யார் இந்த ஜாம்பஜார் ஜக்கு? (100வது பதிவு!)





வாத்யார், இப்பத்தான் முந்தாநாள் "
அட இது யாருப்பா புதுசாக் கீது"ன்னு ஒரு பதிவு போட்டா மாதிரி கீது, 'எண்ணி'ப் பாத்தா அதுக்குள்ளாற(?) நூறு பதிவு ஆகி பூட்சு. மொதல் பதிவுல மொதல் பின்னூட்டமே நம்ம வால்பையன் அண்ணாத்த கொலவெறியோட இப்டி எளுதியிருந்தாரு:

"சும்மா ரீல் வுடாத நைனா!
ஒன் எழுத்து பார்த்தா தெரியலையா நீ பழைய ஆளு தான்னு!"

இப்பவும் அப்டிதான் சொல்றாரான்னு அவுரத்தான் கேக்கணும்! அது இருக்கட்டும். அடிக்கடி யாரு இந்த ஜாம்பஜார் ஜக்குன்னு ஒரு கேள்வி வந்துகினே இருக்கு. அதுக்கு இந்த நூறாவது பதிவுலயாவது பதில் சொல்லிடுன்னு அண்ணாத்த கண்டிஷனா சொல்லிட்டாரு. வேற வழி இல்ல சொல்லித்தான் ஆகணும்.

சரி, யார் இந்த ஜாம்பஜார் ஜக்கு?

எனக்குத் தெரிஞ்சு மொத்தம் மூணு ஜாம்பஜார் ஜக்கு கீறாங்க.


ஜாம்பஜார் ஜக்கு-1:

நம்ம மனோரம ஆச்சி ஆக்ட் குடுத்த "பொம்மலாட்டம்" அப்டீன்ற படத்துல "வா வாத்யாரே வூட்டண்ட"ன்னு நம்ம பதிவோட டைட்டில் சாங்க் வரும். வி.குமார் மீசிக்ல அசத்தலா மனோரமா ஆச்சி சொந்த குரல்ல பாடி இருப்பாங்க. அதுல நம்ம சோ வாத்யார் ஜாம்பஜார் ஜக்குன்ற பேரோட வருவாரு. அத்த பத்தின நம்ம புதிர் இங்க.

ஜாம்பஜார் ஜக்கு-2:

ஆச்சா? அடுத்தாப்ல, விவேகா ஃபைன ஆர்ட்ஸின் ஆரம்ப காலத்துல "மெட்ராஸ் பை நைட்" அப்டீன்னு ஒரு டிராமா. சூஸைட் பண்ணிக்க போற ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஒரு ராத்திரில மெட்ராஸ்ல சந்திக்குற அனுபவங்கள பத்தின கதை. அதுல மறுபடியும் நம்ம சோ வாத்யார் ஜாம்பஜார் ஜக்குன்ற பேர்ல போலிஸ் கான்ஸ்டபிளா வந்து தூள் கிளப்புவாரு. அதுவும், அந்த காலேஜ் ஸ்டூடன்ட் மெரினா பீச்சுல தற்கொலை பண்ணிக்க ட்ரை பண்ணி ஜக்கு கிட்ட மாட்டிகிற சீன் இப்டி போவும்:

காலேஜ் ஸ்டூடன்ட்: தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன தப்பு? என் உயிரை நான் எடுத்துக்க எனக்கு உரிமை கிடையாதா?

கான்ஸ்டபிள் ஜக்கு: இப்போ, உனக்கு ஒரு புள்ளை கீறான்னு வச்சுக்க. அவனோட உயிர எடுக்குறதுக்கு உனக்கு ரைட்ஸ் கீதா?

காலேஜ் ஸ்டூடன்ட்: ஐயோ! அது எப்படி? எனக்கு உரிமை கண்டிப்பா கிடையாது.

கான்ஸ்டபிள் ஜக்கு: அப்டி வா வாத்யார். நீ பெத்த புள்ள உயிர எடுக்கவே உனக்கு உரிமை கெடையாதே, உங்க அப்பன் பெத்த புள்ள நீ, உன் உயிர எடுக்க உனக்கு எப்டி உரிமை இருக்கும்? என் கிட்ட லா பாயின்ட் பேசாத, நட ஸ்டேஷன்னுக்கு!


ஜாம்பஜார் ஜக்கு-3:

அதுவும் சரி. மூணாவதா ஒரு ஜாம்பஜார் ஜக்கு கீறாரு. பதிவெல்லாம் எளுதி அல்லாரையும் டென்ஷன் பண்ணிகினு கீறாரு. அவுரு யாருன்னு தெரியுமா? இன்னாது? தெரியாதா?

அட, இன்னாங்க இப்டி சொல்லிட்டீங்க?


அவுரு யாருன்னு தெரிஞ்சுகணும்னா டென்ஷன் ஆவாம அப்டியே கீள வாங்க...


...


...



...


...


...


...

அந்த ஜாம்பஜார் ஜக்கு யாருன்னா...

...


...


...


...


...


...


அட, நான் தான் வாத்யார்!


வர்ட்டா...


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


பி.கு.: அல்லாருக்கும் ஜக்குவின் நன்றிகள். தொடர்ந்து அடிக்கடி வூட்டாண்ட வாங்க வாத்யார்!

14 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//தொடர்ந்து அடிக்கடி வூட்டாண்ட வாங்க வாத்யார்! //

அடிக்கடி இல்ல வாத்தியார்..மெய்யாலுமே நூறு பதிவுக்கும் வந்துக்குறேன். இன்னா ப்பினூட்டம் போடாத அப்பீட்டாயிருவேன்.

நீ நம்ப ரிலேஷன் வாத்யார். எப்டின்னு கேக்குறீயா?? நம்ப ஜாம்பஜாராண்ட எஸ்.வீ ஓயின்ஸ்கீதுல்ல...அத்துக்கு பக்கத்துலதான் வாத்யாரே நான் 6 வர்சம் தங்கிகினு இர்ந்தேன்.

ஜாம்பஜார் ஜக்கு said...

//அடிக்கடி இல்ல வாத்தியார்..மெய்யாலுமே நூறு பதிவுக்கும் வந்துக்குறேன்//

ஆஹா! மனஸ டச் பண்ட்டீங்க அப்துல்லா வாத்யார். இந்த ஒரு வார்த்தைக்கே இன்னும் நூறு பதிவு எளுதலாம். தொடர்ந்து வாங்க வாத்யார்.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

cheena (சீனா) said...

ஏம்பா ஜக்கு

நானும் எல்லாப்பதிவும் படிச்சுப் பின்னூட்டமும் போட்டுடறேன்பா - அது என் வழ்க்கம் தான்பா

நல்வாழ்த்துகள்

Zero to Infinity said...

CONGRATS FOR

WOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOW பதிவு!

vasu balaji said...

அசத்துங்க வாஜ்யாரே. நூறு இன்னா பிஸ்கோத்து. நீ ஊடு கட்டி அடி வாஜ்யாரே டபுளு ட்ரிபிளூ செஞ்சூரி. சேவாக் இன்னா?

பூங்குன்றன்.வே said...

இப்பவும் வாத்யார் யாருன்னு தெரியாம போச்சே. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்.
தொடர்ந்து ரவுசு பண்ண வரேன்.

வாசகன் said...

சுமார் 40 ப்ளஸ் வயசு கொண்ட மயிலாப்பூர் மாமாதான் ஜாம்பஜார் ஜக்கு..ஓக்கேவா?

கலையரசன் said...

முன்னூறு, நானூறுன்னு அடிங்க தல...

சரக்கை இல்ல மாமே! இடுகையோட எண்ணிகையதான்!!

ஜாம்பஜார் ஜக்கு said...

சீனா வாத்யார்,

//நானும் எல்லாப்பதிவும் படிச்சுப் பின்னூட்டமும் போட்டுடறேன்பா//

ரொம்ப கரீட்டு. மொதல் பதிவுல உங்க பின்னூட்டத்த இப்பதான் பார்த்தேன்!


ராஜ்குமார் வாத்யார்,

//WOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOW பதிவு!//

ரொம்ப டாஆஆஆஆஆஆங்கஸ்!


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

ஜக்கு சார், நீங்க யாருன்னு எனக்கு தெரியும்..!

ஜாம்பஜார் ஜக்கு said...

வாங்க வானம்பாடிகள் வாத்யார்,

//நீ ஊடு கட்டி அடி வாஜ்யாரே டபுளு ட்ரிபிளூ செஞ்சூரி//

ரொம்ப டாங்க்ஸ் வாழ்த்துகளுக்கு!


பூங்குன்றன் வாத்யார்,

//இப்பவும் வாத்யார் யாருன்னு தெரியாம போச்சே. //

மெய்யாலுமா? இன்னா ஆச்சர்யமா கீது... இவ்ளோ தெளிவா சொல்லிகிறேன் அப்டியுமா தெரியாம பூட்டுது?


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Anonymous said...

நூறாவது பதிவிலும் உங்க சஸ்பென்ஸை விடவில்லையா? Congratulations!!!

ஜாம்பஜார் ஜக்கு said...

//சுமார் 40 ப்ளஸ் வயசு கொண்ட மயிலாப்பூர் மாமாதான்//

வாசகன் வாத்யார், ஒரு கொலவேறியோடதான் வந்து இருக்கீங்க :-)) நல்லா இருங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

ஜாம்பஜார் ஜக்கு said...

//முன்னூறு, நானூறுன்னு அடிங்க தல... சரக்கை இல்ல மாமே! இடுகையோட எண்ணிகையதான்//

கலையரசன் வாத்யார்,

ஒரு லார்ஜ போடும்போதே (இந்த பதிவோட நீளத்தை சொன்னேன்!) நெனச்சேன் இந்த மாதிரி எதாவது ஏடகூடமா கமெண்ட் வரும்னு :-)))

அடிக்கடி வூட்டாண்ட வாங்க!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு