்க இன்னா பண்ணோனும் வாத்யார்? வாணாம்..... பதில் தெரிஞ்சா சொல்லுங்க இல்லேன்னா வுடுங்க. தலைப்ப பாத்து அனாவசியமா டென்ஷன் ஆவாதீங்க.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


8 comments:

SAIDAPET CRANE said...

அண்ணாத்த சௌக்கியமா இருக்கீங்களா? என் திடீர்னு காணாம போய்விடீர்கள்? Everything all right? அந்த சர்தார்ஜி கதை எப்படி முடிஞ்சுது? சீக்கிரமா சொல்லு தல. ஒரு வருஷமா தலைய பிச்சுக்கிறேன்!

SAIDAPET CRANE

புருனோ Bruno said...

நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்க என்ன முகவரி கொடுத்துள்ளீர்களோ அந்த முகவரியை வைத்து ஒரு gravatar கணக்கு துவங்கி அதில் உங்களுக்கு தேவையான படத்தை ஏற்றிக்கொள்ளுங்கள்

http://en.gravatar.com/site/signup சென்று அங்கு நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்க அளித்த மின்னஞ்சல் முகவரியை அளிக்கவும்

அதன் பிறகு திரையில் வரும் கட்டளைகளை (instructions) கடைபிடித்தால் போதும்.

ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்

என் பதிவில் மறுமொழியாக கேட்டால் நலம்

Anonymous said...

தமிழ்மணத்தில் கொடுத்த அதே மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு http://en.gravatar.com/ என்ற தளத்தில் தங்கள் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளுங்கள். பதிவுகளை தமிழ்மணத்திற்கு அளிக்கும் பொழுது அந்தப் புகைப்படங்களை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும். முக்கியமாக கவனிக்க வேண்டியது - தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்யும் பொழுது கொடுத்த மின்னஞ்சல் முகவரியும், Gravatar தளத்தில் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரியும் ஒரே முகவரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே உங்கள் புகைப்படம் திரட்டப்படும்.
nathiyosai.com

சென்ஷி said...

தமிழ்மணத்தில் கொடுத்துள்ள மின்மடல் முகவரி மாறியிருந்தால் தமிழ்மணத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி தங்களின் தற்போது gravatar ல் உபயோகிக்கும் மின்மடல் முகவரியை தெரியப்படுத்தவும்.

தமிழ்மணத்தால் உடனே ஆவண செய்யப்படுகிறது. (சென்ஷியின் அனுபவக்குறிப்புகள் - 1023)

Anonymous said...

வாங்க வாத்யார். வரும்போதே ஒரு மார்க்கமாத்தான் வந்து இருக்கீங்க. நடத்துங்க :))

கோவி.கண்ணன் said...

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்டா மூத்தப் பதிவரா ?

அவ்வ்வ்வ்வ்வ்

புகைப்படம் இணைப்பது பற்றி உப்பு புளி மிளாகாய் போட்டு தமிழ்மணமே விளக்கி இருக்காங்க இங்கே

ஜாம்பஜார் ஜக்கு said...

ரொம்ப டாங்க்ஸ் புருனோ, மிக்கி, சென்ஷி,

கரீட்டா சொன்னீங்க, படம் இப்போ சூப்பரா தெரீது. மெய்யாலுமே நீங்க மூத்த பதீவருதான்!!!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க கோவி கண்ணன்!

//இந்த பதிவுக்கு பின்னூட்டம் போட்டா மூத்தப் பதிவரா ?//
இல்லியா பின்ன?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு