நீங்க கில்லாடியா? அப்படீன்னா உடனே இத படிங்க!

நீங்க மெய்யாலுமே கில்லாடிதான்! உங்களுக்காக அஞ்சே அஞ்சு கேள்வி (ரொம்ப‌ சுல‌வ‌ம்). நச்சுனு பின்னூட்டத்தில பதில் சொல்லுங்க வாத்யார்!!!

1. பாலைவனத்தில போய்கினு இருக்கும் போது ஒரு லெட்ட‌ர்ல‌ ஸ்டாம்ப் ஒட்னமின்னா ரொம்ப சுலவ‌ம். (நாக்கு வரண்டு பூட்டிருந்தாலும், பக்கத்துல தண்ணியே இல்லீன்னாலும்). எப்படி?

2. ரோமன் நம்பர்ல‌ ஒரு ந‌ம்ப‌ர‌ இன்னெரு ந‌ம்ப‌ரா மாத்ர‌து ரொம்ப‌ சுல‌வ‌ம்.

இப்டி போட்டா ப‌த்து: X
அதுக்கு ப‌க்க‌த்துல ஒரே ஒரு கோடு போட்டா ஒன்ப‌து: IX

இப்ப‌ மேட்ட‌ர் இன்னான்னா ஒன்ப‌துக்கு ப‌க்க‌த்துல‌ ஒரே ஒரு கோடு போட்டு அத‌ ஆறா மாத்தோணும். எப்ப‌டி?

3. ஒரு காலியான‌ கோக்கோ கோலா டின்ல அதிகபட்சம் எத்தினி 5 ரூபா காய்ன‌ ரொப்ப‌ முடியும்? (வேர்ல்டு ரெகார்டுப்பா!)

4. அந்த ஜூவுல‌ (Zoo) கொஞ்ச‌ம் மிருக‌ங்க‌ள் இருந்திச்சாம். அதுல‌ மூன்றை த‌விர‌ எல்லாம் சிங்க‌மாம். மூன்றை த‌விர‌ எல்லாம் புலியாம். மூன்றை தவிர எல்லாம் கரடியாம். அது மாத்ர‌ம் இல்ல‌. மூன்றை த‌விர‌ எல்லாம் யானையாம். அப்டீன்னா அங்க‌ மொத்தம் எத்தினி மிருக‌ம் இருந்திச்சி? இன்னா, இன்னா?

5. முன்னூறோடு மூன்றை மூணு தபா கூட்டினால் விடை இன்னா கெடைக்கும்?

யார் அஞ்சு கேள்விக்கும் கரீட்டா பதில் சொல்றாங்கன்னு பார்ப்போம்!

இப்ப‌டிக்கு,
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

விடைகள் (29ம் தேதி எளுதினது):

1. அங்க‌ ஒட்ட‌ க‌ம் இருக்குல்ல‌, அப்புற‌ம் இன்னா?
2. SIX. நேர்கோடுன்னு நீங்க‌ளா நென்சிகினா நான் இன்னா ப‌ண்ற‌து?!
3. ஒண்ணுதான். அதுக்கு அப்புற‌ம் அது காலியாவா இருக்கும்?
4. நாலு. அல்லாத்ல‌யும் ஒண்ணு ஒண்ணு.
5. 303. எவ்ளோ த‌பா கூட்னாலும் அதான் கெடைக்கும்.

எல்லா கேள்விக்கும் ச‌ரியான‌ விடை சொன்ன‌வுங்க‌:
(வ‌ழ‌க்க‌ம் போல‌ அல்லாரும் ஜோரா ஒரு த‌பா கைத்த‌ட்டிடுங்க)!!!

வெட்டிப்ப‌ய‌ல் (இவ‌ருக்கு தான் பர்ஸ்ட் ப்ரைஸ்!!!)
ல‌தா
Jeeves

நாலு கேள்விக்கு கரீட்டா பதில் சொன்னவுங்க:

பினாத்தல் சுரெஷ்
வால் பைய‌ன்
அனானி
யாரோ ஒருவ‌ன்

மத்த பேரெல்லாம் அடுத்த தபா பின்னிடுங்க. இன்னாமோ சொல்லுவாங்களெ...ஆங்..அதான்: பெட்டர் லக் நெக்ஸ்ட் தபா!!!

41 comments:

வெட்டிப்பயல் said...

1.அங்க தான் ஒட்ட'கம்' இருக்கே

2."S"IX

3. காலியான டின்ல ஒரு அஞ்சு ரூபா காயின் தான் போட முடியும். ரெண்டாவது போட முடியாது. ஏன்னா அப்ப தான் அது காலியில்லையே ;)

4. 4 விலங்கு. சிங்கம், புலி, கரடி, யானை - Each 1

5. 303... (நூறு தடவை முன்னூறோடு மூன்றை கூட்டினாலும் அது தான் வரும் ;))

பினாத்தல் சுரேஷ் said...

1. பாலைவனத்தில போய்கினு இருக்கும் போது ஒரு லெட்ட‌ர்ல‌ ஸ்டாம்ப் ஒட்னமின்னா ரொம்ப சுலவ‌ம். (நாக்கு வரண்டு பூட்டிருந்தாலும், பக்கத்துல தண்ணியே இல்லீன்னாலும்). எப்படி?

ஒட்ட கம் இருக்கே

2. நேர்க்கோடு இல்லை, வளைஞ்ச கோடு S அதாவது S I X

3. ஒண்ணுதான். சர்தார்ஜி சப்பாத்தி ஜோக்கோட உல்டாவா இது?

4. பெரிய பில்ட் அப் கொடுத்துட்டா மட்டும்? இருக்கறதே 4 மிருகம்தான். ஒரு புலி ஒரு சிங்கம் ஒரு கரடி ஒரு யானை.

5. இது மூளைக்கு வேலை இல்லை, ஏமாத்து வேலை.

300+3*3 யா, (300+3)*3 யா ன்னு கொழப்பறவேலை - எனக்கு பிடிக்காது அதனால இதுக்கு ஆன்ஸர் சொல்லமாட்டேன் :-)

Anonymous said...

//நீங்க கில்லாடியா?//

//நான் இன்னாத்தக் கண்டேன்!//

:-)))

மாதங்கி said...

முதல் கேள்விக்கு விடை கடசில சொல்லறேன்

2. ரோமன் எண் ஒன்பதில் இருக்கும் ஒரு கோட்டுக்கு அருகில் வளைசலா ஒரு கோடு போட்டு இதோ பாரு ஆறுன்னா (நதி) ஒத்துக்குவீங்க்களா?

3. காலியான டின் சரி, அதையே சீல் பண்ணி மூடியிருந்தா?

4. இது மனிதகாட்சிசாலையா, பயமா இருக்கே

5. இது ஈசிங்க,
300 றுடன் 3ஐ 3000 வாட்டி கூட்டினாலும் சரி ஒரு வாட்டி கூட்டினாலும் 303 தாங்க வரும்

இனி முதல் கேள்விக்கான விடை

வேறென்ன அழுவாச்சிதான்!

Anonymous said...

4. ஜூவில நாலு மிருகம் இருந்துச்சு
5. முன்னூறோட மூணை எத்தனி தபா கூட்டினாலும் முன்னூத்தி மூணேய் (முன்னூறோட மூணை மூணு தபா கூட்டினா 333 ஆ இல்லை 309 ஆன்னு இன்னொரு விவாதத்தையிம் ஆரம்பிக்கலாம்)

Syam said...

இப்பிடி கேள்வி கேட்டா நான் இன்னாத்தக் கண்டேன் :-)

மாதங்கி said...

ஜா.ஜ.

ரோமன் லெட்டர் புதிரில்,
1X க்குப்பக்கத்தில் ஒரு கோடைப்போடலாம் என்றீர்களே அதை கொஞ்சம் வளைத்து S போல் போட்டால் ஆறு வருமே !

பினாத்தல் சுரேஷ் said...

ஜக்கு அண்ணாத்தே..

கேள்வி கேட்டுகினா மட்டும் பத்தாது. எவனாச்சும் சுகுரா சொல்ட்டாண்ணு வையு.. அத்தை அல்லார்க்கும் காட்டாம மாடு ஓட்டறது எல்லாம் சரிதான்.. ஆனாக்கா.. இப்டி இப்டி.. பலான ஆளு பதில் சொல்லிக்கீறாரு.. அவருக்கு ஒரு தாங்க்ஸுன்னு சொல்லிக்க்கணும்.. அதான் பம்பாடு..

எதுக்கு இந்த வேலையத்த வேலைன்றீங்களா? காலங்காலைலே எயுதிப்போட்ட தபாலு வந்து சேந்துச்சா இல்ல ப்ளாக்கு காக்கா கொத்திக்கினு போச்சான்னு என்னாட்டம் ஆளு மெர்சல் ஆவாம இருப்பானில்ல?

கொத்தனார்னு ஒரு ஆளு இதுல எக்ஸ்பர்ட்டு.. கமெண்டை விடாம பதில்லேயே 100 கமெண்டு தேத்தற பார்ட்டி.

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க வெட்டிப் பயல் அண்ணாத்தே! வழக்கம் போல போட்டுத் தாக்குறீங்க :)) மத்த சனங்க இன்னா சொல்றாங்கன்னு பாத்துட்டு உங்க பதில ரிலீஸ் செஞ்சிக்கிறேன்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

பினாத்தல் வாத்யார், வழக்கம் போல புயல் வேகம் :)) என்க்குதான் கொஞ்சம் லேட்டா பூட்சி.

//கொழப்பறவேலை - எனக்கு பிடிக்காது//

இன்னாது? அத ரொம்ப பேரு தொழிலாவே வச்சிக்கிறொம் :-))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க மாதங்கி.

//இதோ பாரு ஆறுன்னா (நதி) ஒத்துக்குவீங்க்களா?//

எப்டீங்க இப்டியெல்லாம் யோசிக்கிறீங்க? :)))))))) பாக்கி கேள்வி எல்லாம் இன்னா ஆவுதுன்னு பாக்கலாம்!!!

//333 ஆ இல்லை 309 ஆன்னு இன்னொரு விவாதத்தையிம் ஆரம்பிக்கலாம்//

ஆஹா சின்ன அம்மிணி, புச்சு புச்சா யோசிக்கிறீங்க. ஆனா மத்த கேள்வி எல்லாம் சாய்ஸ்ல உட்டுடீங்களா? :))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//கேள்வி கேட்டுகினா மட்டும் பத்தாது. எவனாச்சும் சுகுரா சொல்ட்டாண்ணு வையு.. //

பினாத்தல் தலீவா! இன்னிக்கு வசமா மாட்டிகினேன்! பெரிய மன்சு பண்ணி மன்ச்சுக்கப்பா! ஏகப்பட்ட ஆணி இன்னிக்கு, கொஞ்சம் பேஜாராப் பூட்டுது! அதான் லேட்டு.

//மாடு ஓட்டறது //
//மெர்சல் ஆவாம//

அண்ணாத்தே, உங்க கிட்ட‌ கத்துக்க வேண்டிய விஷயம் நறீயா கீதுப்பா!

//கொத்தனார்னு ஒரு ஆளு இதுல எக்ஸ்பர்ட்டு.. கமெண்டை விடாம பதில்லேயே 100 கமெண்டு தேத்தற பார்ட்டி.//

இப்போன்னு பாத்து அந்த ஆளு எங்கியோ பூட்டாரே? இருந்தாலும் ஐடியா நல்லா கீது ரொம்ப‌ டாங்க்ஸ்பா...இனிமே அவுருதான் நம்ம குரு...ஹி..ஹி.. ;)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

லதா said...

1. அங்கேதான் ஒட்டகம் இருக்குமே.
2. SIX
3. ஓன்று. (அதற்குப்பிறகு அது காலியான டின்னாக இருக்காது)
4. 1 சிங்கம், 1 புலி, 1 கரடி, 1 யானை
3. முன்னூத்தி மூன்றுதான் (எத்தினி தபா கூட்டினாலும் ஆன்சர் அதேதான் மிஷ்டீக்கா கூட்டினால்தான் வேற வேற ஆன்சர் வரும்)

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க லதா!

//எத்தினி தபா கூட்டினாலும் ஆன்சர் அதேதான் மிஷ்டீக்கா கூட்டினால்தான் வேற வேற ஆன்சர் வரும்//

ஆஹா! இன்னா மாதிரி ஒரு தத்துவம் சொல்லி கிறீங்க! புல்லரிக்குது! பாக்கி சனம் இன்னா சொல்றாங்கோன்னு பாத்துட்டு உங்க விடைய சொல்றேன். கோச்சுகாதீங்க! (ஏற்கெனவே பினாத்தல் கிட்ட இன்னிக்கு ஏகப்பட்டது வாங்கி கிறேன்!)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

வால்பையன் said...

// பாலைவனத்தில போய்கினு இருக்கும் போது ஒரு லெட்ட‌ர்ல‌ ஸ்டாம்ப் ஒட்னமின்னா ரொம்ப சுலவ‌ம். (நாக்கு வரண்டு பூட்டிருந்தாலும், பக்கத்துல தண்ணியே இல்லீன்னாலும்). எப்படி?//

அங்க தான் ஓட்ட "கம்" இருக்கே

//ஒன்ப‌துக்கு ப‌க்க‌த்துல‌ ஒரே ஒரு கோடு போட்டு அத‌ ஆறா மாத்தோணும். எப்ப‌டி?//

வளைந்த கோடு தான் பதில்.

//ஒரு காலியான‌ கோக்கோ கோலா டின்ல அதிகபட்சம் எத்தினி 5 ரூபா காய்ன‌ ரொப்ப‌ முடியும்?//

ஒன்று, அதன் பின் அது காலி இல்லை

//அப்டீன்னா அங்க‌ மொத்தம் எத்தினி மிருக‌ம் இருந்திச்சி? //

நான்கு

//முன்னூறோடு மூன்றை மூணு தபா கூட்டினால் விடை இன்னா கெடைக்கும்?//

இதில் எதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது
இருந்தாலும் என் பதில் 309

வால்பையன்

வாங்க வால்பையன் அண்ணாத்தே!

//இதில் எதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது
இருந்தாலும் என் பதில் 309//

(எட்டுக்கால் பூச்சிக்கு எத்தினி கால்? ஜோக் தெரீமா உங்களுக்கு?)

மத்ததெல்லாம் சூப்பர்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

M.Rishan Shareef said...

ரொம்பக் கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டிருக்கீய அண்ணாச்சி..இம்மாம் பெரிய முதலாளி கூட என்னியப் பார்த்து இப்படியொன்னும் கேட்டதில்ல.
நான் இன்னாத்தக் கண்டேன்?

1.ஸ்டாம்பு ஒட்ட எதுக்கு கண்ணு நாக்கு பாலைவனத்துல...?
ஊத்து வழியுற வேர்வை போதுமே..அப்டீக்கா தொட்டு இப்டீக்கா ஒட்டிக்கலாம்.
அது சரி அங்கன போய் யாருக்குக் கடுதாசி எழுதப் போறீக? எத்தினி நாளா இந்த ஐடியாவோட சுத்திக்கினுகீறீக?

2.இதெல்லாம் சிம்பளான கேள்வி சித்தப்பு..
ஏதோ ஸ்கூலு பசங்களாட்ட கேட்டுனு திரிய வேண்டிய கேள்விய எங்கிட்ட கேட்டுக்கினுகீறீகளே..?

3.இங்கிட்டு 5 ரூபாக்கு காயினெல்லாம் இல்ல அண்ணாச்சி.நோட்டுதேன்..
நீங்க இப்போ இன்னா பண்றீக? ஒரு பெரிய டப்பா நிறைய எனக்கு 5 ரூபா காயின் அனுப்பி வைப்பீகளாம்..நான் காயின் கெடச்ச சந்தோஷத்துல ஒரு கோக் காலியாக்கி அதுல காயினை நெறச்சுப் பார்த்து கரீக்டா விடைய சொல்வேனாம்...சரியா அண்ணாச்சி..?

4.இந்தக் கேள்விக்கு இன்னா பதிலுன்னு தெரியலியே கண்ணு..
ஜு வுல இருக்குற பூரா ஜாதிகளும் இங்கிட்டு மனுஷப்பய புள்ளகளா அலையுறதால காசு போட்டு டிக்கட்டு வாங்கி ஜூவுக்கெல்லாம் போயி நானு இன்னாத்தக் கண்டேன்?

5. இந்தக் கேள்விக்கு இன்னா பதில்னு அக்கவுண்டண்ட கேட்டா அவனொண்ணு சொல்றான்.ஆடிட்டர்கிட்ட கேட்டா அவனின்னொண்ணு சொல்றான்.வாட்ச்மேன் கிட்ட கேட்டா 'அடக் கருமமே,இம்புட்டு நேரம் நல்லாத்தானே இருந்தீக தல..ஏதாச்சும் காத்துக் கருப்பு அண்டியிருக்குமோ'ங்குறான்..
எனிக்கு 303 தடவ தல சுத்தி மயக்கம் வராத கொறயாக் கிடக்கேன்.

சீக்கிரமா பதிலப் போடுங்க அண்ணாச்சி....புண்ணியாப்போகும்..

ஜாம்பஜார் ஜக்கு said...

ரிஷான் அண்ணாத்தே!

//அங்கன போய் யாருக்குக் கடுதாசி எழுதப் போறீக? எத்தினி நாளா இந்த ஐடியாவோட சுத்திக்கினுகீறீக?//

இன்னிக்கு ஒரு மார்க்கமாத்தான் கெளம்பி வந்துகிறீங்க!!!

//இதெல்லாம் சிம்பளான கேள்வி சித்தப்பு..
ஏதோ ஸ்கூலு பசங்களாட்ட கேட்டுனு திரிய வேண்டிய கேள்விய எங்கிட்ட கேட்டுக்கினுகீறீகளே..?//

ஆஹா, பதில் தெரிலெங்கறத இங்லீஷ்ல இப்டித்தான் சொல்லுவாங்களா? :)))

//சீக்கிரமா பதிலப் போடுங்க அண்ணாச்சி....புண்ணியாப்போகும்//

நானும் யாருனா அடிக்க வரத்துக்கு முன்னாடி கண்டுபுடிச்சுடோணும்னு யோசிச்சுக்கினே கீறேன். மாட்ட மாட்டேங்குதே! பதில் தெரிஞ்ச ஒடனே டக்குனு போட்டுருவமில்ல?

சொம்மா, டமாசு.. :))))))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

For 1) It is a self-adhesive stamp

Anonymous said...

For 3) One, after that the tin is no longer empty?

Sen22 said...

1.லெட்டரல எதுக்கு ஸ்டாம்ப்பு ஒட்டணும்...

மாதங்கி said...

2 aavathu keelvikku vidai ippoothuthaan therindathu, pakkathil koodaip pottu aaRakka mudiyavillai athanal athai valaithu S aakkivittaen, ipoothi SIX vanthuvittathu

(unicode velai seyavillai)

Anonymous said...

நீங்க மெய்யாலுமே கில்லாடிதான்! உங்களுக்காக அஞ்சே அஞ்சு கேள்வி (ரொம்ப‌ சுல‌வ‌ம்). நச்சுனு பின்னூட்டத்தில பதில் சொல்லுங்க வாத்யார்!!!

1. பாலைவனத்தில போய்கினு இருக்கும் போது ஒரு லெட்ட‌ர்ல‌ ஸ்டாம்ப் ஒட்னமின்னா ரொம்ப சுலவ‌ம். (நாக்கு வரண்டு பூட்டிருந்தாலும், பக்கத்துல தண்ணியே இல்லீன்னாலும்). எப்படி?

பதில்: பக்கத்துல தான் ஒட்ட கம் இருக்கே சும்மா ஜமாய்க்க வேண்டியதுதான?

2. ரோமன் நம்பர்ல‌ ஒரு ந‌ம்ப‌ர‌ இன்னெரு ந‌ம்ப‌ரா மாத்ர‌து ரொம்ப‌ சுல‌வ‌ம்.

இப்டி போட்டா ப‌த்து: X
அதுக்கு ப‌க்க‌த்துல ஒரே ஒரு கோடு போட்டா ஒன்ப‌து: IX

இப்ப‌ மேட்ட‌ர் இன்னான்னா ஒன்ப‌துக்கு ப‌க்க‌த்துல‌ ஒரே ஒரு கோடு போட்டு அத‌ ஆறா மாத்தோணும். எப்ப‌டி?

பதில்: இது ரொம்ப சுலபம்... SIX அம்புட்டு தான்..

3. ஒரு காலியான‌ கோக்கோ கோலா டின்ல அதிகபட்சம் எத்தினி 5 ரூபா காய்ன‌ ரொப்ப‌ முடியும்? (வேர்ல்டு ரெகார்டுப்பா!)
பதில்: கொஞ்சம் 5 ரூபா காயின் குடுத்தீங்கனா ரொப்பி காமிச்சுருவம்ல?

4. அந்த ஜூவுல‌ (Zoo) கொஞ்ச‌ம் மிருக‌ங்க‌ள் இருந்திச்சாம். அதுல‌ மூன்றை த‌விர‌ எல்லாம் சிங்க‌மாம். மூன்றை த‌விர‌ எல்லாம் புலியாம். மூன்றை தவிர எல்லாம் கரடியாம். அது மாத்ர‌ம் இல்ல‌. மூன்றை த‌விர‌ எல்லாம் யானையாம். அப்டீன்னா அங்க‌ மொத்தம் எத்தினி மிருக‌ம் இருந்திச்சி? இன்னா, இன்னா?

பதில்: நாலு மிருகம் தான்.. ஒரு சிங்கம், ஒரு புலி, ஒரு கரடி அப்புறம் ஒரு யானை...

5. முன்னூறோடு மூன்றை மூணு தபா கூட்டினால் விடை இன்னா கெடைக்கும்?
பதில்: 303 தான்.. இதுக்கு எதுக்கு மூணு தபா கூட்டுறது? ஒரு தபா பத்தாதா?

Kodees said...

1. வியர்வை

2. அந்த ஒரு கோடு S (IX)

3. 1, ஏன்னா அப்புறம் அது காலியான டின் அல்ல

4. 1 சிங்கம், 1 புலி, 1 கரடி, 1 யானை

5. 303

நானானி said...

ரிஷான் ஷெரீப், வியர்வையில் ஒட்டலாம்முன்னு சொல்லீட்டாரு, ஒரு அனானி உறிச்சு ஒட்டுற ஸ்டாம்ப்ன்னும்
ஆன்சர் பண்ணீட்டாரு...தமாஷுக்கு நான் சொல்லவா? பாலைவனத்திலேதான் கானல்நீர் இருக்குமே!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஏம்பா ஜக்கு,சோ அண்ணாத்த இப்பல்லாம் ஒன்னும் எயுத கூபட்றது இல்லயா?
இப்டி ப்ளாக்காண்ட வந்து பொயப்பு ஒட்டக்கினுகீற?

Iyappan Krishnan said...

இன்னாபா இவ்ளோ கஸ்டமா கீது ?

/
1. பாலைவனத்தில போய்கினு இருக்கும் போது ஒரு லெட்ட‌ர்ல‌ ஸ்டாம்ப் ஒட்னமின்னா ரொம்ப சுலவ‌ம். (நாக்கு வரண்டு பூட்டிருந்தாலும், பக்கத்துல தண்ணியே இல்லீன்னாலும்). எப்படி?
//

அதான் ஒட்ட"கம்" கீதுல்ல பக்கத்துலே.. என்னாபா கேள்வி இது
//
2. ரோமன் நம்பர்ல‌ ஒரு ந‌ம்ப‌ர‌ இன்னெரு ந‌ம்ப‌ரா மாத்ர‌து ரொம்ப‌ சுல‌வ‌ம்.

இப்டி போட்டா ப‌த்து: X
அதுக்கு ப‌க்க‌த்துல ஒரே ஒரு கோடு போட்டா ஒன்ப‌து: IX

இப்ப‌ மேட்ட‌ர் இன்னான்னா ஒன்ப‌துக்கு ப‌க்க‌த்துல‌ ஒரே ஒரு கோடு போட்டு அத‌ ஆறா மாத்தோணும். எப்ப‌டி?

//

வளைஞ்சு இருந்தாலும் அது ஒரே கோடு தாம்பா அது நேராத்தான் இருக்கனும்னு இல்லையே

//
3. ஒரு காலியான‌ கோக்கோ கோலா டின்ல அதிகபட்சம் எத்தினி 5 ரூபா காய்ன‌ ரொப்ப‌ முடியும்? (வேர்ல்டு ரெகார்டுப்பா!)
//
0 ? அந்த ஓபன் ல காயின் போவாதுப்பா

4. அந்த ஜூவுல‌ (Zoo) கொஞ்ச‌ம் மிருக‌ங்க‌ள் இருந்திச்சாம். அதுல‌ மூன்றை த‌விர‌ எல்லாம் சிங்க‌மாம். மூன்றை த‌விர‌ எல்லாம் புலியாம். மூன்றை தவிர எல்லாம் கரடியாம். அது மாத்ர‌ம் இல்ல‌. மூன்றை த‌விர‌ எல்லாம் யானையாம். அப்டீன்னா அங்க‌ மொத்தம் எத்தினி மிருக‌ம் இருந்திச்சி? இன்னா, இன்னா?

தலா ஒவ்வொன்று என வகைக்கு ஒரு சிங்கம், புலி, கரடி மற்றும் யானை

5. முன்னூறோடு மூன்றை மூணு தபா கூட்டினால் விடை இன்னா கெடைக்கும்?

303 தான் .. வேறென்ன?

கரீட்டா ?

Anonymous said...

எனக்கு பதில் தெரியும்ல... ஆனா பதில் சொல்ல மாட்டேன்... முதல்ல கேள்வி கேட்ட ஜக்குக்கு பதி தெரிதானு பாக்கலாம்..

இன்னா கரீட்டா....

Iyappan Krishnan said...

//3. ஒரு காலியான‌ கோக்கோ கோலா டின்ல அதிகபட்சம் எத்தினி 5 ரூபா காய்ன‌ ரொப்ப‌ முடியும்? (வேர்ல்டு ரெகார்டுப்பா!)
//

அண்ணாத்தே மன்சுக்கோப்பா.. ஒரு அஞ்சுரூவா காயின் போட்டாலே அப்புறம் எம்ப்டி இல்லையே அதுனால ஒரு அஞ்சுரூவா காயின் தான் போட முடியும். முன்னாடி போட்ட பதில்ல இருந்து ஒரு தப்ப மட்டும் சரி செஞ்சுக்கோப்பா

ஜாம்பஜார் ஜக்கு said...

//எனக்கு பதில் தெரியும்ல... ஆனா பதில் சொல்ல மாட்டேன்... முதல்ல கேள்வி கேட்ட ஜக்குக்கு பதி தெரிதானு பாக்கலாம்.. //

இந்த அளவுக்கு ஆனப்புறம் இனிமே பதில இன்னிக்குள்ள‌ வெளியிடாம இருக்கமுடியாது :)))))

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க அறிவன்!

//ஏம்பா ஜக்கு,சோ அண்ணாத்த இப்பல்லாம் ஒன்னும் எயுத கூபட்றது இல்லயா?
இப்டி ப்ளாக்காண்ட வந்து பொயப்பு ஒட்டக்கினுகீற?//

சோ அண்ணாத்த என்ன எளுத கூப்புடறதா? அவுருதாம்பா என்ன பத்தி எளுதுவாரு. "மெட்ராஸ் பை நைட்" நியாபகம் இல்லியா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க சென்22!
வாங்க நானானி,

//லெட்டரல எதுக்கு ஸ்டாம்ப்பு ஒட்டணும்...//

//பாலைவனத்திலேதான் கானல்நீர் இருக்குமே!!//

எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்! (பின்னூட்டத்த சொன்னம்பா :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

DAWOOD said...

ஹலோ ஜக்கு .........

1.ஒட்ட’கம்’(அதான் கம் இ௫க்கே?)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஜக்குவார் ஜாம்பு சார்,

1. பாலைவனத்துல ஒட்டகம் நிக்குமே பயன்படுத்திக்கோங்க.
ஒட்ட கம் = ஒட்டுறதுக்குக் கம்

2. ஒன்பது = IX
ஆறு = SIX
முன்னால ஒரு வளைஞ்ச கோட்டப் போட்டா சரி.

3. இது இடக்கு மடக்கு கேள்விதான். ஏன்னா இங்க இலங்கையில 5 ரூபா நாணயம் வேறமாதிரி உங்க இந்தியாவுல வேறமாதிரி.

4. மண்டை காயுது....

5. 303 தான் சார். எங்கூரில தபான்னு ஒருத்தர் இருக்காரு. மூணு தபா கூட்டினாலும் நாலு ஜாக்குவார் ஜாம்பு கூட்டினாலும் 303 தான்.

இதுல எத்தனை விடைகள் சரி ஜக்கு...

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க தாவூது. இப்பதான் வளி தெரிஞ்சுதா? மத்த கேள்வி அல்லாம் சாய்ஸ்ல உட்டுடீங்களா? :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//It is a self-adhesive stamp//

தலீவா இத்த எப்டி கவனிக்காம உட்டேன்? பின்னிடீங்க :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க மதுவதனான் அணணாத்தே,

//எங்கூரில தபான்னு ஒருத்தர் இருக்காரு. மூணு தபா கூட்டினாலும் நாலு ஜாக்குவார் ஜாம்பு கூட்டினாலும் 303 தான்//

ஆனாலும் ரொம்ப குசும்பு வாத்யார் உங்களுக்கு! அடுத்த தபா வரும்போது தபாவையும் கூட்டிகினு வாங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

//சோ அண்ணாத்த என்ன எளுத கூப்புடறதா? அவுருதாம்பா என்ன பத்தி எளுதுவாரு. "மெட்ராஸ் பை நைட்" நியாபகம் இல்லியா?//

Madras By Night...! That was a wonderful play!!!