வாத்யார். இந்த தபா ரொம்ப ஈஸியான கேள்வியா கேட்டுகிறேன். டக்குன்னு பதில் சொல்லுங்க் பாக்கலாம்!
மதியம் வெள்ளி, ஜூலை 31, 2009
சுலபமாய் 10 கேள்விகள்!
மதியம் புதன், ஜூலை 29, 2009
இதுக்கு மட்டும் பதில் சொல்டீங்க நீங்க பெரீ....ய கில்லாடிதான்!!!

மதியம் செவ்வாய், ஜூலை 28, 2009
அவசரமாய் ஒரு கேள்வி!
மதியம் திங்கள், ஜூலை 27, 2009
FLASH NEWS!!! திருக்குறள் 134-ம் அதிகாரம் கண்டுபிடிப்பு!
மதியம் ஞாயிறு, ஜூலை 26, 2009
தமிழ்மணத்துக்கு மறுபடியும் அதே கேள்வி!
ஒரு வருஷத்துக்கு முன்னால இப்டி ஒரு பதிவு போட்டு இருந்தேன். இன்னிக்கும் நம்ம கேள்வி அப்டியேதான் கீது.
- புது பதிவு போட்டிங்கன்னா தமிழ்மணத்துல வர்றதுக்கு முன்னால தமிழ்மணம் க்ளாஸிக்ல பளிச்சுன்னு வந்துடுதே அது ஏன்?
- பின்னூட்டம் ரிலீஸ் பண்ணீங்கன்னா க்ளசிக்ல வந்து ரொம்ப நே......ரம் களிச்சுதான் தமிழ்மணத்துல வருதே அது ஏன்?
மதியம் சனி, ஜூலை 25, 2009
முப்பது வினாடிகளில் பிரபல பதிவர் ஆவது எப்படி? (Money Back Guarantee)
உங்களிடமிருந்து "விடை" பெறுவதற்காக இந்த கேள்வி !!!!!!!!!!!!!!!!!
வாத்யார், உங்க கைல 5 லெட்டரும் 5 அட்ரஸ் எளுதின கவரும் இருக்குன்னு வச்சுக்கங்க. இப்போ இந்த 5 லெட்டரையும் 5 கவருக்குள்ளார கண்ண மூடிக்கினு போட்டீங்கன்னு வைங்க. ஆச்சா? இப்போ கேள்வி இன்னான்னா அதுல 4 லெட்டர் மட்டும் கரீட்டான கவருக்குள்ளார போவறதுக்கு எத்தினி சான்ஸ் கீது?
மதியம் வெள்ளி, ஜூலை 24, 2009
பிரபல பதிவரும் ஔவையாரும்!
வாத்யார், நம்ம தமிழ்மணத்துல இன்னா நடக்குதோ இல்லியோ வருஷத்துக்கு நாலு தபா யாராவது ஒரு பிரபல பதிவரு 'விடைபெறுகிறேன்' ன்னு ஒரு ஃபிலிம் காட்டுறது மட்டும் கண்டிப்பா நடந்தே தீரும். ஒடெனே ஒரு பதினஞ்ச்சு பேரு "போவதே, போவாதே என் பதிவா"ன்ற கணக்கா பின்னூட்டம் போட்டு தாக்கி அவுர மறுபடி இட்டாந்துருவாங்க. (அந்த காலத்துல ஒரு பதிவரு யாரும் கூப்டாமயே ஸைலன்டா தானாவே திரும்ப வந்துட்டாரு! அது வேற கத!!!).
காணாமல் போன சர்தார்ஜி ஜோக்ஸ் (பாகம்-2)
அத்தியாயம்3 - பான்டாவின் மகிழ்ச்சி
ஜாம்பஜார் ஜக்கு
மதியம் புதன், ஜூலை 22, 2009
Top Secret! ஆபீஸில் ரகசியமாக தமிழ்மணம் படிக்க வேண்டுமா?
- வாத்யார்... ஆபீஸ்ல எவ்ளோதான் ஆணி பிடுங்கினாலும், உங்க டேமேஜர் உங்க பின்னாலியே நின்னுகினாலும்...யாருக்கும் தெரியாம ரகசியமா தமிழ்மணம் படிக்கணுமா?
- இதெல்லாம் ஒரு பதிவாங்காட்டியும்னு அல்லாரும் பெருமையா காறி துப்பினாலும் உடாம ஆபீஸ்லேயே பதிவு எளுதி தள்ளணுமா?
- கைக்கு வந்த வரியை கட் அண்ட் பேஸ்டு பண்ணி "நல்லா சொல்லிகிறே வாத்யாரே" ன்னு மத்த பேரு பதிவுக்கெல்லாம் ஆபீஸ்லியே பின்னூட்டம் போட்டு தாட்ண்மா?
- தமிழ்மணத்தின் சில மூத்த மற்றும் பிரபல பதிவர்கள் ஒருத்தரு மேல ஒருத்தர் பாஞ்சு பிராண்டி அன்போட போட்டு தாக்குறத ரகசியமா பட்ச்சு பரிந்துரை பட்டனை கிளிக்கோணுமா?

மதியம் செவ்வாய், ஜூலை 21, 2009
நீங்க கணக்குல புலியா? அப்டீன்னா இத்த கண்டிப்பா படிங்க!

மதியம் திங்கள், ஜூலை 20, 2009
Breaking News! சர்தார்ஜி ஜோக் இனி உலகில் கிடையாது!
நம்ப பான்டா சிங் அண்ணாத்தைக்கு ரொம்ப வருத்தமா பூட்சி. இது இன்னாடா எங்கப் போனாலும் சர்தார்ஜி ஜோக், சர்தார்ஜி ஜோக்னு சொல்லி நம்மள ரொம்ப சத்தாய்கிறாங்களே இதுக்கு எப்டினாச்சும் ஒரு முடிவு கட்டணும்னு ரொம்ப யோசிச்சிகினே இருந்தாரு. அதுவும் இந்த இன்டர்நெட் வந்ததுக்கு அப்பால நம்ப நெலம ரொம்ப மோசமா பூட்சேன்னு ரொம்ப பேஜார் பட்டுக்கினாரு.
அத்தியாயம் 2 - கடவுள் வந்தார்
எவ்ளோ யோசிச்சும் வேற வழி ஒண்ணும் தோணாத்னால, சரி நம்ப பெரிய அண்ணாத்த கடவுள் கிட்டயே கேட்டுக்கலாம்னு கடுமையா... அது இன்னா... ஆங்...பிரார்த்தன பண்ண ஆரம்பிச்சாரு. ஒரு வாரம் ஆச்சு. அதுக்குமேல கடவுளுக்கே பொறுக்க முடியாம நம்ப பான்டா அண்ணாத்த முன்னால வந்துட்டாரு! "உன் பக்தியை மெச்சினோம், இன்னா வேணும் கொளந்தாய்னு" சும்மா ஏபி நாகராஜன் படம் கணக்கா பான்டாவப் பாத்து கேட்டாரு.
அத்தியாயம் 3 - மறைந்தன சர்தார்ஜி ஜோக்குகள்
பான்டா அண்ணாத்த இதுக்குதான காத்துகினு இருந்தாரு! "ஆண்டவா இனிமே இந்த ஒலகத்துல ஒரு பய சர்தார்ஜி ஜோக்னு வாயத் தொறக்கக் கூடாது. அது மாத்ரம் இல்ல... தமிழ்மணம், பதிவு, இன்டர்னெட்டு, புக், ரேடியோ, டிவி, சினிமா அல்லாத்லயும் இதுவரைக்கும் இருக்குற சர்தார்ஜி ஜோக் அல்லாம் இந்த நிமிட்லேர்ந்து காணாம பூடணும்" அப்டீன்னு கேட்டுகினாரு. ஆண்டவன் "அப்டியே ஆகட்டும்" அப்டீன்னாரு.
அடுத்த நிமிட் இந்த உலகத்லேர்ந்து எல்லா சர்தார்ஜி ஜோக்கும் காணாம பூட்ச்சு. நகைச்சுவை ஒலகம் அப்டியே ...இன்னாது...ஸதம்பிச்சு நின்னு போச்சு. "இனிமே ஈரேழு பதினாலு ஒலகத்லயும் நகைச்சுவையின் எதிர்காலம் இன்னா ஆவுமோ"னு அல்லாரும் திகைச்சு பூட்டாங்க...
~தொடரும்.
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
மதியம் ஞாயிறு, ஜூலை 19, 2009
நமீதாவுக்கு... ஒரு கேள்வி! (கில்லாடிகளுக்கு மட்டும் இந்த பதிவு!)
2. ஒரு நம்பர் கீது. அத்த 5 ஆல பெருக்குனாலும் இல்லாங்காட்டி 5-ஐ கூட்டினாலும் ஒரே ஆன்சர் தான் வரும். இன்னா நம்பர் அது?
3. இதுக்கு அப்பால வர்ற நாலு எளுத்து இன்னா, இன்னா, இன்னா, இன்னா?
Y
Y
H
L
Y
E
Y
T
4. கட்சீயா ஒரு கேள்வி. ராமசாமிக்கு 10, குப்புசாமிக்கு 12, நமீதாவுக்கு 8, அப்டீன்னா ஜாம்பஜாருக்கு எவ்ளோ?
மூத்த பதிவர்களுக்கு ஒரு சூடான கேள்வி (டென்ஷன் ஆவாதீங்க)
மதியம் சனி, ஜூலை 18, 2009
அட, எங்க இத்தினி நாளா ஆளையே காணும்?
வணக்கம் வாத்யார்!
பாத்து எத்தினி நாள் ஓடிப் பூட்ச்சு? சொகமா கீறீங்களா? வூட்டாண்ட அல்லாரும் சௌக்கியமா கீறாங்களா? நாட்ல எத்தினி விஷயம் நடந்து பூட்டுது? ஒலகமே கொஞ்சம் பொரண்டு வுளுந்து எழுந்து நின்னாலும் நம்ப தமிழ்மணம் எப்பவும் போல ஸ்டெடியா கீதுன்றது மெய்யாலுமே ஹாப்பியா கீதுப்பா! நீங்க கேக்குறத்துக்கு முன்னால ஒரு தபா நானே கேட்டுகிறேன்: "அட, எங்க இத்தினி நாளா ஆளையே காணும்?"
எப்பவும் போல அடிக்கடி வூட்டாண்ட வாங்க! என்ன நான் சொல்றது? கரீட்டா?
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு