காணாமல் போன சர்தார்ஜி ஜோக்ஸ் (பாகம்-2)

அத்தியாயம்3 - பான்டாவின் மகிழ்ச்சி

நம்ம பான்டா சிங் வேண்டிகினு கடவுள் "அப்டியே ஆகட்டும்" னு சொன்ன ஒடனே ஒலகத்துல எல்லா சர்தார்ஜி ஜோக்கும் காணாம பூட்ச்சா? "இனிமே ஈரேழு ப‌தினாலு ஒல‌க‌த்ல‌யும் ந‌கைச்சுவையின் எதிர்கால‌ம் இன்னா ஆவுமோ"னு அல்லாரும் திகைச்சு பூட்டாங்க‌. பான்டா சிங் மெய்யாலுமே ரொம்ப குஷி ஆய்ட்டாரு. ஆஹா... இனிமே ஒரு பய நம்மள டபாய்க்க முடியாதுன்னு எல்லா சர்தார்ஜிகளும் பெருமூச்சு உட்டுகினாங்க.

அத்தியாயம்4 - கடவுள் தந்த இரண்டாவது வரம்

இத்தையெல்லாம் பார்த்து கடவுள் கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆய்ட்டாரு. அவுரு பான்டாவப் பாத்து: "பக்தனே பான்டா! நானே நேரில் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டும் கூட நீ உனக்கு என்று எதையும் கேட்காமல் மற்றவர்களுக்காக வரம் கேட்டாயே அந்த பெருந்தன்மையை மெச்சுகிறேன். அதனால் உனக்காக இன்னும் ஒரு வரமும் தருகிறேன். என்ன வேண்டுமோ கேள்" அப்டீன்னாரு. அல்லாரும் அப்டியே அசந்து போய் நின்னுட்டாங்க.

அத்தியாயம்5 - பான்டாவின் யோசனை

ஆனா, கடவுள் இப்டி சொன்னதுக்கு அப்பாலயும் நம்ம பான்டா தனக்குன்னு எதுவுமே வாணாம்னு சொல்லிட்டாரு. ஆனாலும் கடவுள் உடல. பான்டாவோட நல்ல மன்சுக்கு கண்டிப்பா எதுனாச்சும் கேட்டுத்தான் ஆவணும்னு அன்போட கண்டிப்பா சொல்லிட்டாரு. பான்டாவுக்கு ஒண்ணுமே புரியல. தனக்குன்னு இன்னாத்த கேக்குறதுன்னு ரொம்ப யோசிச்சு, யோசிச்சு பாத்தாரு. இப்டியே அரை மணி ஓடிப் பூட்ச்சு. கடவுளோ சிரிச்சுகினே வெய்ட் பண்ணிகினே கீறாரு. கட்சீல ஒரு வளியா பான்டா வாயைத் தொறந்தாரு. தொண்டைய ஒரு தபா கனச்சுக்கினாரு. கடவுளும் நல்லா காதை தீட்டிகினு கவனமா கேக்குறதுக்கு தயாரானாரு...

~தொட‌ரும்.

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

6 comments:

பிரபலமில்லாத பதிவர் said...

பயங்கர சஸ்பென்ஸா இருக்கு. ஜக்கு, நீங்க முழு நீள கதையே எழுதலாம் போல இருக்கே!

ஜாம்பஜார் ஜக்கு said...

ஆஹா.. இதான வாணான்றது! (இப்டி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே...)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

அப்புறம் என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியும், ஆனா சொல்ல மாட்டேன். ஹி..ஹி..

கண்ணன்

ஜோ... said...

//கடவுளும் நல்லா காதை தீட்டிகினு கவனமா கேக்குறதுக்கு தயாரானாரு...//

நானும் தான்.

ஜோ...

ஜாம்பஜார் ஜக்கு said...

அனானி / "ஜோ..."

அப்பாலிக்கா இன்னா அயிருக்கும்னு யோசிச்சு பாருங்க (நானும் யோசிச்சிகினு தான் கீறேன்!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

பிரபல அனானி said...

அப்புறம்????????????????